மஞ்சளும் சிகப்புமாய்ப்
பூத்து நிற்கும்
பூவரச மரம்,
ஆணியடித்து சுவரில்
வரிசையாய் மாட்டப்பட்ட
அரிவாள்கள்,
கள்ளிவேலி கட்டிய
தோட்டத்தின் மூலையில்
கயிறில்லாத
ராட்டினத்துடன் கேணி,
பாதி பறித்த
இலைகளுடன்
துளிர்த்து நிற்கும்
தண்டங்கீரையின்
அடித்தண்டுகள்!
எங்கேனும் இவற்றைக்
காணும் போதெல்லாம்
வந்து போகும்
அப்பச்சியின் முகம்!!!
19 comments:
Wow.......
Super Anna...
அழகான கவிதை..!! கிராமத்து நினைவுகளை மீட்டெடுக்கிறது.
நெகிழ்ச்சி....
அப்பச்சி முகம் பார்க்கையில்
அப்பச்சியின் முகம்!!!
........அழகிய கிராமிய மணம் வீசும் கவிதை.
அகல்விளக்கு said...
Wow.......
Super Anna...///
நன்றி அகல்விளக்கு!!
முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...
அழகான கவிதை..!! கிராமத்து நினைவுகளை மீட்டெடுக்கிறது.
///
பழைய நினைவுகளைச் சொல்லும்போது ஒரு திருப்தி வருகிறது!!
ஈரோடு கதிர் said...
நெகிழ்ச்சி....
அப்பச்சி முகம் பார்க்கையில்//
நன்றி கதிர்!!
===============================
Chitra said...
அப்பச்சியின் முகம்!!!
........அழகிய கிராமிய மணம் வீசும் கவிதை.
//
சித்ராவுக்கு நன்றி!!
அருமையான கிராமத்து நினைவுகள். இயற்கையோடு ஒன்றிய வாழ்வுக்கு எதுவும் ஈடாகாது.
அமைதிச்சாரல் said...
அருமையான கிராமத்து நினைவுகள். இயற்கையோடு ஒன்றிய வாழ்வுக்கு எதுவும் ஈடாகாது.///
உண்மைதான் நண்பரே!!
ஒரு நினைவூட்டல் அருமை தேவா
கலக்கிட்டீங்க..
சூப்பர்
நெஞ்சில் ஆணி அடித்து மாட்டி உள்ளீர்கள் அப்பச்சியின் முகத்தை.
அபுஅஃப்ஸர் said...
ஒரு நினைவூட்டல் அருமை தேவா///
திடீரென்று வந்த நினைவை எழுதினேன்!!
அன்பரசன் said...
கலக்கிட்டீங்க..
சூப்பர்
//
உங்கள் கவிதையை தமிழ்மணத்தில் போடலியே!!
ஜெரி ஈசானந்தா. said...
நெஞ்சில் ஆணி அடித்து மாட்டி உள்ளீர்கள் அப்பச்சியின் முகத்தை.///
ஜெரி!!மறவாத நினைவுகள்!!
பச்சியின் முகம் நல்லா இருக்கு. கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
என்னையும் கற்பனை செய்ய தூண்டியது நினைவுகள்....
மலரும் நினைவுகள், அழகு.
கேணி - எவ்வளவு அழகான காலங்கள் அவை.
எனக்கும் வந்து போகுது ஆச்சிமாவின் முகம்.
Post a Comment