தீபாவளி தாமத வாழ்த்துகள்!
தீபாவளி ஒருவழியாக முடிந்து விட்டது. அனைவரும் அவரவர் பாணியில் கொண்டாடியிருப்பீர்கள். என் வாழ்த்துகளை தீபாவளி முடிந்தவுடன் சொல்லிக்கொள்கிறேன்.
பல வாழ்த்துப் பதிவுகள் எழுதியிருந்தாலும் தீபாவளி வாழ்த்துகள் என்று எழுதலாமா என்று நீண்ட நேரம் தீபாவளியன்று பலமுறை யோசித்தும் என்னால் வாழ்த்துப் பதிவு எழுத முடியவில்லை.
தீபாவளி வாழ்த்துப் பதிவு மட்டும் அல்ல, இதுபோல் எழுத நினைத்து எழுதாமல் விட்ட பதிவுகள் பல நண்பர்களின் நெஞ்சிலும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
எனக்கு தீபாவளி அன்று குறுந்தகவல் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய அனுப்பிய பதிவுலக நண்பர்களுக்கு நன்றி.
அரசு மருத்துவமனையில் தீபாவளி,பொங்கல் போன்ற நாட்களில் இதைக் கொண்டாடாத பிற மதத்தைச் சேர்ந்த மருத்துவர்களைப் பணியில் அமர்த்துவதும் இதே போல் கிறிஸ்துமஸ், ரம்ஜான் ஆகியவற்றிற்கு அதைக் கொண்டாடும் நண்பர்களுக்கு விடுப்புக் கொடுப்பதும் வழக்கம்.
ஆனால் இம்முறை அப்படி செய்ய முடியவில்லை.
மூத்த மருத்துவருக்கும், தீபாவளி கொண்டாடாத ஒரு மருத்துவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் அந்த தீபாவளி கொண்டாடாத மருத்துவர் தீபாவளிக்கு அவர் வேலை செய்ய முடியாது என்று கூறிவிட்டார்..
நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை.இதனால் நேற்றைய வேலை வரிசைக்கிரமப்படி இளம் மருத்துவர் ஒருவர் தலையில் விழுந்து விட்டது
இதனால் இளம் மருத்துவர் ஒருவர் இருபத்து நான்கு மணிநேரப் பணியில் மருத்துவமனையிலேயே இருக்க நேர்ந்து விட்டது. நேற்றைய பணியும் தீபாவளிதானே எளிமையாக இருக்கும் என்று பார்த்தால் " குடிமகன்கள் குடித்து விட்டு பல இடங்களிலும் அடிதடிகளில் ஈடுபட்டு, தொடர்ந்து அரசு மருத்தவமனைக்கு போலீஸ் கேசாக வந்துகொண்டிருந்ததால் அவரால் வீட்டுக்கே வரமுடியவில்லை.
ஒரு போலீஸ் கேஸ் என்றால் அதைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் அவர்களுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் அரசு மருத்துவமனைக்குள் வந்துகொண்டே இருப்பதால் அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை.
108 ஆம்புலன்ஸ் நோயாளிகளின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. மிக நல்லமுறையில் செயல்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும். அது மது அருந்திவிட்டு மயக்கத்தில் கிடக்கும் குடிமகன்களை அரசுமருத்துவமனைக்கு கொண்டு வரவும் தற்போது பயன்படுகிறது.
நிறைய சொல்லலாம். இப்போதைக்கு வேலை இருக்கு. வரவா!!
தேவா.
9 comments:
Hi! All ! How are you?
hello deva..
//" குடிமகன்கள் குடித்து விட்டு பல இடங்களிலும் அடிதடிகளில் ஈடுபட்டு, தொடர்ந்து அரசு மருத்தவமனைக்கு போலீஸ் கேசாக வந்துகொண்டிருந்ததால்//
அவுங்க நல்லா...குடிச்சாத்தான் அரசாங்க கஜானா நிறையும்...அப்பத்தான் உங்களுக்கும் எனக்கும் சம்பளம் கிடைக்கும்.இல்லாட்டி பீகார் மாதிரி வருசத்துக்கு ரெண்டு தடவ தான் சம்பளம்.
உங்களுக்கும் தீபாவளி அன்றைக்கு பணியில் இருந்த தாமதப்படுத்தப்பட்ட தீபாவளி வாழ்த்துக்கள்...
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தீபாவளி குடியும்கூத்துமாய் இருந்ததை அருமையாக சொல்லிவிட்டீர்கள்...அனைத்து போப்பரிலும் பார் கூட்டத்தை பார்க்க முடிந்தது. அவர்கள் கடைசியில் உங்களையும் தொந்திரவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள் போலும். தாமத தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்பின் தேவா - என்ன செய்வது - இப்படி எல்லாம் நடக்கிறது - 108 - விதி முறைகள் மாறலாமே ! ம்ம்ம்ம்ம் - புரிதலுணர்வு இல்லை எனில் மாட்டுபவர்கள் ஜூனியர்கள் தான் ...... இரு நாட்கள் கழித்து தீபத் திரு நாள் நல்வாழ்த்துகள் - மின்னஞ்சல் அனுப்பினேன் - இருமுறையும் கோட்டா ஓவர் எனத் திரும்பி வந்து விட்டது. சரி செய்யவும். நல்வாழ்த்துகள் தேவா - நட்புடன் சீனா
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!.
உயிர் காக்கு பணிக்குப் பெருமை.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Post a Comment