Wednesday, 15 July 2009

15 வயதுப் பெண்ணுக்கு ஆயுள் தண்டணை!

மேரிலாண்ட்டைச் சேர்ந்த 15 வயது டேனியல் ப்ளாக் என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.பொதுவாக 15 வயதினருக்கு ஆயுள்தண்டணை வழங்கப்படுவதில்லை.

15 வயதே ஆனதால் அவருக்கு கொலைக்குற்றம் சுமத்தப்படமாட்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர் தன் 19 வயது நண்பர் அலெக் ஸ்காட் எகெர் என்ற மாணவனிடம் தன் தந்தை தன்னைக் கொடுமைப் படுத்தியதாகவும் அவரைக் கவனிக்கும் படியும் கூறியுள்ளார். ஆயின் அவருடைய நண்பர் இவர் தந்தையின் உடலில் பல இடங்களில் குத்தியதில் அவர் இறந்துவிட்டார்(நவம்பர் 8 2008).  வாழ வேண்டிய வயதில் இவருடைய தந்தையின் முறையற்ற செயல் இவரைக் குற்றவாளியாக்கியுள்ளது. இதற்கு யார் பொறுப்பு. இந்தக்கட்டுரையை முழுதும் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களைக் கூறவும்.

அவருடைய மைஸ்பேஸ் தளத்தில் சில சுவாரசியமான பதிவுகள் உள்ளன!!

எப்படி வாழவேண்டும் என்ற அவரின் சிறு கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

”The only thing left is the need for vengeance against those who cause pain, sorrow.People get away with things they should never have done yet no one punishes them. Killers, child molesters, rapists, wife beaters, etc. So the question I ask is this. Is it wrong to extract vengeance on those who deserve it, in defense and revenge for those who cannot protect themselfs. Because in this world of unjust ignorance you are the only one who will stand up for the those who need help..

அவர் இந்த வருடம் மார்ச் மாதம்  மைஸ்பேஸில் ”பாண்ட்எய்ட்” குழுவினரால் எழுதப்பட்ட பாடலைக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பாடலில் அவருடைய உணர்வுகள் தெரிகிற்து..

Harsh words & violent blows
Hidden secrets nobody knows
Eyes are open, hands are fisted
Deep inside I'm warped & twisted
So many tricks & so many lies
Too many whens & too many whys
Nobody's special, nobody's gifted
I'm just me, warped & twisted
Sleeping awake & choking on a dream
Listening loudly to a silent scream
Call my mind, the number's unlisted
Lost in someone so warped & twisted
On my knees, alive but dead
Look at the invisible blood I've bled
I'm not gone, my mind has drifted
Don't expect much, I'm warped & twisted
Burnt out, wasted, empty, & hollow
Today's just yesterday's tomorrow
The sun died out, the ashes sifted
I'm still here, warped & twisted

அவருடைய இன்னொரு மார்ச் பதிவில் அமெரிக்கர்களின் மனநிலை பற்றிக்குறிப்பிடுகிறார்..

I bet at least three fourths of amercians don't know that everyday people try to kill themselves because of depression. Not everyone has a perfect life like people think. Most suicidal attempts are attempted by teens. Most teens that attempt suicide say that they did it because they were trying to escape from a situation that seemed impossible to deal with or get relief from really bad thoughts or feelings..

இவர் தன் தந்தையைக்கொல்லச்சொல்லவில்லை என்கிறார். அப்படியாயின் அவருடைய நண்பர் தன்னிச்சையாக எடுத்த முடிவா இது? உண்மையில் இந்தப் பெண் தண்டிக்கப்படவேண்டியவரா?போன்ற நிறையக்கேள்விகள் தொக்கி நிற்கின்றன. நீங்கள் இன்னும் படிப்பதற்கு கீழே சுட்டிகள் தந்துள்ளேன். இந்தப் பெண்ணின் மைஸ்பேஸ் தளத்தையும் பாருங்கள்!! 

http://www.truecrimereport.com/psychogirl1993b.pdf

http://www.truecrimereport.com/911r3ap3r911.pdf

http://www.dailytelegraph.com.au/news/danielle-black-15-in-court-over-fathers-killing/story-e6freuy9-1225717549028.

தமிழ்த்துளி தேவா.

உங்கள் கருத்துக்களை இடதுபுறம் உள்ள வாக்குப்பெட்டியிலும் தெரிவிக்கலாம்!!

21 comments:

நட்புடன் ஜமால் said...

ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு

தேவா!

நட்புடன் ஜமால் said...

ஆங்கில கவி வரிகள் இன்னும் தமிழ் படுத்தி பார்க்கலை ...

Suresh Kumar said...

குற்றம் செய்திருந்தாலும் சிறுவர் சீர்திருத்த பள்ளி தானே நம்ம நாட்டில

S.A. நவாஸுதீன் said...

Suresh Kumar said...

குற்றம் செய்திருந்தாலும் சிறுவர் சீர்திருத்த பள்ளி தானே நம்ம நாட்டில

என்னுடைய கருத்தும் அதே. அவரின் வயதையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி இருக்கணும்.

அ.மு.செய்யது said...

அமெரிக்காவுல இதெல்லாம் சகஜமப்பான்னு இப்ப் ஆயிடுச்சு..

அவங்களுக்கு இப்ப பெட் அனிமல்ஸ் அ கவனிக்கவே நேரமில்ல..பெத்த புள்ளய எப்படி கவனிப்பாங்க.

குடந்தை அன்புமணி said...

வருத்தம் தரும் செய்தி. சீர்திருத்த பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும். அதுதான் முறை. அ.மு. செய்யது சொல்லியிருப்பதும் சிந்தனைக்கு உரியது.

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
================
ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு///

ஆமாங்க!!
தமிழ்ப் படுத்திப் படிங்க!!

நொந்து போயிருவீங்க!!

தேவன் மாயம் said...

Suresh Kumar said...
============================
குற்றம் செய்திருந்தாலும் சிறுவர் சீர்திருத்த பள்ளி தானே நம்ம நாட்டில

///

ஆம் நண்பரே!!!

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said..
==============.
Suresh Kumar said...

குற்றம் செய்திருந்தாலும் சிறுவர் சீர்திருத்த பள்ளி தானே நம்ம நாட்டில

என்னுடைய கருத்தும் அதே. அவரின் வயதையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி இருக்கணும்.
///

நம் கருத்தும் அதுதாங்க!!


15 July 2009 22:58

தேவன் மாயம் said...

அ.மு.செய்யது said..
=======================.
அமெரிக்காவுல இதெல்லாம் சகஜமப்பான்னு இப்ப் ஆயிடுச்சு..

அவங்களுக்கு இப்ப பெட் அனிமல்ஸ் அ கவனிக்கவே நேரமில்ல..பெத்த புள்ளய எப்படி கவனிப்பாங்க.
//
என்ன செய்யது!!

---------------------/

தேவன் மாயம் said...

குடந்தை அன்புமணி said...
வருத்தம் தரும் செய்தி. சீர்திருத்த பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும். அதுதான் முறை. அ.மு. செய்யது சொல்லியிருப்பதும் சிந்தனைக்கு உரியது.
///

அதுதான் முறை!!

வால்பையன் said...

தமிழ்ல படிக்கவே தாவூ தீருமே தலைவா!

தேவன் மாயம் said...

வால்பையன் said...

தமிழ்ல படிக்கவே தாவூ தீருமே தலைவா!
//
வால்ஸ்!! சிம்பிளாத்தான் எழுதியிருக்குங்க படிங்க!!

ஹேமா said...

வணக்கம் தேவா.நீங்களும் உங்கள் சேவையும் சுகம்தானே...!

கனநாட்களுக்குப் பிறகு உங்கள் பக்கம்.நீங்க உலகச் செய்திகள் தகவலகள் என்று போட்டு அசத்திக்கொண்டிருகிறீங்க.
வாழ்த்துக்கள் தேவா.

லவ்டேல் மேடி said...

// I bet at least three fourths of amercians don't know that everyday people try to kill themselves because of depression. //
true words.....

// Not everyone has a perfect life like people think. Most suicidal attempts are attempted by teens. Most teens that attempt suicide say that they did it because they were trying to escape from a situation that seemed impossible to deal with or get relief from really bad thoughts or feelings.. //
this much of cases are not only in america , in india also there are so many hidden cases like this , especially in metro-politan cities.

nice post ... and good job...

பீர் | Peer said...

தமிழ்படுத்தி எழுதுங்க ஐயா, ஆங்கிலம் என்னை படுத்துகிறது.

பிரியமுடன்.........வசந்த் said...

http://priyamudanvasanth.blogspot.com/2009/07/blog-post_15.html

என்ன தேவா சார் இங்க இருக்கு விருது வந்து எடுத்துட்டு போங்க....

முனைவர்.இரா.குணசீலன் said...

அளவுக்கு மீறிய தண்டனை

வழிப்போக்கன் said...

தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்...

http://jspraveen.blogspot.com/2009/07/blog-post.html

வழிப்போக்கன் said...

என்ன செய்வது....
:(((
பாவம் அவர்...

ஆதவா said...

:(

பாவம்!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory