சூரியன் மறைந்ததும்
உருக்கொண்டது எனக்கான உலகம்.
பிரும்ம ராட்சதனின் கைகள் போல்
நீளும் அதன்
விரல்களில்
வித விதமான புனைவுகள்.
ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு
உருக்கொள்ளும் அதன் வசீகரத்தில்
பயம் அகன்ற குதூகலம்!
பள்ளியிலும், விளையாட்டினுள்ளும்
ஒளிந்திருந்தது,
என் அடுத்த இரவுக்கான
காத்திருத்தல்.
இரவுகளின் கருவெளிகளில்
சொல்லப்பட கதைகளின்
பூக்களையும், மலைகளையும்
நதிகளையும் சேகரித்து
ஒரு நந்தவனமாக்கினேன்!!
காலச்சரிவுகளில் எல்லாம்
மாறிப்போனாலும்
இன்னும் இரவுகளில்
விரல் பிடித்து
நுழைந்து விடுகிறேன்
எனக்கேயான அவ்வுலகில்!!
28 comments:
அருமை.
வாழ்த்துகள்.
வாவ்..........
கவிதை ரொம்ப அழகா இருக்கு அண்ணா...
நெஜமாவே கவித ரொம்ப நல்ல இருக்கு...
அளவான வார்த்தைகள்
அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள் தேவா
தலைப்பே ஒரு பி.நவீ தான்
அருமை தேவா
[[சொல்லப்பட கதைகளின் பூக்களையும், மலைகளையும் நதிகளையும் சேகரித்து ஒரு நந்தவனமாக்கினேன்]]
[[சொல்லப்பட கதைகளின் பூக்களையும், மலைகளையும் நதிகளையும் சேகரித்து ஒரு நந்தவனமாக்கினேன்]]
இந்த வரிகள் எனக்கும் பிடித்தது.அழகான கவிதை.
நன்றி சூர்யா,
அகல்விளக்கு,
பேனாமூடி,
புதுகை,
ஜமால்-- பின் நவீனத்துவமா? நீங்க சொன்னா சரிதான்!!
மாதேவி நன்றிங்க!!
கவிதை மிகவும் நன்றாகவுள்ளது மருத்துவரே..
முழு நேர கவிஞரே,பகுதி நேர மருத்துவரே வணக்கம்.
நன்றி குணசீலன் !!
ஜெரி ! இது உங்களுக்கே ஓவராத்தெரியல!! ஹி! ஹி!!
கவிதை மிகவும் அருமை
ஒவ்வொரு இரவுகளும் வாழ்ழ்கையை திரும்பிப்பார்க்க வைக்குது தேவா உங்க கவிதை
//இன்னும் இரவுகளில்
விரல் பிடித்து
நுழைந்து விடுகிறேன்
எனக்கேயான அவ்வுலகில்!!//
கவிதை... கவிதை.... அழகு.
உங்களால மட்டும் எப்பிடி அண்ணா........?
அழகான அருமையான பொருள் புதைந்த வரிகளோ?
அருமை
//சொல்லப்பட்ட கதைகளின் பூக்களையும், மலைகளையும் நதிகளையும் சேகரித்து ஒரு நந்தவனமாக்கினேன்//
வசீகர வரிகள் அருமையான கவிதை டாக்டர்
ரொம்ப அழகான கவிதைக்கு பாராட்டுக்கள் தேவா :-)
கவிதை அருமை டாக்டர்.உங்கள் தொழிலுக்கு இப்படி ஒரு ரிலாக்ஸ் உலகம் கண்டிப்பாய்த் தேவை தேவா.
Mrs.Faizakader - நன்றிங்க!!
சைவகொத்துப்பரோட்டா,-மிக்க நன்றி!,
அபு- ஒவ்வொரு இரவும் என்னை நினைத்துக்கொள்ளவும்!!
சிந்து- பாராட்டுக்கு நன்றிம்மா!!
சர்வன் - வருகைக்கு நன்றி!,
காற்றில் கீதம்- வருகைக்கு நன்றி.
சிங்கக்குட்டி- தமிழ்மணம் வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!
ஹேமா-கவிதாயினியே வருக.
//
பிரும்ம ராட்சதனின் கைகள் போல
நீளும் அதன
விரல்களில
வித விதமான புனைவுகள்//
:-)
நல்லா இருக்கு.
அழகான கவிதை, மிகவும் அருமை.
வணக்கம் டாக்டர்
நல்லாயிருக்கு....
கவிதையும் நீங்கள் உருவாக்கிய நந்தவனமும் அழகு. இனியென்ன ? அந்த நந்தவனத்தில் உலாவுவது தானே பாக்கி?
அருமை தேவா சார்..:-)))
அசத்தறீங்க.. தொடரட்டும்
Post a Comment