Wednesday, 18 November 2009

ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? +18 !!

ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? படிப்பவர்கள் ஆச்சரியப்பட வேண்டாம்! திருமணமான ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? நிச்சயமாக சேர்ந்து குளிக்கலாம் என்று மனமொத்து வாழும் தம்பதியினரிடம் எடுத்த புள்ளி விபரங்கள் கூறுகின்றன!
 நம் நாட்டில் பொதுவாக சேர்ந்து குளிப்பது அபூர்வம். பெரிய குளியல் அறைகளோ, வீட்டில் நீச்சல் குளமோ இருக்காது. ஏன் குளிக்கும் பாத் டப் கூட நாம் உபயோகிப்பதில்லை! ஆனால் பிற நாடுகளில் படங்களில் பார்ப்பதுபோல் குளிப்பதையும் அனுபவித்துக் குளிக்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க தற்போது விவாகரத்து என்பது இளம் தம்பதியினரிடம் அதிகமாகிவருகிறது. வேலைக்குச் செல்லும் தம்பதியர்களில் இது மிகவும் அதிகம்!

விவாகரத்துக்கு சொல்லப்படும் காரணங்களில் பெண் பெரும்பாலும் வரதட்சிணை கேட்கிறான், அடிக்கிறான் போன்ற காரணங்களைப் பொதுவாகச் சொல்லுவார்கள்.

இரண்டுபேருக்கும் மனசு ஒத்துவரலைன்னு சொல்லுவதும் உண்டு.இதையும் மீறி பாலியல் சிக்கல்களும், உளவியல் பிரச்சினைகளும் நிறைய இருக்கு. அவற்றையெல்லாம் மேலோட்டமாக கண்டுபிடித்து திருத்துவது கஷ்டமான வேலை.

சரி, அதையெல்லாம் வல்லுனர்களிடம் விட்டுவிடுவோம். பொதுவா ஏதாவது புதுசா இருக்கா? புதுசுதான் ஆனா பழசு!

அதுதான் மணப் பிரச்சினை! மணப் பிரச்சினைன்னா.... உடல் மணப் பிரச்சினை!! இதென்ன பிரமாதம்ன்னு சொல்றீங்களா? நான் சொல்லலைங்க!! மலேசியா அரசாங்க்கமே சமீபத்தில் சொல்லியிருக்கு.

பொதுவாகவே ஒருவருக்கு தன் உடலின் மணம் அவருக்குத்தெரியாது. பக்கத்தில் இருப்போர் கதிதான் அதோகதி. பக்கத்தில் இருக்கும் நமக்கே இப்படின்னா கணவன் மனைவிக்கு எப்படியிருக்கும்?.

நிறையப் பெண்களுக்கு சினிமாத் தியேட்டருக்குள் சூழ்ந்திருக்கும் சிகரெட் புகை பிடிக்காது. குமட்டும். அந்தத் தொடர் புகைவண்டி ஆசாமியிடம் " அப்பா! வெளியே போய் ஊதிவிட்டு வாப்பான்னா" அவன் நம்மை ஒரு பார்வை பார்த்துட்டு வெளியே போவான். இல்லைன்னா சிகரெட்டை நசுக்குவான்.

இது இப்படின்னா வெளியூர் போகும்போது சில கார் டிரைவர்கள் அவசரத்தில் குளிக்காம வண்டியில் ஏறிவிடுவார்கள். காருக்குள்ளே நம்ம உட்கார முடியாது. இதெல்லாம் நல்லாத்தெரிந்தும் நம்மில் பலர் நம்ம உடல் மணத்தின்மேல் அக்கரை காட்டுவதில்லை.

சில பேர் நான் பவுடரே போடமாட்டேன்னு பெருமையா சொல்லிக் கொள்வார்கள். அதுல என் உடம்பில் கெட்ட மணமே வராதுன்னுவேறு!! தமிழ் நாட்டில் சாப்பிட்டவுடன் தாம்பூலம் போடுவதும் இதற்காகத்தான்( இது எல்லாருக்கும் தெரியும்). மலேசியாவில் நடந்த ஆராய்ச்சியில் பத்தில் மூன்று கல்யாணங்கள் விவாகரத்தில் முடியுதாம். அதற்குக் கூறப்படும் காரணங்களில் உடல் மணமும் ஒன்று.
பொதுவாக நான் பார்க்கும் புது மணத்தம்பதியினரிடம் பெண்ணிடமோ, ஆணிடமோ நல்ல மணம் இல்லாமல் இருப்பது கண்டால் உடனே  கூறி அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் அறிவுறை கூறிவிடுவேன். ஏனெனில்  பெரும்பான்மையானவர்களுக்கு இது பற்றிய விழிப்புண்ர்வு இருக்காது.

சேர்ந்து வாழும் தம்பதியினர் நல்ல துவைத்த சட்டை அணிவதையும், உடலில் சென்ட் போன்ற நறுமணப்பொருட்களை உபயோகிப்பதையும் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.தொள தொள உடைகளைவிட சரியான அளவுள்ள உடைகளே அவர்களுக்குப் பிடிக்குதாம்.

இதெல்லாம் எல்லோரும் செய்யலாம். கடைசியா ஒரு தம்பதியினர் சொன்னதுதான் ஆச்சரியம்!! ஆமாங்க, இருவரும் சேர்ந்து ஒன்றாகக் குளிப்பதுதான் அவர்கள் மணவாழ்க்கையின் ரகசியம் என்று கூறியிருக்கிறார்கள். சேர்ந்து ஒன்றாக வெளியில் செல்வதையே இன்னும் பலர் கடைப் பிடிப்பதில்லை. மனைவி அழகாக இல்லாத பலர் இன்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு மனைவியை அழைத்துச் செல்வதில்லை. அப்படியிருக்கும்போது சேர்ந்து குளிப்பது என்பது எவ்வாறு சாத்தியம். மிகவும் மனமொத்த தம்பதியினர் மட்டுமே இந்த அளவு அன்னியோன்னியமாக இருக்க முடியும்.
உடல் மணத்தில்  அக்கறை காட்டுதல் மிகவும் நல்லது. இதற்கு வாசனைத்திரவியங்கள் விலை அதிகமாகுமே என்று எண்ண வேண்டாம். புரூட் போன்ற டியோடரண்டுகளில் 24 மணிநேரம் உடல் நறுமணம் தரும் ஸ்பிரேக்களை  விற்கின்றன. ஆனால் தற்போது வரும் பாண்ட்ஸ் பவுடரே போதும். குளித்தவுடன் ஏதாவது ஒரு பவுடரை உடலில்  தடவினாலே போதும்.

மக்களே!! எல்லாத்தையும் கடைப்பிடிங்க!! உடல் மணத்தில் தம்பதியினர் கவனம் செலுத்துங்க.
ஜோக் நம் நாட்டுக்கு தம்பதிகள் சேர்ந்து குளிப்பது தேவையா? என்கிறீர்களா? இருக்கிற மக்கள் தொகையில். நம்ம நாடு தாங்குமா?.. !!! ஹி.... ஹி... ஹி..!!!

32 comments:

ஜெரி ஈசானந்தா. said...

குளிக்கலாம் தப்பேயில்லை. ஆனா யாரு கூட குளிக்க வரேன்னு அடம் பிடிக்கிறது.?

cheena (சீனா) said...

சேந்து குளிச்சுத்தான பாக்கறது -

என்ன ஜெரி சரிதானே

டாக்டர் சொல்றத கேக்கலாமா வேண்டாமா ) இந்தக் குளியல் மட்டும் )

நல்வாழ்த்துகள்

பிரியமுடன்...வசந்த் said...

டாக்டர்,,,

ஏக மனதான வரவேற்பு கிடைக்கும்...

ம்ம்..நினைத்தாலே இனிக்கும்...

மதுவதனன் மௌ. / cowboymathu said...

இதுக்கு ஏன் 18+ ? உங்களுக்கே நியாயமா?

அகல்விளக்கு said...

டாக்டர் சொன்னா செய்யாம இருக்க முடியுமா..

நானும் வரும்காலத்தில் முயற்சி பண்றேன்.

ஓஓஓஓஓஓ.... பேச்சிலர் மக்களே...

டாக்டர் சொல்றத நல்லா கேட்டுக்கங்க...

நினைச்சாலே குஜாலாக்கீது.

:-)

ஹேமா said...

டாகடர் எல்லாரும் நல்ல பிள்ளைங்களா இருக்காங்க.
எப்டியாச்சும் கெட்ட பையனுகளா ஆக்கிடப் போறீங்க !

velji said...

தேவையானயோசனைகள்தான்.

சேர்ந்து குளிச்சா..தண்ணீர் மிச்சம்தான்!

ஆ.ஞானசேகரன் said...

டாக்டர் நீங்கள் நல்லவரா கெட்டவரா?

என். உலகநாதன் said...

//ஆமாங்க, இருவரும் சேர்ந்து ஒன்றாகக் குளிப்பதுதான் அவர்கள் மணவாழ்க்கையின் மக்களே!//

வாக்கியம் சரியாக பூர்த்தியாக வில்லை.

தலைப்புக்கும் கட்டுரைக்கும் அதிக சம்பந்தம் இல்லை.

நீங்கள் கூட இந்த மாதிரி தலைப்பை தேர்ந்தெடுப்பது ஆச்சர்யமாக உள்ளது.

அ.மு.செய்யது said...

ஆஹா த‌லைப்பை பார்த்து ஏமாந்துட்ட‌னே !!!! ஏங்க‌ இப்ப‌டி ??

புதுகைத் தென்றல் said...

டாகடர் எல்லாரும் நல்ல பிள்ளைங்களா இருக்காங்க.
எப்டியாச்சும் கெட்ட பையனுகளா ஆக்கிடப் போறீங்க //

:)))

Anonymous said...

சார் எப்படியோ குளிச்சாச் சரி தான்...

அட வழக்கம் போல தான் இருக்கும் என்று பயனுள்ள பதிவென்று எழுதவந்தது கைகள் ஆனால் உண்மையுள்ள பதிவென்று இன்று சொல்கிறேன்...

S.A. நவாஸுதீன் said...

ஓகே ஒகே.

நட்புடன் ஜமால் said...

மக்களே!! எல்லாத்தையும் கடைப்பிடிங்க!! உடல் மணத்தில் தம்பதியினர் கவனம் செலுத்துங்க.]]

இது சரி - மிகச்சரி

அருமை தேவா!

" உழவன் " " Uzhavan " said...

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய வாழ்வில், இக்குளியல் அவசியமானதே. ஜோக்கெல்லாம் சொல்லி குளிக்கிறவங்களை யோசிக்க வச்சிறாதீங்க :-)

ஷாகுல் said...

//டாக்டர் நீங்கள் நல்லவரா கெட்டவரா?//

தெரியலயே சார்

மாதேவி said...

"உடல் மணத்தில் அக்கறை காட்டுதல் மிகவும் நல்லது." இப்பதிவு அவசியமானதே.

துபாய் ராஜா said...

எல்லா ஊரு ஆறு,குளம்,அருவிகளில் ஆண்,பெண் சேர்ந்துதான் குளிக்கிறார்கள்.... :))

அபுஅஃப்ஸர் said...

இல்லறத்திற்கு மதி மயக்கும் மணம் முக்கியம், அதை‍ தெளிவா சொல்லிருக்கீங்க தேவா சார்
சேர்ந்து குளிப்பது இருவரின் மனம் மற்றும் சூழ்நிலையை பொருத்தது

S.Gnanasekar said...

ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? குளிக்கலாம் தப்பேயில்லை. இதை மேல்தட்டு, நடுத்தர மக்கள் கடைப்பிடிக்கிறார்கள இல்லையோ கண்டிப்பாக கீழ்தட்டுமக்கள் அன்றாட கூலி தொழிலாலி கடைப்பிடிக்கிறார்கள். எப்படி கனவன் வேலை விட்டு வந்தவுடன் வெண்ணீர் வைத்து முதுகு தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள். இப்படி இருக்கும் போது எங்கு வந்தது விவகரத்து. கனவன், மனைவி இருவரிடமும் பரஸ்பரம் இல்லாமல் நான் பெரிசா, நீ பெரிசா ஈகோ அதனால் வாழ்க்கையை நிறையப்பேர் இழந்து தவிக்கிறார்கள்.
ஒவ்வெருவருடைய உடம்புக்கும் ஒரு மனம் உண்டு அதனால் சோப்பு, ஷாம்பு, பவுடர் தேவையில்லை. தினமும் இரண்டு வேலை குளித்தால் போதும்.

ஸ்ரீ said...

அதுல பாருங்க ..... நீங்க எழுதுன பதிவுலயே இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு.கலக்கிடறேன்.

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தா. said...
குளிக்கலாம் தப்பேயில்லை. ஆனா யாரு கூட குளிக்க வரேன்னு அடம் பிடிக்கிறது.?
///

நீங்கதான் கூப்பிடனும்!!

-------------------------------
18 November 2009 08:1

cheena (சீனா) said...
சேந்து குளிச்சுத்தான பாக்கறது -

என்ன ஜெரி சரிதானே

டாக்டர் சொல்றத கேக்கலாமா வேண்டாமா ) இந்தக் குளியல் மட்டும் )

நல்வாழ்த்துகள்///

குளிங்க சார் குளிங்க!!

-----------------------------

18 November 2009 08:35


பிரியமுடன்...வசந்த் said...
டாக்டர்,,,

ஏக மனதான வரவேற்பு கிடைக்கும்...

ம்ம்..நினைத்தாலே இனிக்கும்...///


வரவேற்பா!! ஓகே!!

-----------------------------

18 November 2009 08:43


மதுவதனன் மௌ. / cowboymathu said...
இதுக்கு ஏன் 18+ ? உங்களுக்கே நியாயமா?///

இது அநியாயம்தான் எனக்கே புரிந்துவிட்டது!

-------------------------------

18 November 2009 09:26


அகல்விளக்கு said...
டாக்டர் சொன்னா செய்யாம இருக்க முடியுமா..

நானும் வரும்காலத்தில் முயற்சி பண்றேன்.

ஓஓஓஓஓஓ.... பேச்சிலர் மக்களே...

டாக்டர் சொல்றத நல்லா கேட்டுக்கங்க...

நினைச்சாலே குஜாலாக்கீது.

:-)///

நினைத்தாலே இனிக்குதா!!
--------------------------

18 November 2009 10:31


ஹேமா said...
டாகடர் எல்லாரும் நல்ல பிள்ளைங்களா இருக்காங்க.
எப்டியாச்சும் கெட்ட பையனுகளா ஆக்கிடப் போறீங்க !
///

ஆகா நம்ம பசங்க மாறமாட்டாங்க!!

------------------------------
18 November 2009 14:13


velji said...
தேவையானயோசனைகள்தான்.

சேர்ந்து குளிச்சா..தண்ணீர் மிச்சம்தான்!///

அமாங்க!! சரியாச் சொன்னிங்க!!

--------------------------

18 November 2009 16:44


ஆ.ஞானசேகரன் said...
டாக்டர் நீங்கள் நல்லவரா கெட்டவரா?///

பின்னூட்டங்களைப் பாருங்கள்!!

------------------------------

18 November 2009 17:20

தேவன் மாயம் said...

என். உலகநாதன் said...
//ஆமாங்க, இருவரும் சேர்ந்து ஒன்றாகக் குளிப்பதுதான் அவர்கள் மணவாழ்க்கையின் மக்களே!//

வாக்கியம் சரியாக பூர்த்தியாக வில்லை.

தலைப்புக்கும் கட்டுரைக்கும் அதிக சம்பந்தம் இல்லை.

நீங்கள் கூட இந்த மாதிரி தலைப்பை தேர்ந்தெடுப்பது ஆச்சர்யமாக உள்ளது.
//

வாக்கியம் மாற்றிவிட்டேன்!!

-------------------------------
18 November 2009 17:38


அ.மு.செய்யது said...
ஆஹா த‌லைப்பை பார்த்து ஏமாந்துட்ட‌னே !!!! ஏங்க‌ இப்ப‌டி ??///

இன்னும் நல்லாப் படிங்க செய்யது!!!

=============================

18 November 2009 17:40


புதுகைத் தென்றல் said...
டாகடர் எல்லாரும் நல்ல பிள்ளைங்களா இருக்காங்க.
எப்டியாச்சும் கெட்ட பையனுகளா ஆக்கிடப் போறீங்க //

:)))
//

சேச் சே!!

----------------------------
18 November 2009 21:02


தமிழரசி said...
சார் எப்படியோ குளிச்சாச் சரி தான்...

அட வழக்கம் போல தான் இருக்கும் என்று பயனுள்ள பதிவென்று எழுதவந்தது கைகள் ஆனால் உண்மையுள்ள பதிவென்று இன்று சொல்கிறேன்...///

தமிழரசியே சொல்லீட்டிங்க!! அப்புறம் என்ன?

__________________________

18 November 2009 21:26


S.A. நவாஸுதீன் said...
ஓகே ஒகே.
//

ஒகே!!

----------------------------
19 November 2009 01:56


நட்புடன் ஜமால் said...
மக்களே!! எல்லாத்தையும் கடைப்பிடிங்க!! உடல் மணத்தில் தம்பதியினர் கவனம் செலுத்துங்க.]]

இது சரி - மிகச்சரி

அருமை தேவா!
///

நன்றி!! ஜமால்!!
--------------------------
19 November 2009 02:10

கோவி.கண்ணன் said...

இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் சோப்புப் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்ல வருகிறீர்கள்.

:)

தேவன் மாயம் said...

" உழவன் " " Uzhavan " said...
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய வாழ்வில், இக்குளியல் அவசியமானதே. ஜோக்கெல்லாம் சொல்லி குளிக்கிறவங்களை யோசிக்க வச்சிறாதீங்க :-)
///
பேஷாக்குளிங்க!!!

-----------------------------
19 November 2009 02:34


ஷாகுல் said...
//டாக்டர் நீங்கள் நல்லவரா கெட்டவரா?//

தெரியலயே சார்///

பின்னூட்டங்கள் சொல்லும்!!

-------------------------------

19 November 2009 02:56


மாதேவி said...
"உடல் மணத்தில் அக்கறை காட்டுதல் மிகவும் நல்லது." இப்பதிவு அவசியமானதே.
//

நன்றி மாதேவி!!

------------------------------
19 November 2009 03:13


துபாய் ராஜா said...
எல்லா ஊரு ஆறு,குளம்,அருவிகளில் ஆண்,பெண் சேர்ந்துதான் குளிக்கிறார்கள்.... :))///

ஆகா தமிழந்தான் பர்ஸ்ட்!!

------------------------------

19 November 2009 03:25


அபுஅஃப்ஸர் said...
இல்லறத்திற்கு மதி மயக்கும் மணம் முக்கியம், அதை‍ தெளிவா சொல்லிருக்கீங்க தேவா சார்
சேர்ந்து குளிப்பது இருவரின் மனம் மற்றும் சூழ்நிலையை பொருத்தது///

உண்மைதான் அபு!!

------------------------------

19 November 2009 03:58


S.Gnanasekar said...
ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? குளிக்கலாம் தப்பேயில்லை. இதை மேல்தட்டு, நடுத்தர மக்கள் கடைப்பிடிக்கிறார்கள இல்லையோ கண்டிப்பாக கீழ்தட்டுமக்கள் அன்றாட கூலி தொழிலாலி கடைப்பிடிக்கிறார்கள். எப்படி கனவன் வேலை விட்டு வந்தவுடன் வெண்ணீர் வைத்து முதுகு தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள். //இப்படி இருக்கும் போது எங்கு வந்தது விவகரத்து. கனவன், மனைவி இருவரிடமும் பரஸ்பரம் இல்லாமல் நான் பெரிசா, நீ பெரிசா ஈகோ அதனால் வாழ்க்கையை நிறையப்பேர் இழந்து தவிக்கிறார்கள்.
ஒவ்வெருவருடைய உடம்புக்கும் ஒரு மனம் உண்டு அதனால் சோப்பு, ஷாம்பு, பவுடர் தேவையில்லை. தினமும் இரண்டு வேலை குளித்தால் போதும்.
///

ஆகா நல்லாச் சொன்னீங்க!!

-------------------------------
19 November 2009 05:52


ஸ்ரீ said...
அதுல பாருங்க ..... நீங்க எழுதுன பதிவுலயே இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு.கலக்கிடறேன்.
//

அய்யோ!! ஸ்ரீ!!! என்ன இது!!

-----------------------------
19 November 2009 06:00

நேசமித்ரன் said...

நல்வாழ்த்துகள்

ஏகவரவேற்பு

!!!!!!!!!

jafar said...

oruvarukku oruvar alukku theykka miga vasadhi ayitrea yean yosikka vendum

ஸ்ரீ said...

Future-ல டாக்டர்.தப்பாவே நினைக்கிறீங்களே.

சிங்கக்குட்டி said...

//சேர்ந்து குளிக்கலாமா? //

இதில் கேள்வி குறி ஏன்?

கணவன் மனைவியாய் இருந்தால் குறைந்தது வாரத்தில் இரண்டு நாளாவது குளிக்க வேண்டும்.

இது மற்ற பல குடும்ப பிரச்சனைகளை தவிர்த்து நெருக்கத்தை அதிகரிக்கும்.

Priya said...

இங்கு நான் வாழும் நாட்டில் ப்ரெஞ்சுக்காரர்கள் இதை முழுதாக அனுபவிப்பவர்கள். நிச்சயம் இது கணவன் மனைவிக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும்.

சி. கருணாகரசு said...

தகவலுக்கு மிக்க நன்றிங்க மருத்துவரே....

"மண"மார்ந்த வாழ்த்துக்கள்!

காற்றில் எந்தன் கீதம் said...

டாக்டர் சொல்லுறது சரிதான்! தேவையான பதிவு நன்றி டாக்டர்.
உங்கள் பதிவுக்கு இது என் முதல் பின்னூட்டம்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory