Friday 8 January 2010

வெளிநாடு வாழ் இந்தியர் தினம்- வாழ்த்துக்கள்!!

இன்று வெளிநாடுகளில் வாழும் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஜனவரி 9ம் தேதியும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியரின் ஆக்கப்பூர்வமான செயல்கள், பொருளாதார வளர்ச்சி, உதவும் மனப்பான்மை ஆகியவற்றை பாராட்டும் வகையிலும் அங்கீகாரம் வழங்கும் வகையிலும் மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்தின் சார்பில் இந்த வெளிநாடுவாழ் இந்தியர் தின விழா கொண்டாடப்படுகிறது.

ஒரு வெளிநாட்டில் வாழும் இந்தியராக தென் ஆப்பிரிக்காவில் 20 ஆண்டு வசித்து வந்த மகாத்மாகாந்தி 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி நாடு திரும்பினார். இதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 9-ந் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது.

1.வெளிநாட்டில் இருந்து தமிழ்ப்பணியாற்றும் அனைத்து மக்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

2.வெளிநாடுவாழ் மக்கள் அடுத்த தேர்தலில் வாக்குரிமை பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்!

3.25000 வெளிநாடுவாழ் இந்திய மருத்துவர்கள் புதிதாகத் துவங்க உள்ள மருத்துவமனைகளில்  சேவைசெய்ய வருகிறார்கள். வருக எம் கரத்தை வலுப்படுத்த!!

4.வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் மனவருத்தம் அளிக்கின்றன.

அனைத்து வெளிநாட்டுப்பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!

22 comments:

Unknown said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் டாக்டர், அருமையான இடுகைகள் இடுவதற்கு.

நட்புடன் ஜமால் said...

இப்படி ஒன்று கேள்வி பட்டதேயில்லை தேவா! வாழ்த்துகள்.

தேவன் மாயம் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சைவக்கொத்துபுரோட்டா!

தேவன் மாயம் said...

ஜமால் எனக்கும் இப்பொழுதுதான் தெரியும்!!

☀நான் ஆதவன்☀ said...

நன்றி டாக்டர் :)

Cable சங்கர் said...

அறிவிப்புக்கு நன்றி.. டாக்டர்

S.A. நவாஸுதீன் said...

எங்களுக்கும் ஒரு தினம் இருக்கிறதா. ரொம்ப நன்றி தேவா சார்.

வாழ்த்துக்கள் மற்ற நண்பர்களுக்கும்

சிங்கக்குட்டி said...

//வெளிநாடுவாழ் மக்கள் அடுத்த தேர்தலில் வாக்குரிமை பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்! //

நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்? இந்திய பாஸ்போர்ட் உள்ள அனைவருக்கும் எப்போதும் வாக்குரிமை உண்டு.

இங்கு நீங்கள் குறிப்பிடும் "வெளிநாடுவாழ் மக்கள்" என்பது வெளி நட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களா?

குடந்தை அன்புமணி said...

புதிய விடயங்களை தந்திருக்கிறீர்கள், அதற்கு முதலில் வாழ்த்துகள். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் வாழ்த்துகள். மருத்துவதுறைக்கு உதவி முற்பட்ட அவர்களுக்கு பாராட்டுகள்.

அன்புடன் நான் said...

எனக்கும் இப்போதுதான் தெரியும்...அனைவருக்கும் இந்த வெளிநாட்டில் வாழும் தமிழனின் வாழ்த்துக்கள்.

காந்தி காங்கிரஸ் said...

வாழ்க காந்தியின் மைந்தர்கள்
எங்கிருத்தாலும்

அருமையான இடுகை

வாழ்த்துகள்.

Paleo God said...

மிக்க நன்றி.. வருகைக்கு::)) தகவலுக்கு..
உங்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..:))

துபாய் ராஜா said...

//அனைத்து வெளிநாட்டுப் பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!//

புத்தாண்டு வாழ்த்துக்களும்,நன்றிகளும்.

Anonymous said...

வெளி நாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள்... தகவலுக்கு வழக்கம் போல நன்றி சார்...

Anonymous said...

S.A. நவாஸுதீன் said...
எங்களுக்கும் ஒரு தினம் இருக்கிறதா. ரொம்ப நன்றி தேவா சார்.

வாழ்த்துக்கள் மற்ற நண்பர்களுக்கும்

எங்களுக்கும் என்ற வார்த்தைக்குள் நீங்கள் இல்லை நவாஸ்,,,,,

பழமைபேசி said...

யே நானும் ரெளடிதான்... நானும் ரெளடிதான்!

நன்றி, வாழ்த்துகள்!

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள் உங்களுக்கும் நண்பர்களுக்கும்.

goma said...

வாழ்த்துக்கள் தேவன் மாயம்

ஹுஸைனம்மா said...

//வெளிநாடுவாழ் மக்கள் அடுத்த தேர்தலில் வாக்குரிமை பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்!//

நிஜமாகவா? புதிய தகவலாக இருக்கிறதே?

//சிங்கக்குட்டி said...

நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்? இந்திய பாஸ்போர்ட் உள்ள அனைவருக்கும் எப்போதும் வாக்குரிமை உண்டு.//

இந்திய பாஸ்போர்ட் உள்ள எல்லாருக்கும் வாக்குரிமை உண்டு. ஆனால் நான் தேர்தல் சமயத்தில் இந்தியாவில் இருந்தால்தான் வாக்களிக்க முடியும். வெளிநாட்டில் இருந்துகொண்டே (தபால் ஓட்டு போல) வாக்களிக்க முடியாது.

சில நாட்டினர், அவர்கள் எந்நாட்டில் இருந்தாலும், அந்நாட்டில் உள்ள தமது தூதரகம் சென்று வாக்களிக்க முடியும். இந்தியர்களுக்கு அம்முறை இன்னும் வரவில்லை; அதைத்தான் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.

SUFFIX said...

இப்படி ஒரு நாள் இருக்கா? இங்கே உள்ள தூதரகங்கள் இது குறித்து ஒரு அறிவுப்பும் செய்வதில்லையே? Pravasi Bharatiya Divas என்பது இது தானோ?

தேவன் மாயம் said...

பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் பதில் கண்டு எனக்கே சந்தேகமாகிவிட்டது! இதி ல் ஏதும் அரசியல் உள்ளதா?
பார்க்க:http://sify.com/news/over-1-500-delegates-to-attend-non-resident-indians-day-news-national-jmxwkedhijb.htm.

பிரவாஸி பாரதீய தீவாஸ் என்பதும் இதுதான்..

மணிப்பக்கம் said...

ரொம்ப முக்கியம்! ;)

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory