Friday, 12 March 2010

இப்படியும் ஒரு பெண்!!

பொதுவாக மருத்துவமனைகளில் ரத்தத்திற்கு அலைவது தினசரி வாடிக்கை. அதுவரை ”ஏன் இன்னும் ஆபரேஷன் செய்யவில்லை?” என்று சத்தம் போடும் உறவினர்களிடம் ரத்தம் தேவை தருகிறீர்களா? என்று கேட்டால் போதும் பாதிப் பேர் முகம் பேயறைந்த மாதிரி ஆகி விடும். பத்து நிமிடத்தில் முக்கால்வாசிக் கூட்டம் மாயமாகிவிடும். மீதி இருக்கும் ஓரிருவர் வந்து” இரத்தம் விலைக்கு வாங்கலாமா?, எவ்வளவு ஆனாலும் பணம் கொடுத்து விடுவோம்” என்று கேட்பார்கள். விபரமான சிலர்” காலேஜ் பையன்களிடம் எடுக்கலாமே நீங்கள்?” என்று கேட்பார்கள்.

நாங்களே கல்லூரிக்கு போன் செய்து இரண்டு கல்லூரி மாணவர்களை வரவழைத்து இரத்தம் எடுக்கவேண்டி வரும்( இதெல்லாம் எங்கள் இரத்த வங்கியில் இரத்தம் இல்லாத பட்சத்தில்தான்!! பெரும்பாலும் கல்லூரிகளில் முகாம் நடத்தி இரத்தம் எடுத்து சேமித்து வைப்பது வழக்கம்!).

இரத்தததிற்கே இந்த நிலை என்றால் நம் மக்கள் சிறுநீரகம் தருவார்களா? சொந்த அண்ணன் தம்பிக்கே தரமாட்டார்கள். இதனால்தான் சிறுநீரகம் கிடைக்காமல், சிறுநீரகம் பழுதுபட்டு இறப்போர் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும்  அதிகம்.

இத்தகைய உலகில் தெரியாத ஒரு நோயாளிக்கு மருத்துவரே தன் சிறுநீரகத்தைக் கொடுத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?  ஆச்சரியம்!! ஆனால் உண்மை!

சிகாகோவைச் சேர்ந்த டாக்டர்.சூசன் ஹூ ஒரு சிறுநீரக மருத்துவர். அவருடைய கணவரும் ஒரு மருத்துவர். உண்மையில் சிறுநீரகம் தேவைப்படும் ஒருவருக்குத் தரவேண்டும் என்று எண்ணினார். 2004 ஆம் ஆண்டு தன் சிறுநீரகத்தில் ஒன்றைத் தன் நோயாளிக்கே கொடுத்துவிட்டார்.

தற்போது சென்னை வந்த அவர் டான்கர் அமைப்பின் சார்பில் கவுரவிக்கப்பட்டார்.

“ நான் உலகில் அமைதியை ஏற்படுத்த முடியாது! நான் உலகின் பசியைப் போக்க முடியாது! ஆனால் சிறுநீரகம் செயல்படாத ஒருவரைக் காப்பாற்ற முடியும்”  அதைத்தான் நான் செய்தேன் என்கிறார்.

என்ன நாமும் அவரை பாராட்டுவோமா!!

தமிழ்த்துளி தேவா.

26 comments:

கண்ணகி said...

நமக்கெல்லாம் மனம் வருமா..தன்னலமற்ற டாக்டர் சூசனைப் பாராட்டுவோம்...

சாந்தி மாரியப்பன் said...

நிச்சயமாக பாராட்டுக்கு உரியவர்தான் அவர்.

Praveenkumar said...
This comment has been removed by the author.
Praveenkumar said...

சும்மா பெயருக்கு சொல்லி திரிபவர்களை விட, செயலில் காட்டி இருக்கும் இது போன்று மருத்துவ கடவுளை பாராட்டியே தீரவேண்டும்.

Rajeswari said...

great!

Chitra said...

“ நான் உலகில் அமைதியை ஏற்படுத்த முடியாது! நான் உலகின் பசியைப் போக்க முடியாது! ஆனால் சிறுநீரகம் செயல்படாத ஒருவரைக் காப்பாற்ற முடியும்” அதைத்தான் நான் செய்தேன் என்கிறார்.


........ May God bless her!

சைவகொத்துப்பரோட்டா said...

கண்டிப்பாக அவரை பாராட்ட வேண்டும், வாழ்த்துக்கள் மருத்துவரே இவரை பற்றி எழுதியதற்கு.

Jerry Eshananda said...

தொடரட்டும் மனித நேயம்,வாழட்டும் மனிதம்.

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்வுக்கு நன்றி தேவா!

சிறந்த பத்து பெண்மணிகளில் இவர் இப்பொழுது முதலிடம் பெறுவார்

Uthamaputhra Purushotham said...

இந்த மாதிரி நல்லவர்கள் இருப்பதால் தான் உலகம் இன்னும் நிலையாக இருக்கின்றது.

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யுமாம் மழை.

வாழ்க அவரது தொண்டு.

Paleo God said...

வாழ்க வாழ்க..:)

அப்துல்மாலிக் said...

நிச்சயம் இதுமாதிர் ஆட்கள் உங்க பதிவுனாலே வெளிஉலகத்துக்கு தெரியவருது

நிச்சயம் இது மிகப்பெரிய உதவிதான்>>, கவுரவிக்கப்படவேண்டிய மனிதர்

Balamurugan said...

மனித நேயம் இன்னும் மிச்சம் இருக்கிறது.

அவருக்கு தலை வணங்குகிறேன்.

பிரேமா மகள் said...

nice article.....

Vidhoosh said...

தெய்வம் மனுஷ்ய ரூபேண -- God comes in human form and supports appropriately to anyone if required

Vidhoosh said...

salutes to her attitude. :)

govindasamy said...

நிச்சயமாக பாராட்டுக்கு உரியவர் அவர்
unmaivrumbi,
mumbai.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அவரை மனிதருள் மாணிக்கம் என்றே சொல்ல வேண்டும்...

பல மருத்துவர்கள் மட்டுமில்லை நம்மை போன்ற மக்களும் அவரை முன் உதாரணமாக கொண்டு பிறருக்கு உதவ வேண்டும்...

சிரம் தாழ்த்தி தலை வணங்குகின்றேன் அவருக்கு, அவர் செயலுக்கு...

ஜெயந்தி said...

அந்த மருத்துவரின் மனித நேயம் போற்றப்பட வேண்டிய ஒன்று!

நாணல் said...

நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியவர்...

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துகள் சேர்ந்த டாக்டர்.சூசன் ஹூ

கவி அழகன் said...

சிரம் தாழ்த்தி தலை வணங்குகின்றேன்

அன்புடன் நான் said...

இது என்னால் முடியாதது....
அவர்களுக்கு.... எமது பாராட்டுக்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

She is really great.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பெரிய விஷயம்தான்.

உமா said...

உண்மை. இச் செய்தியை செய்தித்தாளில் படித்ததும் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன். இப்படி இரத்த உறவல்லாத பிறரிடமிருந்து பெறப்படும் சிறுநீரகம் பொருந்துவது கடினம் என்பது என் கருத்து. அது சரியா. இவருடையது பொருந்தியது ஆச்சரியம் தானே?

பாராட்டுக்குரியவர் அவரும், நீங்களும். இப்படி நல்ல விடயங்கள் நடக்கும் போது அதை மற்றவரறிய எடுத்துரைப்பது மிக முக்கியம். நாட்டில் நித்தியானந்தாவிற்கும், வெளிநாட்டில் நடக்கும் பல அற்ப நிகழ்ச்சிகளுக்கும் கிடைக்கும் முக்கியத்துவம் இப்படி பட்ட விஷயங்களுக்குக் கிடைப்பதில்லை.
நன்றி.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory