Tuesday 27 January 2009

கொஞ்சம் தேநீர்-7! தாங்க முடியவில்லை!!!

காலையில் கவிதை, இல்லாவிட்டால்
வேறு ஏதாவது எழுதுவது என்று
உக்காந்தேன்!நான் பேப்பரில் எழுதுவது
இல்லை!நேரே பிளாகில்தான் எழுதுவேன்!

இந்த நேரத்தில்,ஜாலியா எழுத முடியல.
பின் வரும் கவிதையை,நிறைய இடத்தில்
அழுது கொண்டே எழுதினேங்க!
ஒரு சிறு குழந்தையின் பார்வையில்....




அதிரும் வெடியின்
ஒலியில்
நகரும் வண்டிகளின்
கரகரக்கும் மண் அரையும்
சத்தத்தில்!!
இடிந்து கொட்டும் செங்கல்
மண் குவியலில்
அமைதியாய் நான்!!

ஷெல்லின் ஒலி பயமறியாது
சத்தம் மரத்துப்போன
காது!

எரியும் தீயின் வெம்மை
அறியாது
வெந்து போன என்
இதயம்!!

யாரும் சோறூட்ட
வேண்டாம்!
மடியில் போட்டு
தாலாட்டவும் வேண்டாம்
நான் உறங்க!

கல் தரையும்,
காய்ந்து ஓய்ந்த
கண்ணீரும் போதும்
நான் உறங்க!!

மண்ணும்,கல்லும்,
இரத்தமும்,சதையும்
ஒன்றாய்,
பயமில்லை எனக்கு!

பாதையில் என்னை
இழுத்து எறிந்தாலும்
வலிக்கவில்லை
எனக்கு!!

லண்டன் சித்தப்பா
அனுப்பிய
கரடி பொம்மையும்,

கனடா மாமா
அனுப்பிய ஏரோப்ப்ளேனும்
எங்கே?
யாராவது பார்த்தீர்களா?

அப்பா சொன்னார்
நான் படித்து
ஏரோப்பிளேனில்
வெளிநாடு போவேனாம்!
அப்பா,அம்மாவையும்
கூட்டித்தான் போவேன்!

அம்மா சொன்னா
நாளை
படகில் வேற வீட்டுக்கு
போகலாம் என்று!

பள்ளிக்கூடம்
எப்பத் திறப்பாங்க!
போய் ரொம்ப நாளாச்சு!

பள்ளிப்பையையும்
காணோம்!!
புத்தகங்களும் காணோம்!
யாராவது பாத்தீங்களா?

ஏரோப்ப்ளேனும்,
படகும்
எங்கே வரும்?
நானும்,அம்மாவும்,
அப்பாவும் போகணும்!

அம்மா சொல்லியிருக்காங்க!
பசிச்சா அழுகக்கூடாதுன்னு!
மாமாவும்,
சித்தப்பாவும்
எனக்கு பிஸ்கட்,
சாக்லேட் எல்லாம்
வாங்கி வருவாங்களாம்!

சித்தப்பாவும்,
மாமாவும் இன்னும்
வரவேயில்லை!

யாருக்கும் சொல்லதீங்க!
ஒரு காகிதக் கப்பல்
செஞ்சு
ஒளிச்சு வைச்சிருக்கேன்!
அதுல
அம்மா,அப்பா
நான் எல்லாம்
போயிருவோம்.

சரி என்
அம்மா,அப்பாவை
பார்த்தீர்களா?

ஏன் இன்னும்
வரவில்லை அவுங்க!
அவங்களை
விட்டு
எவ்வளவு நேரம்
தனியா இருப்பேன் நான்?

எனக்கு
அழுகையா வருது!
ஆனாலும்
அம்மா சொல்லியிருக்காங்க
அழுகக் கூடாதுன்னு!

என் அம்மாவையும்,
அப்பாவையும்
யாராவது
பார்த்தா சொல்லுங்களேன்!!

61 comments:

அ.மு.செய்யது said...

காலையிலே ஒரு சோகக் கவிதையோடு ஆரம்பிச்சிருக்கீங்க..

ஏங்க இப்படி ??

அ.மு.செய்யது said...

//யாரும் சோறூட்ட
வேண்டாம்!
மடியில் போட்டு
தாலாட்டவும் வேண்டாம்
நான் உறங்க!

கல் தரையும்,
காய்ந்து ஓய்ந்த
கண்ணீரும் போதும்
நான் உறங்க!!
//


நல்லா சொல்லியிருக்கீங்க...

நட்புடன் ஜமால் said...

\\ஷெல்லின் ஒலி பயமறியாது
சத்தம் மரத்துப்போன
காது!\\

ஈழ குழந்தையின் நிலையை அருமையாய் சொன்னீர்கள் தேவா.

நட்புடன் ஜமால் said...

\\லண்டன் சித்தப்பா
அனுப்பிய
கரடி பொம்மையும்,

கனடா மாமா
அனுப்பிய ஏரோப்ப்ளேனும்
எங்கே?
யாராவது பார்த்தீர்களா?\\

ஈழவர்களின் உண்மை நிலை இது.

எத்துனையோ பேர் புலம் பெயர்ந்து நலவாய் உள்ளனர் (மணம் தவிர)

na.jothi said...

கண்கள் கலங்கிவிட்டது
தேவா

புத்த மதத்தின் கொள்கைகளை
புரியவைக்க இன்னொரு புத்தர்
பிறக்கவேண்டும்

நட்புடன் ஜமால் said...

\\யாருக்கும் சொல்லதீங்க!
ஒரு காகிதக் கப்பல்
செஞ்சு
ஒளிச்சு வைச்சிருக்கேன்!
அதுல
அம்மா,அப்பா
நான் எல்லாம்
போயிருவோம்.\\

வார்த்தைகளின் விளையாட்டில் குழந்தையின் சோகம் மணதை குடைகிறது

உங்கள் ராட் மாதவ் said...

கைவிடப்பட்ட சிறு குழந்தையின் உள்ளச்சிதறல்கள், உண்மையில் உள்ளத்தை உருக்குகிறது. படிக்கும்போதே இதயம் மௌனமாகி விடுகிறது. உண்மைதான், கொடிதினும் கொடிது வறுமை. நன்றாக இருக்கிறது நண்பரே, வாழ்த்துக்கள்.

தேவன் மாயம் said...

காலையிலே ஒரு சோகக் கவிதையோடு ஆரம்பிச்சிருக்கீங்க..

ஏங்க இப்படி ??///

நானா எழுதுறேன்!!
காலையில்
வந்த
நினைவுகள்
எழுதச்சொல்லுது!

தேவன் மாயம் said...

/யாரும் சோறூட்ட
வேண்டாம்!
மடியில் போட்டு
தாலாட்டவும் வேண்டாம்
நான் உறங்க!

கல் தரையும்,
காய்ந்து ஓய்ந்த
கண்ணீரும் போதும்
நான் உறங்க!!
//


நல்லா சொல்லியிருக்கீங்க...//

செய்யது நன்றி,....

இராகவன் நைஜிரியா said...

காலை அலுவலகம் வந்து, கணினியை திறந்து உங்கள் கவிதையைப் படித்தேன்.

உள்ளம் கனத்து விட்டது.

ஒரு சிறு பிள்ளையின் விளையாட்டு பருவம், இத்தனை அடிகளை தாங்குமா?

தேவன் மாயம் said...

காலை அலுவலகம் வந்து, கணினியை திறந்து உங்கள் கவிதையைப் படித்தேன்.

உள்ளம் கனத்து விட்டது.

ஒரு சிறு பிள்ளையின் விளையாட்டு பருவம், இத்தனை அடிகளை தாங்குமா?///

நன்றி இராகவன் அவர்களே!
என்ன செய்வது!!!

வாசுகி said...

கவிதை நன்றாக உள்ளது.

கண்ணும் கலங்கிவிட்டது.
(sorry, அழுதுவிட்டேன்,அநுபவம் நிறையவே இருப்பதால்)

geevanathy said...

////அதிரும் வெடியின்
ஒலியில்
நகரும் வண்டிகளின்
கரகரக்கும் மண் அரையும்
சத்தத்தில்!!
இடிந்து கொட்டும் செங்கல்
மண் குவியலில்
அமைதியாய் நான்!!///

மென்மையான, எங்கள் வலிகள் நிறைந்த கவிதை வாழ்த்துக்கள் நண்பரே

அப்துல்மாலிக் said...

தன் குடும்பத்தை இழந்து தவிக்கும் ஒரு குழந்தையின் புலம்பல்...

மனதை பிழியும் வரிகள் தேவா

அப்துல்மாலிக் said...

//அதிரும் வெடியின்
ஒலியில்
நகரும் வண்டிகளின்
கரகரக்கும் மண் அரையும்
சத்தத்தில்!!
இடிந்து கொட்டும் செங்கல்
மண் குவியலில்
அமைதியாய் நான்!!
//

ஒரு போர்க்களத்தின் சூழல்...

தேவன் மாயம் said...

கவிதை நன்றாக உள்ளது.

கண்ணும் கலங்கிவிட்டது.
(sorry, அழுதுவிட்டேன்,அநுபவம் நிறையவே இருப்பதால்)//

நான் எழுதும் போது
இருமுறை
அழுதேன்!!

புதியவன் said...

//எரியும் தீயின் வெம்மை
அறியாது
வெந்து போன என்
இதயம்!!//

அருமை தேவா...

எம்.எம்.அப்துல்லா said...

கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை :(((

ராஜ நடராஜன் said...

நெருடல்.

(மனம் கனத்தால் வார்த்தைகள் வருவதில்லை.)

Arulkaran said...

வலிகளால் வரிகளை வரைந்து விழிநிறைய வைத்துவிட்டீர்கள்...

குமரை நிலாவன் said...

ஷெல்லின் ஒலி பயமறியாது
சத்தம் மரத்துப்போன
காது!

யாரும் சோறூட்ட
வேண்டாம்!
மடியில் போட்டு
தாலாட்டவும் வேண்டாம்
நான் உறங்க!

கல் தரையும்,
காய்ந்து ஓய்ந்த
கண்ணீரும் போதும்
நான் உறங்க!!

மண்ணும்,கல்லும்,
இரத்தமும்,சதையும்
ஒன்றாய்,
பயமில்லை எனக்கு!

ஈழத்தில்
சிறு குழந்தையின் மனம்....(அழுகிறேன்)
எந்த அளவுக்கு மரதுப்போயிருக்கிறது
என்று தெளிவாக எழுதி இருக்கீங்க
பள்ளிக்கூடம்
எப்பத் திறப்பாங்க!
போய் ரொம்ப நாளாச்சு!

பள்ளிப்பையையும்
காணோம்!!
புத்தகங்களும் காணோம்!
யாராவது பாத்தீங்களா
யாருக்கும் சொல்லதீங்க!
ஒரு காகிதக் கப்பல்
செஞ்சு
ஒளிச்சு வைச்சிருக்கேன்!
அதுல
அம்மா,அப்பா
நான் எல்லாம்
போயிருவோம்.

குழந்தைத்தனமும் மாறாத
அந்த குழந்தை ....

எனக்கு
அழுகையா வருது!
ஆனாலும்
அம்மா சொல்லியிருக்காங்க
அழுகக் கூடாதுன்னு!


இந்த நிலை மாறவேண்டும்
தாய் தமிழிழம் மலரவேண்டும் ....

மலரட்டும் தமிழிழம்....
மலரட்டும் தமிழிழம்....
மலரட்டும் தமிழிழம்....

சி தயாளன் said...

//ஷெல்லின் ஒலி பயமறியாது
சத்தம் மரத்துப்போன
காது//
நாங்களாவது பரவாயில்லை. வளர்ந்தபின் தான் யுத்தத்தின் கொடுமைகளை அனுபவித்தோம்..ஆனால் இன்று...ஒரு இளம் தலைமுறையே மனோரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றது..நாளை தீர்வு கிடைத்தாலும் இப்படியான பிஞ்சு உள்ளங்களில் உள்ள உளவியல் தாக்கங்களை அகற்றுவது சிரமம் :-(

நன்றி தேவா..

Sinthu said...

ஷெல்லின் ஒலி பயமறியாது
சத்தம் மரத்துப்போன
காது!

This s true for me........


வலிக்கும் உண்மை..................
புரிகிறது...

Suresh Kumar said...

நாம் எத்தனை கவிதை எழுதி கஷ்டத்தை சொன்னாலும் கல்நேஞ்சர்களின் மனதிற்கு தெரியவில்லையே

Suresh Kumar said...

நாம் எத்தனை கவிதை எழுதி கஷ்டத்தை சொன்னாலும் கல்நேஞ்சர்களின் மனதிற்கு தெரியவில்லையே

கபீஷ் said...

Good one!:-(:-(

மேவி... said...

nalla irukku unga poem.... all kids who live in this concrete forest will feel like ths only

வேத்தியன் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு...

RJ Dyena said...

தங்கள் கவிதை கண்டு கலங்கியது கண்கள் மட்டுமல்ல ... என் இதயமும் தான் !

(உங்கள் வலைப்பூவிற்கு வந்துட்டோமுல்ல !)

Dhurgashree Kangga Raathigaa said...

Mikka nandri!

அன்புடன் அருணா said...

என்னதான் தீர்வு?
அன்புடன் அருணா

தேவன் மாயம் said...

கைவிடப்பட்ட சிறு குழந்தையின் உள்ளச்சிதறல்கள், உண்மையில் உள்ளத்தை உருக்குகிறது. படிக்கும்போதே இதயம் மௌனமாகி விடுகிறது. உண்மைதான், கொடிதினும் கொடிது வறுமை. நன்றாக இருக்கிறது நண்பரே, வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வாடும் உள்ளங்கள்
விடிவு பெற பிரார்த்திக்கிறேன்!!

தேவா...

தேவன் மாயம் said...

காலையிலே ஒரு சோகக் கவிதையோடு ஆரம்பிச்சிருக்கீங்க..

ஏங்க இப்படி ??///

காலயில்
சோக
எண்ணங்கள்
வந்ததால்

தேவன் மாயம் said...

நன்றி அப்துல்லா!!
கண்ணீர் கட்டுப்பயுத்த முடியவில்லை!
உண்மைதான்
தேவா...

தேவன் மாயம் said...

நெருடல்.

(மனம் கனத்தால் வார்த்தைகள் வருவதில்லை.)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வாடும் உள்ளங்கள்
விடிவு பெற பிரார்த்திக்கிறேன்!!

தேவா...

தேவன் மாயம் said...

வலிகளால் வரிகளை வரைந்து விழிநிறைய வைத்துவிட்டீர்கள்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வாடும் உள்ளங்கள்
விடிவு பெற பிரார்த்திக்கிறேன்!!

தேவன் மாயம் said...

நன்றி
நிலாவன்!
இந்த நிலை மாறவேண்டும்
தாய் தமிழிழம் மலரவேண்டும் ..///

தேவன் மாயம் said...

/ஷெல்லின் ஒலி பயமறியாது
சத்தம் மரத்துப்போன
காது//
நாங்களாவது பரவாயில்லை. வளர்ந்தபின் தான் யுத்தத்தின் கொடுமைகளை அனுபவித்தோம்..ஆனால் இன்று...ஒரு இளம் தலைமுறையே மனோரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றது..நாளை தீர்வு கிடைத்தாலும் இப்படியான பிஞ்சு உள்ளங்களில் உள்ள உளவியல் தாக்கங்களை அகற்றுவது சிரமம் :-(

நன்றி தேவா..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வாடும் உள்ளங்கள்
விடிவு பெற பிரார்த்திக்கிறேன்!!

தேவன் மாயம் said...

ஷெல்லின் ஒலி பயமறியாது
சத்தம் மரத்துப்போன
காது!

This s true for me........


வலிக்கும் உண்மை..................
புரிகிறது..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வாடும் உள்ளங்கள்
விடிவு பெற பிரார்த்திக்கிறேன்!!

தேவன் மாயம் said...

நாம் எத்தனை கவிதை எழுதி கஷ்டத்தை சொன்னாலும் கல்நேஞ்சர்களின் மனதிற்கு தெரியவில்லையே

January 28, 2009 5:28 AM

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வாடும் உள்ளங்கள்
விடிவு பெற பிரார்த்திக்கிறேன்!

அமுதா said...

உருக்கமான கவிதை. இந்த சுடும் நிஜம் பொய்யாகக் கூடாதா என ஏங்குது மனம்

தேவன் மாயம் said...

தங்கள் கவிதை கண்டு கலங்கியது கண்கள் மட்டுமல்ல ... என் இதயமும் தான் !

(உங்கள் வலைப்பூவிற்கு வந்துட்டோமுல்ல !)///

வாங்க!! தடபுடலான வரவேற்பு உங்களுக்கு!!!
அடிக்கடி வந்து கருத்து சொல்லுங்க..
இதயத்தை பத்திரமா பாத்துக்கங்க..

தேவா.....

ஜீவா said...

சரி என்
அம்மா,அப்பாவை
பார்த்தீர்களா? //

வலி புரிகிறது ,இன்னும் எத்தனை நாட்களுக்கு இவைகள் தொடரும் .விடை தெரியாத கேள்விகளாய் தொடருகிறது கண்ணிர்துளிகளுடன்

தேவன் மாயம் said...

Good one!:-(:-(//

நன்றி கபிஷ்!!1

தேவா........

தேவன் மாயம் said...

nalla irukku unga poem.... all kids who live in this concrete forest will feel like ths only//

Thanks MAA vee...

தேவன் மாயம் said...

Mikka nandri!///

Thanks for coming to my blog!!
keep coming!

Deva..

தேவன் மாயம் said...

என்னதான் தீர்வு?
அன்புடன் அருணா//

என்ன செய்வது அருணா?

தேவா.....

சாந்தி நேசக்கரம் said...

எங்கள் தேசத்துத் துயர் சொட்டச் சொட்ட தங்கள் வரிகள். இதயத்தில் மழையல்ல இப்போது எங்கள் இதயமே இருள்,துயர், மரணம் இதைவிட வேறெந்த வார்த்தைகளையும் சுமக்கத்திராணியற்று....

தமிழகத்திலிருந்து எமக்காக தங்கள் போன்ற குரல்களின் ஆதரவே எங்களை இன்னும் துடிப்போடு இயக்குகின்றன.

சர்வதேசம் வரையான தங்கள் குரல்களைப் பயன்படுத்துங்கள்.

சாந்தி

கண்மணி/kanmani said...

;((

தேவன் மாயம் said...

எங்கள் தேசத்துத் துயர் சொட்டச் சொட்ட தங்கள் வரிகள். இதயத்தில் மழையல்ல இப்போது எங்கள் இதயமே இருள்,துயர், மரணம் இதைவிட வேறெந்த வார்த்தைகளையும் சுமக்கத்திராணியற்று....

தமிழகத்திலிருந்து எமக்காக தங்கள் போன்ற குரல்களின் ஆதரவே எங்களை இன்னும் துடிப்போடு இயக்குகின்றன.

சர்வதேசம் வரையான தங்கள் குரல்களைப் பயன்படுத்துங்கள்.

சாந்தி//

எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்பதே தற்போதைய பிரார்த்தனை..

தேவன் மாயம் said...

;((கண்மணி வருகைக்கு நன்றி..

வால்பையன் said...

ஏற்கனவே தமிழ்நண்பன்னு ஒரு ப்ளாக் எழுதிகிட்டு இருந்திங்க!

நான் அதை வந்து வந்து பார்த்துட்டு ஒண்ணையும் காணோமேன்னு போய்கிட்டு இருக்கேன்

தேவன் மாயம் said...

ஏற்கனவே தமிழ்நண்பன்னு ஒரு ப்ளாக் எழுதிகிட்டு இருந்திங்க!

நான் அதை வந்து வந்து பார்த்துட்டு ஒண்ணையும் காணோமேன்னு போய்கிட்டு இருக்கேன்///

உண்மைதான்!
அதில் தமிழ்மணபட்டை இணைப்பதில் சிரமம் இருப்பதால் தமிழ்த்துளி
ஆரம்பித்தேன்!!

தொடர்ந்து கருத்துரை தர வருக,..

ஹேமா said...

தேவா,உடல்நிலை கொஞ்சம் சரியில்லாததால்.பின்னூட்டமும் கொஞ்சம் பிந்தி வருகிறது.
பரவாயில்லைதானே!

ஹேமா said...

தேவா,இப்படி இத்தனை உணர்வோடு எங்கள் வாழ்வைப் படம் பிடித்து எழுதியிருக்கிறீர்கள்.ஆனால் எங்கள் மரத்துப்போன கண்களில் ஒரு வெறியே தவிரக் கண்ணீர் இல்லை.கண்ணீர் வற்றி நிறைய நாட்களாயிற்று.

தேவன் மாயம் said...

தேவா,இப்படி இத்தனை உணர்வோடு எங்கள் வாழ்வைப் படம் பிடித்து எழுதியிருக்கிறீர்கள்.ஆனால் எங்கள் மரத்துப்போன கண்களில் ஒரு வெறியே தவிரக் கண்ணீர் இல்லை.கண்ணீர் வற்றி நிறைய நாட்களாயிற்று.///

ஹேமா!
உடல் நிலை
பரவாயில்லையா?
கவனிக்கவும்..

ஆதவா said...

ஒரு சிறுவனின் அறியாத வலியை, நன்கு அறியும்படி காண்பித்திருக்கிறீர்கள். அதற்கு முதற்கண் பாராட்டுக்கள்.

பெற்றோர் இல்லாமல், விளையாட பொருட்கள் இல்லாமல், உற்றார் உறவினர் எதுவுமில்லாமல், அந்த துளிரின் நம்பிக்கை மட்டுமே இறுதியில் மிச்சமிருப்பதாக எழுதியிருப்பதும், நம் மனதைக் குடையும் வரிகளாவன..

எந்த மருத்துவமனையில் கிடப்பானோ என்று ஏங்கவைக்கும் கவிதை.,.

நாளை இதுபோன்று பல முளைக்காமலிருக்க, கடவுளை வேண்டுவோமாக.

தேவன் மாயம் said...

ஒரு சிறுவனின் அறியாத வலியை, நன்கு அறியும்படி காண்பித்திருக்கிறீர்கள். அதற்கு முதற்கண் பாராட்டுக்கள்.

பெற்றோர் இல்லாமல், விளையாட பொருட்கள் இல்லாமல், உற்றார் உறவினர் எதுவுமில்லாமல், அந்த துளிரின் நம்பிக்கை மட்டுமே இறுதியில் மிச்சமிருப்பதாக எழுதியிருப்பதும், நம் மனதைக் குடையும் வரிகளாவன..

எந்த மருத்துவமனையில் கிடப்பானோ என்று ஏங்கவைக்கும் கவிதை.,.

நாளை இதுபோன்று பல முளைக்காமலிருக்க, கடவுளை வேண்டுவோமா////

நன்கு ஆழ்ந்து கருத்துத் தந்துள்ளீர்கள்
நன்றி..

Muruganandan M.K. said...

சரி என்
அம்மா,அப்பாவை
பார்த்தீர்களா?

மனத்தை உலுக்குகிறது இவ்வரிகள்

தேவன் மாயம் said...

சரி என்
அம்மா,அப்பாவை
பார்த்தீர்களா?

மனத்தை உலுக்குகிறது இவ்வரிகள்///

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

cheena (சீனா) said...

//யாருக்கும் சொல்லதீங்க!
ஒரு காகிதக் கப்பல்
செஞ்சு
ஒளிச்சு வைச்சிருக்கேன்!
அதுல
அம்மா,அப்பா
நான் எல்லாம்
போயிருவோம்.\\

வார்த்தைகளின் விளையாட்டில் குழந்தையின் சோகம் மனதை குடைகிறது

நண்பர் ஜமாலின் மறுமொழியினை அப்படியே வழிமொழிகிறேன்.

நல்வாழ்த்துகள் நண்ப தேவா

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory