Monday 12 January 2009

அன்புடன் ஒரு சிகிச்சை!!!

அந்த அம்மாவுக்கு 50 லிருந்து 60 வயதுக்குள் இருக்கும்! நடுத்தரமான உடலமைப்பு!களைப்பும் ,உடல் பலகீனமும் பார்த்தவுடனேயே தெரிந்தது!!கண்கள் வலியில் உக்காரலாமா என்று கெஞ்சின!!!
உள்ளே வரும்போது தன்னால் நடந்து வர முடியாமல் இரண்டு பேர் இரண்டு பக்கமும் பிடித்துக்கொண்டு கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு வந்தார்கள்!
பார்த்த்வுடனேயே அவர்கள் நடக்க சிரமப்படுகிறார்கள் என்பது தெரிந்தது!!!கூட்டிக்கொண்டு வந்தது ஒரு ஆண் ஒரு பெண்!..... அந்த அம்மாவுக்கு மகனோ! மகளோ!முகஜாடையில் சொந்தம் போலத்தெரிந்தது!
எனக்கு அவர்கள் இருவரையும் பார்க்கும் போது கோபம்தான் வந்தது! நடக்க முடியாத பெண்மணியை சிரமப்படுத்தி நடத்தி கூட்டி வருகிறார்களே என்று!!!.
கோபம் காட்டாமல் அமைதியாக!”ஏப்பா? வலி அதிகம் இருக்கும் போல இருக்கே! வீல் சேரில கூட்டி வரலாம் இல்ல! நடக்க விடாதீர்கள்! மேற்கொண்டு பிரச்சினையாகிவிடுமே! ”என்றேன்.
இல்ல சார்! நேத்துத்தான் இரவு பாத்ரூம் போகும் போது ஸ்லிப் ஆயிட்டாங்க போல இருக்கு! நாங்க யாரும் பார்க்கவில்லை!! தன்னால எழுந்து வந்து படுத்திட்டாங்க!காலையில் கொஞ்சம் வலது இடுப்பில் வலி இருக்கு என்றார்கள்! சரியாக நடக்க முடியவில்லை!அதுதான் கூட்டிக்கொண்டு வந்தோம்!!
சரி! அந்த இருக்கையில உக்கார வைங்க! ஏம்மா கால் சறுக்கி விழுந்தீர்களா? இல்லை
இடுப்பு வலி வந்து விழுந்தீர்களா? என்று கேட்டேன்...
அவர்களுக்கு சரியாக சொல்லத்தெரியவில்லை!!

மேலே கூறிய நிகழ்வு அடிக்கடி மருத்துவமனைகளில் நாம் பார்ப்பதுதான்!
நம்மில் சிலருக்கு இது பரிச்சயமாக, சொந்தக்காரர்களுக்கோ,நண்பர்களுக்கோ ஏற்பட்டதாகக் கூட இருக்கலாம்!!

மேலே கூறிய பிரச்சினை இருந்தால் பெரும்பாலும் அது இடுப்பு எலும்பு முறிவு ஆகத்தான் இருக்கும்!!வயதானவர்களுக்கு எலும்புகள் பலவீனமாக இருப்பதால் கீழே விழாமலேயே கூட இடுப்பு எலும்பு முறிவு ஏற்படுகிறது!

இதற்கு பெரும்பாலும் நாம் நுடவைத்திய சாலையில்தான் வைத்தியம் பார்க்கிறோம்!காரணம்? வயசாகி விட்டது...இனிமேல் வைத்தியம் பார்த்து என்ன பண்ணப்போகிறோம் என்ற அலுப்பு,பணவசதியின்மை இன்ன பிற காரணங்கள்!!!

இடுப்பு எலும்பு உடைந்து சரியான சிகிச்சை பெறாதவர்கள், வெகு விரைவில் நடக்கமுடியாததால், மனம் உடைந்து,தன் சுயகௌரவம் இழந்து மன நோயாளி போல ஆகிவிடுகிறார்கள்!!தான் குடும்பத்துக்கு ஒரு பாரம் போல உணர்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அன்றாடக்கடமைகளைக்கூட அடுத்தவர் உதவி இல்லாமல் செய்ய முடிவதில்லை!

ஒரு ஆய்வின்படி 50% இடுப்பு எலும்பு உடைந்த நோயாளிகள் உடைந்து ஒரு வருடத்துக்குள் இறந்து விடுகிறார்கள்!
ஆயினும் நவீன அறுவை சிகிச்சை மூலம் நன்றாக நடக்க வைக்கவும், எவருடைய துணையும் இல்லாமல் பழைய நிலைமைபோல் வாழவைக்கவும் முடியும்!!!
நம் பாசத்துக்குரியவர்களுக்கு வயதான காலத்திலும் கௌரவமான மன நிறைவான வாழ்க்கையை அளிப்போம்! அதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரும் கடமையும் உதவியும்!!!

தேவா..........

26 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இங்கே சில பணக்காரர்களுக்கு மாட்டுத்தொழுவத்தில் அல்லது அதற்கு இணையான கொட்டத்தில் இடம் கொடுத்து விடுகிறார்கள்...

தேவன் மாயம் said...

இங்கே சில பணக்காரர்களுக்கு மாட்டுத்தொழுவத்தில் அல்லது அதற்கு இணையான கொட்டத்தில் இடம் கொடுத்து விடுகிறார்கள்...///

முதியவர்களை
புறக்கணிப்பதில்
நாம் இன்னும்
முன்னணியில்
இருக்கிறோம்!!

தேவா...

ஆளவந்தான் said...

கால ஓட்டத்தில் முதியவர்களை கவனிக்க தவறிவிடுகிறார். செய்ய வேண்டியது ரெண்டே ரெண்டு முக்கியமான விசயங்கள் தான்.

ஒன்று: நாம் முதுமையில் பிறர் உதவியை முடிந்த வரையில் தவிர்ப்பதற்கு மனதளவிலும் உடலளவிலும் தயார் செய்து கொள்ளவேண்டும்

ரெண்டு: நாம் முதியவர்களை கரிசனத்தோடு அனுக வேண்டும் இல்லையேல் பூமாராங் கதை தான்

தேவன் மாயம் said...

கால ஓட்டத்தில் முதியவர்களை கவனிக்க தவறிவிடுகிறார். செய்ய வேண்டியது ரெண்டே ரெண்டு முக்கியமான விசயங்கள் தான்.

ஒன்று: நாம் முதுமையில் பிறர் உதவியை முடிந்த வரையில் தவிர்ப்பதற்கு மனதளவிலும் உடலளவிலும் தயார் செய்து கொள்ளவேண்டும்

ரெண்டு: நாம் முதியவர்களை கரிசனத்தோடு அனுக வேண்டும் இல்லையேல் பூமாராங் கதை தான்///

இந்தக்காலத்தில்
plan A, plan B என்று நீங்கள் சொன்னது போல தயாராக இருக்கவேண்டும்!!

தேவா..

புதியவன் said...

நல்ல பதிவு
மீண்டும் மீண்டும்
உங்கள் மனிதநேயம்
நிரூபிக்கப் படுகிறது...

தேவன் மாயம் said...

நல்ல பதிவு
மீண்டும் மீண்டும்
உங்கள் மனிதநேயம்
நிரூபிக்கப் படுகிறது...///

நன்றி புதியவன்!!
பொங்கல் வாழ்த்துக்கள்

தேவா...

நட்புடன் ஜமால் said...

\\ஒரு ஆய்வின்படி 50% இடுப்பு எலும்பு உடைந்த நோயாளிகள் உடைந்து ஒரு வருடத்துக்குள் இறந்து விடுகிறார்கள்!\\

அதிர்ச்சி தகவல்.

நல்ல பதிவு தேவா.

கிஷோர் said...

நல்லதொரு பதிவு.

வயது மூத்தவர்களை கவனித்துக்கொள்ளக்கூட சகிப்புத்தன்மை வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் மேலொங்கி காணப்படுகின்றது. இந்த அளவில் இருக்கின்றது நம் பாசம் மற்றும் மனிதநேயம்.

ஹூம்ம்ம்ம்ம்

தேவன் மாயம் said...

\ஒரு ஆய்வின்படி 50% இடுப்பு எலும்பு உடைந்த நோயாளிகள் உடைந்து ஒரு வருடத்துக்குள் இறந்து விடுகிறார்கள்!\\

அதிர்ச்சி தகவல்.

நல்ல பதிவு தேவா.///

ஜமால்!! ந்ன்றி

பொங்கல் வாழ்த்துக்கள்
தேவா...

தேவன் மாயம் said...

நல்லதொரு பதிவு.

வயது மூத்தவர்களை கவனித்துக்கொள்ளக்கூட சகிப்புத்தன்மை வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் மேலொங்கி காணப்படுகின்றது. இந்த அளவில் இருக்கின்றது நம் பாசம் மற்றும் மனிதநேயம்.///

கிஷொர் !! வந்தமைக்கு நன்றி!!
பொங்கல் வாழ்த்துக்கள்!!!

தேவா..

கிஷோர் said...

பொங்கல் வாழ்த்துக்கள் தேவா :)

மேவி... said...

s deva. in south its ok. but in north side.... people are too much ignorant to the extent tht thy dont th diff b/w diseases. if thy feel uneasy means thy simply take crocin etc without consulting even for leg pain.

மேவி... said...

people think tht thy can happiness with th money thy hav.
something has to be done to change ths... until it will continue

சந்தனமுல்லை said...

நல்லதொரு பதிவு! மேலும் இதுகுறித்து சிகிச்சைக்கான விளக்கங்களோடு முடிந்தால் பதிவிடவும்!

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

தேவன் மாயம் said...

பொங்கல் வாழ்த்துக்கள் தேவா :)///

மீண்டும் வாழ்த்துக்கள்!!!
தேவா..

தேவன் மாயம் said...

s deva. in south its ok. but in north side.... people are too much ignorant to the extent tht thy dont th diff b/w diseases. if thy feel uneasy means thy simply take crocin etc without consulting even for leg pain.///

so south is better than north!
Happy pongal to you!!!!

deva...

தேவன் மாயம் said...

people think tht thy can happiness with th money thy hav.
something has to be done to change ths... until it will continue///

This is mental setup of this era, where money is everything!!!
We all wait what happens!!!

Deva......

தேவன் மாயம் said...

நல்லதொரு பதிவு! மேலும் இதுகுறித்து சிகிச்சைக்கான விளக்கங்களோடு முடிந்தால் பதிவிடவும்!///

வருகைக்கு நன்றி!!
சுத்தமான பாடமா போட்டா படிப்பாங்களா? நம்ம மக்கள்!!
இதைக் கூட ரொம்ப எளிமை படுத்தித்தான் பதிந்திருக்கிறேன்!...
முயற்சி செய்கிறேன்!!!

தேவா....
பொங்கல் நல்லா வைங்க!!!
தேவா..

தேவன் மாயம் said...

வாழ்த்துகள்!///

நன்றி!!

அன்புடன் அருணா said...

ம்ம்ம் என்ன செய்யலாம்????யோசிக்க வேண்டிய விஷயம்தான்...
அன்புடன் அருணா

தேவன் மாயம் said...

ம்ம்ம் என்ன செய்யலாம்????யோசிக்க வேண்டிய விஷயம்தான்...
அன்புடன் அருணா///

பொங்கல் வாழ்த்துக்கள்!!!

தேவா......

Muniappan Pakkangal said...

Nice article giving the bloggers visiting a view of femoral fracture Dr.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல கருத்துப் பதிவு

என் அப்பா இடுப்பு எலும்பு முறிந்து, சுமார் 1 1/2 வருடங்கள் படுக்கையில் இருந்தே இறந்தார்.

என் தோழியின் தகப்பனார் இடுப்பு எலும்பு முறிந்து, 10 நாள் படுக்கையில் இருந்தார். இப்படியே எவ்வளவு நாள் இருப்பது என்று சென்னை தி.நகரில் ஒரு மருத்துவமனையில் அவருக்கு, அறுவைசிகிச்சை செய்தார்கள். 2 நாள் மட்டுமே உயிரோடு இருந்து பின் இறந்துபோனார்.

தேவன் மாயம் said...

இது ஒரு மோசமான எலும்பு முறிவு!

இன்னொரு இடுகையில் விளக்கமாக எழுத முயல்கிறேன் - நீங்கள் எல்லாம் ஆதரவு தந்தால்!!

தேவன் மாயம் said...

thanks Dr.Muniyappan for your
kind opinion..

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory