Tuesday 21 July 2009

இப்படி நடக்க விடலாமா?

எல்லோருக்கும் எல்லா விசயமும் தெரியும். இந்தத் தகவல் தொழில் நுட்ப காலத்தில் எல்லா விபரங்களும் புத்தகங்களில், தொலைக்காட்சியில்,வலைப் பக்கங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

இருந்தாலும் நோய்கள் பற்றி நிறைய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை என்றெ கூறலாம்.

சக்கரை நோய் சாதாரணமாக எல்லாக் குடும்பங்களிலும் காணப்படும் ஒன்று. ஆனால் சிகிச்சையில் அக்கறை செலுத்தா விட்டால் என்ன ஏற்படும் என்று சுருக்கமாகக் கீழே சொல்லி இருக்கிறேன். இவை மிக முக்கியமான குறிப்புகள். 

சக்கரை நோயாளிகள் சக்கரை கண்டு பிடிக்கப்பட்ட நாளிலிருந்தே கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

மாத்திரையால் சக்கரை குறையவில்லையெனில் உடனடியாக இன்சுலினுக்கு மாறிவிட வேண்டும்.

1 மாத்திரை பிறகு 2 மாத்திரை என்று கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றும் STEP CARE THERAPHY இப்போது கடைப்பிடிக்கப் படுவதில்லை.

சக்கரையைக் குறைக்க உடனடியாக ஒன்றுக்கும் மேற்பட்ட வகை மாத்திரைகளை உண்பது அப்படியும் சக்கரை குறையாவிடில் இன்சுலின் சிகிச்சைக்கு மாறுவதே சிறந்தது. ( சில நோயாளிகள் இன்சுலின் போட வேண்டும் என்றால் வேண்டாம் மாத்திரையே போதும் என்று அடம் பிடிப்பார்கள்!!!).

சக்கரைக்கு தொடர் சிகிச்சை பெறுவது அவசியம். கொழுப்புச்சத்து மற்றும் சிறுநீரக,கண் பரிசோதனை அவசியம்.

ஓயாமல் மருத்துவர் சிகிச்சைக்கு வரச்சொல்லி காசு பிடுங்குகிறார்கள் என்று  ஒரு சாரார் குற்றம் சுமத்துவார்கள். தொடர்ந்து இரத்தப் பரிசோதனை செய்யவேண்டும்,  சொந்தமாக ரத்த சக்கரை சோதிக்கும் மிஷின் வாங்கி ஒரு நோட்டுப் போட்டு சக்கரை அளவைச் சோதித்துக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் செய்ய மாட்டார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்தால் கட்டாயம் தொடர் பரிசோதனை செய்துகொள்வதன் அவசியத்தைப் புரிந்துகொள்வார்கள்.

1.எனக்கு சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளது. நான் ஏன் தொடர் சிகிச்சைக்கு வர வேண்டும் என்று மாத்திரைகளை மட்டும் சாப்பிட்டு வந்தார் ஒரு நோயாளி. 2 ஆண்டுகளுக்குப் பின் கால்கள் வீங்கிவிட்டது. பரிசோதித்தபோது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு இருந்தது. டயலிசிஸ் செய்ய வாரம் 1500, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தால் சிகிச்சைக்குப் பின் வாரத்துக்கு 6000 செலவாகும்  என்பது பலருக்குத் தெரிவதில்லை.

சமீபத்தில் என் உறவினர் ஒருவர் இளம் வயது. சக்கரையால் சிறுநீரகம் பாதிக்கப் பட்டது. சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய ஆகும் செலவும் அதன் பிறகு வாரம் 6000 ரூபாய் போல செலவாகும் என்று மருத்துவர்கள் கூறினர். இந்த செலவு செய்ய முடியாது என்பதால் படுத்த படுக்கையாகி 25 நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.

2.கால் பரிசோதனை செய்ய வேண்டும். இதனை நிறைய நோயாளிகள் ஒத்துக் கொள்வதில்லை. இதனால் சக்கரை நோயாளி நன்கு படித்தவர் ஒருவருக்கு காலில் புண் ஏற்பட்டு அந்தப் புண்ணை ஆற்றி சிகிச்சை பெற 50000 செலவானது.

3.கண் பரிசோதனைச் செலவு 100 ரூபாய் வரும். இதைச் செய்தால் ஆரம்பத்திலேயே கண்ணில் கோளாறு வராமல் தடுக்கலாம். ஆனால் விட்டுவிட்டால் கண்ணில் இரத்தக் கசைவைக் கண்டு பிடுத்து சிகிச்சை செய்துகொள்ள  10000 வரை செலவு ஆகும்.

அடிக்கடி செக் அப் செய்துகொள்வதே சிறந்தது. நமக்குத்தான் இன்சூரன்ஸ் இருக்கே பெரிய ஆஸ்பத்திரிகளில் மதுரை,சென்னையில் போய் வைத்தியம் செய்து கொள்வோம் என்று நாளைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போவது ஆபத்து. பிறகு உயிருக்கு ஆபத்து என்று வரும்போது எவ்வளவு செலவுசெய்தாலும் உடல் பழைய நிலைக்கு வராது..

தமிழ்த்துளி தேவா..

44 comments:

Raju said...

அவசியமான பதிவு டாக்டரே...!

Raju said...

ஆமா. சக்கர சக்கரன்னு சொல்றீங்களே அது யாருங்கோ..?
:)

தேவன் மாயம் said...

Blogger டக்ளஸ்... said...

அவசியமான பதிவு டாக்டரே...!///

டக்ளஸ் வருக!

தேவன் மாயம் said...

Blogger டக்ளஸ்... said...

ஆமா. சக்கர சக்கரன்னு சொல்றீங்களே அது யாருங்கோ..?
:)
காலையிலேயே ரவுஸ ஆரம்பித்து விட்டீர்களா?

Ashok D said...

அவசியமான பதிவு.. நன்றிங்க
(உடனே எங்க நைனாவே கவனிக்கனும்)

மங்களூர் சிவா said...

மிக நல்ல விழிப்புணர்வு பதிவு டாக்டர். என் தாயாருக்கு டயபடிஸ் நெடு நாட்களாக இருந்தது, வாரத்திற்கு மூன்று டயாலிசிஸ் செய்து வருகிறோம்.
:(

நட்புடன் ஜமால் said...

நல்ல பதிவு தேவா!

Anbu said...

பயனுள்ள பதிவு சார்.

வால்பையன் said...

சர்க்கரை பயங்கர டெர்ரரான மேட்டரா இருக்கு!

நானும் அடிக்கடி செக் பண்ணிக்கிறேன்!

குடந்தை அன்புமணி said...

மருத்துவர்கள் சொல்றபடி கவனிக்கலைன்னா இப்படி நடக்க விடுமா சக்கரை நோய்?

தேவன் மாயம் said...

Blogger D.R.Ashok said...

அவசியமான பதிவு.. நன்றிங்க
(உடனே எங்க நைனாவே கவனிக்கனும்)///

அப்பாடி! சந்தோசம்!!

தேவன் மாயம் said...

Blogger மங்களூர் சிவா said...

மிக நல்ல விழிப்புணர்வு பதிவு டாக்டர். என் தாயாருக்கு டயபடிஸ் நெடு நாட்களாக இருந்தது, வாரத்திற்கு மூன்று டயாலிசிஸ் செய்து வருகிறோம்.
:(///
உங்கள் அனுபவத்தைப் பதிவிடுங்க!

தேவன் மாயம் said...

Blogger நட்புடன் ஜமால் said...

நல்ல பதிவு தேவா!///

வருக ஜமால்!!

தேவன் மாயம் said...

Blogger Anbu said...

பயனுள்ள பதிவு சார்.///

சரிதான்!!

தேவன் மாயம் said...

வால்பையன் said...

சர்க்கரை பயங்கர டெர்ரரான மேட்டரா இருக்கு!

நானும் அடிக்கடி செக் பண்ணிக்கிறேன்!///

பண்ணுங்க!!

தேவன் மாயம் said...

21 July 2009 23:27
Delete
Blogger குடந்தை அன்புமணி said...

மருத்துவர்கள் சொல்றபடி கவனிக்கலைன்னா இப்படி நடக்க விடுமா சக்கரை நோய்?//

விடாது!

ப்ரியமுடன் வசந்த் said...

சின்ன அட்வைஸ் தேவை தேவா சார் சின்ன பசங்க நாங்க எல்லாம் இந்த சர்க்கரை வராம இருக்க என்ன பண்றது?

தேவன் மாயம் said...

Blogger பிரியமுடன்.........வசந்த் said...

சின்ன அட்வைஸ் தேவை தேவா சார் சின்ன பசங்க நாங்க எல்லாம் இந்த சர்க்கரை வராம இருக்க என்ன பண்றது?///

பதிவாப் போடுவோம்!!

க.பாலாசி said...

//சின்ன அட்வைஸ் தேவை தேவா சார் சின்ன பசங்க நாங்க எல்லாம் இந்த சர்க்கரை வராம இருக்க என்ன பண்றது?///
“பதிவாப் போடுவோம்!!//

கண்டிப்பாய் தங்களின் பதிவை எதிர்பார்க்கிறோம்.

தங்களின் இந்த பதிவு நல்ல பயனுள்ள பதிவு. தொடருங்கள் நாங்களும் தெரிந்துகொள்கிறோம்.

அ.மு.செய்யது said...

பயனுள்ள தகவல்கள்.


ஆமா இந்த விசயம் நம்ம சக்கர சுரேஸூக்கு தெரியுமா ?

butterfly Surya said...

மிக மிக அவசியமான பதிவு.

நன்றி..

Prapa said...

சொல்லாமல் கொல்லும்......இல்லையா..!!!!!!

S.A. நவாஸுதீன் said...

பயங்காட்டுற மாதிரி இருந்தாலும், பயனுள்ள தகவல்கள் தேவா சார். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வாக்கிங் போறதும் நல்லது.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல செய்தி நன்றி டாக்டர் சார்.

சக்கரை நோய் கண்டவர்கள் உணவு கட்டுபாட்டிற்கு சிறம படுகின்றார்களே ஏன்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

அவசியமான பதிவு

யூர்கன் க்ருகியர் said...

தகவலுக்கு நன்றி

Menaga Sathia said...

நல்ல பதிவு!!

கார்த்திகைப் பாண்டியன் said...

அவசியமான பதிவு.. பகிர்வுக்கு நன்றி தேவா சார்..:-))))))

எம்.எம்.அப்துல்லா said...

இதுபோன்ற விழிப்புணர்வு இடுகைகளும் அடிக்கடி தாங்கண்ணே.

:)

Suresh Kumar said...

நல்ல பதிவு இது தான் இப்பது அதிகம் தேவை

அப்துல்மாலிக் said...

டர்ரியல் பதிவு

ஆளாளுக்கு பீதிய கிளப்புது

ரொம்ப ரொம்ப உபயோகமான பதிவு

உலகில் 68% மக்களுக்கு டயாபட்டீஸ் இருப்பதாக தகவல்.. அதுலே அதிகம் பாதிக்க்பாட்டிருப்பது ஏஸியா தான் அதுலேயும் இந்தியா முதல் இடத்துலே இருக்காம்...

இனிமேலாவது இதை ஃபாலோபண்ணுவாங்களா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

என் அம்மாவுக்கு சர்க்கரை நோய் இருப்பதால்,நானும் அப்பப்போ செக் பண்ணிக்கிறேன் டாக்டர்.

*இயற்கை ராஜி* said...

அவசியமான பதிவு

*இயற்கை ராஜி* said...

அவசியமான பதிவு

தேவன் மாயம் said...

21 July 2009 23:54
Delete
Blogger பாலாஜி said...

//சின்ன அட்வைஸ் தேவை தேவா சார் சின்ன பசங்க நாங்க எல்லாம் இந்த சர்க்கரை வராம இருக்க என்ன பண்றது?///
“பதிவாப் போடுவோம்!!//

கண்டிப்பாய் தங்களின் பதிவை எதிர்பார்க்கிறோம்.

தங்களின் இந்த பதிவு நல்ல பயனுள்ள பதிவு. தொடருங்கள் நாங்களும் தெரிந்துகொள்கிறோம்.///

மிக்க நன்றி! கட்டாயம் பதிவிடுவோம்
--------------------------

22 July 2009 00:10
Delete
Blogger அ.மு.செய்யது said...

பயனுள்ள தகவல்கள்.


ஆமா இந்த விசயம் நம்ம சக்கர சுரேஸூக்கு தெரியுமா ?///

சுரேசு இன்னும் வரலையே!!
----------------------------------

22 July 2009 01:02
Delete
Blogger வண்ணத்துபூச்சியார் said...

மிக மிக அவசியமான பதிவு.

நன்றி..///

வாங்க நண்பரே!!
---------------------------------

22 July 2009 01:11
Delete
Blogger பிரபா said...

சொல்லாமல் கொல்லும்......இல்லையா..!!!!!!//

ஆம்!!
------------------------------

22 July 2009 01:14
Delete
Blogger S.A. நவாஸுதீன் said...

பயங்காட்டுற மாதிரி இருந்தாலும், பயனுள்ள தகவல்கள் தேவா சார். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வாக்கிங் போறதும் நல்லது.
///
உண்மைதான்
----------------------------------
22 July 2009 02:26
Delete
Blogger ஆ.ஞானசேகரன் said...

நல்ல செய்தி நன்றி டாக்டர் சார்.

சக்கரை நோய் கண்டவர்கள் உணவு கட்டுபாட்டிற்கு சிறம படுகின்றார்களே ஏன்?///

ருசியை மறக்க முடியாமல்தான்
---------------------------------

22 July 2009 02:32
Delete
Blogger T.V.Radhakrishnan said...

அவசியமான பதிவு///
நன்றி
-------------------------

22 July 2009 02:57
Delete
Blogger யூர்கன் க்ருகியர் said...

தகவலுக்கு நன்றி
நன்றி
------------------------------
22 July 2009 03:37
Delete
Blogger Mrs.Menagasathia said...

நல்ல பதிவு!!
நன்றிங்க
-----------------------------
22 July 2009 03:39
Delete
Blogger கார்த்திகைப் பாண்டியன் said...

அவசியமான பதிவு.. பகிர்வுக்கு நன்றி தேவா சார்..:-))))))
//
கார்த்தி நலமா!!
------------------------------
22 July 2009 04:04
Delete
Blogger எம்.எம்.அப்துல்லா said...

இதுபோன்ற விழிப்புணர்வு இடுகைகளும் அடிக்கடி தாங்கண்ணே.

:)
///
கட்டாயம் தருகிறேன்
-------------------------------
22 July 2009 04:06
Delete
Blogger Suresh Kumar said...

நல்ல பதிவு இது தான் இப்பது அதிகம் தேவை///

ஆம் நண்பரே!!
-------------------------------

22 July 2009 04:27
Delete
Blogger அபுஅஃப்ஸர் said...

டர்ரியல் பதிவு

ஆளாளுக்கு பீதிய கிளப்புது

ரொம்ப ரொம்ப உபயோகமான பதிவு

உலகில் 68% மக்களுக்கு டயாபட்டீஸ் இருப்பதாக தகவல்.. அதுலே அதிகம் பாதிக்க்பாட்டிருப்பது ஏஸியா தான் அதுலேயும் இந்தியா முதல் இடத்துலே இருக்காம்...

இனிமேலாவது இதை ஃபாலோபண்ணுவாங்களா///

சொல்லிக்கொண்டே இருப்போம்
-------------------------------

cheena (சீனா) said...

பயனுள்ள தகவல்கள் அடங்கிய நல்ல இடுகை தேவகுமார்

நல்வாழ்த்துகள்

மணிகண்டன் said...

சார், எவ்வளவு வயசுல இது எல்லாம் செக் பண்ண ஆரம்பிக்கணும் ? சக்கரை இருக்கா ? BP இருக்கான்னு ? எனக்கு இந்த டெஸ்ட்ன்னு வீட்டுல பேச்சு எடுத்தாலே BP ஏறின மாதிரி இருக்கும் !

Admin said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்....

Unknown said...

நல்ல பதிவு....!! அருமை....

Anonymous said...

கன்ஸல்டிங் ஃபீஸ் இல்லாமல் பயன்பெற்றுக் கொண்டு இருக்கிறோம் உங்கள் பதிவுகளால்....தோட்டத்து மலர்கள் எங்கே சார்?

சுந்தர் said...

//இந்த செலவு செய்ய முடியாது என்பதால் படுத்த படுக்கையாகி 25 நாட்களுக்கு முன் இறந்து விட்டார்//

அரசு இலவசமாக டயாலிசிஸ் செய்வதாக கேள்வி பட்டிருக்கிறேனே , இல்லையா டாக்டர் ?
.

விக்னேஷ்வரி said...

நல்ல பதிவு.

"உழவன்" "Uzhavan" said...

தோழி தமிழ் சொன்னது: ல்டிங் ஃபீஸ் இல்லாமல் பயன்பெற்றுக் கொண்டு இருக்கிறோம் உங்கள் பதிவுகளால்..
இதைத்தான் நானும் சொல்றேன். மகிழ்ச்சியும் நன்றியும் :-)

Radhakrishnan said...

மிகவும் அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய அழகிய பதிவு. பணம் ஒரு பிரச்சினையாக இருப்பதுமின்றி, அசட்டுதனமும் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. மிக்க நன்றி.

தமிழ்த்துளி மிகவும் அழகான தலைப்பு.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory