டிஸ்க் புரொலாப்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பிரச்சினை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.
டிஸ்க் அல்லது வட்டு என்றால் என்ன?
டிஸ்க் என்பது இரண்டு முதுகுத் தண்டுவட எலும்புகளுக்கு இடையிலலுள்ள ஜவ்வு போன்ற பகுதியாகும். இது முதுகெலும்புகளுக்கு இடையில் அதிர்வையும், பளுவையும் குறைக்கிறது. முதுகெல்லும்பின் வளைந்து கொடுக்கும் தன்மைக்கு பெரிதும் உதவுகிறது.
கீழுள்ள படத்தில் இரண்டு முதுகுத் தண்டு எலும்புகளின் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஒன்று நேராக இருக்கும்போது, இன்ன்னொன்று வளையும் போது – நடுவில் வெண்ணிறமாக இருப்பதே வட்டு. படத்தில் எளிமையாக முதுகுத் தண்டெலும்பின் உடல் பாகம் மட்டும் செவ்வகமாக வரையப்பட்டுள்ளது.
உண்மையான முதுகுத் தண்டெலும்பு கீழே தரப்பட்டுள்ளது..
இதில் முன்புறம் சிறு கிளைகளாக உள்ளவை முள் போன்ற அமைப்புகள். இதனாலேயே இவை முள்ளெலும்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
இவற்றின் இடையிலுள்ள வட்டு அல்லது தட்டுகள் பளுவின் காரணமாக அழுத்தப்பட்டு பிதுங்கிய நிலையில் இருப்பதால்
முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்
என்று விக்கியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆங்கிலத்தில் எழுதும்போது டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்று குறிப்பிட்டாலேயே முதுகெலும்பு வட்டு பிதுங்கி வெளியே விலகி வருவதையே குறிக்கும். ஆகையால் பொதுவாக டிஸ்க் ப்ரொலாப்ஸ் பற்றி எழுதும்போது வட்டு விலகல் என்று எழுதலாமா? இல்லை முள்ளெலும்பிடைத் தட்ட்டுப் பிதுக்கம் என்று எழுதுதல்தான் சரியா? என்பது விவாதத்திற்குட்படுத்தப்பட வேண்டிய விசயம்!
இதுபற்றிப் பதிவர்கள் தங்கள் கருத்தைக் கூறலாம்.
உங்கள் கருத்துகளுக்குப் பின் தொடருகிறேன்!
35 comments:
பரவாயில்லையே..! மருத்துவர் தொழில்நுட்ப பதிவுலாம் எழுதுறாரேனு ரொம்ப ஆர்வத்துடன் வந்தேன். பரவாயில்லை ஆர்வம் வீண் போகவில்லை. வழக்கம்போல் தங்கள் சேவை தொழில்நுட்ப தகவல் அருமை..!! சூப்பர் ஐயா..!!
இன்னிக்கு முதல் மூன்று வடை எனக்கும்தான் போலிருக்கு..!!
படங்களுடன் கட்டுரைத்தொகுப்பு அருமை கலக்குங்க தேவா சார்.
முதல் வடைன்னா சரி! மூன்று வடை சாப்பிட்டா எப்படி!!!ஹி ஹி
முள்ளெலும்பிடைத் தட்ட்டுப் பிதுக்கம் தான் சரியானது
முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம் என்று மருத்துவ நூல்களில் எழுதலாம். பொதுவாக ஊடகங்களிலும் இப்படியே எழுதலாமா?
எப்படிச் சொன்னாப் புரியுமோ அப்படிச் சொல்லுங்க.
வட்டு விலகல் - சுடுபாத்திரம் வைக்கும் ரிங் போன்ற பொருள் வட்டு என்று தமிழ்நாட்டில் சில பகுதிகளில் சொல்லப்படும். அதுவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் வட்டு என்றால் லூஸு என்று அர்த்தம். ;-))
டிஸ்க் ப்ரோலாப்ஸ் கேள்விப்பட்ட வார்த்தை.
முள்ளெலும்பு என்று சொன்னால் ஆட்டின் முள்ளெலும்பு என்று நினைத்துக்கொள்பவர்களும் உண்டு.
முள்ளெலும்பு தட்டுப்பிதுக்கம் என்றால் நோயாளி அலறியடித்து ஓடும் அபாயம் உள்ளது!! :-)))
ஆங்கிலத்தில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றாலே முதுகெலும்பு நோயைத்தான் குறிக்கும். அதே போல் டிஸ்க் பிளே ஆகவில்லை என்றால் - சிடி வேலை செய்யவில்லை என்று அர்த்தம். ஒரே சொல் பல இடங்களில் அந்த இடத்துக்கேற்பப் பொருள் தருமாறு இருப்பதுதானே மொழிகளின் சிறப்பே!
முதுகு வட்டு விலகல் -டாக்டர் .
நல்ல முயற்சி .
தொடருங்கள் .
வாழ்த்துக்கள் டாக்டர் .
பொதுவாக ஆங்கிலத்தில் எழுதும்போது டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்று குறிப்பிட்டாலேயே முதுகெலும்பு வட்டு பிதுங்கி வெளியே விலகி வருவதையே குறிக்கும். ஆகையால் பொதுவாக டிஸ்க் ப்ரொலாப்ஸ் பற்றி எழுதும்போது வட்டு விலகல் என்று எழுதலாமா? இல்லை முள்ளெலும்பிடைத் தட்ட்டுப் பிதுக்கம் என்று எழுதுதல்தான் சரியா? என்பது விவாதத்திற்குட்படுத்தப்பட வேண்டிய விசயம்!
...... அந்த அளவுக்கு தெரிஞ்சா, நானும் டாக்டர்னு போர்டு போட்டு இருப்பேனோ என்னவோ? அவ்வ்வ்......
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
முதுகு வட்டு விலகல் -டாக்டர் .
நல்ல முயற்சி .
தொடருங்கள் .
வாழ்த்துக்கள் டாக்டர் .//
ஆம் ! சரிதான் !
சித்ரா! டாக்டர்.சித்ரான்னு பிளாக் ஆரம்பிக்கலாம்!!! ஹி! ஹி!
முள்ளெலும்பிடைத் தட்ட்டுப் பிதுக்கம் என்பதே சரியெனத் தோன்றுகிறது.
நல்ல முயற்சி .
தொடருங்கள் .
உபயோகமான பதிவு..தொடருங்க..நன்றி..
முதுகெலும்பு தட்டு விலகல் என சொல்லலாமா? தமிழ்ப் படுத்தும்போது எளிதான வார்த்தைகள் இருந்தால் தான் புரியும் என்பது என் கருத்து...
பிரபாகர்...
வட்டு விலகல் நல்லா இருக்கு சுருக்கமா..
அருமையான பதிவு
பொதுவாக ஆங்கிலத்தில் எழுதும்போது டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்று குறிப்பிட்டாலேயே முதுகெலும்பு வட்டு பிதுங்கி வெளியே விலகி வருவதையே குறிக்கும். ஆகையால் பொதுவாக டிஸ்க் ப்ரொலாப்ஸ் பற்றி எழுதும்போது வட்டு விலகல் என்று எழுதலாமா? இல்லை முள்ளெலும்பிடைத் தட்ட்டுப் பிதுக்கம் என்று எழுதுதல்தான் சரியா? என்பது விவாதத்திற்குட்படுத்தப்பட வேண்டிய விசயம்!
...... அந்த அளவுக்கு தெரிஞ்சா, நானும் டாக்டர்னு போர்டு போட்டு இருப்பேனோ என்னவோ? அவ்வ்வ்......
SAME
படங்கள் பெரிதாக இருந்தால்தான் சரியாக பார்க்க முடியும்
பெரிதாக போடா முயற்சி செய்யுங்கள்
தொடருங்கள்
முதுகெலும்பு தட்டு விலகல் பாமரர்க்கும் புரியும் என்று தோன்றுகிறது
மிகவும் பயனுள்ள பகிர்வு, பகிர்வுக்கு மிக்க நன்றீ
பொதுவாகவே நாம் நேராக உட்காருவதில்லை.. இதனால் இந்த பிரச்சினை வரும் வாய்ப்பு இருக்கா ஐயா ...
வணக்கம்
முள்ளெலும்பிடை தட்டுபிதுக்கம்
உரைக்கின்ற
உயிராய்
சுமக்கின்ற
சுமைகள்......
எனக்கு இதுதான் சார் தோணுது
இந்த பிரச்சினை இப்போதெல்லாம் அதிகமாக ஏற்படுகிறது.
நான் மொழிபெயர்க்கும் மருத்துவ ஃபைல்களில் டிஸ்க் புரொலாப்ஸ்க்கு முள்ளெலும்பிடை தட்டு பிதுக்கம் என்று போட்டிருக்கிறேன். ஆனால் எளிமையாக புரிய வைக்க முதுகெலும்பு வட்டு விலகம் ஓகே!
சே.குமார் said...
முள்ளெலும்பிடைத் தட்ட்டுப் பிதுக்கம் என்பதே சரியெனத் தோன்றுகிறது.
நல்ல முயற்சி .
தொடருங்கள் .//
கருத்துக்கு நன்றி!!
அஹமது இர்ஷாத் said...
உபயோகமான பதிவு..தொடருங்க..நன்றி..//
நன்றி அஹமது!!
பிரபாகர் said...
முதுகெலும்பு தட்டு விலகல் என சொல்லலாமா? தமிழ்ப் படுத்தும்போது எளிதான வார்த்தைகள் இருந்தால் தான் புரியும் என்பது என் கருத்து...
பிரபாகர்...//
நல்ல கருத்து பிரபாகர்!
ஆர்.கே.சதீஷ்குமார் said...
வட்டு விலகல் நல்லா இருக்கு சுருக்கமா..
அருமையான பதிவு//
நன்றி சதீஷ்!
பிரியமுடன் பிரபு said...
படங்கள் பெரிதாக இருந்தால்தான் சரியாக பார்க்க முடியும்
பெரிதாக போடா முயற்சி செய்யுங்கள்
தொடருங்கள்.//
நன்றி! பிரபு!!
supersubra said...
முதுகெலும்பு தட்டு விலகல் பாமரர்க்கும் புரியும் என்று தோன்றுகிறது///
இதுவும் சரிதான்!!
கே.ஆர்.பி.செந்தில் said...
பொதுவாகவே நாம் நேராக உட்காருவதில்லை.. இதனால் இந்த பிரச்சினை வரும் வாய்ப்பு இருக்கா ஐயா ...//
வரும் நண்பரே!!
dineshkumar said...
வணக்கம்
முள்ளெலும்பிடை தட்டுபிதுக்கம்
உரைக்கின்ற
உயிராய்
சுமக்கின்ற
சுமைகள்......
எனக்கு இதுதான் சார் தோணுது//
அப்படியா!! சரி!
எஸ்.கே said...
இந்த பிரச்சினை இப்போதெல்லாம் அதிகமாக ஏற்படுகிறது.
நான் மொழிபெயர்க்கும் மருத்துவ ஃபைல்களில் டிஸ்க் புரொலாப்ஸ்க்கு முள்ளெலும்பிடை தட்டு பிதுக்கம் என்று போட்டிருக்கிறேன். ஆனால் எளிமையாக புரிய வைக்க முதுகெலும்பு வட்டு விலகம் ஓகே!///
அட! வித விதமான கருத்துகளும் சொற்களும் வருகின்றன! மிக்க மகிழ்ச்சி!
//supersubra said...
முதுகெலும்பு தட்டு விலகல் பாமரர்க்கும் புரியும் என்று தோன்றுகிறது//
ithuthan enakkum sarinnu padudthu na.
பகிர்வுக்கு நன்றி.
முதுகெலும்பு தட்டு விலகல், வட்டு விலகல் - இது ரெண்டும் புரியமாதிரி இருக்கு டாக்டர்.
இந்தப் பிரச்சனை இப்போ நிறையப் பேருக்கு வருது... மருத்துவராகிய நீங்கள் எழுதுங்கள் இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்கிறோம்.
தீபாவளி அன்று அழைத்தேன். மணி மட்டுமே அடித்தது.... :-)
Post a Comment