மவுனம் சூழ்ந்த
இரவொன்றில் பிரியங்கள்
மறைத்து நீயும், நானும்,
தவற விட்ட
குழந்தையாய் அலைகின்றன,
சமாதானத்துக்கான
சொற்கள்.
நிசப்தம் எரித்து
கண வெளிச்சத்தில்
உன்னை என்னில்
ஆழச் சொருகினாய்,
பொங்கி வழிந்தோடியது
என் ரணத்தில்
வழிந்த உன் கண்ணீர்!
என் குருதியை
அள்ளியெடுத்து
என் வர்ணங்கள்
படர்ந்த உன் உடலைக்
கழுவிக்கொண்டாய்!
மெதுவாக
வெளியேறிச் சென்றாய்
உடைந்து
சில்லுகளாய்ச்
சிதறிக்கிடந்த
நம் காதலின் மேல்!
29 comments:
அருமை.
எல்லா பதிவிலும் முதல் வெட்டு சித்ராதானா!!
அருமை அண்ணா.....
நன்றி அகல்!!
பின்னறீங்க...
நன்றி பிரேமா மகள்!!
ரசித்தேன்
நீயும், நானும்,
தவற விட்ட
குழந்தையாய் அலைகின்றன]]
நல்லாயிருக்கு தேவா!
நன்றி நண்டு!!
நட்புடன் ஜமால் said...
நீயும், நானும்,
தவற விட்ட
குழந்தையாய் அலைகின்றன]]
நல்லாயிருக்கு தேவா!
ஓகே ஜமால்!!
ரசித்தேன்
ஆத்தாடி, அபாரம் கவிஞரே!!!
அருமை...
-
DREAMER
very nice..rachithen
பிரியங்கள் மறைந்த இரவொன்றில் //
.......... :)
பொங்கி வழிந்தோடியது
என் ரணத்தில்
வழிந்த உன் கண்ணீர்!//
வலிகள் தாங்கிய சோகத்தினூடாக ஆத்மார்த்தமான தேடலினை நோக்கி நகரும் கவிதை அருமை... மிக நீண்ட இடை வேளைக்குப் பிறகு தற்போது தான் வலையுலகம் நோக்கி எட்டிப் பார்க்க முடிகிறது... இனி அடிக்கடி வருவேன்..
கோர்க்கப்பட்ட எழுத்துக்கள் அருமை
// என் குருதியை
அள்ளியெடுத்து
என் வர்ணங்கள்
படர்ந்த உன் உடலைக்
கழுவிக்கொண்டாய்!
வரிகள் அனைத்தும்,அர்த்தமும்,ஆழமும் பொதிந்தவை.
பிரிவெனினும் தேநீர் சுவை இனிது....
அருமை டாக்டர்.
//நிசப்தம் எரித்துகண வெளிச்சத்தில்உன்னை என்னில்ஆழச் சொருகினாய்,//
இதுக்கு என்ன அர்த்தம் ?
கண்டிப்பா நான் நெனக்கிறதா இருக்காது.
அடடா!!
மருத்துவக் கவி வாழ்க!
very nice.. well penned!
>>தவற விட்ட
குழந்தையாய் அலைகின்றன,
சமாதானத்துக்கான
சொற்கள்.
தாக்கும் உவமை.
//
நிசப்தம் எரித்து
கண வெளிச்சத்தில்
உன்னை என்னில்
ஆழச் சொருகினாய்,//
முன் பின் சைடு நவீனத்துவ இலக்கியமா இருக்கே?
உங்களின் புதிய பார்வை நன்று.
நல்ல வரிகள் டாக்டர் சார் ,
தவறாக எண்ண வேண்டாம் ,நீங்கள் காரைக்குடியா ?
தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க மருத்துவரே. வாழ்த்துக்கள்.
http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php
கொஞ்சம் தேநீர்-கொஞ்சம் கவிதை-கொஞ்சம் அழுகை-பிரிதல்.
Post a Comment