Friday, 18 September 2009

சைபர்கிரிமினல்கள்-டாப்-8 !!

நண்பர்களே!!

சைபர் கிரைம் பற்றி  நாம் படித்திருப்போம். கம்ப்யூட்டரும் கிரெடிட் கார்ட் வர்த்தகத்திலும் இந்த மோசடிகள் அதிகம் நடக்கிறது. உலகம் செல்லும் பொருளாதாரப் பாதையில் நாமும் செல்லவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

உலக அளவில் சைபர்கிரைம் என்பது பல நிறுவனங்களின்  பொருளாதாரத்தைக் கூட பாதிக்கும் என்பது அதிர்ச்சியான ஒன்று என்றாலும் இப்படிப்பட்ட செயல்களை நாம் ஆங்கிலப் படங்களிலும் செய்திகளிலும் காண்கிறோம். இதனைப் பற்றி அறிவது மிகவும் அவசியமாகத்தெரிகிறது.

மிகவும் பயங்கரமான சைபர் கிரைம்கள்பற்றிப் பார்ப்போம்.

1.கோடியாக்-KODIAK- கோடியாக் மிகவும் புத்திசாலித்தனமாக மிகப் பெரும் பணக்காரர்களின் வங்கிக்கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து  பல நாடுகளிலும் போலி கம்பெனிகளின் பெயரில் மாற்றிவிட்டான். அவன் மாற்றிய தொகை $10.7 மில்லியன். அப்புறம் என்ன? மூன்று வருட ஜெயில் தண்டணை அனுபவித்தான்!

2.டான் ஃபனுச்சி-DON FANUCCI-இவன் தன் சைபர்கிரைம் வேலைகளை ஆரம்பிக்கும்போது வயது 15 தான். பிப்ரவரி 2000 ல் மிகவும் பிரபலமான வணிக இணைய தளங்களின் மீது தன் கைவரிசையைக் காட்டினான். இதனால் பல நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. செப்டம்பர் 2001 ல் வீட்டுக்காவலில் எட்டுமாதம் வைத்தனர்.பெருந்தொகை அபராதமும் விதிக்கப்ப்பட்டது. இவனுக்கு இண்டெர்நெட்  கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. உலகம் முழுக்க $7.5 மில்லியனிலிருந்து $1.2 பில்லியன் இழப்பு இவனால் ஏற்பட்டது.

3.POX-பாக்ஸ்- Love Bug-I love you- என்ற பிரபலமான ஈமெயில் வைரஸை உருவாக்கியவர்களில் ஒருவன். இவனுடைய இந்த வைரஸ் பெண்டகன் ,C I A கம்ப்யூட்டர்களையே தாக்கியது என்றால் பாருங்கள்! மே 4 2000 ல் 50 மில்லியன் கம்ப்யூட்டர்கள் இவனால் செயலிழந்தன.  பாக்ஸ் பிலிப்பைன்ஸில் இருப்பதால், அந்தநாட்டில் கம்ப்யூட்டர் ஹேக்கிங்க் சட்டங்கள் எதுவும் இல்லாததால் எந்த தண்டணையும் இல்லாமல் சுகமாக வாழ்கிறான்!

4.MISHKAL-மிஷ்கல்  Eastern European carding rings என்ற அமைப்பில் ஒருவன் என கருதப்படுகிறது.  போலி கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகள் கோடிக்கணக்கில் தயாரிப்பதுதான் தொழில். தொழிலின் உச்சத்தில் இருக்கும்போது இவனுடைய ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? $100,000!!!! கடைசியில் கைது செய்யப்பட்டு வெறும் ஆறு மாதம் மட்டும் ஜெயிலில் கழித்தான். உடனடியாக நம் ஊரைப்போல் உக்ரைன் அரசில் பிரதிநிதியாகிவிட்டான்.

5.THE WIZ AND PIOTREK- இருவரும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்! 50000 கிரெடிட் கார்டுகளின் தகவல்களைத் திருடி கோடிக்கணக்கில் சம்பாதித்தனர் இருவரும். இருவருக்கும் மூன்று வருட சிறைத்தண்டணையும், அபராதமும் விதிக்கப்பட்டது.

6.Roper, Red_Skwyre, and Dragov-ரோபர்,ரெட்ஸ்கையர்,ட்ராகோவ்- இவர்களும் சைபர்கிரைம் கில்லாடிகள். இவகளால் 40 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்பட்டது. 2007 அக்டோபரில் பிடிபட்ட இவர்களுக்கு எட்டு ஆண்டு சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது!

7.BANDIT-பண்டிட் - இவன் 500000 கம்ப்யூட்டர்களை ஹாக் செய்து அவற்றைத் தன் தவறான செயல்களுக்குப் பயன்படுத்தி பணம் பார்த்துவந்தான்.2005 நவம்பரில் கைது செய்யப்பட்ட இவனுக்கு ஐந்துவருட ஜெயில் தண்டணை வழங்கப்பட்டது. மிலிட்டரி கம்ப்யூட்டர்களில் இவன் கைவரிசையைக் காட்டியதால் அமெரிக்க அரசாங்கத்துக்கு $15000 பணம் செலுத்தினானாம்!!

என்ன இந்தியாவில் எதுவும் நடக்கவில்லையா? என்கிறீர்களா? இருக்கு! அதற்காக ஒரு கொசுறு:

8.Li Chen Sien , Wynne Peter- இந்தியாவில் இந்த இருவரும் 56540 பவுண்டுகளை இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து நெட் வழியாக சுட்டதால் 2009 பிப்ரவரியில் நோய்டாவில் கைது செய்யப்பட்டனர்.

கிரெடிட் கார்டுகளிலும், இண்டெர்நெட் வங்கிகளிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பெருகிவரும் இந்த வசதிகளால் சைபர்கிரைம்களும் அதிகரிக்கத்தான் செய்யும்!! அவற்றிலிருந்து நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!!

31 comments:

பிரியமுடன்...வசந்த் said...

இவங்களை பற்றிய தகவலுக்கு நன்றி

ஆனா இன்னும் தமிழ் நாட்டுல பேர் வராத நிறைய பேர் இருக்காங்களே அவங்கள யார் கண்டுக்குவா?

தேவன் மாயம் said...

பிரியமுடன்...வசந்த் said...
இவங்களை பற்றிய தகவலுக்கு நன்றி

ஆனா இன்னும் தமிழ் நாட்டுல பேர் வராத நிறைய பேர் இருக்காங்களே அவங்கள யார் கண்டுக்குவா?

18 September 2009 07:21///

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பற்றி எழுதுவோம்!

cheena (சீனா) said...

எல்லாரும் சாக்கிரதயா இருங்கப்பா

கதிர் - ஈரோடு said...

very intresting

4/4

தேவன் மாயம் said...

cheena (சீனா) said...
எல்லாரும் சாக்கிரதயா இருங்கப்பா

18 September 2009 //

ஆமாங்க!!

வினோத்கெளதம் said...

தகவல்கள் ரொம்பவும் புதுசு

ஜெரி ஈசானந்தா. said...

டாக்டர்,எனக்கு வாத்தியார் வேலை போரடிக்குது, இப்படி ஏதாவது நல்ல ஐடியா இருந்தா சொல்லுங்க.

தேவன் மாயம் said...

கதிர் - ஈரோடு said...
very intresting//

நன்றி கதிர்!!

தேவன் மாயம் said...

வினோத்கெளதம் said...
தகவல்கள் ரொம்பவும் புதுசு

18 September 2009 07:53//

தெரிந்து கொள்ளத்தான்!!

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தா. said...
டாக்டர்,எனக்கு வாத்தியார் வேலை போரடிக்குது, இப்படி ஏதாவது நல்ல ஐடியா இருந்தா சொல்லுங்க.

18 September 2009 ///

நினைத்தேன் பதிவுபோடும்போதே!!

பாலா said...

இதை பற்றிய விழிப்புணர்வு இப்போது தேவைதான் தேவா சார்
நன்றி பதிந்தமைக்கு

தேவன் மாயம் said...

இதை பற்றிய விழிப்புணர்வு இப்போது தேவைதான் தேவா சார்
நன்றி பதிந்தமைக்கு

18 September 2009 08:30 //

நன்றி பாலா!

வால்பையன் said...

இன்றும் எதாவது ஒரு வகையில் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது!

D.R.Ashok said...

ஹாலிவுட் படங்கள்ல ஒருத்தர் எல்லா கம்பூட்டர்ரைக்கும் hack பண்ணுவார். ஒரு வேன் பல வயர்கள் லாப்டாப் கம்புட்டர்ஸ் இருக்கும். :)

Vidhoosh/விதூஷ் said...

TPT என்ற third party transfer இப்போது மிகவும் கட்டுப் படுதப்பட்டுள்ளது. உங்களுக்கு வேண்டிய நண்பரோ, vendor அல்லது தொழில் நிமித்தமாக யாருக்கும் money transfer செய்தால், அவர் பெயர் உங்கள் approved list-டில் இருக்கும். சிரமம் / சோம்பேறித்தனம் பாராமல் அவற்றில் அவசியமில்லாததை உடனே delete செய்யுங்கள். உங்கள் மனைவி/கணவன் அக்கௌன்ட் மட்டுமே எப்போதும் approved லிஸ்டில் இருக்குமாறு கவனியுங்கள். முக்கியமாக, பணத்தை (ஏமாறும் அளவுக்கு அதிகமாக இருந்தால்) ஒரே வங்கியில் நிரப்பாமல், atm மற்றும் cr.card netbanking வசதிகள் உள்ள வங்கியில் இருபதாயிரத்துக்கும் குறைவாகவே balance வையுங்கள். இது கூட அவசரத்துக்கு ATM உதவுமே என்பதால்தான். மற்ற payment எல்லாமே cheque மூலம் செலுத்துங்கள்.

அப்பா..முடில..

--வித்யா

சென்ஷி said...

:)

பீர் | Peer said...

இதைத்தடுக்க முடியும்னு நினைக்கிறீங்களா? அதற்கு என்ன வழி? போலி பற்றி ஒன்றும் சொல்லலையே?

7/7

கிரி said...

ஜெகஜால கில்லாடியா இருக்கானுகளே!

இதில் இருந்து ஒரு உண்மை தெரியுது..என்ன தில்லாலங்கடியா இருந்தாலும் தப்பு செய்தால் எஸ்கேப் ஆகிடலாம் ;-)

இதில் நம்ம பதிவர்கள் யாராவது இருப்பாங்களான்னு பார்த்தேன் ;-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இன்னும் முடியலையா? இந்த சமாச்சாரம்.

அப்பாடா நம்ம பதிவர்கள் பேரு இதுல இல்ல!

கொஞ்சம் நிம்மதியா இருக்கு!

Anonymous said...

இது cyber crime - இதனை "அவன் என்னை என் குடும்பத்தை கெட்ட வார்த்தைல திட்டினான்" அப்படின்னு நம்ம ஊரு cyber crime ஆபீஸ்ல மூக்கு மற்றும் கண்ணை கசக்கி கொண்டு இருக்கும் பதிவர்கள் & cyber crime பற்றி எழுதும் "கம்ப்யூட்டர்" வல்லுனர்கள் படித்தால் நல்லது :)
தகவலுக்கு நன்றி!!

Srini

அன்புடன் அருணா said...

புதுத் தகவல்கள்....நன்றி!

செல்வேந்திரன் said...

சுவாரஸ்யம்

கண்மணி said...

ஹூம் இதுக்கும் டாப் 8 ரேட்டிங்கா?இன்னும் எதுக்கெல்லாம் போட வேண்டியிருக்குமோ
இண்டர் நெட் பாங்கிங் வழி பணப் பரிமாற்றம் செய்பவர்கள் விதூஷ் சொன்ன யோசனையைக் கடைபிடிப்பதோடு அந்த தளத்தில் இருக்கும் வர்ட்யுவல் கீ போர்டு பயன்படுத்தி பாஸ்வேர்ட் கொடுப்பது நல்லது.
நாமதான் ATM கார்டு மேலேயே பின் நெம்பர் எழுதி வைப்பவங்களாச்சே:(

க.பாலாஜி said...

//பாக்ஸ் பிலிப்பைன்ஸில் இருப்பதால், அந்தநாட்டில் கம்ப்யூட்டர் ஹேக்கிங்க் சட்டங்கள் எதுவும் இல்லாததால் எந்த தண்டணையும் இல்லாமல் சுகமாக வாழ்கிறான்!//

அடப்பாவிகளா...விட்டுட்டானுங்களா?

//உடனடியாக நம் ஊரைப்போல் உக்ரைன் அரசில் பிரதிநிதியாகிவிட்டான்.//

உக்ரைனும் இந்தியா மாதிரியா....

நல்ல தகவல் பகிர்வு அன்பரே...எதுக்கும் உஷாரா இருக்கணும்...

நட்புடன் ஜமால் said...

நல்ல தகவல் திரட்டுறீங்க தேவா

நல்ல பகிர்வும் கூட

தமிழ் நாட்டு கில்லாடிகளை பற்றி எழுதுங்க.

S.A. நவாஸுதீன் said...

விழிப்புணர்வு தேவைதான். நல்ல பகிர்வு தேவா சார்

அபுஅஃப்ஸர் said...

எந்த ஒரு முன்னேற்றத்திலும் சில கைவரிசைகள் இருக்கத்தான் செய்யும், ஜாக்கிரதை

தாங்கள் சொன்னபடி தண்டனைகள் வெகு குறைவாகவே இருக்கின்றன.. தண்டனை இன்னும்கடினமாக்கப்பட வேண்டும்

இன்னும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது, உஷார்! தேவை

மங்களூர் சிவா said...

நல்ல தகவல்.

beer mohamed said...

பயனுள்ள தகவல்கள், பல நாள் திருடன் ஒரு நாள் அகபட்டு கொள்வான் தான்
beer mohamed
http://beermohamedtamilgroup.blogspot.com

" உழவன் " " Uzhavan " said...

உங்களின் சொந்த கணிணி தவிர்த்து வேறு எந்த கணிணியிலும் வர்த்தகம் தொடர்பான பரிமாற்றங்களைத் தவிர்க்கலாம்.

Anonymous said...

இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory