Tuesday, 17 November 2009

மோசமானவைங்கள்ளேயே முக்கியமானவைங்க!!!

ஏர் இந்தியாவில் ஆப்பிரிக்காவில் இருந்து  வந்திறங்கிய நண்பனையும் அவன் நண்பர்களையும் என் நண்பர்கள் புடைசூழ வரவேற்றேன்.

வாடா மாப்பிள்ளை!! எப்படியிருக்கீங்க எல்லாம்? என்று வழக்கமான கேள்வியைக் கேட்டேன்.

அதுதான் பார்க்கிறாயே!! எப்படியிருக்காங்க நம்ம தோஸ்துங்கள்ளாம் பார்த்தியா?

அப்போதுதான் அவன் கூட வந்தவர்களைப் பார்த்தேன். எல்லாம் செம கெட்டப்பில் இருந்தார்கள்.  நமக்கு   ஆப்பிரிக்கா நண்பர்கள் அதிகம்!! நிறையப் பேரைத் தெரியும். இருந்தாலும் இவர்கள் போன முறை வந்தவர்கள்தான்.

கொடிய வியாதிகளில் ஆராய்ச்சி மாணவர்களான அவர்கள் இரண்டு குழுவாக இருந்தனர். இரண்டு குழுக்களிலும் நிறையப்பேர்  இளம் வயதினராகவும் நல்ல சக்திவாய்ந்தவர்களும்  இருந்தனர்.

இந்த இடத்தில் நாங்கள் யார் என்று கொஞ்சம்  சொல்லிவிடுகிறேன்.

நாங்கள் ஒன்றும் நாட்டுக்கு நல்லது செய்யும் ஆராய்ச்சியாளர்கள் அல்ல!!! இது மட்டும் இப்போது போதும்.

சரி!! நீங்கள் வந்திறங்கியது அரசாங்கத்துக்குத் தெரியுமா?  பயணம் எப்படி? ஏர் இந்தியா எப்படி? அடுக்குக் கேள்விகள் சரமாகத் தொடுத்தேன். கொஞ்சம் தெரியும். ஆனால் இப்போது இந்தக்குழு வந்திருப்பது தெரியாது என்று நினைக்கிறேன்.

ஏர் இந்தியாவில் மழையினால் கொஞ்சம் சிரமமாக இருந்தது. மற்றபடி ட்ராவல் ஓகேதாண்டா!!

சரி!! நீ ஏண்டா சோகமா இருக்கே!! ”எங்கேடா இந்தியாக் காரனுக்கு இந்தியாவில் எவன் பயப்படுகிறான். 

சரி வாங்க!! போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு வேலையை ஆரம்பிப்போம்!!

மனித உடலில்  புதுப் புது பிரச்சினைகளை உண்டாக்கும்  என் நண்பர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினேன் நான்!!

இவர்கள் தாக்கிய மனிதர்களிடமிருந்து எனக்கும் ரத்தம் கிடைக்கும் அல்லவா!!! ..ஹி   ...ஹி   ..ஹி!!

பின்குறிப்பு:

1.ஏர் இந்தியா- இந்தியக் காற்று!

2.இரண்டு குழுக்கள்- 1.சிக்குன் குன்யா 2. டெங்கு கொசு வைரஸ் குழுக்கள்!!

3.நான் - சாதாக்காய்ச்சல் கொசு!!

சும்மா மொக்கையாக எழுதியது!! சீரியஸா அறிவியல் பூர்வமா சிந்தித்து மணடையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

படிச்சிட்டு சிரிச்சுட்டுப் போங்க!

நகைச்சுவை, மொக்கை 

40 comments:

கலகலப்ரியா said...

mukkiyamaanavangalla mosamaanavainga neenga..! nallaa irungaiyaa..!

இராகவன் நைஜிரியா said...

தூள் கிளப்பிட்டீங்க மருத்துவரே..

சூப்பர் மொக்கை..

அமர பாரதி said...

நல்ல மொக்கை டாக்டர். ஆனால் சீரியஸாக சிக்குன் குன்யாவை ஒழிப்பதற்கு என்ன செய்யலாம் என்று பதிவிடுங்களேன்.

தேவன் மாயம் said...

கலகலப்ரியா said...
mukkiyamaanavangalla mosamaanavainga neenga..! nallaa irungaiyaa..!
///

ஆகா!! என் மேலேயே திருப்பி விட்டீங்களா!!

தேவன் மாயம் said...

அமர பாரதி said...
நல்ல மொக்கை டாக்டர். ஆனால் சீரியஸாக சிக்குன் குன்யாவை ஒழிப்பதற்கு என்ன செய்யலாம் என்று பதிவிடுங்களேன்.

17 November 2009 07:22///

கட்டாயம் போடுகிறேன்!!

சூரியன் said...

//mukkiyamaanavangalla mosamaanavainga neenga..! nallaa irungaiyaa..!//

ஹா ஹா ஹா இது தான் டாப்பூ..

சூரியன் said...

நான் கூட உங்க சுருள்வத்தியோனு நினைச்சுட்டேன்..

கடைசில கொசுவோட சுருள்வத்தி ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

எதோ சீரியஸான கதைன்னு நினைச்சேன் டாக்டர்!

இது மொக்கை வாரம் போல!

ஸ்ரீ said...

//தூள் கிளப்பிட்டீங்க மருத்துவரே..

சூப்பர் மொக்கை..//


Repeattu........

அரசூரான் said...

மொக்கைத்தான் ஆனா மொக்கை இல்ல... பாதியில் நான் ஏதோ எம்.எல்.ஏ/எம்.பி பத்தியோன்னு நினைச்சுட்டேன்... ஹி... ஹி... வெரும் கொசு கடியோட போச்சு.

அ.மு.செய்யது said...

இப்படியும் நிறைய எழுதுங்க தேவா !!!! நல்லா இருக்கு !!!

பிரியமுடன்...வசந்த் said...

ஹ ஹ ஹா

நல்லா இருக்கு சார்...

பிரசன்ன குமார் said...

இப்படி ஒரு ட்விஷ்ட்டா.. நல்லா இருக்கு
//எங்கேடா இந்தியாக் காரனுக்கு இந்தியாவில் எவன் பயப்படுகிறான்//
அதுக்கும் பாருங்க கவலைய :)

சுடுதண்ணி said...

சிரிச்சாச்சு.. சிரிச்சாச்சு... :)))

ஆ.ஞானசேகரன் said...

//சும்மா மொக்கையாக எழுதியது!! சீரியஸா அறிவியல் பூர்வமா சிந்தித்து மணடையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

படிச்சிட்டு சிரிச்சுட்டுப் போங்க!//

சரிரீ.... சிந்திக்காமல் சிரிச்சாச்சு டாக்டர்

பா.ராஜாராம் said...

டாக்டர்...

:-))))

தேவன் மாயம் said...

சூரியன் said...
//mukkiyamaanavangalla mosamaanavainga neenga..! nallaa irungaiyaa..!//

ஹா ஹா ஹா இது தான் டாப்பூ..
17 November 2009 07:44///

சூரியன்....நன்றி!!

தேவன் மாயம் said...

அ.மு.செய்யது said...
இப்படியும் நிறைய எழுதுங்க தேவா !!!! நல்லா இருக்கு !!!

17 November 2009 10:17
//

ஓகே!!செய்யது!!

தேவன் மாயம் said...

பிரியமுடன்...வசந்த் said...
ஹ ஹ ஹா

நல்லா இருக்கு சார்...

17 November 2009 10:46//

வசந்த் ரசிப்புக்கு நன்றி!!

தேவன் மாயம் said...

பிரசன்ன குமார் said...
இப்படி ஒரு ட்விஷ்ட்டா.. நல்லா இருக்கு
//எங்கேடா இந்தியாக் காரனுக்கு இந்தியாவில் எவன் பயப்படுகிறான்//
அதுக்கும் பாருங்க கவலைய :)

17 November 2009 11:06///

இருக்காதா பின்னே!!

தேவன் மாயம் said...

சுடுதண்ணி said...
சிரிச்சாச்சு.. சிரிச்சாச்சு... :)))

17 November 2009 11:37
//

ஓகே !!ஓகே!!!

தேவன் மாயம் said...

ஆ.ஞானசேகரன் said...
//சும்மா மொக்கையாக எழுதியது!! சீரியஸா அறிவியல் பூர்வமா சிந்தித்து மணடையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

படிச்சிட்டு சிரிச்சுட்டுப் போங்க!//

சரிரீ.... சிந்திக்காமல் சிரிச்சாச்சு டாக்டர்

17 November 2009 12:47
///

வாங்க நல்லா சிரிச்சீங்களா!!

தேவன் மாயம் said...

பா.ராஜாராம் said...
டாக்டர்...

:-))))

17 November 2009 12:4//

என்னாச்சு !! கொசு கடிச்சிரிச்சா!!

தண்டோரா ...... said...

இது மொக்கை வரம்...ஹி..ஹீ

இளவட்டம் said...

///கொடிய வியாதிகளில் ஆராய்ச்சி மாணவர்களான அவர்கள் இரண்டு குழுவாக இருந்தனர்///

இது ரொம்ப ஓவர் டாக்டர்.

பாலகுமார் said...

:) :) :)

க.பாலாசி said...

டாக்டர் என்னாச்சு...உடம்புக்கு ஏதாவது?...

கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் புரிஞ்சிகிட்டேன். கலக்கல் காமெடி....

டம்பி மேவீ said...

நான் ரொம்ப சீரியஸ் யான கதைன்னு நினைச்சிட்டு படிச்சேன் டாக்டர்......

இந்த மாதிரி மொக்கை கூட உங்களால் போடா முடியுமா ..... ரொம்ப ஆச்சிரியமா இருக்கு....

நம்ப முடியவில்லை

S.A. நவாஸுதீன் said...

மொக்கை பதிவுகளிலேயே முக்கியமான பதிவு தேவா சார்.

இந்த மாதிரி ஒரு பிரேக்கும் தேவைதான்.

தேவன் மாயம் said...

தண்டோரா ......
இளவட்டம்
பாலகுமார்

க.பாலாசி
டம்பி மேவீ
S.A. நவாஸுதீன்

அனைவருக்கும் நன்றி!!!

malar said...

naala nakai chuvai

பேநா மூடி said...

கலக்கிடீங்க..போங்க...

Rajeswari said...

என் கற்பனை குதிரையை ,அடக்கி வைத்துவிட்டது இவ்வரிகள் “.ஏர் இந்தியா- இந்தியக் காற்று! 2.இரண்டு குழுக்கள்- 1.சிக்குன் குன்யா 2. டெங்கு கொசு வைரஸ் குழுக்கள்!! 3.நான் - சாதாக்காய்ச்சல் ”....


ஏமாத்திட்டீகளே...

அபிஷேகா said...

முதலில் வாசிக்கும்போது பயணக்கட்டுரையோ என்று நினைச்சன், அப்புறம் பேராண்மை பாணியில் தடல்புடல் ஆரம்பம் மாதிரி இருந்திச்சு. ஆனா சூப்பரா முடிச்சிட்டீங்க. மீளவும் வாசித்தேன். அருமை, எளிமையான இனிமை. ரொம்ப சிரிச்சாச்சு. வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

:)))))))))

butterfly Surya said...

ஏன் .டாக்டர்.. என்னாச்சு..??

சி. கருணாகரசு said...

நல்ல வேளை பின்குறிப்பு போட்டிங்க...அதுவரைக்கும் கொஞ்சன் அதிச்சியாகவே இருந்தது.
இதுவும் நல்லாத்தான்...இருக்கு.

அபுஅஃப்ஸர் said...

கலக்கல்.. மருத்துவரே

ரோஸ்விக் said...

நான் அப்பவே நினச்சேன் நம்ம ஊர்க்காரருக்கு ஏதுடா ஆப்பிரிக்கா நண்பன்-னு

சிரிச்சாச்சு...சிரிச்சாச்சு... :-))

velji said...

வித்தியாசமான மொக்கைதான்..டெக்னிகல்மொக்கைன்னு சொல்லலாமா!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory