Wednesday, 8 July 2009

குழந்தைகளை போதைக்கு அடிமையாகாமல் காப்பது எப்படி?

பள்ளி,கல்லூரிகளில் போதை மருந்துகளுக்கு அடிமையாவது அதிகமாகிக் கொண்டேதான் போகிறது. நாமும் நம் பிள்ளைகளை பெரிய பள்ளிகளில்,கல்லூரிகளில் சேர்த்து விடுகிறோம். ஆனால் குழந்தைகளிடம் போதைப் பொருட்கள் பற்றிப் பேசுவது இல்லை.

அமெரிக்காவில் இதயநோயால் இறப்பது முத்லிடத்திலும் மது+போதைப்பொருட்களால் இறப்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது. மேல்நாட்டுக் கலாச்சாரம் பெருகிவரும் இன்னாளில் நம் ஊரிலும் இது நடந்து கொண்டுதான் உள்ளது.

பிள்ளைகள் இதைப்பற்றி அறியாதவர்களாக இருந்தாலும் பிற மாணவர்கள் மூலம், இந்தப்பழக்கங்களுக்கு அடிமையாகும் சந்தப்பம் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும், கல்லூரி விடுதிகளிலும் காணப்படுகிறது.

நாம் குழந்தைகளிடம் மது,புகையிலை ஆகியவை உடலுக்கு என்ன தீங்கு விளைவிக்கும், அதனால் எவ்வாறு படிப்பு, எதிர்காலம் பாதிக்கப்படும், குடும்பத்தின் மரியாதை எவ்வாறு பாதிக்கும் என்பனவற்றைக் கட்டாயம் எடுத்துச்சொல்ல வேண்டும். இதனை ஆசிரியர்கள் எடுத்துச்சொல்வார்கள் என்று நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது.

பெற்றோர்கள் இதைப்பற்றி எவ்வளவு வருந்துவார்கள் என்று பிள்ளைகள் உணர்ந்தாலே இத்தகைய பழக்கங்களின் பக்கம் இளைஞர்கள் போவது குறைகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.பிள்ளைகளின் நற்பண்புகளைப் பாராட்டி ஊக்குவித்தால் குழந்தைகள் தவறு செய்ய யோசிப்பார்கள். இளைஞர்கள் எதனால் போதைப் பொருள்களை நாடுகிறார்கள் என்று பார்த்தால் கீழ்கண்டவைதான் மிக அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன:

தனிமை, பயம், அவமானம், ஏற்றுக்கொள்ளப்படாமை(இவன் உருப்படமாட்டான் !! தண்ணி தெளித்துவிட்டாச்சு! போன்ற எதிர்மறை நிகழ்வுகள்!),பெற்றோர் கவனிப்பின்மை, தாய் தந்தையர் பிரிந்த குடும்பங்களில் உள்ள பிள்ளைகள், முக்கியமாக தகப்பன் இல்லாப் பிள்ளைகள்.

1.இன்றைய அதிவேக உலகில் பிள்ளைகளுடன் பேச நேரம் கிடைப்பதில்லை என்பது உண்மைதான். ஆகையால் கட்டாயம் வாரம் ஒருமுறையாவது குடும்ப நபர்கள் அனைவரும் கலந்து பேசும் சந்தர்ப்பத்தை, குழந்தைகளிடம் பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். சேர்ந்து உணவு உண்ணுவது, சேர்ந்து விளையாடுவது, மனம் விட்டுப்பேசுவது, குழந்தைகளின் பள்ளியில் நடந்த விசயங்களைப் பேசத்தூண்டுவது ஆகியவை மிகுந்த பயனைத்தரும்.

அந்த குடும்ப வார நிகழ்ச்சியில் அந்த வாரம் அவரவர்க்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பேச செய்யலாம். ஒருவர் பேசுகையில் மற்றவர் இடையில் பேசாமல் , எதிர் கருத்துக்கள் சொல்லாமல் இருப்பது முக்கியம்.

2.பிள்ளைகளுடன் கட்டாயம் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைத்தெருவுக்கு அழைத்துச்செல்லுங்கள்.  வழியில் பார்க்கும் ஒவ்வொரு விசயத்தையும் விளக்குங்கள்! மதுக்கடைப் பக்கம் போகும்போது மதுக்குடித்து வீணாகிப்போனவர்களைப் பற்றி எடுத்துச்சொல்லுங்கள்.

3.நேரம் ஒதுக்கி குழந்தைகளுடன் டி.வி. பாருங்கள். ஒவ்வொரு விளம்பரம் பற்றியும் என்ன நினைக்கிறார்கள் என்று கேளுங்கள். போதைதடுப்பு விளம்பரங்கள் பற்றியும் அவர்களின் கருத்தைக் கேளுங்கள்.

4.அவர்கள் நண்பர்கள் யார், என்ன செய்கிறார்கள் என்பதைக் கட்டாயம் கேட்டுத்தெரிந்து கொள்ளவும்.

5.பிள்ளைகளின் பள்ளி நிகழ்ச்சிகள்,விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்குக் கட்டாயம் போகவும். அப்போதுதான் அவர்களுடைய பள்ளியினைப் பற்றி நாம் நேரடியாக அறிந்து கொள்ள முடியும்.

6.இப்போது உங்கள் மகன் எங்கு இருப்பான் என்று கேட்டால் நிறையத் தந்தையருக்குத்தெரியாது. எங்கே போகப்போறான் ஏதாவது ஸ்பெசல் கிளாஸ் இருக்கும் இல்லாட்டி நண்பர்கள் வீட்டுக்குப் படிக்கப்போயிருப்பான், இல்லாட்டி  டியூசன் போயிருப்பான் போயிருப்பான் என்று கூறுவார்கள். அப்படி இல்லாமல் எந்த நேரத்தில் எங்கு இருப்பான் அங்குள்ள போன் நம்பர் என்ன என்றெல்லாம் கவனமாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

7.குழந்தைகளுக்குப் பயிற்சியளியுங்கள். இத்தனை மணிக்கு எழுந்து குளிப்பதில் ஆரம்பித்து ஒரு பள்ளி கிளம்பிச்செல்வதுவரை ஆரம்பத்திலேயே பழக்கிவிடுங்கள். நெர்மையாக நடக்கவேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கோட்பாடுகளை இளமையிலேயே ஏற்படுத்திவிடுங்கள். நம் பெற்றோர்கள் நமக்கு நல் வழி காட்டினார்கள். நாம் செய்யமுடியாதா என்ன!!

8.பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள். அவர்கள்தான் உங்கள் சொத்து எதிர்காலம் என்பதை உணரவையுங்கள். தவறான பழக்கங்களுக்குச் செல்லும் என்னமே அவர்களுக்கு வராது. இளம் வயதிலேயே சமூக சேவை, என்.சி.சி.,நீச்சலில் சாதனை செய்யும் மாணவர்களையும் பார்க்கிறோம்.பெற்றோர் கண்காணிப்பு இல்லாமல் போதைக்கு  அடிமையாகிச் சீரழியும் மாணவர்களையும் பார்க்கிறோம். இளம் சாதனையாளர்களின் பேட்டிகளில் பெற்றோர் எவ்வளவு அக்கறையெடுத்தார்கள் என்பதைக் குறிப்பாக பாராட்டிச்சொல்வார்கள். நாமும் அப்படிப்பட்ட பெற்றோராக இருந்தால் தீய  பழக்கங்களுக்கு பிள்ளைகள் நிச்சயம் செல்ல மாட்டார்கள். 

தமிழ்த்துளி தேவா.

_____________________________________   

_______________________________________

45 comments:

நிலாவும் அம்மாவும் said...

1

நிலாவும் அம்மாவும் said...

அருமையான பதிவு தேவா....பெரிய கல்லூரில காசையும் குடுத்துட்டு உள்ள என்ன நடக்குதுன்னு பார்க்காம தான் இருக்காங்க பெற்றோர்கள்

நட்புடன் ஜமால் said...

3.நேரம் ஒதுக்கி குழந்தைகளுடன் டி.வி. பாருங்கள். ஒவ்வொரு விளம்பரம் பற்றியும் என்ன நினைக்கிறார்கள் என்று கேளுங்கள். போதைதடுப்பு விளம்பரங்கள் பற்றியும் அவர்களின் கருத்தைக் கேளுங்கள்.

4.அவர்கள் நண்பர்கள் யார், என்ன செய்கிறார்கள் என்பதைக் கட்டாயம் கேட்டுத்தெரிந்து கொள்ளவும்.\\

மிக மிக முக்கியம்


குழந்தைகளுக்கானவை இங்கேயும் அறிந்து கொள்வோம்

வால்பையன் said...

15 வருசத்துக்கு முன்னாடி என் பெற்றோர்களுக்கு அனுப்ப வேண்டியது!

கபீஷ் said...

Very good post!!

முனைவர்.இரா.குணசீலன் said...

/தனிமை, பயம், அவமானம், ஏற்றுக்கொள்ளப்படாமை(இவன் உருப்படமாட்டான் !! தண்ணி தெளித்துவிட்டாச்சு! போன்ற எதிர்மறை நிகழ்வுகள்!),பெற்றோர் கவனிப்பின்மை, தாய் தந்தையர் பிரிந்த குடும்பங்களில் உள்ள பிள்ளைகள், முக்கியமாக தகப்பன் இல்லாப் பிள்ளைகள்../

தாங்கள் குறிப்பிட்ட காரணங்கள் யாவும் உண்மையே ..... இந்நிலைகளில் தான் போதைக்கு அடியாகும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன....

சொல்லரசன் said...

//அவர்கள் நண்பர்கள் யார், என்ன செய்கிறார்கள் என்பதைக் கட்டாயம் கேட்டுத்தெரிந்து கொள்ளவும்.//


இது மிக‌ அவ‌சிய‌ம்,த‌வ‌றான‌ சேர்கையே பெரும்பாலும் இதுபோல் போதை ப‌ழ‌க்க‌த்தை க‌ற்றுகொடுக்கிற‌து

குடந்தை அன்புமணி said...

என்னுடைய அப்பா எப்படியெல்லாம் இருக்கணும்னு எதிர்பார்த்தேனோ (இன்றைய நவீன உலகத்திற்கு தகுந்தார்போல்) நானும் என் குழந்தைகள் விடயத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். தங்கள் பதிவு அவசியமான ஒன்று.

Anbu said...

\\வால்பையன் said...
15 வருசத்துக்கு முன்னாடி என் பெற்றோர்களுக்கு அனுப்ப வேண்டியது\\

வால் 15 அல்ல..35 வருடத்துக்கு முன்னாடி..எழுத்துப்பிழை திருத்தவும்..

அபுஅஃப்ஸர் said...

இன்றய கசப்பான அனுபவங்கள் நிறைந்த உலகில் தாங்களின் அறிவுரை முக்கியத்துவம் பெறுகிறது. பிள்ளைகளிடம் அறிவுரை செய்யும் தோழனாகவும், கண்டிக்கும் பெற்றோராகவும் நடந்துக்கோள்ள வேண்டும்

அருமையான பகிர்வு மருத்துவரே

வால்பையன் said...

// Anbu said...

\\வால்பையன் said...
15 வருசத்துக்கு முன்னாடி என் பெற்றோர்களுக்கு அனுப்ப வேண்டியது\\

வால் 15 அல்ல..35 வருடத்துக்கு முன்னாடி..எழுத்துப்பிழை திருத்தவும்..//

அண்ணே! ஏன் இந்த கொலைவெறி!

S.A. நவாஸுதீன் said...

கண்டிப்பாக கவனத்தில் கொள்ளவேண்டிய பதிவு. பொதுவாக ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். அவர்களுக்குத் தான் கூடுதல் சுதந்திரம் கிடைக்கிறது. இந்த பருவத்தில் கூடுதல் சுதந்திரம் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு மிக நெருக்கத்தில் இருப்பதால். அதிக கண்காணிப்பும் கண்டிப்பும் நிறைந்த ஹாஸ்டல்கள் விதிவிலக்கு. பெற்றோரோடு இருப்பவர்களுக்கு நீங்கள் கூறிய அனைத்தும் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். ரொம்ப அருமையான நல்ல ஒரு பதிவு.

Anbu said...

வர வர டாக்டர் பாயிண்ட் பாயிண்டா எழுதுறாரு..என்னாச்சோ..

Anbu said...

\\ வால்பையன் said...
// Anbu said...

\\வால்பையன் said...
15 வருசத்துக்கு முன்னாடி என் பெற்றோர்களுக்கு அனுப்ப வேண்டியது\\

வால் 15 அல்ல..35 வருடத்துக்கு முன்னாடி..எழுத்துப்பிழை திருத்தவும்..//

அண்ணே! ஏன் இந்த கொலைவெறி\\


என்னாது அண்ணனா...முடியலை வால்..

தேவன் மாயம் said...

08 July 2009 04:47
Delete
Blogger நிலாவும் அம்மாவும் said...
________________________
அருமையான பதிவு தேவா....பெரிய கல்லூரில காசையும் குடுத்துட்டு உள்ள என்ன நடக்குதுன்னு பார்க்காம தான் இருக்காங்க பெற்றோர்கள்///

ஆமாங்க!!
---------------------------------

08 July 2009 04:49
Delete
Blogger நட்புடன் ஜமால் said...
_______________________
தலைப்பே நடுங்க வைக்குது

அதன் உண்மைகளை நினைக்கையில்

08 July 2009 04:50
Delete
Blogger நட்புடன் ஜமால் said...

3.நேரம் ஒதுக்கி குழந்தைகளுடன் டி.வி. பாருங்கள். ஒவ்வொரு விளம்பரம் பற்றியும் என்ன நினைக்கிறார்கள் என்று கேளுங்கள். போதைதடுப்பு விளம்பரங்கள் பற்றியும் அவர்களின் கருத்தைக் கேளுங்கள்.

4.அவர்கள் நண்பர்கள் யார், என்ன செய்கிறார்கள் என்பதைக் கட்டாயம் கேட்டுத்தெரிந்து கொள்ளவும்.\\

மிக மிக முக்கியம்


குழந்தைகளுக்கானவை இங்கேயும் அறிந்து கொள்வோம்///

ஜமால் கருத்துக்கள் பயனுள்ளதாக உள்ளதா?
----------------------------------

08 July 2009 04:53
Delete
Blogger வால்பையன் said...

15 வருசத்துக்கு முன்னாடி என் பெற்றோர்களுக்கு அனுப்ப வேண்டியது!///

ஹ! ஹ!! ஹா!!
__________________________________

08 July 2009 04:55
Delete
Blogger கபீஷ் said...

Very good post!!///

வாங்க கபீஷ்!!
______________________________

08 July 2009 04:56
Delete
Blogger முனைவர்.இரா.குணசீலன் said...

/தனிமை, பயம், அவமானம், ஏற்றுக்கொள்ளப்படாமை(இவன் உருப்படமாட்டான் !! தண்ணி தெளித்துவிட்டாச்சு! போன்ற எதிர்மறை நிகழ்வுகள்!),பெற்றோர் கவனிப்பின்மை, தாய் தந்தையர் பிரிந்த குடும்பங்களில் உள்ள பிள்ளைகள், முக்கியமாக தகப்பன் இல்லாப் பிள்ளைகள்../

தாங்கள் குறிப்பிட்ட காரணங்கள் யாவும் உண்மையே ..... இந்நிலைகளில் தான் போதைக்கு அடியாகும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன....///

உண்மை! இவை அயல்நாடுகளில் அதிகம்!!
__________________________________

08 July 2009 05:09
Delete
Blogger சொல்லரசன் said...

//அவர்கள் நண்பர்கள் யார், என்ன செய்கிறார்கள் என்பதைக் கட்டாயம் கேட்டுத்தெரிந்து கொள்ளவும்.//


இது மிக‌ அவ‌சிய‌ம்,த‌வ‌றான‌ சேர்கையே பெரும்பாலும் இதுபோல் போதை ப‌ழ‌க்க‌த்தை க‌ற்றுகொடுக்கிற‌து///

ஆமா சொல்ஸ்!!
_______________________________

08 July 2009 05:14
Delete
Blogger குடந்தை அன்புமணி said...

என்னுடைய அப்பா எப்படியெல்லாம் இருக்கணும்னு எதிர்பார்த்தேனோ (இன்றைய நவீன உலகத்திற்கு தகுந்தார்போல்) நானும் என் குழந்தைகள் விடயத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். தங்கள் பதிவு அவசியமான ஒன்று.//

நல்ல தந்தையாக வரவாழ்த்துக்கள்!
_______________________________

08 July 2009 05:21
Delete
Blogger Anbu said...

\\வால்பையன் said...
15 வருசத்துக்கு முன்னாடி என் பெற்றோர்களுக்கு அனுப்ப வேண்டியது\\

வால் 15 அல்ல..35 வருடத்துக்கு முன்னாடி..எழுத்துப்பிழை திருத்தவும்.///

சரிதான்!! யாரோ 45 ன்னாங்களே!!
------------------------------.

08 July 2009 06:23
Delete
Blogger அபுஅஃப்ஸர் said...

இன்றய கசப்பான அனுபவங்கள் நிறைந்த உலகில் தாங்களின் அறிவுரை முக்கியத்துவம் பெறுகிறது. பிள்ளைகளிடம் அறிவுரை செய்யும் தோழனாகவும், கண்டிக்கும் பெற்றோராகவும் நடந்துக்கோள்ள வேண்டும்

அருமையான பகிர்வு மருத்துவரே///

நல்லது அபு!!
__________________________________
______________

தேவன் மாயம் said...

08 July 2009 06:23
Delete
Blogger வால்பையன் said...

// Anbu said...

\\வால்பையன் said...
15 வருசத்துக்கு முன்னாடி என் பெற்றோர்களுக்கு அனுப்ப வேண்டியது\\

வால் 15 அல்ல..35 வருடத்துக்கு முன்னாடி..எழுத்துப்பிழை திருத்தவும்..//

அண்ணே! ஏன் இந்த கொலைவெறி!///

ஆகா!! ஆகா!! அன்பு அண்ணனா? ஓகே! ஒகே!!
______________________________

08 July 2009 06:30
Delete
Blogger S.A. நவாஸுதீன் said...

கண்டிப்பாக கவனத்தில் கொள்ளவேண்டிய பதிவு. பொதுவாக ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். அவர்களுக்குத் தான் கூடுதல் சுதந்திரம் கிடைக்கிறது. இந்த பருவத்தில் கூடுதல் சுதந்திரம் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு மிக நெருக்கத்தில் இருப்பதால். அதிக கண்காணிப்பும் கண்டிப்பும் நிறைந்த ஹாஸ்டல்கள் விதிவிலக்கு. பெற்றோரோடு இருப்பவர்களுக்கு நீங்கள் கூறிய அனைத்தும் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். ரொம்ப அருமையான நல்ல ஒரு பதிவு.///

நவாஸ் நன்றி!!
_______________________________

08 July 2009 06:39
Delete
Blogger Anbu said...

வர வர டாக்டர் பாயிண்ட் பாயிண்டா எழுதுறாரு..என்னாச்சோ.///

புட்டு புட்டு வைக்கணுமே!!
_____________________________.

08 July 2009 06:52
Delete
Blogger Anbu said...

\\ வால்பையன் said...
// Anbu said...

\\வால்பையன் said...
15 வருசத்துக்கு முன்னாடி என் பெற்றோர்களுக்கு அனுப்ப வேண்டியது\\

வால் 15 அல்ல..35 வருடத்துக்கு முன்னாடி..எழுத்துப்பிழை திருத்தவும்..//

அண்ணே! ஏன் இந்த கொலைவெறி\\


என்னாது அண்ணனா...முடியலை வால்..///

என்னாலயும் முடியல!!
________________________

cheena (சீனா) said...

அன்பின் தேவா

அருமையான தேவையான இடுகை. பெற்றோர் குழந்தைகளை வளர்க்கும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள் கொண்ட இடுகை.

வாழ்க வாழ்க !

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

என்னாது - இடுகை வாலோட பெற்றோர்க்கௌ 15 ஆண்டு முன்னரே அனுப்பி இருக்க வேண்டுமா ? 15 ஆ - 35 ஆ - 45 ஆ

வாலோட பையனோட (???) எதிர்காலம் கருதி வாலுக்கு அனுப்பலாம் இப்ப

அருமை அண்ணன் வாலுவுக்கு நல்வாழ்த்துகள்

சூரியன் said...

நல்லாதான் இருக்கு .. பார்ப்போம் ஆனா இது இப்போ தேவை இல்ல எனக்கு ..

Ranjitha said...

கண்டிப்பாக கவனிக்கபட வேண்டிய விஷயம் சார்.

லவ்டேல் மேடி said...

சரி ... சரி.. இனிமேல் நா ஸ்கூலுக்கு போகும்போது கஞ்சா போடமாட்டேன்....!!!!

பீர் | Peer said...

அவசியமான பதிவு டாக்டர்,

அடுத்த பதிவு, "குழந்தைகளை வலைக்கு அடிமையாகாமல் காப்பது எப்படி?" எதிர் பார்க்கலாமா,டாக்டர்?

கலையரசன் said...

கையை குடுங்க இந்த இடுகையை எழுதியதற்க்கு..
சொன்னா யார் பாஸ் கேக்குறாங்க?

ச.செந்தில்வேலன் said...

நல்ல பதிவுங்க.. அழகாக புட்டுப் புட்டு வைத்துள்ளீகள்.. அருமை

☀நான் ஆதவன்☀ said...

அவசியமான பதிவு டாக்டர். நன்றி

MayVee said...

நல்ல பதிவு தேவா.....

இன்னும் நிறைய இருக்கு .... DRUG ADDICTION AND FAMILIES என்ற புத்தகத்தை எல்லோரும் படிக்க வேண்டும்

MayVee said...

could have added few more points deva...

especially the psychological traits tht child faces in the pre-induction periods of drug addiction

sakthi said...

பிள்ளைகளின் நற்பண்புகளைப் பாராட்டி ஊக்குவித்தால் குழந்தைகள் தவறு செய்ய யோசிப்பார்கள்.

உண்மைதான் தேவா சார்...

அருமையான பகிர்வு....

அ.மு.செய்யது said...

//இன்றைய அதிவேக உலகில் பிள்ளைகளுடன் பேச நேரம் கிடைப்பதில்லை என்பது உண்மைதான். ஆகையால் கட்டாயம் வாரம் ஒருமுறையாவது குடும்ப நபர்கள் அனைவரும் கலந்து பேசும் சந்தர்ப்பத்தை, குழந்தைகளிடம் பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.//

இது தாங்க மேட்டரே !!!

சில பெற்றோர்களுக்கு பசங்க என்ன கோர்ஸ் படிக்கறாங்கன்னே தெரியாது.

தேவன் மாயம் said...

Blogger cheena (சீனா) said...

அன்பின் தேவா

அருமையான தேவையான இடுகை. பெற்றோர் குழந்தைகளை வளர்க்கும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள் கொண்ட இடுகை.

வாழ்க வாழ்க !

நல்வாழ்த்துகள்

08 July 2009 07:37
Delete
Blogger cheena (சீனா) said...

என்னாது - இடுகை வாலோட பெற்றோர்க்கௌ 15 ஆண்டு முன்னரே அனுப்பி இருக்க வேண்டுமா ? 15 ஆ - 35 ஆ - 45 ஆ

வாலோட பையனோட (???) எதிர்காலம் கருதி வாலுக்கு அனுப்பலாம் இப்ப

அருமை அண்ணன் வாலுவுக்கு நல்வாழ்த்துகள்///

”அருமை அண்ணன்” சரி சரி!!!
___________________________________
08 July 2009 07:39
Delete
Blogger சூரியன் said...

நல்லாதான் இருக்கு .. பார்ப்போம் ஆனா இது இப்போ தேவை இல்ல எனக்கு ..///

வாங்க நண்பரே!!
______________________________

08 July 2009 07:43
Delete
Blogger Ranjitha said...

கண்டிப்பாக கவனிக்கபட வேண்டிய விஷயம் சார்.///

முதல் வருகை தொடருங்கள்!!
______________________________

08 July 2009 07:46
Delete
Blogger லவ்டேல் மேடி said...

சரி ... சரி.. இனிமேல் நா ஸ்கூலுக்கு போகும்போது கஞ்சா போடமாட்டேன்....!!!!///

மேடி இனிமேல் ஸ்கூலா? முதியோர் ஸ்கூலா?
______________________________________

08 July 2009 08:10
Delete
Blogger பீர் | Peer said...

அவசியமான பதிவு டாக்டர்,

அடுத்த பதிவு, "குழந்தைகளை வலைக்கு அடிமையாகாமல் காப்பது எப்படி?" எதிர் பார்க்கலாமா,டாக்டர்?///

நீங்க போடுங்க மக்கா!!
__________________________________

08 July 2009 08:50
Delete
Blogger கலையரசன் said...

கையை குடுங்க இந்த இடுகையை எழுதியதற்க்கு..
சொன்னா யார் பாஸ் கேக்குறாங்க?///
மிக்க நன்றி கலை!!
____________________________

08 July 2009 09:59
Delete
Blogger ச.செந்தில்வேலன் said...

நல்ல பதிவுங்க.. அழகாக புட்டுப் புட்டு வைத்துள்ளீகள்.. அருமை///

உங்கள் வாழ்த்துக்கு எதுவும் இணையில்லை!!
__________________________________

08 July 2009 10:23
Delete
Blogger ☀நான் ஆதவன்☀ said...

அவசியமான பதிவு டாக்டர். நன்றி///

இது போதும் ஆதவன்
___________________________________

08 July 2009 10:49
Delete
Blogger MayVee said...

நல்ல பதிவு தேவா.....

இன்னும் நிறைய இருக்கு .... DRUG ADDICTION AND FAMILIES என்ற புத்தகத்தை எல்லோரும் படிக்க வேண்டும்///

குரியரில் அனுப்புங்க!!!
__________________________________

08 July 2009 18:43
Delete
Blogger MayVee said...

could have added few more points deva...

especially the psychological traits tht child faces in the pre-induction periods of drug addiction///

நீங்கள் போடுங்க நண்பா!!
___________________________________

08 July 2009 18:47
Delete
Blogger sakthi said...

பிள்ளைகளின் நற்பண்புகளைப் பாராட்டி ஊக்குவித்தால் குழந்தைகள் தவறு செய்ய யோசிப்பார்கள்.

உண்மைதான் தேவா சார்...

அருமையான பகிர்வு....///

சக்தி வந்தமாதிரி இருக்கு!!!

______________________________________

Anonymous said...

வழக்கப்படி பயனுள்ள பதிவு என்ற ஒரு வார்த்தைப் போதாது...எல்லோரும் பின்பற்ற வேண்டும்..அன்பை கொட்டி வளர்க்கும் குழந்தைகள் இப்படி கண்ட கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையாகமல் கண்காணிப்பது எத்தனை அவசியம் என்பதை மேலும் நங்கு அறிவுறுத்தியது உங்கள் பதிவு...இதை நோட்டீஸ் மாதிரி போட்டு காலைச் செய்தித் தாளில் இணைத்து அனைவருக்கும் சேரும் படி செய்தாலும் பலன் கிடைக்கும்.. பணம் சம்பாதித்தோம் படிக்க வைத்தோம் என இருப்போர்க்கு பெரிதும் பயன்படும் பதிவு....

Anonymous said...

நான் தான் நாசமாப் போயிட்டேன்...என்னோட குழந்தையாவது ஒழுங்கா வளர இந்த இடுகையில் சொல்லி உள்ளதை பின் பற்றுகிறேன்.

குடந்தை அன்புமணி said...

விகடன் குட் பிளாக்கில் இந்தப் பதிவு. வாழ்த்துகள் தேவா சார்.

மங்களூர் சிவா said...

மிக அருமையான பதிவு.

மங்களூர் சிவா said...

பெற்றோர்கள் பணம் சம்பாதிப்பது மட்டும் குறியாக இல்லாமல் பிள்ளைகளுக்கும் நேரம் ஒதுக்கி நட்பாய் நடந்துகொண்டாலே இது போன்ற பிரச்சனைகளை பெரும்பாலும் தவிர்க்கலாம்.

மிக அருமையான பதிவு.

Joe said...

அருமையான பதிவு.

படிக்கிறவங்க, முழுமையா பின்பற்றி நடந்தால் நல்லது.

Rajeswari said...

பயனுள்ள பதிவு

" உழவன் " " Uzhavan " said...

குழந்தை வளர்ப்பிற்கான அருமையான பதிவு. யூத்வி க்கு வாழ்த்துக்கள்.

செந்தழல் ரவி said...

ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கவேண்டிய பயனுள்ள பதிவு........

பித்தன் said...

Super Deva sir

ஸ்ரீதர் said...

நல்ல பயனுள்ள பதிவுகளை தொடந்து இடும் டாக்டர் ஜெய் ஹோ .

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

கிரி said...

பயனுள்ள தகவல்

ஆ.ஞானசேகரன் said...

பயனுள்ள விடயம்...

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான பதிவு தேவா சார்.. வாழ்த்துகள்....

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory