Monday 31 May 2010

…… சிங்கம்டா!!

 

சிங்கப்பூர் என்ற பெயரைக் கேட்டாலே தமிழ் மணம் வீசுவதும் ஏதோ நமக்கு பக்கத்தில் உள்ள ஊர் மாதிரித் தோன்றுவது தவிர்க்க முடியாதது.

ஆனால் சிங்கம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல்!! அப்படியானால் சிங்கத்துக்குத் தமிழில் என்ன பெயர்? அரிமா என்பதுதான் அது. ஏறு என்று ஆண் சிங்கத்தைக் குறிப்பது வழக்கம். ’ஆளி’ என்றும் சிங்கத்தைப் பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடுகின்றனர்.

சிங்கம் என்ற பெயர் வட நாட்டிலிருந்து தமிழகம் வந்ததுபோல் தமிழ் நாட்டிலிருந்து சிங்கைக்கும் சென்று விட்டது.

சிங்கம் என்ற பெயர் சிங்கைக்குப் போனது அல்லாது தமிழ்ச் சிங்கங்கள் (அரிமா)க்கள் பலவும் சிங்கை சென்று விட்டன.( இந்தத் தமிழ்ச்சிங்கங்களை தமிழ்நாட்டில் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் இவர்களைப் பார்க்கும் போது வருவதை   என்னால்  தவிர்க்க முடியவில்லை. இந்தச் சிங்கங்கள் வேறு யாருமல்ல, ’மணற்கேணி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி சிங்கையில் வாழும் தமிழ்ப் பதிவர்களை ஒன்றிணைக்கும் ‘ தமிழ்ப் பதிவர்கள்தாம் அவர்கள்.

கடல் கடந்து செல்வது தமிழனுக்குப் புதிதல்ல. கடல் கடந்த தமிழர்களின் திறமையும் யாரும் அறியாததல்ல. அறிய வேண்டிய ஒரே ஒரு விசயம்- தமிழின் பால் அவர்களுக்குள்ள அன்புதான்.

இன்னும் 50 வருடங்களில் தமிழ் அருகி விடும் என்று ஏதோவொரு புள்ளியியல் மடையன் சொன்னான். அவன் சிங்கை சென்றால் தமிழ், தமிழ் நாட்டில் மட்டுமன்று உலகம் முழுதும் அழியா மொழியாய்த் திகழும் என்பதை உணருவான். இது உணர்ச்சி மிகுதியால் வந்த வார்த்தைகள் அல்ல! உண்மை உணர்வின் வெளிப்பாடு!!

சிங்கைப் பதிவர்கள் மணற்கேணி வெற்றியாளர்களை வரவழைத்துப் பாராட்டிப் பெருமைப் படுத்தியதை மறக்க முடியாது. இது வாழ்நாளில் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகபட்ச கவுரவம், அன்பு என்றே நான் கருதுகிறேன்.

(தொடர்ந்து எழுதுவேன்….)

38 comments:

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் டாகடர்,.. வாழ்த்துகள்

*இயற்கை ராஜி* said...

வாழ்த்துகள் டாகடர்,..

பாலா said...

mm ! fine doctor

தேவன் மாயம் said...

ஆ.ஞானசேகரன் said...
வணக்கம் டாகடர்,.. வாழ்த்துகள்!///


மிக்க நன்றி ஞான்ஸ்!!

தேவன் மாயம் said...

*இயற்கை ராஜி* said...
வாழ்த்துகள் டாகடர்,/


ராஜி!! நன்றி!!

ஜோசப் பால்ராஜ் said...

உங்கள் அன்பு வார்த்தைகள் எங்களை மிகவும் உற்சாகமூட்டும் .
இனி வரும் வருடங்களில் தொடர்ந்து உற்சாகமாய் செயல்பட உங்கள் தொடர் உதவும்.

அறிவிலி said...

நலமாக போய் சேர்ந்துட்டீங்களா?

ஒரு நல்ல நீண்ட தொடரை எதிர்பார்க்கிறேன்.

ராஜேஷ்

Ravichandran Somu said...

வணக்கம் டாக்டர்.

சிங்கையில் தங்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள்... படிக்க ஆவலாக உள்ளோம்.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

வேத்தியன் said...

வணக்கம் தேவா சார்...
ரொம்ப நாளைக்கு பிறகு பதிவுகள்...
:-)
முதலில் வாழ்த்துகள்...

வேத்தியன் said...

வலைப்பதிவுகள் பக்கம் நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாததால் நிறைய விடயங்களை தவற விட்டு விட்டேன் என்று நினைக்கிறேன்...

வேத்தியன் said...

படிக்க என்று சென்றதால் பதிவுகள் எழுதவோ படிக்கவோ நேரமும் வசதியும் இல்லாமலேயே சென்று விட்டது...
இனியாவது தொடர்பில் இருக்க முயற்சி பண்ணலாம்... :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் தேவா சார்.. Welcome Back..:-))))

ரோஸ்விக் said...

நான் உங்களை ஊரில் வந்து சந்திக்கலாமென்று இருந்தேன். நீங்கள் இங்கு வந்து சந்தித்தில் மகிழ்ச்சி. :-)

தங்களின் தொடர் எங்களின் வளர்ச்சிக்கு உதவும்.

உங்கள் இந்திய தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். தொடர்பு கிடைக்கவில்லை. மற்றொரு நாள் அழைக்கிறேன்.

தேவன் மாயம் said...

ஜோசப் பால்ராஜ் said...
உங்கள் அன்பு வார்த்தைகள் எங்களை மிகவும் உற்சாகமூட்டும் .
இனி வரும் வருடங்களில் தொடர்ந்து உற்சாகமாய் செயல்பட உங்கள் தொடர் உதவும்.
//

தமிழ் வளர உங்கள் செயல்பாடுகள் தொடர வாழ்த்துகிறேன்!!

தேவன் மாயம் said...

அறிவிலி said...
நலமாக போய் சேர்ந்துட்டீங்களா?

ஒரு நல்ல நீண்ட தொடரை எதிர்பார்க்கிறேன்.

ராஜேஷ்
//

உங்கள் எதிபார்ப்பு எனக்கு மிக்க மகிழ்வைத் தருகிறது!1

தேவன் மாயம் said...

ரவிச்சந்திரன் said...
வணக்கம் டாக்டர்.

சிங்கையில் தங்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள்... படிக்க ஆவலாக உள்ளோம்.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

///

முடிந்தவரை எழுத முயல்கிறேன்!!

தேவன் மாயம் said...

வேத்தியன் said...
வலைப்பதிவுகள் பக்கம் நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாததால் நிறைய விடயங்களை தவற விட்டு விட்டேன் என்று நினைக்கிறேன்.///

வாங்க!! எழுதுங்க!!

தேவன் மாயம் said...

கார்த்திகைப் பாண்டியன் said...
வாழ்த்துகள் தேவா சார்.. Welcome Back..:-))))//

கார்த்தி!!! வந்தாச்சு!!

தேவன் மாயம் said...

ரோஸ்விக் said...
நான் உங்களை ஊரில் வந்து சந்திக்கலாமென்று இருந்தேன். நீங்கள் இங்கு வந்து சந்தித்தில் மகிழ்ச்சி. :-)

தங்களின் தொடர் எங்களின் வளர்ச்சிக்கு உதவும்.

உங்கள் இந்திய தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். தொடர்பு கிடைக்கவில்லை. மற்றொரு நாள் அழைக்கிறேன்.

ரோஸ்விக்!! ஜிடாக்கில் கூட பேசலாமே !!! எனக்கும் மிக்க மகிழ்ச்சி!!

பிரேமா மகள் said...

super sir

Jerry Eshananda said...

சந்தோசம் தேவா.

ஜோ/Joe said...

உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!

Riyas said...

//இன்னும் 50 வருடங்களில் தமிழ் அருகி விடும் என்று ஏதோவொரு புள்ளியியல் மடையன் சொன்னான். அவன் சிங்கை சென்றால் தமிழ், தமிழ் நாட்டில் மட்டுமன்று உலகம் முழுதும் அழியா மொழியாய்த் திகழும் என்பதை உணருவான். //

சரியாகச்சொன்னீர்கள்

கொல்லான் said...

//ஆளி’ என்றும் சிங்கத்தைப் பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடுகின்றனர்.//

அது ஆளி அல்ல, யாளி என்பதே சரி.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்! தேவா

சீமாச்சு.. said...

வாழ்த்துக்கள் தேவா !!

priyamudanprabu said...

இந்தத் தமிழ்ச்சிங்கங்களை தமிழ்நாட்டில் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் இவர்களைப் பார்க்கும் போது வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. இந்தச் சிங்கங்கள் வேறு யாருமல்ல, ’மணற்கேணி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி சிங்கையில் வாழும் தமிழ்ப் பதிவர்களை ஒன்றிணைக்கும் ‘ தமிழ்ப் பதிவர்கள்தாம் அவர்கள்.
/////////

anga iruntha eppadi irunthu oruppoomoooo??

priyamudanprabu said...

வணக்கம் டாகடர், வாழ்த்துகள்

தொடருங்கள்...

யாசவி said...

டாக்டர் சிங்கை வந்தீங்களா?

சொல்லவேயில்லை. முடிந்தால் சந்தித்து இருக்கலாமே?

குழலி / Kuzhali said...

மணற்கேணி வெற்றியாளராகிய நீங்கள் சிங்கை வலைப்பதிவர்கள் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் வந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதற்க்கு மிக்க நன்றி, சந்திப்புகளும் விழாக்களும் நிறைவாக இருந்தது... நன்றி

கோவி.கண்ணன் said...

மருத்துவரே தங்களையும் உங்கள் வீட்டுக்கார மருத்துவரையும் சந்தித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

ஒருசில குறைகள் இருந்தாலும் நாங்கள் இதை பகுதி நேரமாகவும் தன்னார்வத்தாலும் செய்தோம் என்பதால் பொருத்துக் கொண்டீர்கள் என்று நம்புகிறோம்.

அன்புடன் நான் said...

உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ந்தேன்.....
மறுமுறை சஎதிக்க இயலாது போய்விட்டது.... மருத்துவரே. மீண்டும் சந்திப்போம்.

மாதேவி said...

வாழ்த்துகள்.

குமரை நிலாவன் said...

நலமாக போய் சேர்ந்துட்டீங்களா?

வாழ்த்துகள் தேவா சார்..

கலா said...

வணக்கம் ஜயா,நலமா?
மீண்டும் சந்திக்கலாமேன்றிருந்தேன்
முடியவில்லை {நீங்கள் வரவில்லை}
வருத்தந்தான் ...
இருந்தும் உங்களைச் சந்தித்த்தில்
மிக்க மகிழ்ச்சி நன்றி

குடந்தை அன்புமணி said...

புதிய 'ழ' இதழும், 'உதகை ரோட்டரி கிளப்' பும் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி. தலைப்பு 'மலையரசியின் எழில் அழகு' (சூழலியல் சார்ந்து) தொடர்புக்கு- 9443751641

அண்ணாமலை..!! said...

தமிழுக்கா?? அழிவா??
ஹஹ்..ஹா..!!
அருமையான இடுகை நண்பரே!

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் டாக்டர்!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory