Monday 11 January 2010

ஊசியைப் போட்டு முடித்து விடுங்கள்!!

மருத்துவமனைக்கு வரும் வயதானவர்களில் பலர் ”நடந்து ஆஸ்பத்திரிக்குக்கூட வரமுடியவில்லை. இனி நான் இருந்து என்ன செய்யப்போகிறேன். எல்லாம் முடிந்து விட்டது டாக்டர். ஒரு ஊசியைப்போட்டு என்னைக் கொன்று விடுங்கள்” என்று கூறுவார்கள்.

அதற்கு நாங்கள் “உங்களுக்கு ஊசியைப்போட்டா நீங்கள் நிம்மதியாகப் போய்விடுவீர்கள், நாங்க இல்ல கம்பி எண்ணனும்” என்று சிரித்துக்கொண்டே சொல்வது வழக்கம்.

அப்படி என்ன கால்வலி? உயிரை விடும் அளவுக்கு என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

சமீபத்தில் அதை உணருவதற்கு வாய்ப்பு வந்தது. ஆம் மோசமானவைங்கள்ளேயே முக்கியமானவைங்க!!!இடுகையைப் போட்டதில் கொசுக்களுக்கு என்மேல் கோபம் வந்து மூட்டுவலியுடன்கூடியவைரஸ் காய்ச்சலைத் தந்துவிட்டன. வலியென்றால் இடதுபுறக்கால் பாதம்,கணுக்காலில்    ஆரம்பித்தது, இரண்டு கைகளிலும் விரல்களிலும் மடக்கமுடியாத அளவுக்கு வந்துவிட்டது. சுத்தமாக நடக்க முடியவில்லை. தரையில் படுத்தால் எழுந்திரிக்க நாம் படும்பாடு சொல்லிமாளாதது. ஊசி போட்டுக்கொண்டுதான் நடக்கவே முடியும் என்ற நிலை. மாறி மாறி மூட்டுக்களில் வலி. தற்போது கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆகியும் முழுவதும் குணமடையவில்லை. கொஞ்ச நாள் இருந்த இந்த மூட்டுவலி, நடக்க இயலாமையை நம்மால் தாங்க முடியவில்லை. இப்படியே தினமும் வலியுடன் நடக்கமுடியாகல் இருப்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லை.

ஒரு மருத்துவர் வேடிக்கையாகச் சொன்னார்.” கொசு போல் நன்றியில்லாத ஜீவன் எதுவுமில்லை. நம் இரத்தத்தையே குடித்துவிட்டு நன்றி சொல்லிவிட்டுப் போகாமல் வியாதியையும் கொடுத்துவிட்டுப் போகுது பாருங்க!”

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பெரும்பாலும் எல்லா வகையான எளிதில் தொற்றும் காய்ச்சல்கள் வந்துவிடும். ஏனெனில் காய்ச்சல் தொற்றும் காலத்தில் ஏறக்குறைய ஒரு நாளைக்கு 1000- 1500 நோயாளிகள் வந்து செல்லுவார்கள்.

மலேரியா, டைபாய்டு காய்ச்சலெல்லாம் எனக்கு வந்துள்ளது. ஆனால்  இதுபோல் ஒரு தாங்கமுடியாத மூட்டு வலியுடன் கூடிய காய்ச்சலை நான் இதுவரை பார்த்ததில்லை.

முதியவர்கள் தனியாக வசிப்பதும், தனியே அரசு மருத்துவமனைக்கு மூட்டு வலிகளுடன் வந்து செல்வதும் எவ்வளவு கடினம் என்பதை உணரமுடிகிறது.

”நீங்கள் 100 வயது வாழ விரும்புகிறீர்களா?” என்று சில வயதானவர்களிடம் நான் கேட்பது வழக்கம்!

இதைப் படிக்கும் நீங்கள்  100 வயது வாழ விரும்புகிறீர்களா?

46 comments:

அகல்விளக்கு said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

நீங்களே இப்படி சொன்னா எப்படி.....

அகல்விளக்கு said...

அந்த காய்ச்சலை நானும் அனுபவித்து இருக்கிறேன்...

//முதியவர்கள் தனியாக வசிப்பதும், தனியே அரசு மருத்துவமனைக்கு மூட்டு வலிகளுடன் வந்து செல்வதும் எவ்வளவு கடினம் என்பதை உணரமுடிகிறது. //

ஆனால் இதை சிந்தித்ததில்லை

நல்ல பதிவு அண்ணா....

நட்புடன் ஜமால் said...

100 வேண்டாம் தேவா!

கொசு - ஹா ஹா ஹா


----------------

உடம்பை சரியா பார்த்துக்கோங்கோ

தேவன் மாயம் said...

அகல் விளக்கு தற்போது முதியவர்களில் பாருக்கு இதுதான் நிலை!!

சாந்தி மாரியப்பன் said...

நீங்களே இப்படி நொந்துக்கலாமா!!!.

என் பையருக்கு மலேரியா வந்து குணமாகி ரெண்டு வருஷம் ஆகியும்,ப்ளேட்லெட் ப்ரச்சினையால் இன்னும் அடிக்கடி மூட்டுவலி வருகிறது.

சைவகொத்துப்பரோட்டா said...

மருத்துவருக்கே முடியவில்லை என்றால், அப்ப நாங்க... வேண்டாம் நூறு.

குடந்தை அன்புமணி said...

//ஏனெனில் காய்ச்சல் தொற்றும் காலத்தில் ஏறக்குறைய ஒரு நாளைக்கு 1000- 1500 நோயாளிகள் வந்து செல்லுவார்கள். மலேரியா, டைபாய்டு காய்ச்சலெல்லாம் எனக்கு வந்துள்ளது. ஆனால் இதுபோல் ஒரு தாங்கமுடியாத மூட்டு வலியுடன் கூடிய காய்ச்சலை நான் இதுவரை பார்த்ததில்லை. //

தங்கள் நிலையும் வருந்தத் தக்கதுதான். தாங்கள் பூரண குணம் அடைய பிரார்த்தனைகள்.

SUFFIX said...

புதுபுதுசா வியாதிகள், என்ன சொல்ல!! விரைவில் குணமடைய எமது பிராத்தணைகள் டாக்டர்.

sathishsangkavi.blogspot.com said...

சரியா சொல்லி இருக்கறீங்க சார்...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

தேவன் மாயம் said...

Blogger amaithicchaaral said...

நீங்களே இப்படி நொந்துக்கலாமா!!!.

என் பையருக்கு மலேரியா வந்து குணமாகி ரெண்டு வருஷம் ஆகியும்,ப்ளேட்லெட் ப்ரச்சினையால் இன்னும் அடிக்கடி மூட்டுவலி வருகிறது.///

அய்யய்யோ!! தற்போது நலமா?

தேவன் மாயம் said...

சைவகொத்துப்பரோட்டா said...

மருத்துவருக்கே முடியவில்லை என்றால், அப்ப நாங்க... வேண்டாம் நூறு.

///

நான் சொல்வதை வைத்து சொல்லவேண்டாம்!!!

தேவன் மாயம் said...

நன்றி அன்புமணி!!

தேவன் மாயம் said...

Blogger SUFFIX said...

புதுபுதுசா வியாதிகள், என்ன சொல்ல!! விரைவில் குணமடைய எமது பிராத்தணைகள் டாக்டர்.//

நன்றி சஃபிக்ஸ்!

தேவன் மாயம் said...

சங்கவி இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!! பொங்கல் வாழ்த்துக்கள்!

S.A. நவாஸுதீன் said...

இன்னும் சரியாகலையா தேவா சார். உடம்பை பார்த்துக்கோங்க.

கிரி said...

மூட்டு வலி மிக மிக கொடுமையான வலி.. என் அம்மாவிற்கு பல காலமாக உள்ளது. ரொம்ப பாவமாக இருக்கும்.

அன்புடன் நான் said...

நலமுடன் வாழ நல்வாழ்த்துக்கள்... தங்களுக்கும் குடும்பத்தினருக்கும்.... பொங்கல் வாழ்த்துக்கள்

Vidhoosh said...

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

மோசமானவங்கல்லையே...லிங்க் தவறாக இருக்கு. கவனிங்க.

:)

இப்போது உடல் நலமா?

Anonymous said...

Stalin planning to go to Namibia to have a contract to eradicate this Mosquito and the diecese as well.:-))
This will be helpful for the next election.

கலையரசன் said...

எனக்கு 200.. அட நீங்க வேற.. அந்த வயசு வரைக்கும் வாழனுமுன்னு ஆசைங்க டாக்!!

முனைவர் இரா.குணசீலன் said...

முதியோர்கள் என்போர்
அனுபவ மூட்டைகள்!

வளர்ந்த குழந்தைகள்!!


அவர்கள் வாழும் வரை மகிழ்ச்சியாக வாழவேண்டும்..

ஊசியைப் போட்டு முடித்துவிடுங்கள் என்று சொல்லும் அளவுக்கு அவர்களைக் கொண்டு விட்டது உடல்வலியாக மட்டுமிருக்காது என்பது எனது எண்ணம் நண்பரே...

உடல்வலியைக் கூடத் தாங்கிக்கொள்ளலாம் மனவலியே அவர்களை அவ்வாறு சொல்லச் செய்கிறது என்று நினைக்கிறேன்..

உறவுகள் தந்த வலியே அவர்களை இவ்வாறு சிந்திகச்செய்திருக்கிறது.

தேவன் மாயம் said...

நவாஸ்,
கிரி,
கருணாகரசு

நன்றி!!

விதூஷ் லிங்கை மாற்றிவிட்டேன்!

அனானி- நன்றி

கலையரசன் 200 என்ன 300 ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் said...

Blogger முனைவர்.இரா.குணசீலன் said...

முதியோர்கள் என்போர்
அனுபவ மூட்டைகள்!

வளர்ந்த குழந்தைகள்!!


அவர்கள் வாழும் வரை மகிழ்ச்சியாக வாழவேண்டும்..

ஊசியைப் போட்டு முடித்துவிடுங்கள் என்று சொல்லும் அளவுக்கு அவர்களைக் கொண்டு விட்டது உடல்வலியாக மட்டுமிருக்காது என்பது எனது எண்ணம் நண்பரே...

உடல்வலியைக் கூடத் தாங்கிக்கொள்ளலாம் மனவலியே அவர்களை அவ்வாறு சொல்லச் செய்கிறது என்று நினைக்கிறேன்..

உறவுகள் தந்த வலியே அவர்களை இவ்வாறு சிந்திகச்செய்திருக்கிறது.//

நல்ல சிந்தனை- இதற்கே தனிப்பதிவு போடலாம்!

Balakumar Vijayaraman said...

இப்போ உடம்பு பரவாயில்லையா, சார் ?

தேவன் மாயம் said...

உடம்பு 3/4 நலமே!!

வினோத் கெளதம் said...

தல உங்களுக்கே இந்த கதியா..
உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்..

நிலாமதி said...

வலிகண்டு தான் வழி பிறக்கும். வலியின் மூலம் மன வலிமை கிடைக்கிறது. இதை விட மோசமான ஒன்று வரும் போது அதை தாங்கும் சக்தி தருகிறது. நமக்கு விதி வராமல் பரலோகம் போக முடியாது. வாழ்ந்து பாப்போம் என்று வைராக்கியம் கொள்ளுங்கள் வாழ்க்கை எளிதாய் இருக்கும். துவண்டு போகாதீர்கள். l

மாதேவி said...

விரைவில் உடல் நலமடையட்டும். தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//இதைப் படிக்கும் நீங்கள் 100 வயது வாழ விரும்புகிறீர்களா? //

வேண்டாம்.

தேவன் மாயம் said...

வினொத்,

மாதேவி,

ஸ்ரீ,

நிலாமதி

அனைவ்ருக்கும் புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துக்கள்!!

Jerry Eshananda said...

நீங்களே இப்படி பீதிய கிளபபலாமா?பயமாத்தான் இருக்கு

sury siva said...

Last year at Chennai, when our area was flooded by sewerage water, many people were affected by chikgunya and leptospirosis. Leptospirosis starts like flu, subsides,and then comes back vigorously with enormous pain in the joints.
I would suggest blood test to rule out leptospirosis. An untreated or half treated lepto would lead to liver problems later. Pencillin or Doxycyclin for 60 days contiously appears to fully cure the problem.
subbu rathinam.

தேவன் மாயம் said...

ஜெரி மிக்க நன்றி

தேவன் மாயம் said...

sury said...
Last year at Chennai, when our area was flooded by sewerage water, many people were affected by chikgunya and leptospirosis. Leptospirosis starts like flu, subsides,and then comes back vigorously with enormous pain in the joints.
I would suggest blood test to rule out leptospirosis. An untreated or half treated lepto would lead to liver problems later. Pencillin or Doxycyclin for 60 days contiously appears to fully cure the problem.
subbu rathinam.//

மிக நல்ல அக்கறையுடன் பதில் அளித்தமைக்கு நன்றி. அனைவருக்கும் இது உபயோகமாக இருக்கும்!

Muruganandan M.K. said...

சிக்கன் குன்யாவா? வலியோடு போராடுவது கஸ்டம்தான்.
எனக்கும் கூட இது 3 வருடங்களுக்கு முன் வந்தது. நல்லகாலம் கடுமையான பாதிப்பு இன்றித் தப்பிவிட்டேன். நீங்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

அப்துல்மாலிக் said...

தல உடம்பை நல்லா பாத்துக்கோங்க, அப்போதான் நம்பி வரும் மக்களை காப்பாத்த முடியும்

100 வருஷமா?????????? ஆஆஆஆ

ஹுஸைனம்மா said...

திருநெல்வேலியில் இப்ப பல வகையான காய்ச்சல்கள் மக்களைத் தாக்கி வருகின்றன. காய்ச்சல் வந்தவர்கள் முடமாக்கப்பட்டதுபோல் ஆகிவிடுகிறார்கள்!! கடையநல்லூர் பகுதியில் பலர் இறந்ததாகக் கேள்விப்பட்டேன்.

தற்போது நாகர்கோவிலிலும் பரவி வருகிறது. திருச்சியில் ஏற்கனவே இருக்கிறது!!

மழைநீர் வடிகால்கள், சாக்கடைகள் அடைத்திருப்பதனால் வரும்வினை!!

நசரேயன் said...

கண்டிப்பா டாக்டர்

புலவன் புலிகேசி said...

நிச்சயமா..நெறைய வேலை இருக்குல்ல. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

திருநெல்வேலிக்கே அல்வா..திருப்பதிக்கே லட்டு வரிசையில் மருத்துவருக்கே மூட்டுவலி அப்ப எங்க நிலமை சார்......

Anonymous said...

வலியின் கொடுமை தாங்கமால் மரணத்தை தழுவ நினைப்பதென்பதை சிந்திப்போமானால் வலியின் வேதனை என்ன என்பதை உணர்ந்தால் தான் அறியமுடியும்....

சினிமா புலவன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

வயதானவர்களுக்கு வரும் இந்த மூட்டுவலிக்கு மருந்து என்ன சார்?

காற்றில் எந்தன் கீதம் said...

முதுமையில் தனிமை மிகவும் கொடுமை தான் அதோடு பிணியும் சேர்த்தால் அந்த வாழ்வு நரகம் தான் பகிர்விற்கு நன்றி டாக்டர்.

நீங்கள்
விரைவில் நலமடைய வாழ்த்துக்கள் ..........
(பொங்கல் வாழ்த்து சொல்ல வந்தா இப்பிடி நலம் பெற வேண்டும் சொல்ல வச்சிடிங்களே........)
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Joe said...

Hope you get well soon.

100yrs? no thanks, perhaps until 70!

KULIR NILA said...

Oosi pottu mudikkanama illa senja paavangalukku innum allal padanuma endru kadavul program panni vaichu irukkirar anaivarukkum ore act 337 by God.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory