Friday, 6 February 2009

போலிகள் உசார்!!போலீஸ் உசார்!!

போலி சாமியார், போலி வைத்தியர்(நான் இல்லை) கேட்டு இருக்கோம்! ஆனா போலி நீதிபதி கேள்விப்பட்டு இருக்கீங்களா?

எங்கேன்னு கேக்கிறீங்க? வேற எங்கெ? சட்டம் ஒழுங்கு கோலோச்சும்(தூய தமிழ் வந்து விழுது)......................
நம் தமிழ்நாட்டில்தான்.
.மாப்பு!!!(அதாங்க நம்ம ஆளு) ஒரு காரை லோன்ல செட் பண்ணி சைரன்,தேசிய கொடின்னு செம அளப்பர............
கேட்டா கேரளாவில் ஓய்வு பெற்ற நீதிபதி!

போலீஸ் சல்யூட்,குவாலிஸ் கார்னு ஏக ரகளை! பக்கத்து வீட்டு பார்ட்டி சந்தேகமாகி போலீஸில் போட்டுக்குடுத்துட்டான்..

போலீஸ் விசாரிச்சா பார்ட்டி லண்டன் போயிட்டார்னு கப்ஸா.

மொபைலில் கால் பண்ணா லண்டனில் இருந்து நேரா வந்து பார்க்கிறேன்னு டூப்.
உள்ளூரிலிருந்து சிக்னல் வருதென்னு பார்த்து வீட்டிலே போய் தேடினா பார்ட்டி வீட்டில் மறைவா இருந்தார்.
அப்புறம் அவர் சிங்கப்பூர் ரிடர்னாம்!!!
இதனால் தெரிவிப்பது என்னவென்றால் சிங்கப்பூர் ஆட்களிடம் ஜாக்கிரதை....இஃகி..இஃகி..இஃகி..
கொசுறு: காரை லோன் வாங்க போலி அட்ரெஸ் கொடுத்து உள்ளார். அதுக்கு பணம் கட்டாம நம்பரை மாத்தி விட்டார்!!!!!!!!!! சூப்பர் நீதிபதி..

இப்ப்டின்னா போலீஸை பாத்து போலீசே ஓடுறதை கேட்டு இருக்கீங்களா? நம்ம கோயம்புத்துரிலதான்!

சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்து சில நாட்களே ஆன திரைப்படங்களின் சிடி விக்கிறாங்கன்னு திருட்டு வீடியோ ஒழிப்பு ஏட்டு,போலீஸ்கு ரகசிய தகவல் கிடைத்து

இடத்திற்கு விரைந்த திருட்டு வீடியோ ஒழிப்பு போலீஸ் மக்கள் அவனுங்கட்ட 10000 கேட்டு தொல்லை! எப்படி!

எவனோ இதையும் போட்டுக்கொடுத்து விட்டான்..... (போட்டுக்குடுக்கிறவன் தொல்லை தாங்க முடியலைப்பா! தொழில் பண்ண வுட மாட்றானுங்க!!!)
அப்போது அங்கு அதிரடியாக வந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பியைக் கண்டதும் லஞ்ச ஒழிப்பு போலிஸ் சுவர் ஏறிக் குதித்து தப்பியோடி விட்டனர்( நம்ப ஆளுங்க ஓடுனா புடிக்க முடியுமா?)

சும்மா உக்காராம ஏதாவது எழுதுவோம்னு ஏதோ எழுதினேன்.

.a href="http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_06.html"

அப்படியே பொடிநடையா மேலே உள்ள வலைச்சரம் பக்கம் வாங்க.இன்னிக்கு முழுக்க கடை ரம்யாக்கா
தான்!
வந்து ரெண்டு கும்மி அடுச்சிட்டு போங்க..

18 comments:

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

SanJaiGan:-Dhi said...

நம்ம ஊர்க்கார ஆளு ஒருத்தரே பாண்டிச்சேரில போயி இதே கதைய அளந்து உட்டிருக்காரு!

டில்லில ஜட்ஜா இருக்குறதா சொல்லி அங்க இருக்குற போலீஸ் காரங்ககிட்ட எடுபிடி வேலை வேற வாங்கி இருக்காரு!

அலப்பறை ஓவரா போகவே ஒரு போலீஸ் காரரு சந்தேகப் பட்டு டெல்லிக்கு போன் போட்டு விசாரிச்சிருக்காரு!

அப்புறம் என்ன! அண்ணனும்க்கொ கொஞ்ச நாள் அங்கயே மாமியார் வீட்டு மரியாதைதான்!

:))

(இந்த அளப்பறைக்கு கொஞ்ச நாள் முன்னாடிதான் தான் லாயருன்னு சொல்லிட்டு சென்னைக்கு வந்து நம்ம பிரபல பதிவர் ஒருத்தரையும் ஏமாத்தி 1500 ரூவா ஆட்டையா போயிட்டு போயிட்டாராம். அதுக்கப்புறம்தான் பதவி உயர்வு பெற்று ஜட்ஜாயிட்டாராம்)

http://pithatralgal.blogspot.com/2006/01/blog-post_19.html

Sinthu said...

இவர்களைத் தான் பிழைக்கத் தெரிந்த மனிதர்கள் என்பார்களோ?

’டொன்’ லீ said...

//இதனால் தெரிவிப்பது என்னவென்றால் சிங்கப்பூர் ஆட்களிடம் ஜாக்கிரதை....இஃகி..இஃகி..இஃகி..

//

ஆகா...கண்டிக்கிறேன்....:-(((

thevanmayam said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

மிக்க நன்றி வலைப்பூக்கள்!!
நான் வந்து பார்க்கிறேன்..

தேவா...

thevanmayam said...

நம்ம ஊர்க்கார ஆளு ஒருத்தரே பாண்டிச்சேரில போயி இதே கதைய அளந்து உட்டிருக்காரு!

டில்லில ஜட்ஜா இருக்குறதா சொல்லி அங்க இருக்குற போலீஸ் காரங்ககிட்ட எடுபிடி வேலை வேற வாங்கி இருக்காரு!

அலப்பறை ஓவரா போகவே ஒரு போலீஸ் காரரு சந்தேகப் பட்டு டெல்லிக்கு போன் போட்டு விசாரிச்சிருக்காரு!

அப்புறம் என்ன! அண்ணனும்க்கொ கொஞ்ச நாள் அங்கயே மாமியார் வீட்டு மரியாதைதான்!

:))

(இந்த அளப்பறைக்கு கொஞ்ச நாள் முன்னாடிதான் தான் லாயருன்னு சொல்லிட்டு சென்னைக்கு வந்து நம்ம பிரபல பதிவர் ஒருத்தரையும் ஏமாத்தி 1500 ரூவா ஆட்டையா போயிட்டு போயிட்டாராம். அதுக்கப்புறம்தான் பதவி உயர்வு பெற்று ஜட்ஜாயிட்டாராம்)
///

pathivarkaL ushar
தங்கள் வருகைக்கு நன்றி..

நட்புடன் ஜமால் said...

அண்ணா தேவா அண்ணா ...

பல முகங்கள் கொண்டு வலையில் உலா வாரியலே ...

சமீபமா ரிப்போர்டர் தேவா.

thevanmayam said...

இவர்களைத் தான் பிழைக்கத் தெரிந்த மனிதர்கள் என்பார்களோ?//

ஆமாம்..

நட்புடன் ஜமால் said...

\\அப்புறம் அவர் சிங்கப்பூர் ரிடர்னாம்!!!
இதனால் தெரிவிப்பது என்னவென்றால் சிங்கப்பூர் ஆட்களிடம் ஜாக்கிரதை....இஃகி..இஃகி..இஃகி..\\

ஆஹா ... என்ன தேவா ...

thevanmayam said...

அண்ணா தேவா அண்ணா ...

பல முகங்கள் கொண்டு வலையில் உலா வாரியலே ...

சமீபமா ரிப்போர்டர் தேவா.///

ஒருமுகமாய் நின்றுன்னு ஆறுமுகம் பற்றி ஒரு பாடல் உண்டு...

thevanmayam said...

\\அப்புறம் அவர் சிங்கப்பூர் ரிடர்னாம்!!!
இதனால் தெரிவிப்பது என்னவென்றால் சிங்கப்பூர் ஆட்களிடம் ஜாக்கிரதை....இஃகி..இஃகி..இஃகி..\\

ஆஹா ... என்ன தேவா ...///

அய்யா நியுஸில் அப்படித்தான் உள்ளது அய்யா...(உண்மை)

thevanmayam said...

/இதனால் தெரிவிப்பது என்னவென்றால் சிங்கப்பூர் ஆட்களிடம் ஜாக்கிரதை....இஃகி..இஃகி..இஃகி..

//

ஆகா...கண்டிக்கிறேன்....:-(((///

எதிர்பார்த்தேன்!
உண்மையைச்சொன்னா
லூஸுன்கிறாங்க!!!
தர்ம அடி கிடைக்கும் போல!

அ.மு.செய்யது said...

காலையில் தான் செய்தி நாளிதழில் இந்த செய்தியை படித்தேன்..

இவ்ளோ பாஸ்ட் அப்டேட்டா....

அ.மு.செய்யது said...

//அப்புறம் அவர் சிங்கப்பூர் ரிடர்னாம்!!!
இதனால் தெரிவிப்பது என்னவென்றால் சிங்கப்பூர் ஆட்களிடம் ஜாக்கிரதை....இஃகி..இஃகி..இஃகி..//

ஆஹா...சிக்கிட்டீங்களே !!!!!!!

thevanmayam said...

காலையில் தான் செய்தி நாளிதழில் இந்த செய்தியை படித்தேன்..

இவ்ளோ பாஸ்ட் அப்டேட்டா....///

அதிகாலை வேறு வேலை

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் பாஸ்ட், ராஜதானி வேகம், தேவாவின் அப்டேஷன் வேகம்...

எதுல தான் போலி வரது அப்படின்னு விவஸ்தையே இல்லாம போச்சுங்க..

இந்த பதிவையும் எல்லோரும் படிச்சு பாருங்க... போலீஸ் லஞ்சம் வாங்க ஆபீஸ் நடத்துன கதை புரியும் ..

http://arivili.blogspot.com/2009/02/vcd.html

thevanmayam said...

சூப்பர் பாஸ்ட், ராஜதானி வேகம், தேவாவின் அப்டேஷன் வேகம்...

எதுல தான் போலி வரது அப்படின்னு விவஸ்தையே இல்லாம போச்சுங்க..

இந்த பதிவையும் எல்லோரும் படிச்சு பாருங்க... போலீஸ் லஞ்சம் வாங்க ஆபீஸ் நடத்துன கதை புரியும் ..
//
வருகைக்கு நன்றி!
போலிகள் எல்லாவற்றிலும்
உள்ளனர்.
கதையை படித்துப்பார்க்கிறேன்...

'முச்சந்தி'முரளி said...

:)

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory