Monday 5 January 2009

அம்மா செல்லமா!!! அப்பா செல்லமா?....

                சாதாரணமா குழந்தைகளுடன் விளையாடும் பொழுது பார்த்தால் அப்பாக்கள் தாங்கள் குழந்தைகளுக்கு நிறைய சொல்லித்தரலாம்!!!                            
                கிரிக்கெட்டை எடுத்துக்கிட்டா......
                டிபன்ஸ் ஆடுவது எப்படி....
                டிரைவ் செய்வது எப்படி.......
                கட் அடிப்பது எப்படின்னு.....
     ஆனா நிறைய இடங்களில் பார்த்தா அப்பாக்கள் “எனக்கு எங்கங்க நேரம் இருக்கு அதுதான் ஸ்கூல்ல போய் கத்துக்கிறான் இல்ல!! அவன் பிரில்லியண்ட் பாய்!!எல்லாத்தையும் ஈஸியா கத்துகிட்டு விடுவான்”னு....எஸ்கேப் ஆயிடுவாங்க!! 
                பையனுக்கும் தெரியும்!!!அவனும் ஸ்கூலில் ஆடுகிறான் இல்ல!!
வீட்டில் அவனோடு சேர்ந்தும் அண்ணன் எல்லாம் ஆடுவாங்க!!
கடைசியில என்ன ஆகும் ! 
                அம்மாகிட்ட போவான் பையன்.....
               ”அண்ணனை அவுட் ஆக்கவே முடியலைம்மா என்னைய பேட்டிங் புடிக்க விடமாட்டேன்கிறான்னு ”புகார் போகும்.
                அப்புறம் அம்மா சமாதானம் பண்ணி பந்தை போட்டு அவனை அடிக்கச்சொல்லி ஆட்டத்தில ஜெயிக்க வச்சு , அப்புறம் அவனை சமாதானப்படுத்தி சாப்பாட்டை ஊட்டி தூங்க வைப்பார்கள்!
                 அதேமாதிரி பாருங்க ஒரு குழந்தையை , இவ்வளவு நல்லா டான்ஸ் ஆடுறியே!!! யார் உனக்கு கத்துக்குடுக்கிறாங்கன்னா இந்த மிஸ்கிட்ட கத்துக்கிறேன்னு சொல்லும்!!!சரி வீட்டில் என்ன பண்ணுவேன்னு கேட்டா....“அம்மாகிட்டதான் நான் டான்ஸ் கிளாஸ் போயிட்டு வந்தா வீட்டுலயும் ஆடிக்காட்டுவேன்னு” சொல்லும்!!
                 சரி உங்க அம்மாவுக்கு டான்ஸ் தெரியுமான்னு கேட்டா “அவங்களுக்கு தெரியாதுன்னுதான் சொல்லும்!!!
                 சரி உங்க அப்பாகிட்ட ஆடிக்காட்டுவியா?
                 எங்க!! “அவர் ஆபீஸ் விட்டு வந்தா கம்பியூட்டர்ல உக்காந்துடுவாரு!!
அதை முடிச்சா டிவி பார்ப்பார்!!! அவருக்கு நேரமே இல்லை”ன்னு... ஒரு பதில் தரும்!!!!
                நான்அப்பாகிட்ட ஏதாவது கேட்டா”அப்பாவுக்கு வேலை இருக்கும்மா!.......நீ அம்மாகிட்ட கேட்டுக்கம்மான்னு சொல்லிவிடுவார்”னும் சொல்லும்!!
                 இது தாங்க நிறைய இடத்தில நடக்குது!!!!
                விளையாட்டுக்கு சொல்லவில்லை !!!”நிறைய அப்பாக்களுக்கு குழந்தை என்ன கிளாஸ் படிக்குதுன்னு தெரிஞ்சு இருக்கும்!! ஆனா செக்‌ஷன் என்னன்னு கேட்டுப்பாருங்க தெரியாது!!!
                இன்னும் நிறைய எழுதலாம்!! ஆனா இதுவே போதும்!!! உங்களுடைய சிந்தனையில் நிறைய எண்ணங்கள் இதைப்படிக்கும்ப்போது தோன்றியிருக்கும்!
நானே எல்லாத்தையும் சொல்லுவதை விட உங்க சிந்தனைக்கு சில விஷயங்களை விடுவதே சிறந்ததுன்னு நினைக்கிறேன்!!!இதுக்கு நேர்வினையோ , எதிர்வினையோ நிறைய எழுதுங்க!!!
                நாம் ஆண்கள், அம்மாவைப்போல கொஞ்சம் மாறனும்னு நினைக்கிறேன்!!!
               அன்பையும், அக்கறையையும் நம் குழந்தைகள்,குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் எல்லோரிடத்திலும் செலுத்துவோமே!!!! 
                என்னங்க நான் சொல்லுறது!!!சரிதானே?......
           
                                      தேவா.....              
                 
25 comments:

*இயற்கை ராஜி* said...

//அன்பையும், அக்கறையையும் நம் குழந்தைகள்,குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் எல்லோரிடத்திலும் செலுத்துவோமே!!!!
என்னங்க நான் சொல்லுறது!!!சரிதானே?......//

Correct oh correct..

நட்புடன் ஜமால் said...

\\அம்மா செல்லமா!!! அப்பா செல்லமா?....\\

இரண்டு பேருக்கும்தான் ...

நட்புடன் ஜமால் said...

\\“அவர் ஆபீஸ் விட்டு வந்தா கம்பியூட்டர்ல உக்காந்துடுவாரு!!\\

இப்படியெல்லாம் செய்யப்படாது ...

நட்புடன் ஜமால் said...

\\நாம் ஆண்கள், அம்மாவைப்போல கொஞ்சம் மாறனும்னு நினைக்கிறேன்!!!
அன்பையும், அக்கறையையும் நம் குழந்தைகள்,குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் எல்லோரிடத்திலும் செலுத்துவோமே!!!!
என்னங்க நான் சொல்லுறது!!!சரிதானே?......\\

மிகவும் சரியே ...

பழமைபேசி said...

ஐயா,

நல்லா எழுதி இருக்கீங்க... எங்க வீட்ல கேட்டா, அப்பா கட்சின்னுதான் பதில் வரும்... இஃகிஃகி! வாய்ப்புக் கிடைக்கும் போது, கவி காளமேகத்தின் தாக்கம்ங்ற வகைப்பாட்டுப் பதிவுகளை என்னோட பக்கத்துல பாருங்க.

தேவன் மாயம் said...

ஐயா,

நல்லா எழுதி இருக்கீங்க... எங்க வீட்ல கேட்டா, அப்பா கட்சின்னுதான் பதில் வரும்... இஃகிஃகி! வாய்ப்புக் கிடைக்கும் போது, கவி காளமேகத்தின் தாக்கம்ங்ற வகைப்பாட்டுப் பதிவுகளை என்னோட பக்கத்துல பாருங்க.///

நீங்க சூப்பர் மேன் சாமி!!!எங்களையே மயக்குற நீங்க உங்க புள்ளைங்களை உடுவீங்களா?

தேவன் மாயம் said...

/அன்பையும், அக்கறையையும் நம் குழந்தைகள்,குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் எல்லோரிடத்திலும் செலுத்துவோமே!!!!
என்னங்க நான் சொல்லுறது!!!சரிதானே?......//

Correct oh correct..//
ஏதோ தொனிச்சு எழுதினேன்!!
தேவா..

தேவன் மாயம் said...

\\அம்மா செல்லமா!!! அப்பா செல்லமா?....\\

இரண்டு பேருக்கும்தான் ...///

ரொம்ப செல்லமா?

தேவன் மாயம் said...

\\“அவர் ஆபீஸ் விட்டு வந்தா கம்பியூட்டர்ல உக்காந்துடுவாரு!!\\

இப்படியெல்லாம் செய்யப்படாது ...///
நீங்க ஆபீஸ் லேயே கம்ப்யூட்டரை தட்டீருவீங்க!!!
நாங்க என்ன செய்யுறது?

தேவன் மாயம் said...

\நாம் ஆண்கள், அம்மாவைப்போல கொஞ்சம் மாறனும்னு நினைக்கிறேன்!!!
அன்பையும், அக்கறையையும் நம் குழந்தைகள்,குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் எல்லோரிடத்திலும் செலுத்துவோமே!!!!
என்னங்க நான் சொல்லுறது!!!சரிதானே?......\\

மிகவும் சரியே ...///

நீங்க ஜமாய்ச்சுருவீங்க ஜமால்!!!

தேவன் மாயம் said...

ஐயா,

நல்லா எழுதி இருக்கீங்க... எங்க வீட்ல கேட்டா, அப்பா கட்சின்னுதான் பதில் வரும்... இஃகிஃகி! வாய்ப்புக் கிடைக்கும் போது, கவி காளமேகத்தின் தாக்கம்ங்ற வகைப்பாட்டுப் பதிவுகளை என்னோட பக்கத்துல பாருங்க.///

எல்லோரையும் உங்க கட்சிக்கு கொண்டுபோற வித்தை வச்சுருக்கீங்க நீங்க!!!

தாரணி பிரியா said...

ரெண்டு பேர் செல்லமா இருந்தாதான் நல்லா இருக்கும்.:)

இப்ப நிறைய வீட்டில குழந்தைங்க எல்லாம் ஆயா செல்லம் ஆகிட்டு வர்றாங்களே :(

பொண் குழந்தைங்க அப்பா செல்லமாவும் பசங்க அம்மா செல்லமாவும்தானே இருக்காங்க‌

அமுதா said...

/*அன்பையும், அக்கறையையும் நம் குழந்தைகள்,குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் எல்லோரிடத்திலும் செலுத்துவோமே!!!!
என்னங்க நான் சொல்லுறது!!!சரிதானே?......*/
மிகச் சரி

Sinthu said...

பொதுவாக அம்மா மகன்களிலும் அப்பா மகள்களிலும் தான் அதிகமாக பாசம் காட்டுவார்கள் என்று சொல்வார்களே.... நீங்கள் என்ன சொறீங்க தேவா அண்ணா..

ஆனால் என்கூட இருப்பது என் அம்மா மட்டும் தான்..

தேவன் மாயம் said...

/*அன்பையும், அக்கறையையும் நம் குழந்தைகள்,குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் எல்லோரிடத்திலும் செலுத்துவோமே!!!!
என்னங்க நான் சொல்லுறது!!!சரிதானே?......*/
மிகச் சரி///

வாங்க அமுதா!!!
ஏதோ எழுதினேன்!!
நீங்க சரின்னா சரிதான்!!!

தேவா.

coolzkarthi said...

"என் குழந்தை முதன் முதலில் அம்மா என்று சொன்னதை என் வீட்டு ஆயா போனில் சொன்னாள் " என்று ஒரு பெண் வருத்தபட்டடதை என்னவென்று சொல்வது?இன்று மாறி வரும் நிலை,கவலைக்குரியதாக உள்ளது.....

தேவன் மாயம் said...

பொதுவாக அம்மா மகன்களிலும் அப்பா மகள்களிலும் தான் அதிகமாக பாசம் காட்டுவார்கள் என்று சொல்வார்களே.... நீங்கள் என்ன சொறீங்க தேவா அண்ணா..

ஆனால் என்கூட இருப்பது என் அம்மா மட்டும் தான்..///

நீ சொல்வதும் சரிதான்!!!
அம்மா கூட இருந்தா பொண்ணுக்கு அதைவிட என்ன வேணும்!!!
அம்மாதான்
friend,
phylosopher,
guide
&
gaurdian!!!

Deva..

அன்புடன் அருணா said...

//ஆண்கள், அம்மாவைப்போல கொஞ்சம் மாறனும்னு நினைக்கிறேன்!!!//

ம்ம்ம் அப்பாடா ...நீங்களாவது ஒத்துக் கொண்டீர்களே..
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

//ஆண்கள், அம்மாவைப்போல கொஞ்சம் மாறனும்னு நினைக்கிறேன்!!!//
ம்ம்ம்...நீங்களாவது ஒத்துக் கொண்டீர்களே.
அன்புடன் அருணா

மேவி... said...

ஆமா தேவ. நானும் பார்த்துக்கிறேன் நெறைய இடங்களில்....
பின்னாளில் வரும் குடும்ப பிளவுக்கு இதுயும் ஒரு காரணமாய் இருக்கலாம்......

Sinthu said...

"பொதுவாக அம்மா மகன்களிலும் அப்பா மகள்களிலும் தான் அதிகமாக பாசம் காட்டுவார்கள் என்று சொல்வார்களே.... நீங்கள் என்ன சொறீங்க தேவா அண்ணா..

ஆனால் என்கூட இருப்பது என் அம்மா மட்டும் தான்..///

நீ சொல்வதும் சரிதான்!!!
அம்மா கூட இருந்தா பொண்ணுக்கு அதைவிட என்ன வேணும்!!!
அம்மாதான்
friend,
phylosopher,
guide
&
gaurdian!!!

Deva.."
U r correct. But she is very far away from me anna.............
I really miss her a lot...

தேவன் மாயம் said...

"என் குழந்தை முதன் முதலில் அம்மா என்று சொன்னதை என் வீட்டு ஆயா போனில் சொன்னாள் " என்று ஒரு பெண் வருத்தபட்டடதை என்னவென்று சொல்வது?இன்று மாறி வரும் நிலை,கவலைக்குரியதாக உள்ளது.....///

இதை மாற்றும் கருவி நம் கையில் உள்ளதா?

தேவன் மாயம் said...

//ஆண்கள், அம்மாவைப்போல கொஞ்சம் மாறனும்னு நினைக்கிறேன்!!!//

ம்ம்ம் அப்பாடா ...நீங்களாவது ஒத்துக் கொண்டீர்களே..
அன்புடன் அருணா///

கொஞ்சம்தான் எழுதினேன்!!!
நிறைய நெஞ்சுக்குள்!!!

தேவன் மாயம் said...

ஆமா தேவ. நானும் பார்த்துக்கிறேன் நெறைய இடங்களில்....
பின்னாளில் வரும் குடும்ப பிளவுக்கு இதுயும் ஒரு காரணமாய் இருக்கலாம்......///

நிறைய சிந்திது விட்டீர்கள் இதைப்பற்றி!!!!

தேவன் மாயம் said...

"பொதுவாக அம்மா மகன்களிலும் அப்பா மகள்களிலும் தான் அதிகமாக பாசம் காட்டுவார்கள் என்று சொல்வார்களே.... நீங்கள் என்ன சொறீங்க தேவா அண்ணா..

ஆனால் என்கூட இருப்பது என் அம்மா மட்டும் தான்..///

நீ சொல்வதும் சரிதான்!!!
அம்மா கூட இருந்தா பொண்ணுக்கு அதைவிட என்ன வேணும்!!!
அம்மாதான்
friend,
phylosopher,
guide
&
gaurdian!!!

Deva.."
U r correct. But she is very far away from me anna.............
I really miss her a lot..///

see the seperation are temperary
u will get back

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory