Saturday, 28 February 2009

மரணம் நேரடி ஒளிபரப்பு!

சில்பா செட்டியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்

கலந்து கொண்டு நிகழ்ச்சியின்போது இனவெறியுடன்

நடந்து கொண்ட நடிகை ஜேட் கூடி நேற்று ஜேக்

ட்வீட் என்ற வாலிபரைத் திருமணம் செய்து

கொண்டார்!

அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற ஜேக்

முன் வந்தார். அதன்படி, எஸ்ஸெக்ஸ் என்ற இடத்தில்

உள்ள டவுன் ஹால் என்ற ஓட்டலில் வைத்து

இருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது.

ஏன் கடைசி ஆசை என்கிறீர்களா? சில்பாவுடன்

சர்ச்சை ஓய்ந்த நிலையில் ஜேட் கூடிக்கு   கர்ப்பப்பை

வாய் புற்றுநோய் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று

வருகிறார்.

கர்ப்பப்பை புற்றுநோய்க்காக   லண்டன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு

கீமோ தெரபி' சிகிச்சை அளித்ததால் தலையில்

மொட்டை அடிக்கப்பட்டது

அவருக்கு புற்று நோயானது தற்போது

குடல்,கல்லீரல்,மற்றும் அதைச் சுற்றியுள்ள வயிற்றின்

சுவர்களிலும் பரவியுள்ளது!!

ஜேட் கூடியின் உயிருக்கு டாக்டர்கள் இன்னும் சில

வாரங்களே கெடு விதித்துள்ளனர்! 

திருமணத்தை முன்னிட்டு தனி ஹெலிகாப்டர்

மூலமாக நேற்று முன்தினமே ஜேட் கூடி ஓட்டலுக்கு

வந்து சேர்ந்தார். மணமகன் ஜேக், தனது இல்லத்தில்

இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரில் புறப்பட்டு நேற்று

காலை 10 மணிக்கு ஓட்டலுக்கு வந்தார். அதன் பிறகு,

45 நிமிட நேரம் திருமண சடங்குகள் நடைபெற்றன

இன்னும் சில வாரங்களில் இறக்கப்போகும் ஜேட்

கூடியின் திருமணம் மகிழ்ச்சியும் சோகமும்

இழையோட நடந்து முடிந்தது. மணமகன் ஜேக், ஒரு

அடிதடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர் என்பது

குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் தான்

அவருக்கு 18 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது

எனினும், 7 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே

செல்ல கூடாது, எஸ்ஸெக்சில் உள்ள ஒரே

முகவரியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது

உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சில வாரங்களுக்கு முன்

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது புது மனைவியுடன் முதலிரவு

நடத்துவதற்காக 7 மணிக்கு மேல் வீட்டில் இருக்க

வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் ஒரு நாளுக்கு

தளர்த்தப்பட்டு உள்ளது.

என் வாழ்நாளில் அதிகநேரம் நான் டி.வி. சினிமாவில்

கழித்துள்ளேன்  என் இறப்பையும் நேரடி ஒளிபரப்பு

செய்யவேண்டும்என்று விரும்புகிறேன் என்று

கூறுகிறார்.இதன் மூலம் இளம் வயதினருக்கு இந்த

வியாதியுடன் மன உறுதியுடன் வாழ்வதைப் பற்றி

நேரடியாக தெரிந்து கொள்ளட்டும் என்கிறார்..

27 வயதே ஆன அவருக்கு பாபி(5

வயது),ஃப்ரெடி(4 வயது) என்ற இரு குழந்தைகள்

உள்ளனர்.

என்ன மரணத்தை நேரடியாகப் பார்ப்பது சரியா? தப்பா? 

34 comments:

cheena (சீனா) said...

மரணத்தை நேரடியாகப் பார்ப்பது அவரவர் மன நிலையைப் பொறுத்தது. மரணம் சொல்லி வைத்து வருவதில்லை. நேரம் குறித்து ஒளி பரப்புவதற்கு

thevanmayam said...

மரணத்தை நேரடியாகப் பார்ப்பது அவரவர் மன நிலையைப் பொறுத்தது. மரணம் சொல்லி வைத்து வருவதில்லை. நேரம் குறித்து ஒளி பரப்புவதற்கு///

இறக்கும்தறுவாயில் நேரடி ஒளிபரப்பு!!!

இராகவன் நைஜிரியா said...

எல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.

லவ்டேல் மேடி said...

// cheena (சீனா) சொன்னது…

மரணத்தை நேரடியாகப் பார்ப்பது அவரவர் மன நிலையைப் பொறுத்தது. மரணம் சொல்லி வைத்து வருவதில்லை. நேரம் குறித்து ஒளி பரப்புவதற்கு //ரிப்பீட்டே .......

thevanmayam said...

மரணத்தை நேரடியாகப் பார்ப்பது அவரவர் மன நிலையைப் பொறுத்தது. மரணம் சொல்லி வைத்து வருவதில்லை. நேரம் குறித்து ஒளி பரப்புவதற்கு //ரிப்பீட்டே ......///
மரணத்தை நேரடியாகப்பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது!!

thevanmayam said...

எல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///

சொல்லுங்க!!! ஆணியெல்லாம் முடிந்ததா?

அபுஅஃப்ஸர் said...

வருந்த தக்க செய்தி

மரணம் சொல்லி வைத்துக்கொண்டு வருவதில்லை (தற்கொலை தவிர), அதை எப்படி நேரடி ஒலிப்பரப்ப முடியும், அப்படியே ஓரிரண்டு நாட்களுக்கு முன்னரே அவருடைய நடவடிக்கைகளை தூங்குவது உட்பட நேரடி ஒளிப்பரப்பினால் அதுவே அவரை ஒவ்வொரு நிமிடமும் கொல்கிறகிற ஃபீலிங்ஸ்தான்.

அபுஅஃப்ஸர் said...

//thevanmayam கூறியது...
எல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///

சொல்லுங்க!!! ஆணியெல்லாம் முடிந்ததா?
//

இன்னிக்கு ஞாயிறு, வீட்டிலே ஆணியாம்..

thevanmayam said...

/thevanmayam கூறியது...
எல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///

சொல்லுங்க!!! ஆணியெல்லாம் முடிந்ததா?
//

இன்னிக்கு ஞாயிறு, வீட்டிலே ஆணியாம்..///

எங்கே போனாலும் ஆணியா/

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam கூறியது...

எல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///

சொல்லுங்க!!! ஆணியெல்லாம் முடிந்ததா? //

ஆணியெல்லாம் முடியக்கூடாது மருத்துவரே... முடிஞ்சுட்டா வூட்டுக்கு அனுப்பிடுவாங்க..

குறைஞ்சு இருக்கு..

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் கூறியது...

//thevanmayam கூறியது...
எல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///

சொல்லுங்க!!! ஆணியெல்லாம் முடிந்ததா?
//

இன்னிக்கு ஞாயிறு, வீட்டிலே ஆணியாம்..//

வூட்ல ஆணி புடுங்காத கணவன் யாருங்க இருக்க முடியும். வெளியில் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளாமல் இருக்கலாம். கல்யாணமான எல்லோரும் வூட்டில் ஆணி புடுங்குபவரே...

thevanmayam said...

/ thevanmayam கூறியது...

எல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///

சொல்லுங்க!!! ஆணியெல்லாம் முடிந்ததா? //

ஆணியெல்லாம் முடியக்கூடாது மருத்துவரே... முடிஞ்சுட்டா வூட்டுக்கு அனுப்பிடுவாங்க..

குறைஞ்சு இருக்கு.///

ரொம்ப சரி!!!

thevanmayam said...

// அபுஅஃப்ஸர் கூறியது...

//thevanmayam கூறியது...
எல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///

சொல்லுங்க!!! ஆணியெல்லாம் முடிந்ததா?
//

இன்னிக்கு ஞாயிறு, வீட்டிலே ஆணியாம்..//

வூட்ல ஆணி புடுங்காத கணவன் யாருங்க இருக்க முடியும். வெளியில் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளாமல் இருக்கலாம். கல்யாணமான எல்லோரும் வூட்டில் ஆணி புடுங்குபவரே...///

எல்லோரும் ஒரே லிஸ்ட்தான்!!!

வேத்தியன் said...

நேரடி மரண ஒளிபரப்பு...
நினைத்தாலே பயமாய் இருக்கிறது தேவா சாரே...
இப்பிடி ஒரு ஒளிபரப்பு நடக்கக்கூடாது...

thevanmayam said...

நேரடி மரண ஒளிபரப்பு...
நினைத்தாலே பயமாய் இருக்கிறது தேவா சாரே...
இப்பிடி ஒரு ஒளிபரப்பு நடக்கக்கூடாது...//

நமக்கு காட்டமாட்டார்கள் என நினைக்கிறேன்!!!

அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா சொன்னது…
// அபுஅஃப்ஸர் கூறியது...

//thevanmayam கூறியது...
எல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///

சொல்லுங்க!!! ஆணியெல்லாம் முடிந்ததா?
//

இன்னிக்கு ஞாயிறு, வீட்டிலே ஆணியாம்..//

வூட்ல ஆணி புடுங்காத கணவன் யாருங்க இருக்க முடியும். வெளியில் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளாமல் இருக்கலாம். கல்யாணமான எல்லோரும் வூட்டில் ஆணி புடுங்குபவரே...
//

ஹா ஹா கடப்பாரையோ? தாங்களே

ஆமாம் ஆமாம் ஆமாம் தல சொன்னா சர்தான்

நட்புடன் ஜமால் said...

அப்படியே நேரடி ஒளி பரப்பினாலும்
அதே வேலையா உட்கார்ந்து பார்த்து கொண்டிருக்க இயலாது

திகல் படம் பார்க்கவே பயமாயிருக்கு, இதுல நேரடி ஒளி பரப்பு ...

இத பார்த்து இதயம் நின்று இறந்துவிட்டார்கள் அப்படின்னு செய்திகள் வரலாம்.

இராகவன் நைஜிரியா said...

//அபுஅஃப்ஸர் சொன்னது…

//இராகவன் நைஜிரியா சொன்னது…
// அபுஅஃப்ஸர் கூறியது...

//thevanmayam கூறியது...
எல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///

சொல்லுங்க!!! ஆணியெல்லாம் முடிந்ததா?
//

இன்னிக்கு ஞாயிறு, வீட்டிலே ஆணியாம்..//

வூட்ல ஆணி புடுங்காத கணவன் யாருங்க இருக்க முடியும். வெளியில் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளாமல் இருக்கலாம். கல்யாணமான எல்லோரும் வூட்டில் ஆணி புடுங்குபவரே...
//

ஹா ஹா கடப்பாரையோ? தாங்களே

ஆமாம் ஆமாம் ஆமாம் தல சொன்னா சர்தான்
//

அபு தம்பி ரொம்ப சந்தோஷமா...

அண்ணனுக்கு கடப்பாரை என்றால் தம்பிகளுக்கு எல்லாம் கொண்டாட்டமா..

ம் வாழ்க அப்பு

ராஜ நடராஜன் said...

தலைப்பை படித்து விட்டு தயங்கி தயங்கி உள்ளே வந்தேன்.ஜெட்டி பற்றி மேலோட்டமாக தெரிந்து இருந்தாலும் நீங்கள் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியூட்டிவை.

அபுஅஃப்ஸர் said...

என்னா தேவா சார்
இப்போவெல்லாம் காலை தேநீர் தாரதே இல்லியே, என்னாச்சி

அபுஅஃப்ஸர் said...

//
ஹா ஹா கடப்பாரையோ? தாங்களே

ஆமாம் ஆமாம் ஆமாம் தல சொன்னா சர்தான்
//

அபு தம்பி ரொம்ப சந்தோஷமா...

அண்ணனுக்கு கடப்பாரை என்றால் தம்பிகளுக்கு எல்லாம் கொண்டாட்டமா..

ம் வாழ்க அப்பு//

ஹா ஹா ஹா

ஏதாவது ஹெல்ப் வேணுமா

அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா கூறியது...
எல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.
//

தல சொன்னா சரிதான்

அபுஅஃப்ஸர் said...

//thevanmayam கூறியது...
மரணத்தை நேரடியாகப் பார்ப்பது அவரவர் மன நிலையைப் பொறுத்தது. மரணம் சொல்லி வைத்து வருவதில்லை. நேரம் குறித்து ஒளி பரப்புவதற்கு //ரிப்பீட்டே ......///
மரணத்தை நேரடியாகப்பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது!!
//

அய்யா நீங்க மருத்துவர், சகஜம்
எங்களை மாதிரி அப்பாவியை நினைத்து பாருங்க‌

அபுஅஃப்ஸர் said...

25

அபுஅஃப்ஸர் said...

அப்பாடா

25 ‍ கால் சதம் போட்டாச்சி

ஆதவா said...

mmm... பாவம் அந்த அக்கா....

thevanmayam said...

அப்பாடா

25 ‍ கால் சதம் போட்டாச்சி///

அபு வாழ்க

thevanmayam said...

தலைப்பை படித்து விட்டு தயங்கி தயங்கி உள்ளே வந்தேன்.ஜெட்டி பற்றி மேலோட்டமாக தெரிந்து இருந்தாலும் நீங்கள் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியூட்டிவை.///

நன்றி !!
ரொம்ப நாளாச்சு பாத்து!!!

thevanmayam said...

mmm... பாவம் அந்த அக்கா.//

காலன் கொடுமையானவன்

Sinthu said...

இதைப் பார்த்தாலாவது நம்ம ஆக்களுக்கு பயம் வரட்டும் விட்டிடுங்க பாத்திட்டுப் போகட்டும்.
பொதுவாக எல்லோரும் கடைசி ஆசையை நிறைவேற்றுவது தானே வழக்கம்.

ஆமா...,
அவர்கள் எத்தனை மணிக்கு சாவாங்க என்று தெரியுமா? அப்புறம் எப்படி ஒளிபரப்புவாங்க.

thevanmayam said...

இதைப் பார்த்தாலாவது நம்ம ஆக்களுக்கு பயம் வரட்டும் விட்டிடுங்க பாத்திட்டுப் போகட்டும்.
பொதுவாக எல்லோரும் கடைசி ஆசையை நிறைவேற்றுவது தானே வழக்கம்.

ஆமா...,
அவர்கள் எத்தனை மணிக்கு சாவாங்க என்று தெரியுமா? அப்புறம் எப்படி ஒளிபரப்புவாங்க.///

அவங்க நிலை மோசமானதிலிருந்து 24/7லைவ் பண்ணுவாங்க..

எட்வின் said...

நேற்றா(27.2.2009) திருமணம் நிகழ்ந்தது? நண்பரே. ஒன்றும் புரியவில்லை. திருமணம் ஒரு வாரத்திற்கு முன்னராகவே நடந்ததாக ஞாபகம்... இது குறித்த எனது பதிவு இங்கே... http://thamizhanedwin.blogspot.com/2009/02/jade.html

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

"வியாதியுடன் மன உறுதியுடன் வாழ்வது" பாராட்டத்தக்கது. ஆனால் மரணத்தை ஒளிபரப்பு செய்வது எந்தவகையில் பொருத்தமானது?
சிந்தனையை கிளறியதற்கு நன்றி

பிரியமுடன் பிரபு said...

மரணத்தை நேரடியாகப் பார்ப்பது அவரவர் மன நிலையைப் பொறுத்தது. மரணம் சொல்லி வைத்து வருவதில்லை. நேரம் குறித்து ஒளி பரப்புவதற்கு

நடக்கட்டும்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory