Wednesday 25 February 2009

ஸ்லம்டாக் வெட்கக்கேடு!

 

ஸ்லம் டாக் படத்தில் நடித்த குழந்தை

நட்சத்திரங்களுக்கு விரைவில் புது வீடு கிடைக்கும்

என்று அரசியல்வாதிகளின் அறிக்கைகள்

வரத்துவங்கியுள்ளன!

பந்த்ரா குடிசைப்பகுதியில்தான் படத்தில் நடித்த அசார்

வசிக்கிறான். அவனுடைய பெற்றோர் விரும்புவது

எல்லாம் ஒரு நல்ல வீடு. இவர்கள் வசிப்பது

டெண்ட்போன்றது!

 

2 மாதாதிற்கு ஒரு முறை மும்பாய் முனிசிபல்

புல்டோசர் கொண்டு பொறம்போக்கில் கட்டிய வீடுகள்

என்று இடித்துத்தள்ளுவதும் பின் இவர்கள்

கட்டிக்கொள்வதும் வாடிக்கை.

 

ரூபினாவின் வீடும் இங்குதான்

உள்ளது,அவர்களுக்கும் இதே நிலைதான்!!

 

படத்தின் வெற்றியை தங்களுக்குச் சாதகமாக

மாற்றிக்கொள்ளப்பார்க்கும் லோகல் காங்கிரசார்

முதல்வரிடம் இவர்களுக்கு வீடு

வழங்கக்கோரியுள்ளனர்..

முதல்வரோ பிடி கொடுக்காமல் பேசியுள்ளார்.

படத்தின் புகழ் மறைவதற்குள் நடந்தால் உண்டு!

 

இந்திய ஏழ்மையை வைத்து படம் எடுப்பதும்,

பதக்கம்,பரிசுகளை வெல்லுவதும்,அதனை

இந்தியாவின் சாதனை என்று சொல்லி இந்தியர்கள்

கொண்டாடுவதும் இந்தியாவின் சாபக்கேடு!

 

படத்தின் முக்கிய கருவைக்கருத்தில் கொண்டு

இத்தகைய நிலை மாற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதுவே படத்தின் சாதனை.அப்படி ஏதாவது நடந்ததா

என்றால் இல்லை.

 

நாயகனும் நாயகியும் ஈடுபாட்டுடன் நடித்து ஜோடியாக

படத்தின் புகழ் பரப்ப வெளிநாடெல்லாம்

சுற்றுகிறார்களாம். காதல் வேறாம்.

இந்த விசயங்களில் செலுத்தும் கவனத்தை

குழந்தைகளின் எதிர்காலங்களில் செலுத்துவார்களா?

 

ஏற்கெனவே கோடீஸ்வரர்களாக இருக்கும் அனில்

கபூர்.ஏ.ஆர்.ரஹ்மான்,மேலும் பணக்காரர்களாக

ஆனதுதான் மிச்சம்.

 

கோலாகலமாக வெற்றியை கொண்டாடும் போது அதே

நகரத்தில் இத்தகைய சேரிகளும் உள்ளன என்று

இவர்கள் சிந்திக்கவே இல்லையா? அல்லது படம்

இவர்களை பாதிக்கவே இல்லையா?

 

படத்தைப்பார்த்து உருகி  பரிசு வாங்கவேண்டும்!!என்ற

நோக்கத்தில் ஆஸ்கார் தேர்வுக்குழுவுக்காக மட்டும்

எடுக்கப்பட்டதா இந்தப்படம்??

24 comments:

அப்துல்மாலிக் said...

இப்படியெல்லாம் கேள்விக்கணைகளை எடுத்துவீசினால் என்னாத்துக்காகுறது தல‌

அப்துல்மாலிக் said...

ம்ம்கூம் உங்க குரலுலே(எழுத்துலே) தெரியுது வருத்தமும், ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியும்...

நடக்குமா?

அப்துல்மாலிக் said...

இதே மாதிரி கீழ்த்தர மக்களுக்கு ஒரு வாழ்க்கை கிடைத்தால் தான் இந்த படத்தோட உண்மையான வெற்றியும், ஆஸ்கர் விருது பெற்ற பெருமையையும் முழுமையா அனுபவிக்க முடியும்

தேவன் மாயம் said...

இப்படியெல்லாம் கேள்விக்கணைகளை எடுத்துவீசினால் என்னாத்துக்காகுறது தல‌//

ஏதோ கத்துறதை கத்துவோம்!!
பதிவு-கவிதை எதுவும் போடலையா?

தேவன் மாயம் said...

ம்ம்கூம் உங்க குரலுலே(எழுத்துலே) தெரியுது வருத்தமும், ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியும்...

நடக்குமா?//

ஆமாம்!

சி தயாளன் said...

படத் தயாரிப்பாளர்கள் அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளனர்..பார்ப்போம் ஏதாவது நடக்கின்றதா என்று..:-)

தேவன் மாயம் said...

இதே மாதிரி கீழ்த்தர மக்களுக்கு ஒரு வாழ்க்கை கிடைத்தால் தான் இந்த படத்தோட உண்மையான வெற்றியும், ஆஸ்கர் விருது பெற்ற பெருமையையும் முழுமையா அனுபவிக்க முடியும்//

அதை யாரும் சொல்லவேயில்லையே!

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப வித்தியாசமா யோசிச்சு இருக்கீங்க நண்பா.. சரிதானே.. படத்தில் நடித்த ஏழைக் குழந்தைகளுக்கும் நல்ல வாழ்வு கிடைப்பதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி..

அப்துல்மாலிக் said...

//thevanmayam கூறியது...
இப்படியெல்லாம் கேள்விக்கணைகளை எடுத்துவீசினால் என்னாத்துக்காகுறது தல‌//

ஏதோ கத்துறதை கத்துவோம்!!
பதிவு-கவிதை எதுவும் போடலையா?
/

வந்துப்பாருங்க தல‌

தேவன் மாயம் said...

படத் தயாரிப்பாளர்கள் அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளனர்..பார்ப்போம் ஏதாவது நடக்கின்றதா என்று..:-)//

நம்ம அரசுக்கு அவமானம்தானே இது!

தேவன் மாயம் said...

ரொம்ப வித்தியாசமா யோசிச்சு இருக்கீங்க நண்பா.. சரிதானே.. படத்தில் நடித்த ஏழைக் குழந்தைகளுக்கும் நல்ல வாழ்வு கிடைப்பதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி..///

ஏங்க அந்தப்பிள்ளைகளுக்கு ஒரு வீடு வாங்கும் பணம் கூட தரவில்லையா?

நிஜமா நல்லவன் said...

Ada ponga thala...ithai vida periya periya kooththu ellaam nadakkuthu...:)

தேவன் மாயம் said...

Ada ponga thala...ithai vida periya periya kooththu ellaam nadakkuthu...:)//

சொல்லுங்க சாமி அப்பத்தானே தெரியும்..

mayavi said...

arrahman onnum porakum pothu koteswarana porakala.... avarum ULAITHU ennathu veetiya blog eluthi illa.. ULAITHU avaru intha perumayai adainju irukkar.... ammam... neegha daily unn vettuku pakkthil irukarai slumil iruka pasangalukku class edukuringlamee... daily neegha thaan kulupatti... schoolil vidurengala... ithuku ungalukku illa.. oscar kuduthu irukanum

தேவன் மாயம் said...

arrahman onnum porakum pothu koteswarana porakala.... avarum ULAITHU ennathu veetiya blog eluthi illa.. ULAITHU avaru intha perumayai adainju irukkar.... ammam... neegha daily unn vettuku pakkthil irukarai slumil iruka pasangalukku class edukuringlamee... daily neegha thaan kulupatti... schoolil vidurengala... ithuku ungalukku illa.. oscar kuduthu irukanum///

I have also appreciated him in my earlier posta! just go through them!!
But in reality they were not given enough money to even change their residence.. Mighty people can make mirackles!
those in power can do more work than us. anyhow i liked your comments. This is real comment. Lets do some social work too. Thank you!
Come out with your reply!!!

Rajeswari said...

சரியா சொன்னிங்க !சுயநலமில்லா அரசியல்வாதிகள் வந்தாதான் நல்லது நடக்கும் .இல்லாட்டி நாம புலம்பிக்கிட்டே இருக்கவேண்டியதுதான்

தேவன் மாயம் said...

சரியா சொன்னிங்க !சுயநலமில்லா அரசியல்வாதிகள் வந்தாதான் நல்லது நடக்கும் .இல்லாட்டி நாம புலம்பிக்கிட்டே இருக்கவேண்டியதுதான்///

பரவாயில்லை!
நான் சொல்ல
வந்ததை சரியாகப்
புரிந்து கொண்டீர்கள்!!

ஆ.சுதா said...

உங்கள் ஆதங்கம் உனமையானது
இது உங்கள் ஆதங்கம் மட்டுமல்ல
இப்படி பல பேர் மனதி பதுங்கியிருப்பவைதான்...
ஆனால் என்ன செய்வது
மழை பெய்ஞ்சி முடிஞ்சா
தவளை கத்ததான் செய்யுமுன்னு
சம்பந்த பட்டவங்க காந்தி சொன்ன
குரங்கு மாதிரி இருந்திடராங்க.

Anonymous said...

ஏற்கெனவே கோடீஸ்வரர்களாக இருக்கும் அனில்

கபூர்.ஏ.ஆர்.ரஹ்மான்,மேலும் பணக்காரர்களாக

ஆனதுதான் மிச்சம்.''ஏற்கெனவே கோடீஸ்வரர்களாக இருக்கும் அனில்

கபூர்.ஏ.ஆர்.ரஹ்மான்,மேலும் பணக்காரர்களாக

ஆனதுதான் மிச்சம்.'

இது புதுமையல்லவே தேவா ?
பணத்தை பையில் போட்டுக்கொண்டு விருதுகளை வீடுகளில் வைத்துவிட்டு உழைப்பதுதானே இந்த சினிமா உலகம்.
இங்கு எங்கை நலன் நன்மை ?

ஆதவா said...

அரசியல்வாதிகளுக்கு நோண்டத்தான் தெரியும்... வேண்டத்தெரியாது.

யார் என்ன சம்பாரிச்சா,? எத்தனை சொத்து, லொட்டு லொசுக்கு.... இத்யாதி.. இத்யாதி.... இதிலெல்லாம்தான் கண்ணு!!!

நல்லா கேட்டீங்க சார்... ஆனால் பதில்????

அ.மு.செய்யது said...

என்ன பண்ணியிருக்கலாம்னு நீங்க சொல்றீங்க...??

அதையும் தெளிவாக பதிவிலே இன்னொரு பதிவிலே சொல்லுங்க தேவா .

நசரேயன் said...

படத்திலே நடிச்ச குழந்தைகள் மாதிரி நிறைய குழந்தைகள் இருக்கு, எல்லோருக்கும் ஒரு விடிவு கிடைச்சா சரி

SurveySan said...

http://www.nydailynews.com/entertainment/movies/2009/02/25/2009-02-25_slumdog_millionaire_kids_will_be_slumdog.html

They will be Slumdogs no more.

The two kid actors who broke our hearts in the Academy Award-winning "Slumdog Millionaire" are being moved out of their miserable Mumbai ghetto into real homes with roofs and doors and walls.

Rubina Ali and Azharuddin Ismail, who played the young versions of the two main characters, won't have to worry about paying the mortgage - their new digs are free. "These two children have brought laurels to the country," said Gautam Chatterjee, head of Mumbai's housing authority.

So for 10-year-old Azharuddin, it's goodbye to the tarp by a busy road that was his family home. And for 9-year-old Rubina, it's goodbye to the one room shack she shared with her family.

Details about when the families will be moved - or if they will have things we take for granted like indoor plumbing - were not known. Still, there was lots of joy in the actors' households.

"We are happy that we will have a permanent roof over our heads," said Rubina's dad, Rafiq Qureshi, told The Times of India newspaper.
.......

Esywara said...

//இந்திய ஏழ்மையை வைத்து படம் எடுப்பதும்,பதக்கம்,பரிசுகளை வெல்லுவதும்,அதனை இந்தியாவின் சாதனை என்று சொல்லி இந்தியர்கள்
கொண்டாடுவதும் இந்தியாவின் சாபக்கேடு!//

the film portrayed mumbai a city that's turning from slums to modern urban , actually. Do read my blog regarding more explanation.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory