Monday, 23 November 2009

படுக்கை அறைப் பாட்டு!

சில விசயங்களைப் பற்றிப் பேசுவதற்கு மிகவும் கூச்சப்படுவோம்.

பொதுவாகப் பேசக் கூச்சப்படும் விசயங்களையும் நாசூக்காகச் சொல்லுவோம். அப்படி ஒரு மேட்டரைப் பார்ப்போம்.

பொது இடங்களில் பேசவே சிலர் கூச்சப்படுவார்கள். சார் “ ஒரு பாட்டுப் பாடுங்க” என்று கேட்டால் ஓடி ஒளிபவர்கள் அதிகம்.

இப்படி ஓடி ஒளிபவர்களும் ரசித்துப் பாடும் இடம் உண்டு. உங்களுக்கே தெரியும்- குளியலறைதான் அது!!

கல்யாணம் ஆனவுடனேயே நம்ம ஊரில் ஒரு கொடுமை நடக்கும். என்ன என்றால் அட்வைஸ்! ஆளாளுக்கு உபதேசம்!!

முன்னேமாதிரி விளையாட்டுப்பிள்ளை இல்லை நீ!! இப்போ உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. உன் வேடிக்கை , விளையாட்டையெல்லாம் நிறுத்திவிட்டு குடும்பப் பொண்ணா, லட்சணமா நடந்துக்கணும்!! சரியா?”

சிரித்து கலகலப்பாக இருந்த சுடிதார்ப் பெண்ணை ஒரு நாளில் புரட்டிப்போடும் கல்யாணம் பெண்ணிடத்தில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.

எதற்காக ஒரு ஆணோ, பெண்ணோ திருமணத்துக்குப் பின் தன் சிறு சிறு விருப்பங்களை, சந்தோசங்களை இழக்க வேண்டும். இந்தச் சிறு சிறு சந்தோசங்கள்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுப்பவை.

சினிமாப் பாடலை டி.வி யில் பார்க்கும்போது பாடலுடன் சேர்ந்து  ரசித்துப் பாடுவது ஒரு இளைஞிக்கோ  இளைஞனுக்கோ  பிடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனை திருமணமானவுடன் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும். சொல்லப் போனால் அப்படிப் பாடுவது நிச்சயம் மன இறுக்கத்தைக் குறைக்கும்.

குரல் எப்படி இருந்தால் என்ன!! எல்லோரும் லதா மங்கேஷ்கர் போலப்பாட முடியுமா? நீங்கள் லதாவின் குரலை ரசிப்பவராக இருக்கலாம்.

ஆனால் உங்கள் மனைவியின் குரல் அதை விட இனிமையாக இருக்கும். பாடச்சொல்லிக் கேட்டுத்தான் பாருங்களேன்!!

”என் மனைவி பாடமாட்டாளே!! கூச்சப்படுவாளே!” என்கிறீர்களா?   பாடுவார்கள்!! எல்லோரும் இருக்கும் ஹாலிலோ , பகலிலோ பாடக் கூச்சப்படலாம். ஆகையால் படுக்கும் போது நீங்கள் அவருக்காகவும் பாடுங்கள்!!  நிச்சயம் நெஞ்சுக்குள் பெய்யும் காதல் மழை!!!

”எப்படிச் சொல்கிறீர்கள்?” - என்கிறீர்களா? நானும் அவ்வப்போது பாடுகிறேனே!!!

என்னுடைய பேவரைட்” ராஜாப் பொண்ணு அடிவாடியம்மா, கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி!!”

உங்களுக்குப் பிடித்த  பாடலை நீங்களும் பாடுங்கள்!! நிச்சயம் வாழ்க்கையில் ஒரு சின்ன சந்தோசம் கூடும்!!

35 comments:

பிரியமுடன்...வசந்த் said...

ஆன் தி வே........


இப்படியாயின இடுகை டாக்டர் சார்ட்ட இருந்து வந்து ரொம்ப நாளாச்சு...

முதல் முதல் சந்திப்பில் அதைத்தொடர்ந்த சந்திப்பிலும் பாடலுடன் ஆரம்பிக்க சொல்றீங்க...

தேவன்மாயம் said...

பிரியமுடன்...வசந்த் said...
ஆன் தி வே........


இப்படியாயின இடுகை டாக்டர் சார்ட்ட இருந்து வந்து ரொம்ப நாளாச்சு...

முதல் முதல் சந்திப்பில் அதைத்தொடர்ந்த சந்திப்பிலும் பாடலுடன் ஆரம்பிக்க சொல்றீங்க...

///

எல்லாவிதமான இடுகையும் போடுவதால்தான்!!!

இனி தொடர்ந்து போடுவோம்!!

பழமைபேசி said...

இஃகி... பிரயோசனமா இருக்கும்...

அகல்விளக்கு said...

ஆஹா....

என்னவோ ஏதோன்னு நினைச்சு ஓடியாந்தனே....

ஆனாலும் நல்ல விஷயத்தைத்தான் சொல்லியிருக்கீங்க சார்...

கீப். இட். அப்.

ஆ.ஞானசேகரன் said...

//ஆனால் உங்கள் மனைவியின் குரல் அதை விட இனிமையாக இருக்கும். பாடச்சொல்லிக் கேட்டுத்தான் பாருங்களேன்!!//

கேட்டேன் ரசித்தேன்...

ஜோசப் பால்ராஜ் said...

நல்லா இருக்கு மருத்துவர் ஐயா.

நோட் பண்ணி வைச்சுக்கிறேன். ஆனா நாமளும் பாடணும்னு சொல்றீங்க. அதான் கொஞ்சம் டெரர் ஐடியாவா இருக்கு.

தேவன்மாயம் said...

பழமைபேசி said...
இஃகி... பிரயோசனமா இருக்கும்...

23 November 2009 06:50//
உபயோகித்து விட்டுச் சொல்லுங்க!

தேவன்மாயம் said...

அகல்விளக்கு said...
ஆஹா....

என்னவோ ஏதோன்னு நினைச்சு ஓடியாந்தனே....

ஆனாலும் நல்ல விஷயத்தைத்தான் சொல்லியிருக்கீங்க சார்...

கீப். இட். அப்.

23 November 2009 06:///

சரி நண்பா!!

தேவன்மாயம் said...

ஆ.ஞானசேகரன் said...
//ஆனால் உங்கள் மனைவியின் குரல் அதை விட இனிமையாக இருக்கும். பாடச்சொல்லிக் கேட்டுத்தான் பாருங்களேன்!!//

கேட்டேன் ரசித்தேன்...

23 November 2009 06:55//

கில்லாடி சார் நீங்க!!

தேவன்மாயம் said...

ஜோசப் பால்ராஜ் said...
நல்லா இருக்கு மருத்துவர் ஐயா.

நோட் பண்ணி வைச்சுக்கிறேன். ஆனா நாமளும் பாடணும்னு சொல்றீங்க. அதான் கொஞ்சம் டெரர் ஐடியாவா இருக்கு.

23 November 2009 06:59//

சும்மா பாடுங்க சாமி!!

வால்பையன் said...

ரிஸ்க் எடுக்கலாம்கிறிங்களா!?

தேவன்மாயம் said...

வால்பையன் said...
ரிஸ்க் எடுக்கலாம்கிறிங்களா!?

23 November 2009 07:21//

உங்க கொரலுக்கென்ன!!சும்மா பூந்து விளாசுங்க!!

வினோத்கெளதம் said...

ரொம்ப நல்ல இடுகை தல..:)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

தேவா சார் ரொம்ப நல்லாருக்கு

உங்க மனசு மாதிரி யாருக்கும் வராது

கார்த்திகைப் பாண்டியன் said...

எதிர்காலத்துல பயன்படும் தேவா சார்..;-))))))

இராகவன் நைஜிரியா said...

அய்யா.. பாட்டு பாடறேன் சொல்லிட்டு, அடி வாங்க நம்மால முடியாதுங்கோ...

ஸ்ரீ said...

ம்ம்ம்ம்ம்ம் .................. பாட வேற செய்யணுமா? ரொம்பக் கஷ்டம் போலவே?பேசாம இப்படியே இருந்துடலாம் போலவே!

புதுகைத் தென்றல் said...

நீங்க சொல்வது சரிதான் டாக்டர்,

இனிமையான குரல்வளம், சங்கீத ஞானம், முறையான பயிற்சி எல்லாம் இருந்தும் “கல்யாணமானவளுக்கு என்ன பாட்டு??” என்று கேட்ட என் பாட்டியால் 37 வருடங்களாக அம்மாவின் குரல் பூஜையின் போதாவது கேட்க அரிதாக விட்டது.


பல பல ரொமான்ஸ் ரகசியங்களை எடுத்து விடறீங்க. அனைவரின் வாழ்விலும் வசந்தம் வீசச் செய்யும் இத்தகைய பதிவுகள் பல வர வாழ்த்துக்கள்.

தியாவின் பேனா said...

ஆஹா....

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் எல்லார் வீட்டிலும் சாதாரணமாக நடக்கும் நிகழ்வு - பாடச் சொல்லிக் கேட்பது இருவரிடமும் இயலபாக இருக்காது. ஆனால் ஒருவர் மற்றவர் இருக்கும் போது இவர் பாடும் போது மற்றவர் மறைந்திருந்தோ - ஈடுபாடு இலாதது போல் காட்டிக்கொண்டா - இரகசியமாக இரசிப்பது இயலபாக நடக்கும் செயல். அட இபப்டியும் பாடுவாரா என மகிழ்ந்தாலும் வாய் திறந்து பாராட்ட மாட்டார்.

இது தமிழக் கலாசாரம்

நல்ல கருத்து நண்பா நல்வாழ்த்துகள்

இளவட்டம் said...

டாக்டர் நீங்க எங்கேயோ போய்டீங்க.

இன்னும் கொஞ்சம் டவுட் இருக்கு.தனியா கேட்டுகிறேன்.

Rajeswari said...

நல்ல விசயம்....

Rajeswari said...

நீங்க நல்ல கன்சல்டண்ட்டும் கூட சரியா??

ரோஸ்விக் said...

ஓ ஓ ஓ ....அதான் பலபேரு வீட்டுல ராத்திரில பாட்டு சத்தம் கேக்குதா???...சரி சரி....

பூவே உனக்காக படத்துல தினமும் ராத்திரி எட்டு மணிக்கு பாடுவரே வெள்ளியங்கிரி....அவரும் இதுக்காக்காகத் தான் பாடிருப்போரோ...? புரியுது புரியுது....

பாட்டு நல்லா இருந்தா பாடியே குடும்ப பிரச்சனைய தவிர்க்கலாம்....ஒருவேள அது நல்லா இல்லையினாலும்...நான் பாடுவேன்னு சொல்லி மிரட்டி வைக்கலாம்....ம்ம்ம்

டிஸ்கி : நீங்க சொல்லியிருப்பது ரொமான்ஸ் ரகசியம்தான்....கலக்குங்க. பல பேரு பயனடையட்டும்...

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. நல்ல இடுகை தேவா சார்

Sangkavi said...

நிச்சயமாக.....

முற்றிலும் உண்மை.........

அருமையான, அழகான இன்றைய தம்பதியினர்
தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம்.....

விக்னேஷ்வரி said...

நல்ல விஷயம் சொன்னீங்க மருத்துவரே.

Jeya kalyani said...

ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்.. எல்லோருக்கும் ஏதாவ‌து ஒரு திற‌மை இருக்கும். ஆனால் இந்த‌ மாதிரி த‌ய‌க்க‌த்தால் தான் ந‌மது திறமைக‌ள் வெளி வராம‌ல் இருக்கிற‌து.

" உழவன் " " Uzhavan " said...

//அதனை திருமணமானவுடன் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்//
 
நல்ல கேள்வி. நல்ல பதிவு

சி. கருணாகரசு said...

அப்படியே ஆகட்டும் மருத்துவரே!

Dr.எம்.கே.முருகானந்தன் said...

மனம் விட்டுப் பாடுவது மகிழ்ச்சியின் அறிகுறிஇ தன்னம்பிக்கையை வளர்க்கவும் செய்கிறது. நல்ல கருத்து

பாலகுமார் said...

நோட் பண்ணிக்கிட்டேன் சார், பிற்காலத்தில் பயன்படும்.

நாணல் said...

:)) நல்ல பயனுள்ள இடுகை...

ஈர வெங்காயம் said...

நல்ல பதிவு...
வாழ்த்துக்கள்...

Joe said...

நல்ல பதிவு, வாழ்த்துக்கள்!

பாட்டுப் பாடுறது சுகமான அனுபவம்.
நாமே அந்த பாடகனாகவும், திரைப்பட நாயகன்/நாயகியாக மாறி விடுவதாய் கற்பனை செய்து கொள்ளும் அந்த தருணங்கள்! :-)

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory