Wednesday 31 March 2010

இவரை மறக்கலாமா? (காலத்தை வென்றவர்!!)

நோபல் பரிசு என்பது ஒரு உயரிய பரிசாக இருக்கலாம். ஆனால் அது கிடைக்கப்பட வேண்டியவர்களுக்குக் கிடைத்ததா என்பது சில நேரங்களில் கேள்விக்குறிதான். ஏன் இப்படிச்சொல்கிறேன் என்றால் இன்று அணுவில் உள்ள உள் அணுத் துகள்களான போஸான் களை உடைத்து பிரபஞ்சத்தின் ஆரம்பத்துகள்களைக் கண்டுபிடிக்கும் சோதனை முதல்கட்ட வெற்றியடைந்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது.

ஹிக் போஸான் என்றழைக்கப்படும் இந்தப் பொருளுக்கு ’போஸ்’  என்ற பெயர் எப்படி வந்தது? யார் அந்த போஸ் என்று கேட்டால் பலருக்கும் தெரியாது.போஸான் என்கிற துகள்கள் இருப்பதைக் கணித்த  அந்த மேதை இந்தியாவைச் சேர்ந்தவர்தான்.

அவரது முழுப்பெயர் சத்தியேந்திரநாத் போஸ்! கல்கத்தாவில் 1894ல் பிறந்தார். 1916 முதல் 1921 வரை கல்கத்தாப் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1.போஸான்கள் என்பவை ஒரு வகை அணுத் துகள்கள். அவை போஸ் ஐன்ஸ்டீன் விதிகளுக்கு உட்பட்டவை.

2.அவற்றை அவர் 1924ல் கண்டுபிடித்துச்சொன்னபோது அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

(போஸின் Planck's Law and the Hypothesis of Light Quanta என்ற் கட்டுரையை அறிவியல் உலகம்  தவறானது என்று ஏற்றுக் கொள்ளவில்லை!! )

2.ஆனால் அவருடைய பிளான்க்ஸ் குவாண்டம் ரேடியேஷன் விதி பற்றிய மேற்சொன்ன கட்டுரை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால்  புரிந்துகொள்ளப்பட்டது. அவர் அதை ஜெர்மனில் மொழிபெயர்த்து பிரசுரித்தார்.!!!

3.அதன் பிறகே அறிவியல் உலகம் அவர் சொன்ன துகள்கள் இருக்கலாம் என்று ஏற்றுக் கொண்டது.

4. 70 வருடங்கள் கழித்து 1995ல்தான்  போஸான்கள் என்ற துகள்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டது!!

5.போஸின் தவறு என்று கருதப்பட்டது தற்போது போஸ் ஐன்ஸ்டீனின் விதி(Bose-Einstein statistics) என்று அழைக்கப்படுகிறது.

6.அந்த போஸான்களை உடைத்தால் இந்தப் பிரபஞ்சத்தின் ஆதிமூலப் பொருளைக்( கடவுளின் துகள்) கண்டுபிடித்து விடலாம் என்கிறது அறிவியல்.

7.போஸின் கருத்தை வைத்து ஆராய்ச்சி செய்து பலரும் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.

7.ஆனால் 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன் பிரபஞ்சம் தோன்றக் காரணமான மூல்ப் பொருளைக் கண்டு சொன்ன இந்திய மேதைக்கு இறுதிவரை நோபல் பரிசு (1974ல் அவர் இறந்தார்) கொடுக்கப்படவில்லை.  

நோபல் மறுத்த போஸை இந்தியர்களும் மறந்து விட்டோம். 9.4 பில்லியன் செலவில் அணுக்கருவை உடைக்கும் இந்நாளில் போஸைப் பற்றிச் சொல்வதில் பெருமை கொள்கிறேன்.

மேலும் படிக்க:

http://en.wikipedia.org/wiki/Bose–Einstein_statistics

http://en.wikipedia.org/wiki/Satyendra_Nath_Bose

25 comments:

Chitra said...

போஸான் என்கிற துகள்கள் இருப்பதைக் கணித்த அந்த மேதை இந்தியாவைச் சேர்ந்தவர்தான்.

.....ஜெய் ஹோ! பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு.

Jerry Eshananda said...

timely post.

சைவகொத்துப்பரோட்டா said...

அற்புதம்!!!
கண்டிப்பாக இவரை மறக்க கூடாது,
தகவலுக்கு நன்றி.

Jerry Eshananda said...

டாக்டர் அப்புறம் அந்த "தேனிலவு....இரண்டாம் பாகம் என்ன ஆச்சு?"

தேவன் மாயம் said...

Chitra said...
போஸான் என்கிற துகள்கள் இருப்பதைக் கணித்த அந்த மேதை இந்தியாவைச் சேர்ந்தவர்தான்.

.....ஜெய் ஹோ! பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு.///

முதல் பின்னூட்டக்காரருக்கு நன்றி!!

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தன். said...
சுட சுட அறிவியல் செய்திகள் தரும் உங்களை வாழ்த்துகிறேன்.....

பிள்ளைகளுக்கு போஸைப் பற்றி சொல்லுங்க வாத்தியாரே!!

தேவன் மாயம் said...

சைவகொத்துப்பரோட்டா said...
அற்புதம்!!!
கண்டிப்பாக இவரை மறக்க கூடாது,
தகவலுக்கு நன்றி.
///

நன்றி!!

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தன். said...
டாக்டர் அப்புறம் அந்த "தேனிலவு....இரண்டாம் பாகம் என்ன ஆச்சு?"

நான் மறந்தாலும் விடமாட்டேங்கிறீங்களே!!

உமா said...

அருமையான பதிவு. போற்றப் படவேண்டியவர் போஸ்.
//பிரபஞ்சத்தின் ஆரம்பத்துகள்களைக் கண்டுபிடிக்கும் சோதனை முதல்கட்ட வெற்றியடைந்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. // வாவ். அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி,வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

நலல் இடுகை - என்ன சொல்வது - ம்ம்ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள்

Sabarinathan Arthanari said...

பகிர்விற்கு நன்றி

பாலா said...

இது மேற்குலகின் நிற அரசியல் நண்பரே :(

அகல்விளக்கு said...

அவருக்கு அங்கீகாரம் கிடைக்காதது வருத்தமாக உள்ளது...

தேவன் மாயம் said...

உமா said...
அருமையான பதிவு. போற்றப் படவேண்டியவர் போஸ்.
//பிரபஞ்சத்தின் ஆரம்பத்துகள்களைக் கண்டுபிடிக்கும் சோதனை முதல்கட்ட வெற்றியடைந்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. // வாவ். அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி,வாழ்த்துக்கள்..///

ஆம் உமா!!

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

குலவுசனப்பிரியன் said...

இவரைப்பற்றி இன்றுதான் கேள்விப்படுகிறேன். ஜகதீஸ் சந்திர போஸோடு குழப்பிக் கொண்டேன்.

என் மகளுக்கு கட்டுரை எழுத மேடம் கியூரி, நியூட்டன் வரிசையில் ஒருவர் கிடைத்தார்.

நோபல் பரிசு பெற்ற அவ்வளவாக அறியப்படாத மற்றொரு விஞ்ஞானி
Har Gobind Khorana. James D Watson-ன் DNA புத்தகத்தில்தான் முதலில் இவரைப்பற்றித் தெரிந்துகொண்டேன்.

உங்களுக்கு சத்யேந்த்ரநாத் எப்படி அறிமுகமானார் என்று சொல்வீர்களா?

Rajeswari said...

ஆஹா..ஆஹா..

பழையபடி என் இயற்பியல் உலகுக்குள் நுழையும் பேறு..

அருமை தேவன் சார்..

பதிவோடு சேர்ந்து என் பழைய ஞாபகங்களும் கண்முன்னே...

சிநேகிதன் அக்பர் said...

இடுகை அருமை. நன்றி சார்.

என் நடை பாதையில்(ராம்) said...

இன்னும் பல மேதைகள் இங்கு இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள்.

சொல்லச் சொல்ல said...

செத்தாலும் தோண்டி எடுத்தாவது blog கில் இந்தியர்களின் பெருமையை பரப்பும் உங்கள் சேவை நாட்டிற்குத் தேவை. பயனுள்ள தகவல். நன்றி.

பூங்குழலி said...

நான் அறியாத தகவல் இது ...நன்றி

Vidhoosh said...

இன்றுவரை எனக்கு தெரியாத செய்தி. தெரியத் தந்ததற்கு நன்றிகள் பல.

-விதூஷ்.

Balamurugan said...

மறுக்கப் பட்டதால் மறக்கப் பட்டவர்.
நல்ல செய்தி. நன்றி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பெருமைப்படும் விசயம்..
பகிர்வுக்கு நன்றி சார்.

rajasurian said...

nice post. thank u

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory