Thursday 5 November 2009

பிடித்ததும்!! பிடிக்காததும்!!!

இரண்டு நாட்களாக எதையுமே எழுதப் பிடிபடவில்லை! உண்மைதான். ஏதாவதொரு அலுவல் அல்லது சின்னப் பிரச்சினைகள்  இருந்தால்கூட மனது அதை ஒட்டியே சிந்திக்கிறது. அதை முடித்தால்தான் அடுத்தவேலை செய்யமுடிகிறது. 

பதிவுகள் பயன்பெறும் வகையில் இருக்கவேண்டும் என்று மனது சொல்கிறது. மொக்கையாக, ஜாலியாக எழுது என்று அதே மனதின் இன்னொரு பக்கம் சொல்கிறது.

அனேகமாக மனித மனமே இப்படித்தான் என்று நினைக்கிறேன். இதில் நம் மனதுக்கு, அறிவுக்கு தெரிந்த விசயங்களைக் கொண்டே நாம் பிடித்தது பிடிக்காதது என்று அபிப்பிராயப்படுகிறோம்.

அதே போல் ஒரு முக்கிய பிரமுகரை நாம் நேரில் சந்தித்துப் பேசிப் பழகி இருக்க மாட்டோம். உதராணம்: அரசியல்வாதிகள், திரைப்படத் துறையினர். ஆனால் அவர்களின்  செயல்களை நாம் பத்திரிக்கை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் மூலம்தான் அறிந்துகொள்கிறோம். அனைவரும் அனைத்துச்செய்திகளையும் படித்திருப்பது என்பது சாத்தியமான ஒன்று அல்ல.

பதிவர்களை எடுத்துக் கொண்டால் பிடித்தவர் என்று பலர் குறிப்பிட்டிருக்கும் பலரை நான் படித்ததே இல்லை. எல்லோரும் எல்லோருடைய பதிவுகளையும் படித்திருக்க முடியாது. அப்படியே படித்தாலும் பதிவரின் எல்லாப் பதிவுகளையும் படித்திருக்க முடியாது. இதுவே உண்மை. ஆகையால் பிடித்தது பிடிக்காததை படிக்கும் நண்பர்கள் சீரியசாக( இதற்கு இணையான தமிழ்ச்சொல் சட்டென்று நினைவுக்கு வரவில்லை!!) எடுத்துக் கொண்டு பின்னூட்டமிட வேண்டாம் என்று நான் உங்களிடம் சொல்லமுடியாது. ஏனெனில் பல நேரங்களில் உணர்வுபூர்வமான பதில்களும், எதிர்வினைகளும் ஒரு  பதிவுக்கு ஒருவிதமான  சுவையையும், சுவாரசியத்தையும் ஊட்டுவது உண்மைதான். அதுவே பலருடைய கருத்துக்களையும் நாம் அறிந்துகொள்ளவும் உதவுகிறது. ”உங்கள் பதிவு அருமை” என்று வரும் பின்னூட்டங்களைவிட இவற்றில் அதிகம்தானே!!

சரி..சரி.. கத்தி போட்டது போதும்! என்று பலர் முனுமுனுப்பது கேட்கிறது!!!

பதிவர் நண்பர் பீர்  என்னை பிடித்ததும் பிடிக்காததும் எழுத அழைத்திருக்கிறார்.

என் பதிவுகளின் காட்டம் தாங்க முடியவில்லை அவரால்........

பீர் | Peer said...

டாக்டர், பதிவுகள் ரொம்ப சீரியஸா போய்கிட்டிருக்கு...
வாங்க, ஷார்ட் கமர்ஸியல் ப்ரேக் எடுத்துக்கலாம். உங்களை ஒரு தொடர் பதவி விளையாட்டிற்கு அழைத்துள்ளேன்.
பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

ஆயினும்

பிடித்த பதிவர்..பிடிக்காத பதிவர் ல் நர்சிம் என் இடுகைக்கு பதக்கம் அளித்து விட்டார்.
 
9.பிடித்த பதிவர் :இதில் பிடித்த பதிவு என்று இருக்க வேண்டும்.சமீபத்தில் டாக்டர் தேவன்மயம் எழுதிய விரிவான கட்டுரை பிடித்திருந்தது.
 

மிக்க நன்றி நண்பரே!! இத்தகைய பாராட்டுக்களே பதிவில் கிடைக்கும் மகிழ்ச்சி!!! வேறு என்ன வேண்டும் நமக்கு!!

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.          

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.                                                                       

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

இனி
1.அரசியல் தலைவர் :
 அ.கலைஞரிடம்:

பிடித்தது: அரசு ஊழியர் மீது அன்பு காட்டுவது!  ஏழைகளுக்கும் மருத்துவக்காப்பீடு அளித்தது.

பிடிக்காதது: ஈழத்தமிழர் விசயத்தில் விரைவான முடிவு எடுக்காதது!

ஆ. ஜெயலலிதாவிடம்:

பிடித்தது: மன உறுதி!

பிடிக்காதது: அரசு ஊழியர்கள்கள் மேல் அடக்குமுறையைப் பிரயோகித்தது, ஆடம்பரத்தை வெளிக்காட்டி நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டது!

2.எழுத்தாளர்

நான் படித்ததில் அசோகமித்திரன் - தண்ணீர்!

தி.ஜானகிராமன்: மரப்பசு

லா.ச.ரா: அபிதா

மனைவியின் மரணம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட ஸ்டெல்லா ப்ரூஸின் - அது ஒரு நிலாக் காலம்!

பிடிக்காதது: எவருமில்லை! எல்லோருடைய எழுத்துக்களிலும் ஏதாவதொரு சங்கதி இருந்துகொண்டே இருக்கிறது...

3.கவிஞர்
பிடித்தவர் :கமலாதாஸ்,

பழமலய், சுகிர்தராணி

பிடிக்காதவர்:

நான்!! தொடர்ந்து கவிதை எழுத முயற்சித்தும் வார்த்தைகளையும் கருவையும் கலக்க முடியாததால்!!!

4.இயக்குனர்
மகேந்திரன்: உதிரிப்பூக்கள்!

மணிரத்தினம்: நாயகன்

கமலஹாசன்: விருமாண்டி


5.நடிகர்
பிடித்தவர் :

சிவாஜி: மிகைநாடிய கலைஞனாக இருந்தாலும் ! பாசமலர், பாவமன்னிப்பு ..... இன்ன பிற!!

கமலஹாசன்: நாயகன், விருமாண்டி...

ரஜினி: இமயமலையின் இடுக்குக் குகைக்குள் நுழைந்தது ஒரு ஆச்சரியம்!


6.நடிகை
பிடித்தவர் : பத்மினி- தில்லானா மோகனாம்பாள்

ஷோபா: முள்ளும் மலரும், பசி

ஸ்ரீதேவி: மூன்றாம் பிறை

 

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா

பிடிக்காதது: பிடிக்கவில்லை என்று எழுத!!( கலைஞர், ஜெ தவிர!!)

 

தொடர அழைப்பது
1.நேசமித்திரன் http://nesamithran.blogspot.com/2009/11/blog-post_04.html 

2. அம்மா அப்பா-ஆ.ஞானசேகரன்

3.மேனகா சாத்தையா-.Mrs.Menagasathia.

4.ஹரிணிஅம்மா-http://www.hariniamma.blogspot.com/

5.கிரி -கிரி Blog

தமிழ்த்துளி தேவா

20 comments:

கிரி said...

//பல நேரங்களில் உணர்வுபூர்வமான பதில்களும், எதிர்வினைகளும் ஒரு பதிவுக்கு ஒருவிதமான சுவையையும், சுவாரசியத்தையும் ஊட்டுவது உண்மைதான். அதுவே பலருடைய கருத்துக்களையும் நாம் அறிந்துகொள்ளவும் உதவுகிறது. ”உங்கள் பதிவு அருமை” என்று வரும் பின்னூட்டங்களைவிட இவற்றில் அதிகம்தானே//

உண்மை தான் .. பாராட்டி வரும் பின்னூட்டங்களை விட விவாதங்களையே நானும் விரும்புகிறேன்..

என்னை தொடர அழைத்தமைக்கு நன்றி தேவா..நான் தற்போது விடுமுறையில் செல்வதால் திரும்ப வந்த பிறகு இதை பதிவிடுகிறேன்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

முதல் கேள்வியிலேயே உங்கள் சாதுர்யம், சாமர்த்தியம் வெளிப்பட்டுவிட்டது

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சிவாஜி: மிகைநாடிய கலைஞனாக இருந்தாலும் !//

அவரை அந்தக்குழிக்குள்தள்ளிவிட்டுவிட்டனர்.

அவரது ஆரம்பகால படங்கள் இயல்பாகவே இருந்தன.

பா வரிசைகளில் மிகை நடிப்பை தர வேண்டிய கதைகளாக வந்து பின்னர் இயல்பாகவே மிகை நடிப்பாக மாறிவிட்டது.

தேவன் மாயம் said...

கிரி said...
//பல நேரங்களில் உணர்வுபூர்வமான பதில்களும், எதிர்வினைகளும் ஒரு பதிவுக்கு ஒருவிதமான சுவையையும், சுவாரசியத்தையும் ஊட்டுவது உண்மைதான். அதுவே பலருடைய கருத்துக்களையும் நாம் அறிந்துகொள்ளவும் உதவுகிறது. ”உங்கள் பதிவு அருமை” என்று வரும் பின்னூட்டங்களைவிட இவற்றில் அதிகம்தானே//

உண்மை தான் .. பாராட்டி வரும் பின்னூட்டங்களை விட விவாதங்களையே நானும் விரும்புகிறேன்..

என்னை தொடர அழைத்தமைக்கு நன்றி தேவா..நான் தற்போது விடுமுறையில் செல்வதால் திரும்ப வந்த பிறகு இதை பதிவிடுகிறேன்.

05 November 2009 07:10///

மெதுவாக விடுமுறையிலிருந்து வந்து பதிவு போடவும்!!

தேவன் மாயம் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
முதல் கேள்வியிலேயே உங்கள் சாதுர்யம், சாமர்த்தியம் வெளிப்பட்டுவிட்டது

05 November 2009 07:27///

உண்மையா எழுதவேண்டும் என்று நினைத்தை எழுதியுள்ளேன்!! உண்மைதானே !!!

வெற்றி-[க்]-கதிரவன் said...

//சிவாஜி: மிகைநாடிய கலைஞனாக இருந்தாலும் ! பாசமலர், பாவமன்னிப்பு ..... இன்ன பிற!!

//

லிஸ்டுல நானும் இரண்டு படங்களை சேர்த்துக்கொள்கிறேன்

தேவர்மகன், முதல்மரியாதை :))

- பதிவு கலக்கல் -

தேவன் மாயம் said...

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
//சிவாஜி: மிகைநாடிய கலைஞனாக இருந்தாலும் ! பாசமலர், பாவமன்னிப்பு ..... இன்ன பிற!!

//

லிஸ்டுல நானும் இரண்டு படங்களை சேர்த்துக்கொள்கிறேன்

தேவர்மகன், முதல்மரியாதை :))

- பதிவு கலக்கல் -

05 November 2009 07:55//

சொல்ல நிறைய உள்ளது! நீங்கள் சொன்னவையும் கிளாஸ் படங்கள்!!

cheena (சீனா) said...

அன்பின் தேவகுமார்

அருமையான பதில்கள் - நல்ல இடுகை - நல்வாழ்த்துகள்

தேவன் மாயம் said...

cheena (சீனா) said...
அன்பின் தேவகுமார்

அருமையான பதில்கள் - நல்ல இடுகை - நல்வாழ்த்துகள்

05 November 2009 07:59///

நன்றி நண்பரே!

வெண்ணிற இரவுகள்....! said...

உங்கள் பதிவில் பக்குவம் இருக்கிறது நண்பா

பீர் | Peer said...

இடுகை அமைப்பு அருமையா இருக்கு டாக்டர்.

//பிடிக்காதது: அரசு ஊழியர்கள்கள் மேல் அடக்குமுறையைப் பிரயோகித்தது, ஆடம்பரத்தை வெளிக்காட்டி நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டது!//

இதனால் தான் இவரை எனக்கு படிக்கும். அரசு ஊழியர் என்ன செஞ்சாலும் கண்டிக்க ஆள் இல்லையென்று சாமான்யன் வயிற்றில் எரிந்துகொண்டிருந்த நெருப்பில் நீர் வார்த்தவர்.

நர்சிம் said...

ஸ்டெல்லா புரூஸின் மாயநதிகளும் அருமையான,உள் மன உரையாடல்கள் நிறைந்த கதை.

நல்லா எழுதி இருக்கீங்க.

தேவன் மாயம் said...

வெண்ணிற இரவுகள்....! said...
உங்கள் பதிவில் பக்குவம் இருக்கிறது நண்பா

05 November 2009 09:06//

எழுத எழுத வருகிறதோ என்னவோ!!

தேவன் மாயம் said...

பீர் | Peer said...
இடுகை அமைப்பு அருமையா இருக்கு டாக்டர்.

//பிடிக்காதது: அரசு ஊழியர்கள்கள் மேல் அடக்குமுறையைப் பிரயோகித்தது, ஆடம்பரத்தை வெளிக்காட்டி நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டது!//

இதனால் தான் இவரை எனக்கு படிக்கும். அரசு ஊழியர் என்ன செஞ்சாலும் கண்டிக்க ஆள் இல்லையென்று சாமான்யன் வயிற்றில் எரிந்துகொண்டிருந்த நெருப்பில் நீர் வார்த்தவர்.

05 November 2009 15:03///

நெருப்பை அணைத்த நல்லவரா!!

தேவன் மாயம் said...

நர்சிம் said...
ஸ்டெல்லா புரூஸின் மாயநதிகளும் அருமையான,உள் மன உரையாடல்கள் நிறைந்த கதை.

நல்லா எழுதி இருக்கீங்க.

05 November 2009 21:47//

மாய நதிகள் படிக்கவில்லை இன்னும்!!

ஆ.ஞானசேகரன் said...

பிடித்ததை அழகாக சொல்லியுள்ளீர்கள் பாராட்டுகள்... என்னையும் அழைத்ததில் மகிழ்ச்சியும் நன்றியும்

தேவன் மாயம் said...

ஆ.ஞானசேகரன் said...
பிடித்ததை அழகாக சொல்லியுள்ளீர்கள் பாராட்டுகள்... என்னையும் அழைத்ததில் மகிழ்ச்சியும் நன்றியும்

05 November 2009 23:57//

ஞான்ஸ்!! பதிவைப் போடுங்க!

நட்புடன் ஜமால் said...

தி.ஜாவின் மரப்பசு - எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று ...

பதிவு நன்று.

Menaga Sathia said...

என்னை தொடர அழைத்ததற்க்கு நன்றி மருத்துவரே!!

உங்க பதில்கள் நன்றாகயிருக்கு....

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

நன்றாக இருக்கிறது. நானும் எழுதியிருக்கிறேன் இதே போல பதில்களை..!! எல்லாரின் பதில்களிலும் இருந்து ஏதாவது ஒரு கருத்து கணிப்பு எடுக்க வேண்டும்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory