சரிதான்,
ஆயின்
உள்ளத்தைக்
களவாடியவளை
மறப்பதெப்படி?
********************
அடுக்கடுக்காய்
நான் சொன்ன
பொய்களெல்லாம்
அழகாகிப் போயின,
நீ சிரித்த
மறு கணம்!!!
********************
உன் இதழ்
அழகைக் கண்டு
வெட்கித்தான்
நீ சூடிய ரோஜாவும்
ஒளிந்து கொண்டதொ
உன் கூந்தலின்
பின்னால்?
*******************
ஒருமை
என்பது தனிமையல்ல!
நீயும்
நானும்
சேர்ந்த பன்மை!!
+++++++++++++++++++
கவிதை படித்து விட்டீர்களா? பெண்கள் தினத்துக்கும் இந்தக் கவிதைகளுக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேட்கக்கூடாது!!! சரியா?
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பின்னூட்டமோ ஓட்டோ
போடாமல் போகவும் கூடாது!! ஹி! ஹி!!
21 comments:
அடுக்கடுக்காய்
நான் சொன்ன
பொய்களெல்லாம்
அழகாகிப் போயின,
நீ சிரித்த
மறு கணம்!!!
.........கவிதையில் அழகு மிளிர்கிறது.
உன் இதழ்
அழகைக் கண்டு
வெட்கித்தான்
நீ சூடிய ரோஜாவும்
ஒளிந்து கொண்டதொ
உன் கூந்தலின்
பின்னால்?]]
அருமை!
ஆஹா... அருமை அண்ணா...
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் மிளிர்கிறது...
Chitra said...
அடுக்கடுக்காய்
நான் சொன்ன
பொய்களெல்லாம்
அழகாகிப் போயின,
நீ சிரித்த
மறு கணம்!!!
.........கவிதையில் அழகு மிளிர்கிறது.
///
பொய்யும் அழகுதானே!
நட்புடன் ஜமால் said...
உன் இதழ்
அழகைக் கண்டு
வெட்கித்தான்
நீ சூடிய ரோஜாவும்
ஒளிந்து கொண்டதொ
உன் கூந்தலின்
பின்னால்?]]
அருமை!
ஜமால் நன்றி!
அகல்விளக்கு said...
ஆஹா... அருமை அண்ணா...
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் மிளிர்கிறது...
///
மொத்தத்தில் பெண்கள் அழகுதான்!
கவிதை நல்லா இருக்கு..
அந்த ரோஜா கவிதை அட்டகாசம் கவிஞரே.
அமைதிச்சாரல் said...
கவிதை நல்லா இருக்கு.///
நன்றி!!
சைவகொத்துப்பரோட்டா said...
அந்த ரோஜா கவிதை அட்டகாசம் கவிஞரே.
///
மிக்க மகிழ்ச்சி என்னைக் கவிஞனாக்கியதற்கு!!
//ஒருமை
என்பது தனிமையல்ல!
நீயும்
நானும்
சேர்ந்த பன்மை//
இந்த கவிதை மட்டுமே பிடித்திருந்தது. பகிர்தலுக்கு நன்றி.
கவிமழையில் நனைந்தவுணர்வு
ஹ ஹா. அருமை. வாழ்த்துகள்.
/பெண்கள் தினத்துக்கும் இந்தக் கவிதைகளுக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேட்கக்கூடாது!!/
சரி! கேக்கவில்லை!
டாக்டர் நல்ல கவிதை எழுதும் மன நிலையில் எழுதினீர்களா? மகளிர் தின பரிசாய் கவிதைகள்...
வாவ் அந்த பொய் கவிதை சுப்பர்
மற்றவைகளும் நல்லம் ரசித்தேன்
நல்லாயிருக்கு அதுவும் வித்தியாசமா
ரொமான்ஸ் மூடா இருக்கு,"லவ் பண்ண ஆள் கிடைக்கல பாஸ்."
ஆஹா... அருமை
ஆகா, அருமை டாக்டர். சொன்ன பொய்களை இப்படிப் பகிரங்கமாய் ஒத்துக் கொண்டிருக்கிறீர்களே.! பெண்கள் தினம் என்பதால் மன்னிப்பு கிடைக்குமென்பதாலா?
//அடுக்கடுக்காய்
நான் சொன்ன
பொய்களெல்லாம்
அழகாகிப் போயின,
நீ சிரித்த
மறு கணம்!!!//
அழகு..:-)))
Post a Comment