Tuesday 2 February 2010

டாக்டர் ஷாலினி!!

டாக்டர் ஷாலினி,

மதுரையில் 31.1.2010 அன்று ”குட் டச் பேட் டச்” சொற்பொழிவும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் நோக்கம் ”குட்டச் பேட்டச்” பற்றி பெற்றோர்கள் அறியவேண்டும் என்பதுதான். அந்த விதத்தில் அங்கு குழுமியிருந்தோர் முழுவதும் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்.

மூன்று மணிநேரம் ஒரு கருத்துரை ஆற்றுவது என்பது மிகவும் கடினமான விசயம். அதனை மிகவும் தெளிவுடன் செய்தார் ஷாலினி. ஆரம்பத்திலிருந்தே கேள்விகளைக்கேட்டு குழுமியிருந்தோரை சிந்திக்கவும், பதில் கூறவும் வைத்த வண்ணம் அவர் உரையை நடத்திச்செல்லும் பாங்கு மிகவும் அற்புதமாக இருந்தது.

கலந்துகொண்டோர் கேள்விகளுக்கெல்லாம் தெளிவான எடுத்துக்காட்டுகளுடன் கூடிய பதில்கள் அவரிடம் தயார் நிலையில் இருந்தன. அவை யாரையும் புண்படுத்தாத வண்ணம் மிகவும் தெளிவாகவும், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் அமைந்திருந்தன.

கலந்து கொண்டோரின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும்போதுதான் சமுதாயத்தில் இதுதொடர்பான பிரச்சினைகள் எவ்வளவு இருக்கின்றன என்பதை அறிய முடிந்தது.

அவரால் மூன்று மணி நேரத்துக்கு மேலும் (நின்று கொண்டே!! பேசமுடியும் ஆயினும் அங்கு கலந்துகொண்ட சுமார் 150 பேரிடமும் இன்னும் தெளிவு பெற வேண்டிய கேள்விகள் மிச்சமிருந்தன.

மனச்சிக்கல்களும்,பாலியல் அறியாமைகளும் நிரம்பிக்கிடக்கும் இந்த சமுதாயத்துக்கு இதுபோல் பல கருத்தரங்குகள் தேவை!!

”நீங்கள் பயப்படவேண்டாம் துணிவோடு இருங்கள்! குழந்தைகளுக்கு இதைப் பற்றி சொல்லிக்கொடுங்கள், அதையும் மீறிய சிக்கல்களைத் தீர்க்க நாங்கள் இருக்கிறோம்” என்று அவர் கூறியது சமுதாயத்தின் மேல் அவர் கொண்டுள்ள அக்கறையைப் பறைசாற்றியது என்றால் அது மிகையல்ல!!

Lead kindly light என்று ஆங்கிலக்கவிதை ஒன்று உண்டு

Lead, kindly Light, amid th’encircling gloom, lead Thou me on!
The night is dark, and I am far from home; lead Thou me on!
Keep Thou my feet; I do not ask to see
The distant scene; one step enough for me.

மருத்துவராக, ஆலோசகராக ஷாலினி பலரின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கிறார்.

வெல்டன் ஷாலினி!!!

உங்கள் பணி சிறக்கட்டும்!!

தமிழ்த்துளி தேவா.

7:06 AM | Add a comment | Permalink | Blog it

36 comments:

மணிஜி said...

நீங்க +2 பாஸ் பண்ண மேட்டரை அவங்க கிட்ட சொன்னீங்களா தேவா?

S.A. நவாஸுதீன் said...

பகிர்வுக்கு நன்றி தேவா சார். சில சுவாரசியமான கேள்விகளும் அதன் விளக்கங்களும் சாம்பிளுக்கு இடுகையில் கொடுத்திருக்கலாம்.

Radhakrishnan said...

நல்லதொரு இடுகை, கேள்விகள் பதில்கள் தொகுப்பு காண ஆவல்.

Radhakrishnan said...

நல்லதொரு இடுகை, கேள்விகள் பதில்கள் தொகுப்பு காண ஆவல்.

தருமி said...

//மூன்று மணிநேரம் ஒரு கருத்துரை ஆற்றுவது என்பது மிகவும் கடினமான விசயம். .

கலந்துகொண்டோர் கேள்விகளுக்கெல்லாம் தெளிவான எடுத்துக்காட்டுகளுடன் கூடிய பதில்கள் அவரிடம் தயார் நிலையில் இருந்தன.//

இரண்டுமே எனக்கு மிக்க ஆச்சரியமளித்தவை.

அன்புடன் அருணா said...

எனக்கும் கூட ரொம்ப பிடிக்கும் அவங்க பேசுறதைக் கேட்க.
/சில சுவாரசியமான கேள்விகளும் அதன் விளக்கங்களும் சாம்பிளுக்கு இடுகையில் கொடுத்திருக்கலாம்./
அதே!அதே!

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நன்றி டாக்டர்.. உங்களுடைய பங்களிப்பும் சேர்ந்துதான் இந்த நிகழ்ச்சியை வெற்றி பெற வைத்திருக்கிறது..

payapulla said...

ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்கள் பதிவை பார்கிறேன் என்று நினைக்கிறேன் .

க.பாலாசி said...

அவரது இப்பணி இனிமையாய்த்தொடர நாமும் வாழ்த்துவோம்...

SK said...

நன்றி டாக்டர் சார். அப்பாடி ரெண்டு..

யாரும் ஒரு Trailer கூட கண்ல காட்ட மாட்டேன்னு சொல்றீங்களே :)

மேவி... said...

nalla matter sir....

avangalai patri naanum niraiya kelvi pattu irukken ...

pagirvukku nantri

ஈரோடு கதிர் said...

நிகழ்ச்சி மிக நன்றாக நடந்ததாக அறிந்தேன்...

மிக்க மகிழ்ச்சி

தேவன் மாயம் said...

நீங்க +2 பாஸ் பண்ண மேட்டரை அவங்க கிட்ட சொன்னீங்களா தேவா?
//

ஒன்னும் புரியல..

வால்பையன் said...

இதுக்கு கூட ஒரு மைனஸ் ஓட்டு விழுந்திருக்குன்னா நீங்க பிரபல பதிவர் தான்!

தேவன் மாயம் said...

பகிர்வுக்கு நன்றி தேவா சார். சில சுவாரசியமான கேள்விகளும் அதன் விளக்கங்களும் சாம்பிளுக்கு இடுகையில் கொடுத்திருக்கலாம்.

நாளை நமது குழு களத்தில் இறங்கும்!

தேவன் மாயம் said...

நல்லதொரு இடுகை, கேள்விகள் பதில்கள் தொகுப்பு காண ஆவல்.//

அடுத்து செய்கிறேன்!

தேவன் மாயம் said...

//மூன்று மணிநேரம் ஒரு கருத்துரை ஆற்றுவது என்பது மிகவும் கடினமான விசயம். .

கலந்துகொண்டோர் கேள்விகளுக்கெல்லாம் தெளிவான எடுத்துக்காட்டுகளுடன் கூடிய பதில்கள் அவரிடம் தயார் நிலையில் இருந்தன.//

இரண்டுமே எனக்கு மிக்க ஆச்சரியமளித்தவை.

//
ப்ரொபஸர் உண்மைதான்!

தேவன் மாயம் said...

எனக்கும் கூட ரொம்ப பிடிக்கும் அவங்க பேசுறதைக் கேட்க.
/சில சுவாரசியமான கேள்விகளும் அதன் விளக்கங்களும் சாம்பிளுக்கு இடுகையில் கொடுத்திருக்கலாம்./
அதே!அதே!

முயலுகிறேன்!

தேவன் மாயம் said...

ரொம்ப நன்றி டாக்டர்.. உங்களுடைய பங்களிப்பும் சேர்ந்துதான் இந்த நிகழ்ச்சியை வெற்றி பெற வைத்திருக்கிறது..

வெற்றி உங்களையே சாரும்!!

தேவன் மாயம் said...

ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்கள் பதிவை பார்கிறேன் என்று நினைக்கிறேன் .///

வாங்க! இனி அடித்து ஆடுவோம்!

தேவன் மாயம் said...

அவரது இப்பணி இனிமையாய்த்தொடர நாமும் வாழ்த்துவோம்...

நன்றி பாலாஜி!

தேவன் மாயம் said...

நன்றி டாக்டர் சார். அப்பாடி ரெண்டு..

யாரும் ஒரு Trailer கூட கண்ல காட்ட மாட்டேன்னு சொல்றீங்களே :)

போட்டோக்கள் என்னிடம் இல்லை... கார்த்தி,தருமி ஆகியோர் பதிவில் வரலாம்!

தேவன் மாயம் said...

nalla matter sir....

avangalai patri naanum niraiya kelvi pattu irukken ...

pagirvukku nantri///

வாங்க மேவி!!

தேவன் மாயம் said...

நிகழ்ச்சி மிக நன்றாக நடந்ததாக அறிந்தேன்...

மிக்க மகிழ்ச்சி

வாழ்த்துக்கு நன்றி கதிர்!!

தேவன் மாயம் said...

இதுக்கு கூட ஒரு மைனஸ் ஓட்டு விழுந்திருக்குன்னா நீங்க பிரபல பதிவர் தான்!

அப்படி வேறயா!!

Balakumar Vijayaraman said...

//The night is dark, and I am far from home; lead Thou me on!//

அருமை சார்.

dondu(#11168674346665545885) said...

சென்ற ஆண்டு மே மாதம் ஷாலினியும் ருத்ரனும் இதே டாபிக்கை சென்னையில் கவர் செய்தது பற்றி நான் இட்ட பதிவு இதோ, பார்க்க: http://dondu.blogspot.com/2009/05/good-touch-bad-touch.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஹேமா said...

எனக்கும் அவரின் கருத்துக்கள் பிடிக்கும்.கேட்டிருக்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல நிகழ்ச்சி... ஏற்பாட்டு செய்த நண்பர்களுக்கு பாராட்டுகள்

தேவன் மாயம் said...

//The night is dark, and I am far from home; lead Thou me on!//

அருமை சார்.///

நீங்கள் வராததுதான் குறை!!

தேவன் மாயம் said...

சென்ற ஆண்டு மே மாதம் ஷாலினியும் ருத்ரனும் இதே டாபிக்கை சென்னையில் கவர் செய்தது பற்றி நான் இட்ட பதிவு இதோ, பார்க்க: http://dondu.blogspot.com/2009/05/good-touch-bad-touch.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

அந்த நேரத்திலேயே படித்தேன்!! இப்போதும் பார்க்கிறேன்!

தேவன் மாயம் said...

எனக்கும் அவரின் கருத்துக்கள் பிடிக்கும்.கேட்டிருக்கிறேன்///

நல்ல நிகழ்ச்சி... ஏற்பாட்டு செய்த நண்பர்களுக்கு பாராட்டுகள்///

மிக்க நன்றி ஹேமா , ஞானசேகர்!

சைவகொத்துப்பரோட்டா said...

கேள்வி-பதில் நிகழ்ச்சியினை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

மிக நல்ல முயற்சி. முன்நின்று நடத்திய மதுரை பதிவர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்

Vidhoosh said...

ஒலி/ஒளி பதிவு ஏதும் இருந்தால் பகிரவும்.

நன்றி. ஷாலினிக்கு வாழ்த்துக்கள்.

king maker said...

cough over aha iruuku enna pannalam
she is 55years old sugar patient

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory