பித்தப்பை கற்கள் தற்போது நம் நாட்டில் தற்போது அதிகரித்து வருகிறது. பித்தப்பை (Gall bladder)என்பது கல்லீரலின் கீழ் உள்ள ஒரு சிறு பை போன்ற அமைப்பு.இது மொத்தக் கொள்ளளவே 50மில்லிதான்!! ஈரல் சுரக்கும் பித்தச்சுரப்பு இதில் வந்து சேர்கிறது. சேரும் பித்தநீரிலிருந்து நீரை வடிகட்டி நல்ல கெட்டியான திரவமாக இது மார்றுகிறது. சில நேரங்களில் இப்படி வடிகட்டும்போதுதான் கஷாயம் போல் கெட்டியான பித்தம் உறைந்து சின்னச்சின்னக் கூழாங்கற்கள் போல் ஆகி பையில் தங்கிவிடுகின்றன. இதன் பெயர்தான் பித்தப்பைக்கல்!
சில கற்களின் படங்கள்:
1.இது பெண்களுக்கு 9.2% மும் ஆண்களுக்கு 3.3% மும் ஏற்படுகிறது.
2.இது வருவதற்கான காரணங்கள்?
- கலோரி அதிகமான உணவு.
- கொலஸ்ட்ரால், கொழுப்பு அதிகமான உணவு.
- உடல் எடை அதிகமானவர்கள் அதிகம் டயட்டிங்கில் இருப்பது.
- பித்தப்பைத் தொற்று நோய்கள்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு இது அதிகம் வரும்.
- கொலஸ்ட்ரால் குறைப்பதற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள்!!!
2.இதன் அறிகுறிகள்?
- வலதுபுற நெஞ்சு விலா எலும்பின் கீழ் அடிக்கடி வலி ஏற்படுதல்.
- மேல் வயிற்றின் வலதுபுறம் வலி, வலது தோள் வலி, உமட்டல், வாந்தி, தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு மேல் வாந்தி.
- கொழுப்பு உணவு சாப்பிட்டவுடன் வலதுபுறம் வயிற்று வலி.
- பித்தத் தொற்றால் மூன்றில் ஒரு நோயாளிக்குக் காய்ச்சல் அதிகமாக வரலாம்.
- நிறையப் பேருக்கு ஒரு அறிகுறியும் தெரியாது. இப்படி அறிகுறி இல்லாமல் உண்டாகும் பித்தக்கற்களை ’சைலண்ட் ஸ்டோன்ஸ்’ என்றழைப்பார்கள்.
3.பித்தக்கல்லில் வகை உண்டா?
உண்டு.
- கொலஸ்ட்ரால் கல்
- பிக்மெண்டட் கற்கள்: பிரௌன் பிக்மெண்ட் கல், கருப்புக்கல்.
- கலப்புக்கல்(MIXED STONES).
4.பித்தப்பைக்கல் வராமல் தடுப்பது எப்படி?
- காய்கறி உணவு
- கொழுப்புக் குறைந்த உணவு.
- பழங்கள்,
- நார்ச்சத்து அதிகமான உணவு
- மீன் எண்ணை
5.இதற்கு சிகிச்சை என்ன?
பித்தப்பையை அகற்றிவிடுதல்.
6.பித்தப்பை இல்லாவிட்டால் நன்றாக சாப்பிட முடியுமா?
சாதாரண உணவை நன்றாக சாப்பிடலாம்.
தமிழ்த்துளி தேவா.
30 comments:
பெரிய சைஸ் கல்லு எடுத்து வச்சிருக்கேன்.
இன்னும் கொஞ்சம் உள்ளேயே இருக்கு
அதுவா இஷ்ட்டப்பட்டா கஷ்ட்டபடுத்தி வரும் வெளியே ...
விரிவான தகவலுக்கு நன்றி.
சுருக்கமாக ஆனால் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு.
மிகவும் உபயோகமான தகவல் டாக்டர் . நன்றி
வழமை போல் நல்ல தகவல் தேவா சார்
படத்துல இருக்கிற கற்களையெல்லாம் பார்த்தால் ஏதோ அகழ்வாராய்ச்சியில் எடுத்ததைப் போலல்லவா இருக்கின்றன.
நல்ல பகிர்வு.
வாழ்த்துக்கள்.
நல்ல தகவல்.
--
இத பார்த்துத்தான் ராசி கல்லு வந்துதோ?? வித விதமா இருக்கே சார்..:))
நல்ல பகிர்வு!!
நல்ல உபயோகமான பதிவு டாக்டர்.
நட்புடன் ஜமால் said...
பெரிய சைஸ் கல்லு எடுத்து வச்சிருக்கேன்.
இன்னும் கொஞ்சம் உள்ளேயே இருக்கு
அதுவா இஷ்ட்டப்பட்டா கஷ்ட்டபடுத்தி வரும் வெளியே ...
///
வாங்க ஜமால் ! அது சிறுநீரகக்கல்!!
சைவகொத்துப்பரோட்டா said...
விரிவான தகவலுக்கு நன்றி.
///
வாங்க ஐயா!!
Dr.எம்.கே.முருகானந்தன் said...
சுருக்கமாக ஆனால் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு.
மிக்க நன்றி !!
நன்றி ஜெஸ்வந்தி!!
குமரை நிலவன் மிக்க நன்றி!!
அவசியமான நல்ல பதிவு.
நன்றி.
உமா said...
படத்துல இருக்கிற கற்களையெல்லாம் பார்த்தால் ஏதோ அகழ்வாராய்ச்சியில் எடுத்ததைப் போலல்லவா இருக்கின்றன.
நல்ல பகிர்வு.
வாழ்த்துக்கள்//
ஆமாங்க!! ஆச்சரியமா இருக்கிறது!!
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நல்ல தகவல்.
--
இத பார்த்துத்தான் ராசி கல்லு வந்துதோ?? வித விதமா இருக்கே சார்..:))///
அப்படித்தான் இருக்கு சங்கர்!
---------------------------------
Mrs.Menagasathia said...
நல்ல பகிர்வு!!
//
நன்றி நண்பரே!
-------------------------------
ஸ்ரீ said...
நல்ல உபயோகமான பதிவு டாக்டர்.
///
ஸ்ரீ !! மிக்க நன்றி!
-------------------------------
கோமதி அரசு said...
அவசியமான நல்ல பதிவு.
நன்றி.
//
நன்றிங்க!!
வணக்கம் சார். இந்த படங்களை பாரத்தால் மிகவும் பயமாக உள்ளது. ரேஷன் கடை அரிசியில் உள்ளது போல் இருக்கே....!!! தங்கள் தகவல் பகிர்வுக்கு நன்றிகள்.
பிரவின்குமார் said...
வணக்கம் சார். இந்த படங்களை பாரத்தால் மிகவும் பயமாக உள்ளது. ரேஷன் கடை அரிசியில் உள்ளது போல் இருக்கே....!!! தங்கள் தகவல் பகிர்வுக்கு நன்றிகள்.
///
இதெல்லாம் பித்தப்பை தயாரிக்கும் கற்கள்!!
அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவ தகவல்கள்.நன்றி.
// உமா said...
படத்துல இருக்கிற கற்களையெல்லாம் பார்த்தால் ஏதோ அகழ்வாராய்ச்சியில் எடுத்ததைப் போலல்லவா இருக்கின்றன. //ஆமாம். அப்படித்தான் இருக்கு.
தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்.
தகவலுக்கு நன்றி
புதிய தகவல்... நன்றி தேவா சார். :-)
அன்பின் தேவா
எனக்கும் கல் 7 ஆண்டுகளாக இருக்கிறது - ஒவ்வொரு ஆண்டும் அல்ட்ரா ஸ்டானிக் ஸ்கேன் - சோனோகிராம் எடுக்கிறோம் - அப்டாமினல் ஸ்கேன் - கல் இருக்கிறது அப்படியே - வேறு ஏதாவது அறுவைச் சிகிச்சை செய்யும் போது எடுத்து விடலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள் - கவலைப்பட வேண்டாம் என அறிவுரை. மஞ்சள் காமாலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். பார்ப்போம்
தகவலுக்கு நன்றி தேவா
My dear friend
I had the same problem and undergone a surgery in 1994(i was 23 years)
reasons as u listed, surprised.
since
- i was not at all having healthy food
- i was look like a skeleton
please advice, why it affected me
thanks in advance
K.Sundaramurthy
CHARTERED ACCOUNTANT
மிகவும் உபயோகமான பதிவு!
Great!
Really great work and very good space. Congratulations.
Thanks for your work and have a nice week.
ரொம்ப நல்ல தகவல்.
அருமையா தொகுத்து இருக்கீங்க.
மிக முக்கியமான பதிவு.......!
அறியத்தந்தமைக்கு நன்றிகள்.....!
(மிக நீண்ட நாளைக்குப்பிறகு இட்ட ஒரு பின்னூட்டம்)
Post a Comment