Thursday 19 February 2009

வக்கீல் போலீஸ் மோதல்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி  மீது முட்டை வீசப்பட்டது. வக்கீல்கள் சிலர் தகராறு செய்தனர். இந்த பிரச்னை தொடர்பாக கோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நேற்று சு. சாமி காலையில் ஆஜரானார். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சு.சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது முற்றி மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மீது கல்வீசப்பட்டது.

இதனையடுத்து வக்கீல்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். வக்கீல்கள் பலருக்கு மண்டை உடைந்தது. தொடர்ந்து பல கார்கள் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வளாகத்திலிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி வக்கீல்களை விரட்டினர். ஆத்திரமுற்ற வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்தனர்.

மாலை 3 மணி முதல் 4.30 வரை இந்த பரபரப்பும், போராட்டமும் நடந்தது. மேலும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐகோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை வக்கீல்கள் தாக்கினர். அங்குள்ள பொருட்களை சூறையாடினர். மோட்டார் பைக்குகளுக்கும் தீ வைக்கப்பட்டது. போலீஸ் ஸடேஷனுக்கும் தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஐகோர்ட் வளாகத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைப்பு : போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து ஆத்திரமுற்ற வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை நொறுக்கினர். ஆவணங்களுக்கு தீ வைத்தனர். மோட்டார் பைக்குகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போலீஸ் ஸ்டேஷனுக்கும் தீ வைக்கப்பட்டது.

இதில் ஜட்ஜ் ஆறுமுக பெருமாள் ஆதித்யன் தலையில் காயம் ஏற்பட்டது. கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது!

மக்கள் டிவியில் இந்நிகழச்சி விரிவாகக் காட்டப்பட்டது.

33 comments:

Anonymous said...

இது தற்செயலாக நடந்த கலவரம் என்று மக்களை நம்பவைக்கலாம், ஆனால் வழக்கறிஞர்கள் நம்பவைக்கமுடியாது. ஈழ பிரச்சனையில் விடாப்பிடியாக கருணாநிதிக்கும் மத்திய காங்கிரஸ் அரசுக்கும் தொல்லை கொடுத்து வந்த வழக்கறிஞர்கள்லை திசை திருப்ப மற்றும் பழிவாங்க சரியான தருணத்தை பயன்படுத்திஉள்ளார் கருணாநிதி. இல்லையென்றால் சிறுநீர் கழிகவே அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் இந்த போலீசார் வழக்கறிஞர்கள் மேல் இவ்வளவு தைரிமாக தாகுதல் நடத்தியிருக்க மாட்டார்கள். கருணாநிதியின் கபட நாடகத்தில் இதுவும் ஒன்று.

Arasi Raj said...
This comment has been removed by the author.
Arasi Raj said...

அட போங்கய்யா....பதிவு போட்டு 20 நிமிஷம் தான் ஆகுது..நாம தான் முதல் .attendance -nu...நினச்ச..நமக்கு முன்னாடி ஒரு பெயரில்லா ஆத்மா....என்னமோ நல்ல இருந்தா சரி.....படிச்சு முடிச்சுட்டு வரேன்...

Arasi Raj said...

ஆள் மாத்தி ஆள் மாத்தி அடிச்சுகிட்டே இருங்கடா ...என்னிக்கு தான் ஒரு முடிவுக்கு வர்றேங்கன்னு பார்க்கலாம்

ஆதவா said...

ம்...ஹஹம்... நீதிமன்றத்திலேயே இப்படீன்னாக்கா, ?????

///
Nilavum Ammavum கூறியது...

ஆள் மாத்தி ஆள் மாத்தி அடிச்சுகிட்டே இருங்கடா ...என்னிக்கு தான் ஒரு முடிவுக்கு வர்றேங்கன்னு பார்க்கலாம
/////////

ஹாஹ்ஹா...... சரிதான்!!!! நாமளும் எத்தனைஇ நாளைக்குத்தான் பொறுமையா இருக்கிறது????!!!

வேத்தியன் said...

நானும் இந்தக் கலவ்ரத்தை தொலைக்காட்சியில பார்த்தேன்...

தேவா சார், இப்பவும் லேட்டா தான் வந்திருக்கேன்...
தாமததிற்கு மன்னிக்கவும்...
படிப்பையும் பாக்கணுமில்ல...
:-)

அ.மு.செய்யது said...

உள்ளேன் ஐயா..

தேவன் மாயம் said...

உள்ளேன் ஐயா..//

செய்யது காலை வணக்கம்!

அ.மு.செய்யது said...

சென்னை உயர்நீதிமன்றம் மினி காஷ்மீர் மாதிரி ஆகி விட்டது.

நேற்று மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து தான் வீட்டிற்கு பேருந்தில்
ஏறினேன்.

வீட்டிற்குள் வருவதற்குள் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த களேபரங்கள் லைவ்
ஆகக் காட்டி கொண்டிருக்கிறார்கள்.

ஐயாம் ஜ‌ஸ்ட் மிஸ்ஸு..

அ.மு.செய்யது said...

//thevanmayam கூறியது...
உள்ளேன் ஐயா..//

செய்யது காலை வணக்கம்!
//

தேவா நலமா....

தேவன் மாயம் said...

ஆதவா வருகைக்கு நன்றி!!

அ.மு.செய்யது said...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..

ஆல் இன் ஆல் தேவா ...

தேவன் மாயம் said...

செய்யது சென்னை உயர்நீதிமன்றம் மினி காஷ்மீர் மாதிரி ஆகி விட்டது.

நேற்று மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து தான் வீட்டிற்கு பேருந்தில்
ஏறினேன்.

வீட்டிற்குள் வருவதற்குள் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த களேபரங்கள் லைவ்
ஆகக் காட்டி கொண்டிருக்கிறார்கள்.

ஐயாம் ஜ‌ஸ்ட் மிஸ்ஸு.///

ஆமாம்! சென்னை எப்படியுள்ளது?

தேவன் மாயம் said...

நானும் இந்தக் கலவ்ரத்தை தொலைக்காட்சியில பார்த்தேன்...

தேவா சார், இப்பவும் லேட்டா தான் வந்திருக்கேன்...
தாமததிற்கு மன்னிக்கவும்...
படிப்பையும் பாக்கணுமில்ல...
:-)//

இதில் என்ன இருக்கு?
படிப்பு முக்கியம்!!
தொடரவும்!
தேவா..

தேவன் மாயம் said...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..

ஆல் இன் ஆல் தேவா //

சும்மா காலையில் போட்டேன் செய்யது!

தேவன் மாயம் said...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..

ஆல் இன் ஆல் தேவா //

சும்மா காலையில் போட்டேன் செய்யது!

அ.மு.செய்யது said...

@ஆமாம்! சென்னை எப்படியுள்ளது?

சென்னை எப்போதுமே அமைதி பூங்கா தாங்க...அதிலென்ன சந்தேகம்.

அ.மு.செய்யது said...

//thevanmayam கூறியது...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..

ஆல் இன் ஆல் தேவா //

சும்மா காலையில் போட்டேன் செய்யது!
//

அப்ப இன்றைக்கு தேநீர் விருந்து இல்லையா...

டீ போடுறதுக்கு முன்னாடி பஜ்ஜி,போண்டாவெல்லாம் போட்டீங்க போல..

Arasi Raj said...

தேவா மாமா...அம்மா உங்களை இங்கன வம்புக்கு இழுத்துருக்காங்க..
http://sandaikozhi.blogspot.com/

..பார்த்து கவனமா போங்க ..துணைக்கு வேணும்னா கூப்பிடுங்க...வரேன்

நட்புடன் ஜமால் said...

\\செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..

ஆல் இன் ஆல் தேவா\\

நானும் மறுக்கா கூவிக்கிறேன் ...

நட்புடன் ஜமால் said...

\\அப்ப இன்றைக்கு தேநீர் விருந்து இல்லையா...

டீ போடுறதுக்கு முன்னாடி பஜ்ஜி,போண்டாவெல்லாம் போட்டீங்க போல..\\

நேற்று எங்கப்பா போன ...

குடந்தை அன்புமணி said...

//அ.மு.செய்யது சொன்னது…
@ஆமாம்! சென்னை எப்படியுள்ளது?

சென்னை எப்போதுமே அமைதி பூங்கா தாங்க...அதிலென்ன சந்தேகம்.//

தேர்ந்த அரசியல்வாதிபோல....

அப்துல்மாலிக் said...

மருத்துவர் எப்போ நிருபர் ஆனார்

அப்துல்மாலிக் said...

இன்னிக்கு காலைலே தேனீர்க்கு பதிலா கடக் காஃபி கொடுத்துட்டீங்க‌
நல்ல விமர்சனம்

அப்துல்மாலிக் said...

இன்னிக்கு காலைலே தேனீர்க்கு பதிலா கடக் காஃபி கொடுத்துட்டீங்க‌
நல்ல விமர்சனம்

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது கூறியது...
சென்னை உயர்நீதிமன்றம் மினி காஷ்மீர் மாதிரி ஆகி விட்டது.

நேற்று மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து தான் வீட்டிற்கு பேருந்தில்
ஏறினேன்.

வீட்டிற்குள் வருவதற்குள் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த களேபரங்கள் லைவ்
ஆகக் காட்டி கொண்டிருக்கிறார்கள்.

ஐயாம் ஜ‌ஸ்ட் மிஸ்ஸு..
//

ஜஸ்ட் மிஸ்.. இல்லேனா ஸ்பாட்லேர்ந்து பிளாக்லே அப்டேட் பண்ணிருப்பார்

அப்துல்மாலிக் said...
This comment has been removed by the author.
அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது கூறியது...
சென்னை உயர்நீதிமன்றம் மினி காஷ்மீர் மாதிரி ஆகி விட்டது.

நேற்று மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து தான் வீட்டிற்கு பேருந்தில்
ஏறினேன்.

வீட்டிற்குள் வருவதற்குள் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த களேபரங்கள் லைவ்
ஆகக் காட்டி கொண்டிருக்கிறார்கள்.

ஐயாம் ஜ‌ஸ்ட் மிஸ்ஸு..
//

ஜஸ்ட் மிஸ்.. இல்லேனா ஸ்பாட்லேர்ந்து பிளாக்லே அப்டேட் பண்ணிருப்பார்

தேவன் மாயம் said...

இன்னிக்கு காலைலே தேனீர்க்கு பதிலா கடக் காஃபி கொடுத்துட்டீங்க‌
நல்ல விமர்சனம்///

தேநீர் தினமும் தயாரிப்பது சிரமம்!!
அதான் இது!!

தேவன் மாயம் said...

ஜஸ்ட் மிஸ்.. இல்லேனா ஸ்பாட்லேர்ந்து பிளாக்லே அப்டேட் பண்ணிருப்பார்///
நல்ல சான்சை விட்டுட்டார்! போலீசுக்கும் வக்கீல்களுக்கும் உள்ளே பூந்து இருக்கலாம்!!!

coolzkarthi said...

வருந்த தக்க விஷயம்....

வேத்தியன் said...

தேவா சார்...
நம்ம கடைக்கு ஒருக்கா வந்துட்டு போறது...

குமரை நிலாவன் said...

போலிசும் வக்கீலும்
ம்ம்ம் ....
நாடு எங்க போயிகிட்டு
இருக்கு ....

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory