Wednesday 18 August 2010

இவர்கள் உறவினர்களா?

தெரிந்த ஒரு நண்பரின் கல்யாணத்துக்குச் சென்றிருந்தேன். பொதுவாகவே நமது கல்யாணங்களில் உற்றார்  உறவினர் ஒருவர் விடாமல் சொல்ல வேண்டும். இல்லையென்றால் உறவினர்கள் கோபித்துக் கொள்வார்கள். மறுமுறை அவர்களிடம் சமாதானம் சொல்லமுடியாது. அதுபோலவே இங்கும்  நல்ல கூட்டம். முண்டியடித்து உள்ளே செல்லவேண்டியிருந்த்து.மணமக்களை  பார்த்து வாழ்த்திவிட்டு  சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டேன்.

சிறிது நாட்கள கழித்து  ஒரு நாள் காலையில் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தேன். தனியார்  மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கு இரண்டு பாட்டில்கள் ‘ஓ’ குரூப் இரத்தம் வேண்டும் என்று அந்த நண்பர்  வந்திருந்தார். யாருக்கு இரத்தம் வேண்டும் என்றேன்? என் நெருங்கிய உறவினருக்கு வேண்டும் என்றார்.

 

இரத்த வங்கியில் எங்கள் மருத்துவமனைக்குத் தேவையான் அளவுதான் இரத்தம்  இருப்பில் இருந்தது. சரி உறவினர்கள் யாராவது கொடுங்கள் என்றேன். அவரோ அல்லது அவருடன் வந்த உறவினர்களோ  ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். அனால்  ஒருவரும் இரத்த குரூப் பார்க்கக் கூட முன்வரவில்லை. ”என்ன சார் எங்களைத் தரச் சொல்கிறீர்கள்? பணம் தருகிறோம் வாங்கிக் கொடுங்கள், இல்லையென்றால் கல்லூரி மாணவர்களிடம் வாங்கிக் கொடுங்கள்” என்றார்.

அப்புறம் அழகப்பா பல்கலைக்கழக விடுதியில் இருந்த மாணவர்கள் இருவரை வரச்சொல்லி இரத்தம் எடுத்தோம.

ஆபரேசன் முடிந்தது. நோயாளி நலமடைந்த்தாக போனில் ந்ன்றி சொன்னார்.

இது பற்றி சில கேள்விகள் என் மனதில் தோன்றின. அவர்களிடம் அதை நான் கேட்கவில்லை!

1.நெருங்கிய சொந்த்ம், இரத்த உறவு என்றெல்லாம் பேசும் இவர்கள் இரத்தம் மட்டும் தர மறுப்பது ஏன்?

2.எந்த் வகையிலும் தொடர்பில்லாத இரத்தம் கொடுத்த அந்த மாணவர்கள் இரத்த சொந்தமா? இல்லை இவர்கள் இரத்த சொந்த்மா?

1.ஒவ்வொரு கல்யாணத்துக்கும், சடங்குகளுக்கும் கூடி மகிழும் உறவினர் ஏன் ஆபத்துக்காலத்தில் உயிர் காக்க இரத்தம் தருவதில்லை?

2.மாணவர்கள் அரசுக்கல்லூரி விடுதியில் போடும் சாப்பாட்டைச்சாப்பிட்டு பெற்றோரை விட்டு வெகு தொலைவில் படிக்க வந்திருக்கின்றனர். ஒவ்வொரு இரத்த் முகாமிலும் அதிகம் இரத்தம் தருவது அவர்கள்தான். ஒருவேளை பெற்றோர் அருகில் இருந்தால் தர விடமாட்டார்களோ என்னவோ?

இரத்தம் கொடுத்தால் உடல் குறைந்துவிடும், சக்தியெல்லாம் போய்விடும் என்றெல்லாம் மூட நம்பிக்கைகள் இன்னும் படித்தவர்கள் மனதில்கூட இருக்கின்றன. அவை மறையவேண்டும்.

கண் தானம், உடலுறுப்பு தானம் என்று பெரிய விசயமெல்லாம் இருக்கட்டும், முதலில் உயிர் காக்கும் இரத்ததானம் தர முன் வாருங்கள் உறவினர்களே!

31 comments:

நட்புடன் ஜமால் said...

இன்னும் விழிப்புணர்வு வரலை

இரத்தம் கொடுப்பதால் பெறுபவர்களுக்கு மட்டுமல்ல கொடுப்பவர்களுக்கு நல்லது எனும் விழுப்புணர்வு இன்னும் வரலை

Jerry Eshananda said...

Bloody Indians.

josteepan said...

மிகவும் அருமை

கார்த்திகேயன் said...

அருமையாய் யதார்த்தமாய் உறவுகள் என்றால் என்னவென்று பிரமாண்டமாய் சொல்லி இருக்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

Jerry Eshananda said...

உள்ள கூப்பிட்டு நறுக்குன்னு நாலு ஊசிய குத்தி விரட்டுங்க டாக்டர்....இவங்கள

Jey said...

//இரத்தம் கொடுத்தால் உடல் குறைந்துவிடும், சக்தியெல்லாம் போய்விடும் என்றெல்லாம் மூட நம்பிக்கைகள் இன்னும் படித்தவர்கள் மனதில்கூட இருக்கின்றன.//

எனக்குத் தெரிந்து இனத மூட நம்பிக்கயுட இருப்பவர்கள் இருக்கிறார்கள்.

வடுவூர் குமார் said...

இப்படியுமா? ஆச்சரியமாக இருக்கு.

அன்புடன் நான் said...

சரியான கேள்வி.....

இரத்தம் சுரந்தால் மட்டும் போதாது...
இரக்கமும் சுரக்கனும்
மருத்துவரே.

அவசியாமான பகிர்வு.

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
இன்னும் விழிப்புணர்வு வரலை

இரத்தம் கொடுப்பதால் பெறுபவர்களுக்கு மட்டுமல்ல கொடுப்பவர்களுக்கு நல்லது எனும் விழுப்புணர்வு இன்னும் வரலை

//

உண்மை ஜமால்!

சம்பத் said...

நீங்க எதுக்கு சார், மாணவர்களிடம் இரத்தம் வாங்கி கொடுத்தீங்க? குறைந்த பட்சம் ஒரு பாட்டில் 500o என சொல்லி கறந்து அந்த மாணவரும் கொடுத்திருக்கலாம்...

சம்பத் said...

திருத்தம்: அந்த மாணவருக்கு கொடுத்திருக்கலாம்...

இராகவன் நைஜிரியா said...

விழிப்புணர்வு இன்னும் வரவில்லை.. ரத்தம் கொடுத்தால் உடல் கெட்டுவிடும் என்ற எண்ணம் இன்னமும் பலரின் நினைவில் இருக்கின்றது..

Chitra said...

2.மாணவர்கள் அரசுக்கல்லூரி விடுதியில் போடும் சாப்பாட்டைச்சாப்பிட்டு பெற்றோரை விட்டு வெகு தொலைவில் படிக்க வந்திருக்கின்றனர். ஒவ்வொரு இரத்த் முகாமிலும் அதிகம் இரத்தம் தருவது அவர்கள்தான்.

.... I salute them. May God bless them. இவர்களின் ரத்தம், உண்மையிலேயே மதிப்பு மிகுந்தது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்ல கேள்விகள் தேவா. தேவைக்கு உதவாத உறவுகள் கொண்டாட்டங்களுக்கு மட்டும் முண்டியடிப்பது ஏன்?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .
இரத்தம் என்றால் அவ்வளவு பாசம் ,
அதற்குப் பெயர் தான் இரத்தபாசம் .
டாக்டர்.

Anonymous said...

அவசியமான பதிவு.
//ஒவ்வொரு கல்யாணத்துக்கும், சடங்குகளுக்கும் கூடி மகிழும் உறவினர் ஏன் ஆபத்துக்காலத்தில் உயிர் காக்க இரத்தம் தருவதில்லை? //
சாட்டையடி கேள்வி!

priyamudanprabu said...

இன்னும் விழிப்புணர்வு வரலை

இரத்தம் கொடுப்பதால் பெறுபவர்களுக்கு மட்டுமல்ல கொடுப்பவர்களுக்கு நல்லது எனும் விழுப்புணர்வு இன்னும் வரலை
.///


yes

முனைவர் இரா.குணசீலன் said...

சவுக்கடி இடுகை..

முனைவர் இரா.குணசீலன் said...

விழிப்புணர்வளிக்கும் இடுகை மருத்துவரே..

ஜோதிஜி said...

பெற்ற கல்வி அறிவு என்பது எதார்த்த வாழ்க்கைக்கு உதவாமல் இருப்பதைப் போலவே இன்னமும் இந்த ரத்த தானம், உடல் உறுப்பு தானம் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.

புரிந்து கொள்ள விருப்பமில்லை.
புரிந்து கொண்டாலும் நமக்கென்ன? என்ற அலட்சிய மனப்பான்மை,

மனிதம் என்பது இப்போது மனித குலத்தால் தேடிப் பார்க்க வேண்டிய அரிய வஸ்தாக மாறிக் கொண்டு இருக்கிறது

CS. Mohan Kumar said...

It is the nature of relatives; they only expect from others; they do not think what they can do to the relatives.

Prapa said...

//மாணவர்கள் அரசுக்கல்லூரி விடுதியில் போடும் சாப்பாட்டைச்சாப்பிட்டு பெற்றோரை விட்டு வெகு தொலைவில் படிக்க வந்திருக்கின்றனர். ஒவ்வொரு இரத்த் முகாமிலும் அதிகம் இரத்தம் தருவது அவர்கள்தான்.//

உறவுகளை தற்காலிகமாக பிரிந்திருக்கும் அவர்களுக்கு தான் புரிந்திருக்கிறது உறவுகளின் நிரந்தர பிரிவு எப்படி இருக்கும் என்று...................
''இங்கு நான் காணும் பாசம் எல்லாமே வேஷம்''........ என்ற பாட பொருத்தமாக ஞாபகத்துக்கு வருகிறது..............

Killivalavan said...

நீங்கள் மருத்துவ துறையில் இருக்கும் பட்சத்தில், ஏன் இரத்ததானம் பற்றி ஒரு விழிப்புணர்வு பதிவு எழுதகூடாது?

க.பாலாசி said...

நல்லாச்சொன்னீங்க.. இதப்பத்தின தெளிவை நீங்க அந்த உறவினர்களுக்கு கொடுத்திருக்கலாம். சரியான புரிதல் இல்லாமைதான் அவர்களின் பயத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

nerkuppai thumbi said...

ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் கொடுப்பது நல்லது என படித்ததிலிருந்து ஒவ்வொரு பிறந்த தேதியிலும் சில ஆண்டுகள் ரத்தம் கொடுத்து இருக்கிறேன். இவ்வாறு செய்பவர்களைப் பார்த்து இருக்கிறேன். இதை சமூக நலனாக செய்ய ஒவ்வொருவரும் முன் வர வேண்டும். கொடுப்பது பற்றிய மூட நம்பிக்கைகளை களைய செய்தி தாள்கள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் கதையுடன் சேர்ந்த வண்ணம் நல்லெண்ணம் பரப்ப வேண்டும். ரத்தம் கொடுப்பதை ஒரு தொழிலாக செய்யும் ஏழைகள் இருக்கிறார்கள்; அவர்கள் சரியான இடைவெளி தராமல், பொய்யான தகவலைத் தந்து மீண்டும் மீண்டும் தருவது சரியான தரமுள்ள ரத்தம் செலுத்தாமல் போவதற்கு காரணம் ஆகிறார்கள். இந்த தீமைகளை உணர்ந்து உறவினர்கள் முன்வர வேண்டும்.

செல்வா said...

//ஒருவேளை பெற்றோர் அருகில் இருந்தால் தர விடமாட்டார்களோ என்னவோ?
//
சில சமயங்களில் இது உண்மையாகிறது ..

ஹேமா said...

அது நம்ம இரத்திலேயே இருக்கிற குணம்.ஊசி போட்டுப் பாருங்க தேவா....மாறுதான்னு பார்க்கலாம் !

Simulation said...

http://simulationpadaippugal.blogspot.com/2005/08/blog-post_21.html

- simulation

Ramesh said...

என்னிக்கும் பிரச்சினைக்குதாங்க உறவுகள் முன்ன வருவாங்க..உதவிக்குன்னா.இந்த மாதிரி முகம் தெரிஞ்ச அல்லது தெரியாத நண்பர்கள்தான் வருவாங்க..அதனால உறவினர்களோட..நண்பர்களை கம்பேர் பண்ணி..நண்பர்கள் பெயரை நாம ஏன் கெடுக்கனும்...விடுங்க...

'பரிவை' சே.குமார் said...

இரத்தம் கொடுப்பதால் பெறுபவருக்கும் கொடுப்பவருக்கும் நல்லது என்பது அறியாதவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்துல்மாலிக் said...

சொந்தம் என்பது வாய் வார்த்தையோடு முடிந்ததுவிடும்...

இங்கே எங்க கம்பெனிலேயும் இரத்த தானம் முகாம் நடக்கும் 3 மாதம் ஒரு முறை, சில பேர் கொடுப்பாங்க நிறைய பேருக்கு பயம் இருக்கு

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory