Thursday 2 July 2009

மதுவால் என்ன ஏற்படுகிறது?-2

மதுவால் என்ன ஏற்படுகிறது? என்ற நம் முதல் பதிவைப் படித்திருப்பீர்கள். படிக்காதவர்கள் படிக்கலாம் இங்கே மதுவால் என்ன ஏற்படுகிறது? -கிளர்ச்சி-1

1.கிளர்ச்சி(Excitement)

2.தள்ளாட்டம்( Incoordination)

முதல் பகுதியில் கிளர்ச்சிநிலையைப் பார்த்தோம். தற்போது தள்ளாட்டம் என்ற அடுத்த நிலைக்குப்போவோம்.

இரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு 150-250மிகி/ 100மிலி. என்ற அளவுக்கு வரும்போது தொடுஉணர்வுகள் குறைய ஆரம்பிக்கும். எழுத்து சரியாக வராது. மிகவும் திரமையுடன் செய்ய வேண்டிய வேலைகள் செய்யமுடியாது.

1.மூடுமாறுதல்

2.எரிச்சல் அடைதல்

3.அதிக கிளர்ச்சியடைதல்

4.சண்டையிடுதல்

5.தூக்கநிலை அடைதல்

6.குமட்டல்,வாந்தி

7.பேச்சு குழறுதல்

ஆகியவை மது அருந்தியவரிடம் காணப்படும்.

நாடித்துடிப்பு அதிகமாகும். சுவை அறிதல், வாசனைகள் உணரமுடியாமை, காது கேட்கும் திறன் ஆகியவை குறையும்.

3.கோமா(Someone who is in a coma is unconscious and will not respond to voices, other sounds, or any sort of activity going on nearby. The person is still alive, but the brain  is functioning at its lowest stage of alertness. You can't shake and wake up someone who is in a coma like you can someone who has just fallen asleep.)கோமா என்பது சுயநினைவில்லாமல் இருத்தல். சாதாரணமாக கூப்பிட்டொ,தட்டியோ எழுப்பமுடியாத நிலை.

இன்னிலையில்

1.நாடித்துடிப்பு வேகமாக இருக்கும்.

2. உடல் வெப்பம் குறையும்.

3.கருவிழி சுருங்கியிருக்கும். ஆனால் வெளிச்சத்தில் மெதுவாக சுருங்கி விரியும்.

மதுஅருந்தியவர் சுயநிலைக்குத்திரும்பும்போது அவருக்கு தலைவலி, குமட்டல் ஆகியவை இருக்கும். 

400 மிகி க்கு மேல் இரத்தத்தில் ஆல்கஹால் ஏறுமானால் இறப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இறப்பு பெரும்பாலும் நுறையீரல் தசைகள் செயலிழப்பதால் மூச்சு விடமுடியாமல் போவதால் ஏற்படுகிறது.

மது அருந்துபவர்களின் உடலில்

1.இதய நோய்

2.நுறையீரல் நோய்கள் 

இருந்தால் இறப்புக்கான சதவீதம் அதிகரிக்கிறது.

மேலே கூறியிருப்பவை தங்களின் சிந்தனையைத் தூண்டியதா இல்லையா?

தமிழ்த்துளி தேவா..

------------------------------------------------------------------------

 

27 comments:

*இயற்கை ராஜி* said...

me the firstayyyyy

தினேஷ் said...

என்ன சொன்னாலும் போங்க அது இல்லாமல் சனிக்கிழமை இரவு நகர மாட்டேங்குதே...

வெற்றி-[க்]-கதிரவன் said...

எனக்கு இந்த ஏரியாக்கும் சம்பந்தம் இல்ல, நெக்ஸ்ட் மீட்பண்ணுறேன்

பீர் | Peer said...

நான் மது அருந்துவதில்லை.

ஆமாம்... பியர் மது வகையில் சேராதது தானே?

cheena (சீனா) said...

நல்ல தகவல் - பகிர்ந்தமைக்கு நன்றி

அ.மு.செய்யது said...

//1.கிளர்ச்சி(Excitement)

2.தள்ளாட்டம்( Incoordination)
//

எதிர்க‌வுஜைக‌ளும் ஏற்ப‌டுகின்ற‌ன‌ என்று வால் வ‌ந்து பின்னூட்ட‌மிடுவாராக‌.

அ.மு.செய்யது said...

//பீர் | Peer said...
நான் மது அருந்துவதில்லை.

ஆமாம்... பியர் மது வகையில் சேராதது தானே?
//

பிய‌ரிலும் ஆல்க‌ஹால் இருப்ப‌தால் அதுவும் ம‌துவ‌கையில் சேரும்.

பீர் | Peer said...

நான் மது அருந்துவதில்லை.

ஸ்..ஸ்..ஸ்.. அப்பாடா...

சொல்லரசன் said...

//மேலே கூறியிருப்பவை தங்களின் சிந்தனையைத் தூண்டியதா இல்லையா?//

ஆம்

//இய‌ற்கை said...
me the firstayyyyy//

இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை

Unknown said...

இப்படி அடிக்கடி .... பதிவை போட்டு ... பதிவர்களிடையே ...... பேதியை..... அட...ச்ச.... பீதியை கெலப்புவதால்.... நான் இந்த அவையிலிருந்து..... வெளி நடப்பு செய்கிறேன்......!!!!

வால்பையன் said...

இப்படியெல்லாம் பயமுறுத்தாதிங்க தல!

ஆ.சுதா said...

நல்ல பணி...!

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு நன்றி !!!

// வால்பையன் said...
இப்படியெல்லாம் பயமுறுத்தாதிங்க தல!///



கொஞ்சம் பயந்துதான் வருது!

நட்புடன் ஜமால் said...

நல்ல விடயம் தேவா!

priyamudanprabu said...

நல்ல தகவல் - பகிர்ந்தமைக்கு நன்றி

priyamudanprabu said...

நல்ல பதிவு

இராகவன் நைஜிரியா said...

மிக நல்ல தற்போதுள்ள சூழ்நிலையில் தேவையான இடுகை.

நன்றி மருத்துவர் தேவா அவர்களே..

அகநாழிகை said...

தேவா,
மருத்துவக் கண்ணோட்டத்துடன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

மது பாவித்தலின் உளவியல் குறித்து பல ஆய்வுகள் சமீப காலமாக புத்தகமாக வெளிவந்துள்ளது.

ஆதிக்கருத்தான மது உடல் நலத்துக்கு கேடானது என்பது மட்டுமல்ல அது. அதற்குப் பின்னிருக்கும் மனோபாவம் குறித்தான கருத்துக்களை அவை கூறுகின்றன.

நீங்கள் குறிப்பிடும் கிளர்ச்சி, தள்ளாட்டம் என்ற கருத்திலிருந்து முற்றிலுமாக நான் மாறுபடுகிறேன்.
இது பொதுக்கருத்து மட்டுமே.

மது அருந்துவதை ஆதரித்து அல்ல எனது கருத்து. தற்போதைய சமுகத்தில் மதுவின் ஆதிக்கம் பெருகியது எங்ஙனம் என்பது பற்றி.

அழகான பகிர்தலுக்கு நன்றி.


‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு நன்றிங்க

யூர்கன் க்ருகியர் said...

போதும் ..... இதோட நிறுத்திக்குவோம்.

நான் குடிக்கிறத நிறுத்திக்கிறேன் :(

அமுதா said...

நல்ல பதிவு. நன்றி

Anonymous said...

பயனுள்ள பதிவு பயன்படுத்தில் கொண்டால் பயன் பெறலாம் நல்ல பலனும் பெறலாம்.....

sarathy said...

நல்ல பதிவு டாக்டர்..

நாங்க இருக்கிற ஏரியா ரொம்பவே
வறண்டு போச்சு..

தீபக் வாசுதேவன் said...

மதுவின் தீமைகளை உணர்த்தும் இன்னொரு இடுகை ஒன்றினை எனது பதிவிலும் இங்கு காணலாம்.

அப்துல்மாலிக் said...

சரியான பீதியை கிளப்பிவிட்டீர்

இதெல்லாம் படிக்கமட்டும் அப்படினு எல்லாத்தையும் தூக்கி குப்பையிலே போட்டுவிட்டு மது ஆர்டர் பண்ணும் காலம் இது தேவா

"உழவன்" "Uzhavan" said...

இன்ப வேளையாயினும் துன்ப வேளையாயினும் மது அருந்திதான் அப்பொழுதைக் கழிப்பது என்பது இப்போது சாதாரணமான ஒன்றாகிவிட்டது.

S.A. நவாஸுதீன் said...

நம்ம தமிழ் "குடி" மக்களுக்கு ஏற்ற விஷயம்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory