Monday, 30 November 2009

ஒரு வருடம் முடிந்தது- 300+!!

வாழ்க்கை ஒரு நதி போல்தான் இருக்கிறது. ஒரு நதி எப்படித் தன் போக்கைத் தீர்மானித்துக் கொள்ள முடியாதோ அது போல் வாழ்வின் போக்கையும் நம்மால் தீர்மானிக்கவியலவில்லை. அது எனக்கு மட்டும்தானா அல்லது அனைவருக்குமான பொதுக் கோட்பாடா என்று எனக்குத் தெரியவில்லை.

நிகழ்வுகளும், மனிதர்களும் பனிபோல் மறைந்து கொண்டிருக்க வாழ்க்கை காலப்பயணியாய்ச் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தைத் தீர்மானித்தது யார்? அல்லது எது? என்ற கேள்விகள் பதிலில்லாமல், அனைவருடைய வாழ்விலும் தொக்கி நிற்கிறது!!

அந்நிகழ்வுகளின் தொடரில் ஒரு திருப்பத்தில் பதிவுலகம் என்ற பூஞ்சோலையும் எனக்கு அறிமுகமானது. கிடைத்த பொம்மையை விடாமல் பத்திரப்படுத்தும் ஒரு குழந்தையின் மகிழ்வுடன் நானும் என் வழியில் பதிவுலத்தை விடாது பிடித்துக்கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு நாளும் பதிவிடுவதற்காக என் சிந்தனையின் ஒரு பகுதியை இதற்காக செலவழிக்கிறேன். என்னில் ஒரு பகுதியைப் பிய்த்து இடுகைகளில் சொற்களாய் நெய்கிறேன். அந்தச் சொற்கள் எத்தனை பேரை மகிழ்வித்தது என்று என் பின்னூட்டங்களில் தேடி  மகிழ்கிறேன்.

சில்லரையை எண்ணி எண்ணி மகிழும் மிட்டாய் வாங்கச் செல்லும் சிறுவனின் குதூகலத்தை எனக்கு இப்பதிவுலகம் தந்தது.

இது ஒரு சுகானுபவம்.

ஆயிற்று! நானும் பதிவுலகம் வந்து ஒரு வருடம் முடிகிறது.300 பதிவுகள் என்னால் எழுத முடிந்தது என்றால் அது நிச்சயமாக என்னைப் பாராட்டி ஊக்குவித்த  பதிவுலக நண்பர்களால்தான். முகம் அறியாத அவர்கள் அனைவரையும் என் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.  

என் எழுத்துக்கள் பெற்றுத்தந்த நண்பர்கள், என் பதிவைப் பின் தொடரும் 300 க்கு சற்றே அதிகமான தோழர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

இன்னும் நிறைய எழுதலாம். என் உணர்வுகளையெல்லாம் சொற்களாக வடிக்கும் வல்லமை  எனக்கு இல்லை. ஆயினும் நான் சொல்லாத சொற்களின் அர்த்தங்களை இந்த வரிகளைப் படிக்கும் உங்களால் உணர முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது!! அதுவே என்னை இன்னும் நிறைய எழுதத் தூண்டும்.

அதற்கான உற்சாகத்தையும், உந்துதலையும் எனக்குத் தாருங்கள் நண்பர்களே!!

அன்புடன்,

’தமிழ்த்துளி’ தேவன்மாயம்!!

45 comments:

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் மருத்துவரே !

தண்டோரா ...... said...

ஆயிரம் பதிவை சீக்கிரம் எட்டுங்கள்..(ஆயிரம் பேரை கொன்றால் தான் அரை வைத்தியனாம் தேவா)

Mrs.Menagasathia said...

வாழ்த்துகள் மருத்துவரே !

வினோத்கெளதம் said...

வாழ்த்துக்கள் தல..

D.R.Ashok said...

தொடருங்கள்.. வாழ்த்துக்கள் :)

(தண்டோராஜி.. அது 1000 வேரை.. உங்களுக்கு தெரியும் இருந்தாலும் ஒரு லொள்ளு)

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் அய்யா...

நீங்கள் வார்த்தைகளால் சொல்லாத உணர்வுகளும் புரிகின்றன...

நெகிழ்ச்சியாக உள்ளது.

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் தேவா !!!!

ஒரு வருடம் உங்களுக்கு மட்டும் அல்ல..எனக்கும் தான்.நாம் இருவரும்
ஒரே நாளில் தான் வலையுலகில் காலடி எடுத்து வைத்தோம்.நினைவிருக்கிறதா ???

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள் தேவன்!

தேவன் மாயம் said...

Blogger அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் அய்யா...

நீங்கள் வார்த்தைகளால் சொல்லாத உணர்வுகளும் புரிகின்றன...

நெகிழ்ச்சியாக உள்ளது.//

மிக்க மகிழ்ச்சிங்க!!

தேவன் மாயம் said...

Blogger அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் தேவா !!!!

ஒரு வருடம் உங்களுக்கு மட்டும் அல்ல..எனக்கும் தான்.நாம் இருவரும்
ஒரே நாளில் தான் வலையுலகில் காலடி எடுத்து வைத்தோம்.நினைவிருக்கிறதா ???//

அது ஒரு அருமையான காலம் செய்யது!! கும்மியடித்து மகிழ்ந்த காலம்!!

ஊர்சுற்றி said...

வாழ்த்துக்கள்.

சுசி said...

வாழ்த்துக்கள் மருத்துவரே!

கிரி said...

வாழ்த்துக்கள் தேவா.. பல பயனுள்ள இடுகைகளை தர வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் தேவகுமார்

முன்னூற்று நாலுக்கும் முன்னூற்றுப் பதினொன்றுக்கும் நல்வாழ்த்துகள்

மேன்மேலும் உயர நல்வாழ்த்துகள்

TamilNenjam said...

வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் நண்பரே!

சென்ஷி said...

வாழ்த்துகள் மருத்துவரே !

ஷங்கி said...

வாழ்த்துகள் தேவன்மாயம்! மேலும் சிகரம் தொட வாழ்த்துகள்.

vellachamy said...

வாழ்த்துகள் மருத்துவரே

Seemachu said...

ஒரு முழு வருட நிறைவுக்கும் 300+ இடுகைகளுக்கும் வாழ்த்துக்கள்!!

இன்னும் பல இடுகைகளிட வாழ்த்துக்கள் !!

Anonymous said...

வாழ்த்துக்கள் தேவா சார்...அதிக அளவில் பயனுள்ள பதிவுகள் ஓய்வெடுக்க தேனீர் கவிதைகள் தந்து புத்துணர்வாய் பல பதிவுகள் என தந்து தங்கள் தமிழ்த்துளி வலைப்பூவை செம்மைபடுத்தியுள்ளீர்...இதற்கென நேரம் ஒதுக்கி நட்புக்களுக்கும் முக்கியத்துவம் தந்து 300வரை வந்துள்ளது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சார்....

புலவன் புலிகேசி said...

ஒரு வருடம் மர்றும் 300+ க்கும் வாழ்த்துக்கள் நண்பரே...தொடருங்கள்.

க.பாலாசி said...

வாழ்த்துகள் மருத்துவரே ! தொடருங்கள்..

ரோஸ்விக் said...

அட! பனங்குடிப் பதிவர் ஒரு வருடத்தில் 300 இடுகை போட்டுள்ளாரே! மிக்க மகிழ்ச்சி. :-)) நானும் உங்க ஊருதான் மருத்துவரே!

அதில் சில தவிர, பல பயனுள்ள இடுகை. அதனால் பெருமிதம் கொள்க. வாழ்த்துக்கள். இன்னும் பல சிறப்பான இடுகைகள் இடுக (தங்க முட்டை போல)

புதுகைத் தென்றல் said...

1 வருஷத்துல 300 பதிவுகள். சூப்பர்ப்.

நல்லா அடிச்சு ஆடுங்க. நிறைய்ய பதிவுகள் எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தேவா

Mohan Kumar said...

ஒரு வருடம் .....300 பதிவுகள் வாவ்!! அசத்தல் !! தொடரட்டும் உங்கள் பணி !!

வால்பையன் said...

முதலாம் வருட வாழ்த்துக்கள் மருத்துவரே!

பாலகுமார் said...

//ஆயினும் நான் சொல்லாத சொற்களின் அர்த்தங்களை இந்த வரிகளைப் படிக்கும் உங்களால் உணர முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது!! அதுவே என்னை இன்னும் நிறைய எழுதத் தூண்டும்.//

வாழ்த்துக்கள் சார், நிறைய எழுதுங்கள்.

செ.சரவணக்குமார் said...

ஒரு வருட நிறைவுக்கும் 300 பதிவுகளுக்கும் வாழ்த்துக்கள் மருத்துவரே. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

Nundhaa said...

வாழ்த்துகள்

ஹுஸைனம்மா said...

ஒரு வருஷத்துல முன்னூறா? மலைப்பாக இருக்கிறது. எப்படிண்ணே, ஞாயித்துக்கிழமை தவிர, தெனப்படி எழுதிருவீகளோ? டாக்டராவும் இருந்துகிட்டு எப்படிண்ணே முடியுது?

கொஞ்சம் பொறாமையுடன், வாழ்த்துக்கள். :-D

நர்சிம் said...

வாழ்த்துக்கள்

நாணல் said...

வாழ்த்துகள் :)

ஜெயந்தி said...

வாழ்க்கை குறித்த உங்களது எண்ணத்தோடு நானும் ஒத்துப்போகிறேன். நானும் இப்படித்தான் பதிவெழுத வந்தேன். வாழ்த்துக்கள்!

கலகலப்ரியா said...

வாழ்த்துகள்..!

//தண்டோரா ...... said...

ஆயிரம் பதிவை சீக்கிரம் எட்டுங்கள்..(ஆயிரம் பேரை கொன்றால் தான் அரை வைத்தியனாம் தேவா)//

இந்த 3௦௦ ல .. 2௦௦௦ ஆவது போயிருக்கும்...! நீங்க முழு வைத்தியர்தான் டாக்டர்..! =))...

Vidhoosh said...

//ஒரு வருஷத்துல முன்னூறா? மலைப்பாக இருக்கிறது. //

!!!!
--vidhya

தருமி said...

மலைத்து,
வாழ்த்துகிறேன்.

அபுஅஃப்ஸர் said...

ஒரு வருஷத்துலே 300 பதிவுகளா?

பொறாமையுடன் வாழ்த்துகிறேன்

செந்தழல் ரவி said...

கலக்குங்க சாரே

அத்திரி said...

வாழ்த்துக்கள் டாக்டர்

காற்றில் எந்தன் கீதம் said...

வாழ்த்துக்கள் மருத்துவரே...............
(நாம எல்லாம் 3 வருஷம் யோசிச்சி 3 பதிவு போடுறோம் :( அதுவும் மொக்க பதிவு :))

டம்பி மேவீ said...

valthukkal doctor....

cont. to rock

ஆ.ஞானசேகரன் said...

கலக்கல்...

வாழ்த்துகள் தேவன் சார்

ஷாகுல் said...

வாழ்த்துகள் சார்

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் தேவன்!

வெற்றி படிகட்டுகளில் பயணிக்க வாழ்த்துக்கள்.

மேலும் மேன்மை பெற வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory