Friday 2 January 2009

நீ தாண்டி எனக்குப்புடிச்ச அழகி!!!!!


             ன்ன வலை நண்பர்களே!!!
புத்தாண்டு கொண்டாட்டங்கள் எல்லாம் எப்படி இருந்தது? ஒரே பிரியாணியும்,கேக்கும்,இனிப்பும் சாப்பிட்டு நிறைய பேருக்கு சாப்பாட்டைக்கண்டாலே பயமா இருக்குங்க!!!! உங்களுக்கும் அப்படித்தானா?
             புத்தாண்டில் ஏதாவது புதியதாக நல்ல விசயம் ,நல்ல மாற்றம் நம்ம பழக்கங்களில்.... செய்யலாம்னு யோசிச்சீங்களா?
             கஷ்டம் வாழ்க்கையில் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும்!!!
கஷ்டம் இல்லாத வாழ்க்கை உண்டா?
             நான் ஒரு சின்ன முடிவு பண்ணினெங்க!!!!
 
             குழந்தைய எடுத்துக்கிட்டிங்கன்னா அம்மா,அப்பா தூக்கணும், பாராட்டனும்னு நினைக்குது.

             ஸ்கூல் பையனைப்பாருங்க வாத்தியார் பாராட்டனும்னு நினைக்கிறான்!!
             
             காலேஜ் பசங்களைப்பாருங்க- மச்சி டிரஸ் தூளா இருக்கு!!!எங்கடா வாங்கினே!!!எதாவது நண்பர்கள் பாராட்ட மாட்டமான்ன்னு எதிர்பார்க்கிறான்!!!
             பொண்னுங்க !!!!புது சாரி கட்டினவுடனே அப்படியே ஒரு ஷோ காடுவாங்க காலேஜில!! நண்பிகள் அதப்பாத்து.................. சாரி சூப்பரா இருக்குடி! எங்கடி வாங்கினே?................எப்பிட்றி இப்பிடி அழகா கட்டுற!!!!
               
              லவ்வரோ ,மனைவியோ ........எங்கேயாவது வெளியே கிளம்பும்போது திடீர்னு பழைய மேக்கப் கிட்டைப் கண்டு புடிச்சு முகத்தில பூசி.................மூஞ்சிய  ஒரு வழி பண்ணி .........ஒரு செமி கோஸ்ட் ரேஞ்சுக்கு மாறி நிற்பாங்க!!!!அந்த நேரத்துல ஒபினியன் வேற கேப்பாங்க!!!! நம்ம தப்பித்தவறி உண்மை விளம்ப்பியா மாறி ஏதாவது சொன்னோம் !..............அதோட ஒழிஞ்சோம்!!!!
              அதுக்கு பதிலா மனசக்கல்லாக்கிகிட்டு.....................கீழே உள்ள மாதிரி சொல்லனும்...
              .நீ ரொம்ப அழகா இருக்கேடி!!!!
              இந்த மேக்கப் சூப்பரா இருக்கு!!
              உண்மையாவா சொல்றீங்க?
              ஆமாம்!!!!!!!!
              அன்னைக்கு பல்லுக்குட்டி ,பல்லுக்குட்டின்னு பல்லை கிண்டல் பண்ணிங்க?................
              அது சும்மா உன்னைய வெறுப்பேத்துறதுக்காகச்சோன்னேண்டி!!!
              நீ தாண்டி எனக்குப்புடிச்ச அழகி!!!

               என்ன முடிவு பண்ணினேன்னு கேக்கிறீங்களா? எல்லாரையும் பாராட்டுறதுதாங்க அது!!!!!!!!!!!!!!!
                நீங்களும் தயாரா?
               ஓ.கே................

                தேவா........... 
             
            

25 comments:

நட்புடன் ஜமால் said...

\\நீ தாண்டி எனக்குப்புடிச்ச அழகி!!!!!\\

பாசமான தலைப்பு.

நட்புடன் ஜமால் said...

\\ஒரு செமி கோஸ்ட் ரேஞ்சுக்கு மாறி நிற்பாங்க!!!!\\


ஹா ஹா ஹா

தலைப்புக்கு எதிரானது

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

பாராட்டுக்கள் தேவா.

தேவன் மாயம் said...

நீ தாண்டி எனக்குப்புடிச்ச அழகி!!!!!\\

பாசமான தலைப்பு///

புடிச்சிருக்கா????

தேவன் மாயம் said...

\ஒரு செமி கோஸ்ட் ரேஞ்சுக்கு மாறி நிற்பாங்க!!!!\\


ஹா ஹா ஹா

தலைப்புக்கு எதிரானது

ஹா ஹா ஹா///

இதையெல்லாம் ஒபனா சொல்லமாட்டம்ல

தேவன் மாயம் said...

பாராட்டுக்கள் தேவா///

நன்றி...ஜமால்!!!

தேவா...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அன்னைக்கு பல்லுக்குட்டி ,பல்லுக்குட்டின்னு பல்லை கிண்டல் பண்ணிங்க?................
அது சும்மா உன்னைய வெறுப்பேத்துறதுக்காகச்சோன்னேண்டி!!!//



அனுபவஸ்தர் சொன்னா கேட்டுக்கணும்ல.

ஓ.கே. ஓ.கே.

தேவன் மாயம் said...

//அன்னைக்கு பல்லுக்குட்டி ,பல்லுக்குட்டின்னு பல்லை கிண்டல் பண்ணிங்க?................
அது சும்மா உன்னைய வெறுப்பேத்துறதுக்காகச்சோன்னேண்டி!!!//அனுபவஸ்தர் சொன்னா கேட்டுக்கணும்ல.

ஓ.கே. ஓ.கே.///

ஆஹா!!!
எழுதுறதே ஆபத்தா இருக்கே!!!///

தேவா..

சந்தனமுல்லை said...

:-))

பாராட்டத்தக்க விஷயம்..புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் said...

பாராட்டத்தக்க விஷயம்..புத்தாண்டு வாழ்த்துக்கள்///

நன்றி சந்தனம்!!!

Anonymous said...

உங்க பதிவு தான் இன்னைக்கு படிச்சதுல பெஸ்ட்.

தேவன் மாயம் said...

உங்க பதிவு தான் இன்னைக்கு படிச்சதுல பெஸ்ட்.///

வாங்க சின்ன அம்மிணி!!
உங்க பெருந்தன்மைக்கு நன்றிங்க!!!
மெய்யாலுமா சொல்றீங்க?

தேவா!!!

geevanathy said...

உங்களுடைய உற்சாகமான எழுத்துக்கள் தொடரட்டும் நண்பரே....
வாழ்த்துக்கள்!

Anonymous said...

என்ன இப்படிக்கேட்டுப்போட்டீங்க. நல்லாருந்தா நல்லா இருக்குன்னு சொல்லறதுதானே முறை :)

தேவன் மாயம் said...

உங்களுடைய உற்சாகமான எழுத்துக்கள் தொடரட்டும் நண்பரே....
வாழ்த்துக்கள்!///

நன்றி!!! ஜீ!!!!

தேவா>>>>

தேவன் மாயம் said...

என்ன இப்படிக்கேட்டுப்போட்டீங்க. நல்லாருந்தா நல்லா இருக்குன்னு சொல்லறதுதானே முறை :)///

நீங்க சொன்னா சரிதான்!!!

தேவா>>>

கண்மணி/kanmani said...

இடுகை பெயர் படம் மட்டுமில்லை....புத்தாண்டு கருத்தும் அருமை.
யாரையும் பாராட்டி விட்டால் பிரச்சினையே வராது பாருங்க.
தேவா உண்மையிலேயே அருமையான விஷயம் நன்றி.

தேவன் மாயம் said...

இடுகை பெயர் படம் மட்டுமில்லை....புத்தாண்டு கருத்தும் அருமை.
யாரையும் பாராட்டி விட்டால் பிரச்சினையே வராது பாருங்க.
தேவா உண்மையிலேயே அருமையான விஷயம் நன்றி.///

கண்மணி வருகைக்கு நன்றி!!!
தேவா..

Sinthu said...

"என்ன முடிவு பண்ணினேன்னு கேக்கிறீங்களா? எல்லாரையும் பாராட்டுறதுதாங்க அது!!!!!!!!!!!!!!!
நீங்களும் தயாரா?
ஓ.கே................"
அண்ணா தப்பாக இருந்தா சுட்டியும் காட்டனும். பொய் சொல்லி பாராட்டுவதை விட உண்மையைச் சொல்லு ஏச்சு வாங்குவது என்னைப் பொறுத்தவரை மேல்.
நான் ஏதாவது தப்பாக எழுதினால் நீங்க கட்டாயம் சொல்லவேணும் அது மட்டும் இல்லை எப்படி நல்ல செய்யலாம் என்றும் சொல்லணும்..

ஓ.கே............?
சிந்து

தேவன் மாயம் said...

"என்ன முடிவு பண்ணினேன்னு கேக்கிறீங்களா? எல்லாரையும் பாராட்டுறதுதாங்க அது!!!!!!!!!!!!!!!
நீங்களும் தயாரா?
ஓ.கே................"
அண்ணா தப்பாக இருந்தா சுட்டியும் காட்டனும். பொய் சொல்லி பாராட்டுவதை விட உண்மையைச் சொல்லு ஏச்சு வாங்குவது என்னைப் பொறுத்தவரை மேல்.
நான் ஏதாவது தப்பாக எழுதினால் நீங்க கட்டாயம் சொல்லவேணும் அது மட்டும் இல்லை எப்படி நல்ல செய்யலாம் என்றும் சொல்லணும்..

ஓ.கே............?
சிந்து///

சரி!!!
நிறைய எழுதும்போது நமக்கே நல்லது கெட்டது தெரிந்துவிடும்!!!
பொய் சொல்லவில்லை!!!
தேவா..

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Divya said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

'மனதார பாராட்ட' வேண்டியதின் அவசியத்தை அழகாக பதிவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்:)))

தேவன் மாயம் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

'மனதார பாராட்ட' வேண்டியதின் அவசியத்தை அழகாக பதிவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்:)))///

மனதாரத்தனே சொல்றீங்க?//

எட்வின் said...

//நீ ரொம்ப அழகா இருக்கேடி!!!!
இந்த மேக்கப் சூப்பரா இருக்கு!!
உண்மையாவா சொல்றீங்க?//
கரெக்டுங்கோ... திருமங்கல கூத்திற்கு தமிழக அரசையும் பாராட்டிருவோமா :)

தேவன் மாயம் said...

//நீ ரொம்ப அழகா இருக்கேடி!!!!
இந்த மேக்கப் சூப்பரா இருக்கு!!
உண்மையாவா சொல்றீங்க?//
கரெக்டுங்கோ... திருமங்கல கூத்திற்கு தமிழக அரசையும் பாராட்டிருவோமா :)///

எல்லோரையும், ஏன் இங்கு வந்ததுக்கு
உங்களுக்கும் பாராட்டுக்கள்!!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory