---------------------------------------------------
நண்பர்களே!! ஒரே அரசியல்,தேர்தல்
என்று ரொம்ப வறட்சியில்
பதிவுலகம்! சூடு தனிய மொக்கையா
ஒரு கவிதை! படித்து விட்டு ....
----------------------------------------------------
என்னதான் மறைத்தாலும்
தாவணியின் பூக்களெல்லாம்
சொல்லுதே உன் காதலை!!
என்னிடம் காதலைச்
சொல்லத்துடிக்கும்
உன் மனதை
மறைக்கமுடியுமா.
தாவணிக்குள்!!
என்னைக்
கண்டவுடன்
வெட்கப்பட்டு ஒதுங்குகிறது
உன் தாவணியும்!!
4.உன் தாவணி ஓடும்
பால்வீதியில் மட்டும்
எப்படி
இரு நிலவுகள்?
எங்கிருந்து ஆரம்பித்தது
உன் தாவணி!
இடையின் முன்னிருந்தா
இல்லை
பின்னிருந்தா?
நெஞ்சில் எழுந்து
தோளில் தவழ்ந்து
முதுகில் விழும்
நீர்வீழ்ச்சி உன்
தாவணி!!
உன் வாசனையில்
கிறங்கிக்கிடக்கிறோம்
நானும்
உன் தாவணியும்!
ஒரு சந்தர்ப்பம் கொடு
உன் தாவணிபோல்
நானும் ஒரு
8 பொடுகிறேன்
உன் இடுப்பிலிருந்து
தொடங்கி !!!
தாவணி பிடித்திருந்தால் போடுங்க ஒட்டு தமிலிஷ்,தமிழ்மணத்தில்!!
38 comments:
என்னா... விளையாட்டு !
என்னா... விளையாட்டு !///
சும்மா!! ஜாலியா!
தேவா சார், கொஞ்சம் மேடம் நம்பர் தர முடியுமா? நான் அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..:-)
தேவா சார், கொஞ்சம் மேடம் நம்பர் தர முடியுமா? நான் அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..:-)///
என்னா!! கார்த்தி !! மாட்டி வுட்டா என் முதுவு தாங்காது!!
//நெஞ்சில் எழுந்து
தோளில் தவழ்ந்து
முதுகில் விழும்
நீர்வீழ்ச்சி உன்
தாவணி!!/
இந்த வரிகள் ரொம்ப நல்லா இருக்கு தேவா...
//நெஞ்சில் எழுந்து
தோளில் தவழ்ந்து
முதுகில் விழும்
நீர்வீழ்ச்சி உன்
தாவணி!!/
இந்த வரிகள் ரொம்ப நல்லா இருக்கு தேவா...///
நெஞ்சில் தோன்றியதை எழுதினேன்!!
என்னிடம் காதலைச்
சொல்லத்துடிக்கும்
உன் மனதை
மறைக்கமுடியுமா.
தாவணிக்குள்!!//
ஓ...
கவிதை கவிதை...
என்னைக்
கண்டவுடன்
வெட்கப்பட்டு ஒதுங்குகிறது
உன் தாவணியும்!!//
அட...
விளையாட்டுப்பிள்ளை சார் நீங்க...
எங்கிருந்து ஆரம்பித்தது
உன் தாவணி!
இடையின் முன்னிருந்தா
இல்லை
பின்னிருந்தா?//
இதுக்கு சாலமன் பாப்பையா வச்சு பட்டிமன்றம் நடத்தி தான் முடிவெடுக்கனும் போல...
இது மொக்கை கவிதையா???
விளையாடியிருக்கீங்களே அண்ணாத்தே???
:-)
வோட்டியாச்சுங்க சாமியோவ்...
thevanmayam said...
தேவா சார், கொஞ்சம் மேடம் நம்பர் தர முடியுமா? நான் அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..:-)///
என்னா!! கார்த்தி !! மாட்டி வுட்டா என் முதுவு தாங்காது!!//
ஐயையோ இது எப்போதிலிருந்துங்க???
:-)
ITHU SUPERU
VOTU POTTACHU
தாவணி அழகு தமிழகம் மறந்த நேரம்....தாவணியின் நெளிவை நளினமாய் கவிதையாய் இத்தனை சங்கதிகள் கொண்ட சந்ததியா தாவணி.....இதை அழகு மலர்கள் அணிய மறுக்க அதை அழகாக்கி அணிந்திருக்கிறது இந்த கவிதை
உன் தாவணி ஓடும் பால்வீதியில் மட்டும் எப்படி இரு நிலவுகள்
இதெல்லாம் நல்லதுக்கில்லீங்க... இப்படியா பச்சையா எழுதறது??? ஹி ஹி.. (உன்னை விடவா அப்படீன்னு நீங்க கேட்கிறது புரியுது.) ஒருமாதிரி கிறக்கமா கவிதை இருக்கு!!!
என்னதான் சொல்லுங்க, தாவணியில் பெண்களின் அழகே அழகுதான்...
//உன் தாவணி ஓடும் பால்வீதியில் மட்டும் எப்படி இரு நிலவுகள்?//
நிலவு தட்டையாதானே தெரியும்?
அது வேறு மருத்துவர் அய்யா.
என்ன ஒரு மாதியான மனோநிலையில இருக்கீங்களா?
சிலருக்கு இரண்டாவது சுற்று ஆரம்பிக்கும். தெரியும்தானே ?
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
//எங்கிருந்து ஆரம்பித்தது
உன் தாவணி!
இடையின் முன்னிருந்தா
இல்லை
பின்னிருந்தா?//
நல்ல ஆராய்ச்சியா இருக்கு.. கார்த்திகைப் பாண்டியன் பாதுக்காப்பு வட்டத்தில் இருக்காரு பார்த்து வாசிங்க சார்.... அப்பறம் உங்கள் விருப்பம்..
//எங்கிருந்து ஆரம்பித்தது
உன் தாவணி!
இடையின் முன்னிருந்தா
இல்லை
பின்னிருந்தா?//
நல்ல ஆராய்ச்சியா இருக்கு.. கார்த்திகைப் பாண்டியன் பாதுக்காப்பு வட்டத்தில் இருக்காரு பார்த்து வாசிங்க சார்.... அப்பறம் உங்கள் விருப்பம்..
இப்போவெல்லாம் யாருங்க தாவணி அணிவது...
அந்த தாவணிக்கு இவ்வளவு ரகசியம் இருக்கா மருத்துவரே
கவிதையின் உள்ளருத்தம் ரசித்தேன்
ஒவ்வொரு வரியும் அற்புதம்
//ஒரு சந்தர்ப்பம் கொடு உன் தாவணிபோல் நானும் ஒரு 8 பொடுகிறேன் உன் இடுப்பிலிருந்து தொடங்கி !!! ///
ஏதோ சொல்லிருக்கீங்க அருமை தேவா
தாவணி கனவுகளா?தாவணி கனவுகளா? எட்டு போடுறேன் டு கொட்டு வாங்கீராதீங்க வீட்டுல.,
இது மொக்கை கவிதையா???
விளையாடியிருக்கீங்களே அண்ணாத்தே???
:-)///
ஒரு பாதுகாப்புக்குத்தான்!!
ITHU SUPERU
VOTU POTTACHU//
Suresh பதிவர் சந்திப்புக்கு வாங்க!
தாவணி அழகு தமிழகம் மறந்த நேரம்....தாவணியின் நெளிவை நளினமாய் கவிதையாய் இத்தனை சங்கதிகள் கொண்ட சந்ததியா தாவணி.....இதை அழகு மலர்கள் அணிய மறுக்க அதை அழகாக்கி அணிந்திருக்கிறது இந்த கவிதை///
தமிழ்ப்பெண்கள் மறுபடியும் விரும்பி தாவணி அணியும் காலமும் வரும்!!தாவணிக்கு அழிவில்லை!!
உன் தாவணி ஓடும் பால்வீதியில் மட்டும் எப்படி இரு நிலவுகள்
இதெல்லாம் நல்லதுக்கில்லீங்க... இப்படியா பச்சையா எழுதறது??? ஹி ஹி.. (உன்னை விடவா அப்படீன்னு நீங்க கேட்கிறது புரியுது.) ஒருமாதிரி கிறக்கமா கவிதை இருக்கு!!!
என்னதான் சொல்லுங்க, தாவணியில் பெண்களின் அழகே அழகுதான்.///
ஆதவா!! தாவணியை ரசித்ததற்கு நன்றி!!கவிதைன்னாலே கிறக்கம்தானே!!
//எங்கிருந்து ஆரம்பித்தது
உன் தாவணி!
இடையின் முன்னிருந்தா
இல்லை
பின்னிருந்தா?//
நல்ல ஆராய்ச்சியா இருக்கு.. கார்த்திகைப் பாண்டியன் பாதுக்காப்பு வட்டத்தில் இருக்காரு பார்த்து வாசிங்க சார்.... அப்பறம் உங்கள் விருப்பம்..///
கார்த்திகையைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கிறோம்!!
//உன் தாவணி ஓடும் பால்வீதியில் மட்டும் எப்படி இரு நிலவுகள்?//
நிலவு தட்டையாதானே தெரியும்?
அது வேறு மருத்துவர் அய்யா.
என்ன ஒரு மாதியான மனோநிலையில இருக்கீங்களா?
சிலருக்கு இரண்டாவது சுற்று ஆரம்பிக்கும். தெரியும்தானே ?
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்///
திருச்சிலேருந்து வந்ததிலேருந்து ஒருமாதிரி கிறக்கமா இருக்கு!!.....
இப்போவெல்லாம் யாருங்க தாவணி அணிவது...
அந்த தாவணிக்கு இவ்வளவு ரகசியம் இருக்கா மருத்துவரே
கவிதையின் உள்ளருத்தம் ரசித்தேன்
ஒவ்வொரு வரியும் அற்புதம்///
அப்ஸருக்குத் தெரியாத அர்த்தங்களா?
தாவணி கனவுகளா?தாவணி கனவுகளா? எட்டு போடுறேன் டு கொட்டு வாங்கீராதீங்க வீட்டுல.///
பாத்து பதமா நடந்துக்கிறேன்!!
தாவணியை வச்சு கவிதையா? கலக்கிறீங்க. நிறைய ஞாபகங்கள் மனதிற்குள் ஓடுகின்றன. அகநாழிகை வாசு சார் சொல்வதுபோல் (சிலருக்கு இரண்டாவது சுற்று ஆரம்பிக்கும். தெரியும்தானே?) உண்மையா?
என்ன இருந்தாலும் தாவணிப் பெண்கள் தாவணிப் பெண்கள்தான்.
தாவணியை வச்சு கவிதையா? கலக்கிறீங்க. நிறைய ஞாபகங்கள் மனதிற்குள் ஓடுகின்றன. அகநாழிகை வாசு சார் சொல்வதுபோல் (சிலருக்கு இரண்டாவது சுற்று ஆரம்பிக்கும். தெரியும்தானே?) உண்மையா?
என்ன இருந்தாலும் தாவணிப் பெண்கள் தாவணிப் பெண்கள்தான்.///
ஞாபகங்களை மெல்ல அசைபோடுவது சுகம்தானே!!
துளி தமிழிலிலேயே இத்தனை
வார்த்தை விளையாட்டுகளா
தாவணி அழகு தேவா!
தாவணிப்பெண்கள் இங்க யாராச்சும் இருக்கீங்களா?
~~என்னிடம் காதலைச்
சொல்லத்துடிக்கும்
உன் மனதை
மறைக்கமுடியுமா.
தாவணிக்குள்~~
ஒஹோ...........
துளி தமிழிலிலேயே இத்தனை
வார்த்தை விளையாட்டுகளா
தாவணி அழகு தேவா!///
நன்றி ஜமால்!!
தாவணிப்பெண்கள் இங்க யாராச்சும் இருக்கீங்களா?
~~என்னிடம் காதலைச்
சொல்லத்துடிக்கும்
உன் மனதை
மறைக்கமுடியுமா.
தாவணிக்குள்~~
ஒஹோ.......///
தேடிச் செல்லுங்கள் அன்பு வசந்த்!
நீங்கள் ஒரு கற்பனை சகல கலாவல்லவன் என்பதை இந்தத் தாவணிக் கவிதை காட்டுகிறது , கற்பனை புதுமையாக இருக்கிறது...
என்க்கு ரொம்ப புடிச்து 2 நிலா மேட்டர் தான் கில்லாடி தல நீ கலக்கிட்ட .... ஆம்ஸ்ட்ராங் எல்லாம் செத்தான் போ...
மதுரை சந்திப்பு பற்றின வர்ணனை எங்கே நண்பரே?!
Post a Comment