Friday, 27 February 2009

இறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்!!!

 

ரஹ்மானுக்குக் கோபமா?

         இந்தியாவுக்குப்பெருமை சேர்த்த ஆஸ்கார்

நாயகன் இந்தியா வந்து சேர்ந்தார்.சென்னையில்பிரஸ்

மீட் ஹாலுக்கு வந்த அவரைச் சுமார் 50 போட்டோ

கிராபர்களுக்கு மேல் சூழ்ந்துகொண்டார்கள்.

கிட்டத்தட்ட 20 நிமிடம் அவரை மாற்றி மாற்றிப் படம் எடுத்துக்கொண்டே இருந்தார்கள். 

"நான் இங்கேதான் இருப்பேன். எங்கேயும் ஓடிட மாட்டேன். மும்பை போட்டோ கிராபர்கள் மாதிரி செட் செட்டா எடுத்துக்கொள்ளுங்களேன்" என்று ரஹ்மான் கேட்டுக்கொண்டும் ஒருவரும் காதில் வாங்கிக்கொள்வதாக இல்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர், "அப்படின்னா நான் கிளம்புறேன்" என்று மூன்று முறை செல்லக் கோபம் காட்டினார். ம்ஹும், அதற்கும் சளைத்தால்தானே? வேறு வழியில்லாமல் அவர்களின் போக்குக்கே விட்டுவிட்டார்.

ஒரு வழியாக அவர்கள் அவரை விட்டு விலகியதும்தான் பிரஸ் மீட் துவங்கியது. கேள்வி கேட்கவும் நிருபர்கள் ஒருவரை ஒருவர் முண்டிக்கொண்டார்கள். 

இரண்டு பகுதிகளாக நடைபெற்ற பிரஸ் மீட்டில், முதலில் நடந்த பிரிண்ட் மீடியா பிரஸ் மீட்டில்தான் இந்தக் களேபரம். இரண்டாவதாக நடந்த எலக்ட்ரானிக் மீடியா பிரஸ் மீட்டில் ஒரு களேபரமும் இல்லை.

"இங்கே ரொம்ப டீசன்ட்டா இருக்கே?" என்று கமெண்ட் அடித்துக்கொண்டே சீட்டில் அமர்ந்தார் ரஹ்மான். எல்லாக் கேள்விகளுக்கும் சரமாரியான ஜாலி மூடில் பதிலளித்துக்கொண்டிருந்தவர், உங்களுக்கு எம்பி பதவி கொடுக்கப் போறதா ஒரு பேச்சிருக்கே என்று கேட்டதற்கு "ஐயய்யோ, வேண்டாம்" என்று பதறினார்.

 

 

மரணத்திற்கு பின் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருது

 

ஹீத் லெட்ஜர்

அதிக அளவு போதையில் இறந்தவருக்கு ஆஸ்கார் விருது!!

தி டார்க் நைட் படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்ற ஹீத் லெட்ஜருக்கு ஆஸ்கர் விருது அவரது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டுள்ளது.

லெட்ஜருக்கு அளிக்கப்பட்ட விருதை அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

டிசி காமிக்ஸ்-ன் பேட்மேன் தொடரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் தி டார்க் நைட்.

இந்தப் படத்தில் ஹீத் லெட்ஜர் கிலௌன் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம், போதை மருந்தை அதிக அளவில் உட்கொண்டதால் ஹீத் லெட்ஜர் மரணம் அடைந்தார்.

எனினும் அவரது நடிப்பை போற்றும் வகையில் சிறந்த துணை நடிகருக்கான விருது ஹீத் லெட்ஜரின் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
இது ஹீத் லெட்ஜரின் சாதனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்று அவரது தந்தை கிம் லெட்ஜர் தெரிவித்தார்...

14 comments:

வேத்தியன் said...

இதோ வரேன்...
1st !!!

வேத்தியன் said...

ரஹ்மானையும் அரசியலுக்கு இழுக்காம விடமாட்டாங்க போல???
:-)
ரஹ்மான் போகமாட்டார்...
அறிவுள்ளவர்...
:-)))

thevanmayam said...

ரஹ்மானையும் அரசியலுக்கு இழுக்காம விடமாட்டாங்க போல???
:-)
ரஹ்மான் போகமாட்டார்...
அறிவுள்ளவர்...///
வாங்க வேத்தியன்!
ரஹ்மான் புத்திசாலி!!

ஆதவா said...

இறந்த்வரின் குடும்பம் ஆஸ்கரைப் பெற்றுக் கொண்டதும்... நெகிழ்வாக இருந்தது!!!

பிரஸ் Vs ஏ.ஆர்.....

அவர் ரொம்ப சகிச்சுக்கிட்டார்!!!!! வேறு என்ன சொல்ல???

அ.மு.செய்யது said...

நம்மூர்ல மரணத்திற்கு பிறகு வழஙக்ப்படும் பரம்வீர் சக்ரா விருதுக்கு தாங்க மதிப்பு அதிகம்.

அந்த மாதிரி தான் அங்கயும்.

அபுஅஃப்ஸர் said...

அனைவரின் பிடியில் ரகுமான்

Anonymous said...

"போதை மருந்தை அதிக அளவில் உட்கொண்டதால் ஹீத் லெட்ஜர் மரணம் அடைந்தார்"

This is not exactly right he died of drug overdose but it was not recreational drug but doctor prescribed drug for sleep deprivation and anxiety related issues

Anonymous said...

The report concludes, in part, "Mr. Heath Ledger died as the result of acute intoxication by the combined effects of oxycodone, hydrocodone, diazepam, temazepam, alprazolam and doxylamine."[13][15] It states definitively: "We have concluded that the manner of death is accident, resulting from the abuse of prescription medications."[13][15] The medications found in the toxicological analysis are commonly prescribed in the United States for insomnia, anxiety, depression, pain, and/or cold symptoms

நட்புடன் ஜமால் said...

உலகளாவிய தகவலையும் உடனுக்குடன் ...

எப்படிங்க ...

’டொன்’ லீ said...

தலைப்பு தப்பு...ஆட்சேபிக்கிறேன்...

:-)

Rajeswari said...

நீங்க என்ன பேப்பர் வாங்குறீங்க .தினமும் உங்க பதிவுகளை மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறேன் .

SASee said...

தலைப்பைப் பார்த்து கொஞ்சம் பயந்து போனேன்.
சில தமிழ் பத்திரிகைகளிளும் இப்படியான தலைப்புகளைப் படித்துள்ளேன்.

நீங்கள் தந்த தகவலுக்கு நன்றி

தகவல் வேட்டை தொடரட்டும்.....தேவா

ஜி said...

//போதை மருந்தை அதிக அளவில் உட்கொண்டதால் ஹீத் லெட்ஜர் மரணம் அடைந்தார். //

ஆஹா.. ஏங்க இப்படி செய்தியையே மாத்துறீங்க?? :)) அவருக்கு கொடுத்த மருந்துல ஏதோ களேபரம் ஆகி அவரு எறந்துட்டாரு... Drugs ன உடனே போதை மருந்துன்னு இப்படி மாத்திட்டீங்களே.. :))

கார்த்திகைப் பாண்டியன் said...

நம்ம பத்திரிக்கைகாரங்களை யாராலையும் திருத்த முடியாது டாக்டர்.. ரெஹ்மான் ரொம்ப பொறுமைசாலி..

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory