Sunday 18 January 2009

கொஞ்சம் தேநீர்-5


அன்புக்காதலிக்கு!!!

மழை பெய்த மாலை
தோட்டத்தில் நின்றிருந்தாய்!
ரோஜாக்கள் பூத்திருந்த
நேரம்!

ரோஜாக்கள்
பிடிக்குமா என்றாய்?
ஆம் என்றேன்,

இந்த பூக்களில் எது
பிடிக்கிறது என்றாய்?
உன் முகம் என்றேன்!!

தோட்டத்தில் நிற்காதே
என்றேன்!
ஏன்? என்றாய்,

உன் அழகைக்கண்டு
வெட்கி
பூக்கள் எல்லாம்
வாடி விட்டன பார்!,
என்றேன்.

உனக்கு ரோஜாக்கள்
பிடிக்குமா என்றேன்!
இல்லை! என்றாய்!
ஏன்? என்றேன்!!

பறிக்கவும், பிறர்
சூடவும்
நான் விரும்பவில்லை!
என்றாய்!!!

பின் என்ன வேண்டும்?
என்றேன்,
சிறகுகள் வேண்டும்,
பிறர் பறிக்காமல்
நான்
பறக்கவேண்டும்
என்றாய்!

நான் ஒரு கூட்டுப்புழு!
கிளிகளுக்குள்ள
சுதந்திரம் எனக்கில்லையா?
என்றாய்!

சுதந்திரம் பிறர்
தருவதல்ல!
சிறகுகளும் அப்படித்தான்
என்றேன்!

உன் சிறகுகளை
நீதான் நெய்யவேண்டும்!
உன் நெஞ்சில்
நீதான்
இறகுகளை
வளர்க்க வேண்டும்!

நான் தந்தால் அது
இரவல் சுதந்திரம்

என் மூச்சுக்காற்றை
நீ எவ்வளவு நாள்
சுவாசிப்பாய்?

பிறர்
இரத்தத்தில்
எவ்வளவு நாள்
துடிக்கும் உன்
இதயம்?

பிறர்
கை பற்றி
எவ்வளவு நாள்
நடக்கும் உன்
கால்கள்?

சிந்திக்கிறாயா
அன்பே!!



66 comments:

பழமைபேசி said...

வெகு அழகாகப் படைத்து உள்ளீர்கள்.

//உன் சிறகுகளை
நீதான் நெய்யவேண்டும்!//

உன் சிறகுகளை
நீதான் வேய்த்த‌ல்வேண்டும்!

தேவன் மாயம் said...

//உன் சிறகுகளை
நீதான் நெய்யவேண்டும்!//

உன் சிறகுகளை
நீதான் வேய்த்த‌ல்வேண்டும்!//

வருக!
புலவரே!
புல(ம்பெயர்ந்த)வரே!!!

priyamudanprabu said...

அழகு

அ.மு.செய்யது said...

//உன் சிறகுகளை
நீதான் நெய்யவேண்டும்!
உன் நெஞ்சில்
நீதான்
இறகுகளை
வளர்க்க வேண்டும்!//

அழகு தேவா !!!!

அ.மு.செய்யது said...

//நான் ஒரு கூட்டுப்புழு!
கிளிகளுக்குள்ள
சுதந்திரம் எனக்கில்லையா?
என்றாய்!


சுதந்திரம் பிறர்
தருவதல்ல!
சிறகுகளும் அப்படித்தான்
என்றேன்!//

காதலை இயல்பாக ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்.ரசிக்க வைத்தது..

வாழ்த்துக‌ள் !!!!

தேவன் மாயம் said...

வருகைக்கு நன்றி
பிரபு

தேவன் மாயம் said...

//உன் சிறகுகளை
நீதான் நெய்யவேண்டும்!
உன் நெஞ்சில்
நீதான்
இறகுகளை
வளர்க்க வேண்டும்!//

அழகு தேவா !///

செய்யது பாய்!!
நன்றி

தேவா.

தேவன் மாயம் said...

/நான் ஒரு கூட்டுப்புழு!
கிளிகளுக்குள்ள
சுதந்திரம் எனக்கில்லையா?
என்றாய்!


சுதந்திரம் பிறர்
தருவதல்ல!
சிறகுகளும் அப்படித்தான்
என்றேன்!//

காதலை இயல்பாக ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்.ரசிக்க வைத்தது..

வாழ்த்துக‌ள் !!!!///

நல்லா ரசிக்கிறீங்க!
நன்றி!!
தேவா...

ஹேமா said...

அழகு.இரவல் மூச்சு காதலில் அழகு,இரவல் சுதந்திரம் வாழ்க்கைக்குக் கேடு.ஒரு தனிமனிதச் சுதந்திரம் எவ்வளவு தேவை எனபதைக் காதல் கவிதை மூலமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.அருமை தேவா.

தேவன் மாயம் said...

அழகு.இரவல் மூச்சு காதலில் அழகு,இரவல் சுதந்திரம் வாழ்க்கைக்குக் கேடு.ஒரு தனிமனிதச் சுதந்திரம் எவ்வளவு தேவை எனபதைக் காதல் கவிதை மூலமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.அருமை தேவா.///

நன்றி
ஹேமா!!
கவிதை
உங்களுக்குப்
பிடித்ததா
நல்லது
தேவா..

நட்புடன் ஜமால் said...

அருமையான படம்

இருங்க உள்ளே போய்ட்டு வர்றேன் ...

புதியவன் said...

//பிறர்
இரத்தத்தில்
எவ்வளவு நாள்
துடிக்கும் உன்
இதயம்?//

கலக்கல் வரிகள்...

அருமையான தேநீர் விருந்து...
தொடருங்கள் தேவா...

நட்புடன் ஜமால் said...

அழகான வரிகள் தேவா ...

வேத்தியன் said...

கவிதை கவிதை...
நல்லா இருக்குங்க...

கணினி தேசம் said...

//உன் சிறகுகளை
நீதான் நெய்யவேண்டும்!
உன் நெஞ்சில்
நீதான்
இறகுகளை
வளர்க்க வேண்டும்!
//

அழகான வரிகள்.. அழகான கவிதை.


நன்றி தேவா!

தேவன் மாயம் said...

அருமையான படம்

இருங்க உள்ளே போய்ட்டு வர்றேன்///

எடுத்த்வுடன்
படத்தைப்
பார்த்து
பின்னூட்டம் போட்டு இருக்கீங்க!
பின்னூட்ட பிதா மகரே!!
தேவா..

தேவன் மாயம் said...

//பிறர்
இரத்தத்தில்
எவ்வளவு நாள்
துடிக்கும் உன்
இதயம்?//

கலக்கல் வரிகள்...

அருமையான தேநீர் விருந்து...
தொடருங்கள் தேவா...///

நன்றி
புதியவன்...

தேவன் மாயம் said...

அழகான வரிகள் தேவா .///

எந்த வரிகள் சாமி!
அவ்வளவு பிசியா உள்ள!!

தேவா..

தேவன் மாயம் said...

கவிதை கவிதை...
நல்லா இருக்குங்க..//

நன்றி நன்றி..

Sinthu said...

//சிந்திக்கிறாயா
அன்பே!!//

சிந்தித்திருந்தால் - இன்று
நான் சுதந்திரப் பறவை சிந்திக்காததால் -இன்றும்
கூண்டுப் பறவையாக..


அண்ணா காதல் கவிதை என்பதால் இப்படி முடிக்கலாம் எப்படியா இப்படித் தான்........
சிந்தித்ததால் - தான்
இன்று நான் கூட்டில்
யார் கூட்டிலடா - உன்
நெஞ்சறைக் கூட்டில்
இந்த சுகம் போதுமடா
வாழ்நாள் - முழுவதும்
சுதந்திரப் பறவையாக இருக்க....

உங்கள் கவிதையை தேநீர் போல கலக்கியதற்கு சீ சீ........... குழப்பிஎல்லோ இருக்கிறேன்.. மன்னியுங்கோ...................

Sinthu said...

வந்தாச்சு கருத்து சொல்லியாச்சு வரட்டா.............

G3 said...

//சுதந்திரம் பிறர்
தருவதல்ல!
சிறகுகளும் அப்படித்தான்//

Unmai :)

Nalla irukku unga kavidhaiyum adhu sollum karuththum :D

Anonymous said...

அண்ணா உங்க கவிதைத் தேநீர் ரொம்ப அருமையாக உள்ளது

ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேனுங்கோ

துஷா

Anonymous said...

"என் மூச்சுக்காற்றை
நீ எவ்வளவு நாள்
சுவாசிப்பாய்?"

"பிறர்
இரத்தத்தில்
எவ்வளவு நாள்
துடிக்கும் உன்
இதயம்?"

"பிறர்
கை பற்றி
எவ்வளவு நாள்
நடக்கும் உன்
கால்கள்?"

"சிந்திக்கிறாயா
அன்பே!!!!!!!!!!!!"

ஆமாம் ஆமாம் சிந்தியுங்கப்பா கவித் தேவர் சொல்லியும் சிந்திக்கட்டி எப்படி

துஷா

A N A N T H E N said...

//சிறகுகள் வேண்டும்,
பிறர் பறிக்காமல்
நான்
பறக்கவேண்டும்
என்றாய்!//
பறக்கனும் அவ்வளவுதானே? பஞ்சா ஆக்கிடலாமா?

கவிதை நல்லாருக்கு...
தேநீர்போலவே இனிக்குது

//பிறர்
கை பற்றி
எவ்வளவு நாள்
நடக்கும் உன்
கால்கள்?//
இந்த வரி மட்டும் சரியா விளங்கல...

அப்துல்மாலிக் said...

//உன் அழகைக்கண்டு
வெட்கி
பூக்கள் எல்லாம்
வாடி விட்டன பார்!,//

பூக்களைவிட அழகானவளா?
நல்ல வரிகள் தேவா

அப்துல்மாலிக் said...

//உன் சிறகுகளை
நீதான் நெய்யவேண்டும்!
உன் நெஞ்சில்
நீதான்
இறகுகளை
வளர்க்க வேண்டும்!//

நல்லதொரு அட்வைஸ்
நல்ல தேநீர் அருந்திய திருப்தி, வாழ்த்துக்கள் தேவா

தேவன் மாயம் said...

சிந்தித்திருந்தால் - இன்று
நான் சுதந்திரப் பறவை சிந்திக்காததால் -இன்றும்
கூண்டுப் பறவையாக..//

yes u r right

நட்புடன் ஜமால் said...

\\தோட்டத்தில் நிற்காதே
என்றேன்!
ஏன்? என்றாய்,

உன் அழகைக்கண்டு
வெட்கி
பூக்கள் எல்லாம்
வாடி விட்டன பார்!,
என்றேன்.\\

அழகான வெட்கம் ...

தேவன் மாயம் said...

இன்று நான் கூட்டில்
யார் கூட்டிலடா - உன்
நெஞ்சறைக் கூட்டில்
இந்த சுகம் போதுமடா
வாழ்நாள் - முழுவதும்
சுதந்திரப் பறவையாக இருக்க.///

இப்ப இருக்கும் கூட்டில்
இருந்து காதலர் நெஞ்சக்கூட்டில்
அடைபட நினைக்கிறாய்
சுயமாய் வாழ சிந்தி!!

நட்புடன் ஜமால் said...

\\சுதந்திரம் பிறர்
தருவதல்ல!
சிறகுகளும் அப்படித்தான்
என்றேன்!\\

ஆஹா அருமை தேவ்ஸ் ...

தேவன் மாயம் said...

அண்ணா உங்க கவிதைத் தேநீர் ரொம்ப அருமையாக உள்ளது

ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேனுங்கோ

துஷா///

நல்லா ரசி!!
கவிதை
எழுத
ஆரம்பி!!

தேவன் மாயம் said...

"என் மூச்சுக்காற்றை
நீ எவ்வளவு நாள்
சுவாசிப்பாய்?"

"பிறர்
இரத்தத்தில்
எவ்வளவு நாள்
துடிக்கும் உன்
இதயம்?"

"பிறர்
கை பற்றி
எவ்வளவு நாள்
நடக்கும் உன்
கால்கள்?"

"சிந்திக்கிறாயா
அன்பே!!!!!!!!!!!!"

ஆமாம் ஆமாம் சிந்தியுங்கப்பா கவித் தேவர் சொல்லியும் சிந்திக்கட்டி எப்படி

துஷா///

உனக்குப் புரிந்து விட்டது1
சிந்துவுக்கு கொஞ்சம் விளக்கு துஷா!!

தேவன் மாயம் said...

//சுதந்திரம் பிறர்
தருவதல்ல!
சிறகுகளும் அப்படித்தான்//

Unmai :)

Nalla irukku unga kavidhaiyum adhu sollum karuththum :D///

கருத்துரைக்கு நன்றி...

தேவன் மாயம் said...

அண்ணா உங்க கவிதைத் தேநீர் ரொம்ப அருமையாக உள்ளது

ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேனுங்கோ
///

நன்றி.
துஷா..

தேவன் மாயம் said...

//சிறகுகள் வேண்டும்,
பிறர் பறிக்காமல்
நான்
பறக்கவேண்டும்
என்றாய்!//
பறக்கனும் அவ்வளவுதானே? பஞ்சா ஆக்கிடலாமா?

கவிதை நல்லாருக்கு...
தேநீர்போலவே இனிக்குது

//பிறர்
கை பற்றி
எவ்வளவு நாள்
நடக்கும் உன்
கால்கள்?//
இந்த வரி மட்டும் சரியா விளங்கல...//

பிறர் வழிகாட்டுதல்
இல்லாமல்
சுயமாக
வாழ கற்றுக்கொள்வதற்காக
எழுதினேன்..

தேவன் மாயம் said...

/உன் அழகைக்கண்டு
வெட்கி
பூக்கள் எல்லாம்
வாடி விட்டன பார்!,//

பூக்களைவிட அழகானவளா?
நல்ல வரிகள் தேவா///

ஆம்!!
நண்பரே..

தேவன் மாயம் said...

//உன் சிறகுகளை
நீதான் நெய்யவேண்டும்!
உன் நெஞ்சில்
நீதான்
இறகுகளை
வளர்க்க வேண்டும்!//

நல்லதொரு அட்வைஸ்
நல்ல தேநீர் அருந்திய திருப்தி, வாழ்த்துக்கள் தேவா///

நல்லதேநீர் சுவைத்ததற்கு
நன்றி..

Anonymous said...

காதலை இயல்பாக, அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.கவித்துமான வரிகள் ரசிக்க வைத்தது..

வாழ்த்துக‌ள்

Mathu said...

Very nice..! தேநீர் தித்தித்தது! கவிதை வரிகளும் அதை விட அதன் கருத்தும் அருமை :) ரொம்ப நல்லா இருக்கு!!
வாழ்த்துக்கள் :)

anujanya said...

நல்லா இருக்கு தேவன். மேலும் எழுதுங்கள்.

அனுஜன்யா

தேவன் மாயம் said...

\\சுதந்திரம் பிறர்
தருவதல்ல!
சிறகுகளும் அப்படித்தான்
என்றேன்!\\

ஆஹா அருமை தேவ்ஸ் ///

ஏதோ தோணிச்சு
எழுதிவிட்டேன்!!!

தேவா......

தேவன் மாயம் said...

காதலை இயல்பாக, அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.கவித்துமான வரிகள் ரசிக்க வைத்தது..

வாழ்த்துக‌ள்///

வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி

தேவன் மாயம் said...

Very nice..! தேநீர் தித்தித்தது! கவிதை வரிகளும் அதை விட அதன் கருத்தும் அருமை :) ரொம்ப நல்லா இருக்கு!!
வாழ்த்துக்கள் :)///

நன்றி மது!

தேவன் மாயம் said...

நல்லா இருக்கு தேவன். மேலும் எழுதுங்கள்.

அனுஜன்யா////

உங்களை
மாதிரியெல்லாம் எழுதவராது.
வருகைக்கு நன்றீ

சாந்தி நேசக்கரம் said...

****************************
'சுதந்திரம் பிறர்
தருவதல்ல!
சிறகுகளும் அப்படித்தான்
என்றேன்!

உன் சிறகுகளை
நீதான் நெய்யவேண்டும்!
உன் நெஞ்சில்
நீதான்
இறகுகளை

நான் தந்தால் அது
இரவல் சுதந்திரம்

என் மூச்சுக்காற்றை
நீ எவ்வளவு நாள்
சுவாசிப்பாய்?

பிறர்
இரத்தத்தில்
எவ்வளவு நாள்
துடிக்கும் உன்
இதயம்?

பிறர்
கை பற்றி
எவ்வளவு நாள்
நடக்கும் உன்
கால்கள்?
*****************
பிடித்தவரிகள் மேலுள்ளவை
---------------------------

சிறகுகளைத்தானே பெற்றுக்கொள்வதும் தானாகத் தனது எல்லைகளைத் தீர்மானிப்பதும் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் வேண்டும்.தன்னம்பிக்கை தரும் துணிவுடன் நம்மை இயக்க நாமே சிறகுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அழகான கவிதை மூலம் தந்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.

சாந்தி

na.jothi said...

சுதந்திரம் பிறர்
தருவதல்ல!
சிறகுகளும் அப்படித்தான்
என்றேன்!

உன் சிறகுகளை
நீதான் நெய்யவேண்டும்!
உன் நெஞ்சில்
நீதான்
இறகுகளை
வளர்க்க வேண்டும்!

அருமையான வரிகள்

தேவன் மாயம் said...

சிறகுகளைத்தானே பெற்றுக்கொள்வதும் தானாகத் தனது எல்லைகளைத் தீர்மானிப்பதும் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் வேண்டும்.தன்னம்பிக்கை தரும் துணிவுடன் நம்மை இயக்க நாமே சிறகுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அழகான கவிதை மூலம் தந்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.

சாந்தி///

நான் சொல்லவந்ததை 100%
புரிந்து எழுதியது
நீங்கள்தான்...
தேவா...

தேவன் மாயம் said...

சுதந்திரம் பிறர்
தருவதல்ல!
சிறகுகளும் அப்படித்தான்
என்றேன்!

உன் சிறகுகளை
நீதான் நெய்யவேண்டும்!
உன் நெஞ்சில்
நீதான்
இறகுகளை
வளர்க்க வேண்டும்!

அருமையான வரிகள்///

ரசித்து எழுதியதற்கு நன்றி

Sinthu said...

அப்படி இல்லை அண்ணா..
காதலர்களில் பலர் தங்கள் தங்களுக்கு மட்டும் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களது காதலி வேறு ஒரு பையனுடனோ அவர்களது காதலன் வேறு பொண்ணுடனோ கதைப்பதை விரும்புவதில்லை. இது மாறனும். ஆனால் மாறாது. அதைவிட அவள் அவனது நேஞ்சரக்கூட்டில் இருந்தால் இப்போது அவள் அவளல்ல அவன் எனவே... அவள் சுதந்திரப் பரவையாகிவிடுவாள்.... யாவருடனும் பேசக் கூடியவளாக..
இது என் கருத்து.. உங்களுக்கு வேறு மாதிரி இருக்கலாம்.. தப்பே இல்லை...

அன்புடன் அருணா said...

//சிறகுகள் வேண்டும்,
பிறர் பறிக்காமல்
நான்
பறக்கவேண்டும்
என்றாய்!//

ம்ம்ம் இருந்தால் எவ்வ்ளோ நல்லா இருக்கும்???
அழகிய கவிதை.
அன்புடன் அருணா

தேவன் மாயம் said...

//சிறகுகள் வேண்டும்,
பிறர் பறிக்காமல்
நான்
பறக்கவேண்டும்
என்றாய்!//

ம்ம்ம் இருந்தால் எவ்வ்ளோ நல்லா இருக்கும்???
அழகிய கவிதை.
அன்புடன் அருணா//

அருணாவின் சிறகுகள் உங்கள்
பதிவிலேயே உள்ளதே!!

தேவா..

Arulkaran said...

//சுதந்திரம் பிறர்
தருவதல்ல!//
//நான் தந்தால் அது
இரவல் சுதந்திரம்//

கவிதையின் சாரம் நன்றாயிருக்கிறது

தேவன் மாயம் said...

//சுதந்திரம் பிறர்
தருவதல்ல!//
//நான் தந்தால் அது
இரவல் சுதந்திரம்//

கவிதையின் சாரம் நன்றாயிருக்கிறது///

வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி

தேவன் மாயம் said...

அப்படி இல்லை அண்ணா..
காதலர்களில் பலர் தங்கள் தங்களுக்கு மட்டும் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களது காதலி வேறு ஒரு பையனுடனோ அவர்களது காதலன் வேறு பொண்ணுடனோ கதைப்பதை விரும்புவதில்லை. இது மாறனும். ஆனால் மாறாது. அதைவிட அவள் அவனது நேஞ்சரக்கூட்டில் இருந்தால் இப்போது அவள் அவளல்ல அவன் எனவே... அவள் சுதந்திரப் பரவையாகிவிடுவாள்.... யாவருடனும் பேசக் கூடியவளாக..
இது என் கருத்து.. உங்களுக்கு வேறு மாதிரி இருக்கலாம்.. தப்பே இல்லை...///

காதல் பற்றி தனிநபர் அனுபவஙளும் கருத்துக்களும் மாறுபடலாம்..
தேவா..

ராமலக்ஷ்மி said...

கவிதை நன்று.

//சுதந்திரம் பிறர்
தருவதல்ல!
சிறகுகளும் அப்படித்தான்
என்றேன்!//

ரசித்தேன்.

தேவன் மாயம் said...

கவிதை நன்று.

//சுதந்திரம் பிறர்
தருவதல்ல!
சிறகுகளும் அப்படித்தான்
என்றேன்!//

ரசித்தேன்.///

வருகை,ரசிப்பு இரண்டுக்கும் நன்றி

தமிழ் தோழி said...

அழகு. அருமையான கவிதை

குமரை நிலாவன் said...

சுதந்திரம் பிறர்
தருவதல்ல!
சிறகுகளும் அப்படித்தான்
என்றேன்!


உன் சிறகுகளை
நீதான் நெய்யவேண்டும்!
உன் நெஞ்சில்
நீதான்
இறகுகளை
வளர்க்க வேண்டும்!


நான் தந்தால் அது
இரவல் சுதந்திரம்

வரிகளில் பிடித்தது....

சுதந்திரம்.
தருவதோ பெறுவதோ அல்ல

pudugaithendral said...

சுவை, மணம், குணம் நிறைந்த தேநீர் அருந்தியதில் மகிழ்ச்சி.

பாராட்டுக்கள்.

தேவன் மாயம் said...

அழகு. அருமையான கவிதை///

உங்கள்
இனிய
கருத்துக்கு
நன்றி,,
தேவா...

தேவன் மாயம் said...

வரிகளில் பிடித்தது....

சுதந்திரம்.
தருவதோ பெறுவதோ அல்ல///

ரசித்துக்கருத்துரை வழங்கியதற்கு நன்றி

தேவன் மாயம் said...

சுவை, மணம், குணம் நிறைந்த தேநீர் அருந்தியதில் மகிழ்ச்சி.

பாராட்டுக்கள்.///

தேநீர் விருந்தில் கலந்து கொண்டதற்கு
நன்றி...

தேவா...

நவீன் ப்ரகாஷ் said...

//உனக்கு ரோஜாக்கள்
பிடிக்குமா என்றேன்!
இல்லை! என்றாய்!
ஏன்? என்றேன்!!

பறிக்கவும், பிறர்
சூடவும்
நான் விரும்பவில்லை!
என்றாய்!!! //

மிகவும் பிடித்த வரிகள்... :)))

cheena (சீனா) said...

அன்பின் தேவா,

அருமை அருமை - கவிதை அருமை

கருத்து அழகாக - நாம் நம் காலில் நிற்க வேண்டும் என்பதை , எடுத்துக்காட்டி இருப்பது அருமை

நல்வாழ்த்துகள் தேவா

நட்புடன் ..... சீனா
--------------------------------

Anonymous said...

மிக அழகு! தன்னம்பிக்கை மிளிரும் கவிதை!

வாழ்த்துக்கள் அன்பரே!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory