Thursday, 10 September 2009

தேவதையின் வரங்கள்!!

’அன்புடன் வசந்த்’
மிக்க அன்புடன் எனக்கு  ஒரு தேவதையை அனுப்பியிருக்கிறார்!!

அவருடைய தளத்திலிருந்து:

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 
தேவதையின் வரங்கள்.....

எல்லாருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும் அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்.


அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உங்கள் கண் முன்னாடி ஏஞ்சல் எனும் தேவதை உங்களிடம் பத்து வரங்கள் தருகிறது . நீங்கள் அதனிடம் என்ன வரம் கேட்பீர்கள்?

 

இந்த தேவதையை இப்போ ஒரு நாலு பேரோட ஆசைகளை நிறைவேற்ற அனுப்பிவைக்கிறேன் அவர்கள் ஆசையும் நிறைவேறுவதாக.....


1.குழந்தைநிலா ஹேமா


2.தமிழ்துளி தேவா சார்


3.திருமதி.மேனகா சத்யா


4.மனவிலாசம் S.A.நவாஸுதீன்


தொடருங்கள் நண்பர்களே!!”

என்று சொல்லியிருக்காரு நம்ம வசந்த்!!! செய்வோமே!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1. மாயாவி போல் மறையும் வரம்!!

.என்னடா இவன் இப்படி ஒரு வரம் கேட்கிறானே! என்று யோசிக்கிறீங்களா? சும்மா இல்லீங்கோ!

மாயாவியா பாஸ்போர்ட் இல்லாமல் பிளேட் ஏறி! (இஃகி! இஃகி)  ..........நோ ஜோக்ஸ்! பீ சீரியஸ்!!

கொழும்பில் இறங்கி மகிந்த பட்சே மற்றும் அவனுடைய மந்திரிகள் அனைவரையும் என் கையால் கொல்ல வேண்டும்.

*************************************************

2.சூப்பர்மேன் போல் பறக்கும் வரம்!!...

சூப்பர் மேன் கணக்கா ஆகாயத்தில் பறந்து உலகம் பூரா வேலை செய்யும் தமிழர் எல்லாருடைய வீட்டுக்கும் செல்ல ஆசை!( உள்ளே விடுவாங்களா?)

*************************************************

3.ஆபுத்திரன் கை அமுத சுரபி!!-

.மணிமேகலையில் வரும் அமுத சுரபிப் பாத்திரம் வேண்டும்!! நான் தான் சூப்பர் மேனாச்சே! அனைவரும் பசியில்லாமல் வாழ்க!.

*************************************************

4.ஞானப்பால்!! ஞானப்பால் குடிச்ச மாணிக்கவாசகர் தமிழ்ப் பாட்டாக் கொட்ட ஆரம்பிச்சாருங்க! இந்தப்பாலை உலகமெங்கும் வாழும் தமிழ் தெரியாத தமிழ் மக்களின் வாயில் ஊற்ற ஆசை!

*************************************************

5.டார்சான் ...டார்சான் பாத்து இருப்பீங்க! கவலையே இல்லாமல் காட்டில் சுத்தித் திரிவான்! மிருகமெல்லாம் நண்பர்கள்! என்ன ஜாலி! மாதம் ஒரு நாள் டார்சானாக் காட்டுக்குள் திரிய ஆசை!

*************************************************

6.ஆகாய கங்கை!..

ஈசனின் தலயில் இருக்கும் ஆகாய கங்கை! பறந்து போய் சென்னை முதல் எல்லா தண்ணித் தொட்டியிலும் தினமும் ரொப்பிவிட ஆசை! குளிக்காத ஆட்டோ டிரைவர், முதல் பஸ் பயணிவரை ஸ்பாட்டிலேயே தலையில் தண்ணி ஊற்றிவிட ஆசை!

*************************************************  7.லில்லி புட்!.

 

.குட்டியாக மாறி எறும்புடன் அதன் புற்றுக்குள் போய் நட்புக்கொண்டு ஒரு நாள் அதனுடன் வாழ ஆசை!

*************************************************.

8.என் மனைவியே அத்தனை ஜென்மத்திலும் மனைவியாய் வர..இது ரொம்ப தன்னலமான வரம்தான்!  பத்து வரத்தில் ஒன்னு சொந்த உபயோகத்துக்கு... வீட்டுக்கு பயந்து இந்த வரம் கேட்கிறேன்னு நினைகிறீங்களா? சேச்சே!!

*************************************************

9.2000 ஹிட் பெறும் வரம்!.ஒவ்வொரு பதிவு போடும் போதும் 2000 ஹிட் கிடைத்து இஃகி! இஃகி! இஃகி!! ஜாலியா இருக்கும் வரம்!

*************************************************

10.இறந்தவருக்கு உயிர் தரும் வரம்!இந்த வரத்தை வைத்து ஈழத்தில் இறந்த அத்தனை தமிழ்த்தலைவர்களையும், அத்தனை தமிழ் மக்களையும் உயிர்ப்பிக்க ஆசை!

*************************************************

37 comments:

சூரியன் said...

முதல் வரம் அருமை..

எட்டாவது வரம் சும்மா பேச்சுக்குதானே

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

தேவன் மாயம் said...

சூரியன் said...
முதல் வரம் அருமை..

எட்டாவது வரம் சும்மா பேச்சுக்குதானே///

8 இல்லைன்னா எனக்கு எதுவுமே வேணாம்!

கதிர் - ஈரோடு said...

//குளிக்காத ஆட்டோ டிரைவர், முதல் பஸ் பயணிவரை ஸ்பாட்டிலேயே தலையில் தண்ணி ஊற்றிவிட ஆசை!//

இஃகிஃகி

முதல், பத்தாவது வரம்
நானும் வழிமொழிகிறேன்

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

கண்மணி said...
This comment has been removed by the author.
கண்மணி said...

may angel bless you with 1st and last

S.A. நவாஸுதீன் said...

ஆஹா. மெய்சிலிர்க்குது தேவா சார். பத்துக்கும் ஒரு போனஸ் கிடைச்சாலும் கிடைக்கும் உங்களுக்கு

பாலா said...

வரம் குடுத்தவங்க தலையிலேயே கைவைக்குற மாதிரி ஒரு வரம் கேட்டுருக்கலாமுள்ள

குடந்தை அன்புமணி said...

// கொழும்பில் இறங்கி மகிந்த பட்சே மற்றும் அவனுடைய மந்திரிகள் அனைவரையும் என் கையால் கொல்ல வேண்டும். //

இந்த வரத்தை தேவா சாருக்காக நானும் தேவதையிடம் வழிமொழிகிறேன்.

(உங்களை கொலைக்காரனா பார்க்கனும்ங்கிறதுக்காக இல்லைங்க... சீரியஸாகவே சொல்றேன்...)

குடந்தை அன்புமணி said...

//2.சூப்பர்மேன் போல் பறக்கும் வரம்!!..[Photo]. சூப்பர் மேன் கணக்கா ஆகாயத்தில் பறந்து உலகம் பூரா வேலை செய்யும் தமிழர் எல்லாருடைய வீட்டுக்கும் செல்ல ஆசை!( உள்ளே விடுவாங்களா?)//

தேவா சாரை உள்ளே விடமாட்டேன்னு யாராவது சொல்வாங்களா?

குடந்தை அன்புமணி said...

//3.ஆபுத்திரன் கை அமுத சுரபி!!- [Photo].மணிமேகலையில் வரும் அமுத சுரபிப் பாத்திரம் வேண்டும்!! நான் தான் சூப்பர் மேனாச்சே! அனைவரும் பசியில்லாமல் வாழ்க!//

நல்ல எண்ணம்தான். இதனால நம்ம ஆளுங்க சோம்பேறியாயாகம இருக்கணுமே...

குடந்தை அன்புமணி said...

//4.ஞானப்பால் குடிச்ச மாணிக்கவாசகர் தமிழ்ப் பாட்டாக் கொட்ட ஆரம்பிச்சாருங்க! இந்தப்பாலை உலகமெங்கும் வாழும் தமிழ் தெரியாத தமிழ் மக்களின் வாயில் ஊற்ற ஆசை! //

ஆகா... ஆகா...!

குடந்தை அன்புமணி said...

//5.டார்சான் பாத்து இருப்பீங்க! கவலையே இல்லாமல் காட்டில் சுத்தித் திரிவான்! மிருகமெல்லாம் நண்பர்கள்! என்ன ஜாலி! மாதம் ஒரு நாள் டார்சானாக் காட்டுக்குள் திரிய ஆசை! //

ஞாயிற்றுக்கிழமை சன் டீவி பார்க்காதீங்கன்னா கேட்டாத்தானே...

குடந்தை அன்புமணி said...

//6. ஈசனின் தலயில் இருக்கும் ஆகாய கங்கை! பறந்து போய் சென்னை முதல் எல்லா தண்ணித் தொட்டியிலும் தினமும் ரொப்பிவிட ஆசை! குளிக்காத ஆட்டோ டிரைவர், முதல் பஸ் பயணிவரை ஸ்பாட்டிலேயே தலையில் தண்ணி ஊற்றிவிட ஆசை! //

உங்களை மாதிரி ஆளத்தான் தேடிக்கிட்ருக்கோம். எப்ப வர்றீங்க...

குடந்தை அன்புமணி said...

//7.லில்லி புட்!. குட்டியாக மாறி எறும்புடன் அதன் புற்றுக்குள் போய் நட்புக்கொண்டு ஒரு நாள் அதனுடன் வாழ ஆசை! //

அதே சன் டீவி...

குடந்தை அன்புமணி said...

// 8.என் மனைவியே அத்தனை ஜென்மத்திலும் மனைவியாய் வர.இது ரொம்ப தன்னலமான வரம்தான்! பத்து வரத்தில் ஒன்னு சொந்த உபயோகத்துக்கு... வீட்டுக்கு பயந்து இந்த வரம் கேட்கிறேன்னு நினைகிறீங்களா? சேச்சே!! //

சே... சே... நாங்க் அப்படி நினைக்கிலேங்க... ஹச்... ஹச்...

குடந்தை அன்புமணி said...

//9.2000 ஹிட் பெறும் வரம்!.ஒவ்வொரு பதிவு போடும் போதும் 2000 ஹிட் கிடைத்து இஃகி! இஃகி! இஃகி!! ஜாலியா இருக்கும் வரம்! //

9.2000 ஹிட் -
நான் இப்படி படிச்சிட்டேங்க...

குடந்தை அன்புமணி said...

//10.இறந்தவருக்கு உயிர் தரும் வரம் இந்த வரத்தை வைத்து ஈழத்தில் இறந்த அத்தனை தமிழ்த் தலைவர்களையும், அத்தனை தமிழ் மக்களையும் உயிர்ப்பிக்க ஆசை! //

கடைசில கண்கலங்க வைச்சிட்டீங்க தேவா சார்...
இந்த வரம் மட்டும்கூட கிடைச்சா போதும்...

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. மருத்துவரே நல்ல வரங்கள் கேட்டு இருக்கீங்க.

க.பாலாஜி said...

//கொழும்பில் இறங்கி மகிந்த பட்சே மற்றும் அவனுடைய மந்திரிகள் அனைவரையும் என் கையால் கொல்ல வேண்டும்.//

தமிழனாய் பிறந்த அனைவருக்கும் இந்த ஆசை இருக்கும்...நல்ல ஆசை...
(voted 5/5)

சுந்தர் said...

நோயிலா உலகுக்கோர் வரம் கேட்க வில்லையே ?

சத்ரியன் said...

யப்பா தேவா,

எட்டாவது வரம் கிட்டாது என்பதால் கொஞ்சம் தைரிமாக் கேட்டுட்டீங்க போல! தேவதையே! அது ஒன்னையாவது நிறைவேத்தி வெச்சிடும்மா..!

வால்பையன் said...

எல்லாமே சின்ன சின்ன ஆசையா இருக்கே!

பேசாம நானே கடவுளாக இருக்கனும்னு ஒரே வரத்தை வாங்கிட்டு போயிடலாம்!

சிங்கக்குட்டி said...

நல்ல கற்பனை பதிவு.
கடவுளின் இடத்தில் இருந்து நினைத்து பார்த்தேன்...அனைவருமே கேட்கதான்..ஒருவரும் நன்றி சொல்ல அல்லது பக்தியை நினைக்க வரவில்லை :-))

ஜெரி ஈசானந்தா. said...

உங்களின் முதலாவது, பத்தாவது வரத்துக்கு,வணங்க்குகிறேன்.

நட்புடன் ஜமால் said...

8ஆவது வரத்தில் தெரியுது ...

9ஆவது ஹி ஹி ஹி

வழிப்போக்கன் said...

முதல் கொஞ்சம் எல்லாம் “சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு..”
:)))

தருமி said...

if wishes were horses ... அப்டின்னு என்னமோ சொல்லுவாங்களே .. என்னாங்க அது?

ஹேமா said...

// கொழும்பில் இறங்கி மகிந்த பட்சே மற்றும் அவனுடைய மந்திரிகள் அனைவரையும் என் கையால் கொல்ல வேண்டும். //

தேவா என்னதான் இவங்களை மண்டையைப் போட வச்சாலும் அதுக்குப் பிறகு வாறவனும் இவங்கள் வழி நடத்தல்கள்தான்.ஏன் வீண் சிரமம்.விடுங்க.

பிரியமுடன்...வசந்த் said...

முதல்வரமும் 10வது வரமும் சீக்கிரம் நிறைவேற வாழ்த்துக்கள் தேவா சார்

பிரியமுடன்...வசந்த் said...

ஒரு நாலு பேர் வீட்டுக்கு தேவதைய அனுப்பியிருக்கலாமே சார்

உமா said...

அருமையா எழுதியிருக்கீங்க டாக்டர். நகைச்சுவையா எழுதியிருந்தாலும் அருமையான வரங்கள். வாழ்த்துகள்.

அபுஅஃப்ஸர் said...

எதுவுமே சரியான வரமா கேட்டாமாதிரி எனக்கு தெரியலே

cheena (சீனா) said...

ஆசை ஆசை அப்பளம் வடை தோசை

இந்தியாவைப் பத்திக் கவலையே படலியா

வாலு சொன்ன மாதிரி ஒரே வரமாக் கேட்டிருக்கலாமே

ஓட்டுப் போட்டுட்டேன்

8 - தங்க்ஸின் வற்புறுத்தலா

Mrs.Faizakader said...

நல்ல கற்பனை திறன்.. மிகவும் அருமையான வரங்கள். ஏதாவது ஒன்றாவது நிறைவேற வாழ்த்துக்கள்

ஷ‌ஃபிக்ஸ் said...

//குட்டியாக மாறி எறும்புடன் அதன் புற்றுக்குள் போய் நட்புக்கொண்டு ஒரு நாள் அதனுடன் வாழ ஆசை!//

அடடா, நல்ல கற்பனை

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory