Thursday 6 May 2010

தூக்கம் போச்சுதே- சமீரா ரெட்டி!!

சமீரா ரெட்டி- அடிக்கடி ”கோடம்பாக்கம் வாடகைக்கு எடுக்கும் வானவில்,வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசும் தென்றல்”

என்றெல்லாம்  கவிதை கணக்கா எழுதினால் “ என்னைய்யா!! எழுதுகிறாய் நீ?” என்று பின்னூட்டப் பிதாமகர்களின் தாக்குதல் ஒரு பக்கம்; மருத்துவப் பதிவாகப் போட்டால் மருந்துக்கு பிளாக் பக்கம் வருபவர்கள்கூட ”வழக்கம்போல் நல்ல பதிவு” என்ற  டெம்பிளேட் பின்னூட்டம் போட்டு விட்டு ”கொல்றான்யா இவன்” என்று ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்…..  என்ன செய்வது? . சரி நம்ம எழுதுகிறபடி எழுதுவோம் என்று முடிவெடுத்து எழுத ஆரம்பித்து விட்டேன்.  

நம்ம சமீராரெட்டிக்கு சோம்னாம்புலிசமாம்! கேட்டதிலிருந்த நமக்குத் துக்கமே போச்சுங்க!! சோமனாம்புலிசம்னா என்னன்னு கேட்கிறீர்களா? அதுதாங்க தூக்கத்தில் நடக்கும் வியாதி! அடக் கொடுமையே! என்று அங்கலாய்க்கிறீர்களா? என்ன செய்வது? விதியும் வியாதியும் யாரை விட்டது?

அதுவும் சமீரா கண்ணைத்திறந்து கொண்டே தூக்கத்தில் நடப்பாங்களாம். சமீரா குழந்தையா இருக்கும்பொதே (ஹார்லிக்ஸ்தான் குடிச்சாங்களாம்!!! ஹி! ஹி!!) தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்… பின்னாடியே அம்மாவும் அப்பாவும் தூங்காமல்…..

  • 1-15% பேர் இந்த வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • 4 லிருந்து 8 வயதுவரை இதன் வேகம் அதிகமாக இருக்கும்.
  • இந்த வியாதி வருவதற்கான காரணங்கள் இவைதான் என்று இன்னும் அறியப்படவில்லை.
  • தூக்கத்தில் நடக்கும் வியாதியுள்ளோர் பகலில் எல்லோருடனும் நன்கு கலந்து பழகுவர்.
  • தூக்கத்தில் நடக்கும்போது என்ன செய்கிறோம் என்பது பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாது.
  • தூக்கத்தில் நடப்பது 30 நொடியிலிருந்து 30 நிமிடம் வரைகூட நீடிக்கும்.
  • நடப்பதுடன் வீடு கூட்டுதல், பாத்ரூம் கழுவுதல், சமையல் செய்தல் ஆகியவைகூடச் செய்வார்கள்.
  • அவர்கள் தற்கொலைகூட செய்துகொள்வர்.
  • தூக்கத்தில் இவர்கள் கொலை செய்தால்கூட அது குற்றமாகக் கருதப்படமாட்டாது.

 

சமீராவுக்கு வைத்தியம் பல செய்தும் இன்னும் வியாதி தீரலையாம்.

பேய்ப்படப் படப்பிடிப்பில் இவர் ஒருமுறை நடு இரவில் நடந்து போக மொத்த யூனிட்டும் பயந்து அலறியதாம்- அட உண்மையாத் தாங்க சொல்கிறேன்.

அது போக சமீரா வீடற்ற குழந்தைகளுக்காக இயங்கும் அமைப்பிலும் பங்கு கொள்கிறார். அந்தக் குழந்தைகளுடன் சமீராவின் படங்கள் கீழே!!

Sameera Reddy the Brand Ambassador of Dreams Home NGO at Bandra

http://www.desihits.com/news/view/photos-sameera-reddy-visits-dreams-home-ngo-in-mumbai-20100421

Sameera Reddy at Dreams Home NGO children's event image

Sameera Reddy at Dreams Home NGO children's event image

வியாதி இருந்தாலும் என்ன வாங்க ஜெயிக்கலாம் என்கிறார் சமீரா!! வாங்க நாமும் வெல்லலாம்!

35 comments:

சங்கர் said...

சுஜாதா இந்த வியாதியை தலைப்பா வச்சி ஒரு கதை எழுதிருக்காரு, படிச்சிருக்கீங்களா?

தேவன் மாயம் said...

சங்கர் said...
சுஜாதா இந்த வியாதியை தலைப்பா வச்சி ஒரு கதை எழுதிருக்காரு, படிச்சிருக்கீங்களா?//

இல்லையே!!

butterfly Surya said...

இதற்கு மருந்தில்லையா டாக்டர்..? என் நண்பன் ஒருவனுக்கும் சிறு வயதில் இருந்தது. ஆனால் இப்போது இல்லை.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல பகிர்வு தேவா சார்!


ஆனா பாருங்க...

ஒரு லூப்பு ஹோல வேற சொல்லி இருக்கீங்க...

எத்தனை பேரு, படுக்கும் போது கத்தியோட படுத்து, துக்கத்துல கொலை செய்யப் போறாங்களோ!?

தண்டனை தான் கிடையாதே!

:)

விக்னேஷ்வரி said...

வியாதியைப் பத்தி சொல்ல நல்ல யுத்தி. ரொம்ப டேஞ்சரஸ் தான் போல.

தேவன் மாயம் said...

butterfly Surya said...
இதற்கு மருந்தில்லையா டாக்டர்..? என் நண்பன் ஒருவனுக்கும் சிறு வயதில் இருந்தது. ஆனால் இப்போது இல்லை///

உண்மைதான்!! மருந்து இல்லை!!சிறு வயதில் அதிகமிருக்கும், போகப் போக குறைந்து விடும்!!

அகல்விளக்கு said...

ஏதோ வடிவேல் படத்துல காட்டுவாங்களே...

தூங்கும்போது காலை கட்டிலோடு கட்டுட்டு தூங்க வேண்டியதுதான்...

:-(

அகல்விளக்கு said...

ஏதோ வடிவேல் படத்துல காட்டுவாங்களே...

தூங்கும்போது காலை கட்டிலோடு கட்டுட்டு தூங்க வேண்டியதுதான்...

:-(

தேவன் மாயம் said...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
நல்ல பகிர்வு தேவா சார்!


ஆனா பாருங்க...

ஒரு லூப்பு ஹோல வேற சொல்லி இருக்கீங்க...

எத்தனை பேரு, படுக்கும் போது கத்தியோட படுத்து, துக்கத்துல கொலை செய்யப் போறாங்களோ!?

தண்டனை தான் கிடையாதே!

:)///

உள்ளதைச் சொல்லித்தானே ஆகவேண்டும்!!

தேவன் மாயம் said...

விக்னேஷ்வரி said...
வியாதியைப் பத்தி சொல்ல நல்ல யுத்தி. ரொம்ப டேஞ்சரஸ் தான் போல///

ஆம்!! வேறு வழியில்லை!!

தேவன் மாயம் said...

அகல்விளக்கு said...
ஏதோ வடிவேல் படத்துல காட்டுவாங்களே...

தூங்கும்போது காலை கட்டிலோடு கட்டுட்டு தூங்க வேண்டியதுதான்...

:-(/

பூட்டை உடைத்துக்கொண்டு வெளியே போவாராம் சமீரா!!!

பனித்துளி சங்கர் said...

ஆஹா ரொம்ப வசதியா போச்சு பலருக்கு !

ரவி said...

//ஹார்லிக்ஸ்தான் குடிச்சாங்களாம்//

அது நல்லா தெரியுது சார். வரவர இந்த தமிழ்துளி பதிவு ரொம்ப ஜனரஞ்சகமா போச்சுங்க.

ஹேமா said...

டாக்டர் இடைக்கிடை மருத்துவக் குறிப்பும் தாங்க.

Anonymous said...

சமீரா ரெட்டியும் பயனுள்ள பதிவும்.....

ராஜ நடராஜன் said...

//சரி நம்ம எழுதுகிறபடி எழுதுவோம் என்று முடிவெடுத்து எழுத ஆரம்பித்து விட்டேன். //

இதெல்லாம் பின்னூட்ட போபியாவில பாதிக்கப்பட்டவங்களுக்கு.நமக்கு இந்த வியாதி இல்லையே:)

மூளைய எதையாவது ஒண்ணு குடையனும்.சத்தம் போடணும்.கிறுக்கி வை!கிறுக்கி வைன்னு கை குறு குறுக்கனும்.

இப்படி நீள நீளமா பின்னூட்டம் சொல்ல வைக்கனும்.

ஆமா!சமீராவப் பத்தி என்னமோ சொல்லிட்டிருந்தீங்களே?

ராஜ நடராஜன் said...

//நம்ம சமீராரெட்டிக்கு சோம்னாம்புலிசமாம்! கேட்டதிலிருந்த நமக்குத் துக்கமே போச்சுங்க!! சோமனாம்புலிசம்னா என்னன்னு கேட்கிறீர்களா? அதுதாங்க தூக்கத்தில் நடக்கும் வியாதி! அடக் கொடுமையே! என்று அங்கலாய்க்கிறீர்களா? என்ன செய்வது? விதியும் வியாதியும் யாரை விட்டது?//

இந்த வியாதி உண்மையிலேயே இருக்குதுங்களா டாக்டர்?ஏன் கேட்கிறேன்னா பேயையும் தூக்கத்துல நடக்கிறதையும் நான் இதுவரை பார்த்ததேயில்லை.

ராஜ நடராஜன் said...

படங்கள்!இவங்கதான் சமீராவா?

தூக்கத்துல நடக்கிற மாதிரி தெரியலையே?பேய்ப்படம் புரமோட் செய்த வியாபார தந்திரமோ?

மின்னுது மின்னல் said...

நல்லாயிருக்கு.....








நான் பதிவை சொன்னேன் :)

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

ஓ ...
பகிர்வுக்கு நன்றி டாக்டர் .

குமரை நிலாவன் said...

சமீரா ரெட்டியும் பயனுள்ள பதிவும்.....

தேவா சார் எப்படி இருக்கீங்க

தேவன் மாயம் said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ஆஹா ரொம்ப வசதியா போச்சு பலருக்கு ///

நடிப்பது கஷ்டம் !!

தேவன் மாயம் said...

செந்தழல் ரவி said...
//ஹார்லிக்ஸ்தான் குடிச்சாங்களாம்//

அது நல்லா தெரியுது சார். வரவர இந்த தமிழ்துளி பதிவு ரொம்ப ஜனரஞ்சகமா போச்சுங்க///

வரவேற்கிறீர்களா!!! மிக்க நன்றி!!

தேவன் மாயம் said...

ஹேமா said...
டாக்டர் இடைக்கிடை மருத்துவக் குறிப்பும் தாங்க.///

நீங்க இப்படிக் கேட்கிறீர்கள்!!! சரி!!

தேவன் மாயம் said...

தமிழரசி said...
சமீரா ரெட்டியும் பயனுள்ள பதிவும்....///

நன்றி தமிழ்!!

தேவன் மாயம் said...

ராஜ நடராஜன் said...
//நம்ம சமீராரெட்டிக்கு சோம்னாம்புலிசமாம்! கேட்டதிலிருந்த நமக்குத் துக்கமே போச்சுங்க!! சோமனாம்புலிசம்னா என்னன்னு கேட்கிறீர்களா? அதுதாங்க தூக்கத்தில் நடக்கும் வியாதி! அடக் கொடுமையே! என்று அங்கலாய்க்கிறீர்களா? என்ன செய்வது? விதியும் வியாதியும் யாரை விட்டது?//

இந்த வியாதி உண்மையிலேயே இருக்குதுங்களா டாக்டர்?ஏன் கேட்கிறேன்னா பேயையும் தூக்கத்துல நடக்கிறதையும் நான் இதுவரை பார்த்ததேயில்லை.

///

இருக்குங்க!!! நம் கண்ணுக்கு மாட்டலை!!!

தேவன் மாயம் said...

மின்னுது மின்னல் said...
நல்லாயிருக்கு.....








நான் பதிவை சொன்னேன் :)///


எதுவானாலும் ஓகே!!! ஹி! ஹி!!

தேவன் மாயம் said...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...
ஓ ...
பகிர்வுக்கு நன்றி டாக்டர் ///

நன்றி நண்டு!!

தேவன் மாயம் said...

குமரை நிலாவன் said...
சமீரா ரெட்டியும் பயனுள்ள பதிவும்.....

தேவா சார் எப்படி இருக்கீங்க

///

நலம் நலமறிய ....

Jerry Eshananda said...

..எங்க ஊரு பக்கம் ஒரு நாட்டு வைத்தியர் இந்தமாதி வியாதியை எல்லாம் குணப்படுத்துறார்,அம்மினிக்கு வேணுமின்னா என் அட்ரச கொடுங்கப்பு...,புள்ளைய எப்படியாவது காப்பாத்தி புடுவோம்.

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தன். said...
..எங்க ஊரு பக்கம் ஒரு நாட்டு வைத்தியர் இந்தமாதி வியாதியை எல்லாம் குணப்படுத்துறார்,அம்மினிக்கு வேணுமின்னா என் அட்ரச கொடுங்கப்பு...,புள்ளைய எப்படியாவது காப்பாத்தி புடுவோம்///

தூக்கத்தில் நடக்கும் புள்ளய உங்களை நம்பி விட முடியுமா!!

Ganesan said...

டாக்டர் ,

சமீராவுக்கு தூக்கத்துல நடக்கற வியாதி, நீங்க போட்ட போட்டாவால எனக்கு தூக்கமே போச்சு...

Chitra said...

"விழிப்புணர்வை" ஊட்டும் பதிவு. :-)

SUFFIX said...

இப்படியெல்லாம் படத்தைப் போட்டா, தூக்கம் வராமலேயே நடக்கப் போறாய்ங்க..:)

தகவலுக்கு நன்றி டாக்டர்.

அன்பரசன் said...

நல்ல ஜெனரல் நாலேட்ஜ்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory