Sunday, 6 September 2009

பிளாகர் விடுதலை!

நாமெல்லாம் சுதந்திரமாக பிளாகரை உபயோகப்படுத்துகிறோம். வீட்டு விசயத்திலிருந்து நாட்டு விசயம்வரை அக்குவேறு ஆணிவேராக அலசுகிறோம். இது போல் எல்லா நாடுகளிலும் செய்ய முடிவதில்லை. 

அடக்குமுறை பிரயோகிக்கப்படும் நாடுகளிலெல்லாம் பிளாகர்கள் அதை எதிர்த்து தைரியமாக பிளாகில் எழுதுகிறார்கள். அதனால் உலகின் பல நாடுகளிலும் பிளாகர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்படுவது நடந்து வருகிறது.

வியெட்னாமில் ஹியூ என்ற  பிளாகர் அந்த நாட்டு அரசு  சீனாவுடனும், கத்தோலிக்கக் கோவிலுடனும் சரியான  உறவு கடைப் பிடிக்கவில்லை என்று தனது பிளாகில் எழுதியதற்காகக் கைது செய்யப்பட்டார். ஒருவாரம் சிறையிலடைக்கப்பட்ட அவர் த்ற்போது விடுதலை செய்யப்பட்டார்.

ஹியூ Hieu -Wind Trader,Nguoi Buon Gio என்ற பெயரில் பிளாக் எழுதுகிறார். வியட்னாமின் பிரபல பிளாகர்களில் இவரும் ஒருவர். அவரை ஆகஸ் 27 அன்று போலீசார் கைது செய்தனர். சுதந்திரத்துக்கும் மக்களாட்சிக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் எழுதிவிட்டாராம்!

Hieu-   கடந்த பத்து நாடகளில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர்!

பிளாகர் ஒரு பலம் மிகுந்த சமூக தொடர்பு சாதனம். ”சிட்டிசன் ஜர்னலிசம்” என்று அழைக்கப்படும் இதில் பொதுமக்களின் ஒட்டுமொத்தக் கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. கடந்த வருடம் கைதுசெய்யப்பட்ட ஜர்னலிஸ்ட்& பிளாகரின் எண்ணிக்கை ரிப்போர்ட்டர்களின் எண்ணிக்கையைவிட அதிகம்( உலகம் முழுக்க!).

  Committee to Protect Journalists (CPJ) அமைப்பு உடனடியாக வியட்னாமிய பிளாகரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது!

அமெரிக்கத் தூதர் மிக்கேல் மிஷால்க் Michael Michalak வியட்னாமின் இந்தப்போக்கைக் கண்டித்துள்ளார்.

பிளாகர்களைப் பாதுகாக்க உள்ள  அமைப்பு வியட்னாமில் பிளாக்க்கர்களின் மேல் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டாலும் பிளாகர்கள் குறையவில்லை. மாறாக அவர்களின் வலிமையும் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டுதான் உள்ளது என்று கூறுகிறது!!http://committeetoprotectbloggers.org/about/committee-members/.

 Mr Andrew Ford Lyons, என்ற பிளாகர்களைப் பாதுகாக்க உள்ள  அமைப்பு உறுப்பினர், பிளாகர்கள் எச்சரிக்கையுடன் பதிவிட வேண்டும் என்றும் .

Andrew Ford Lyons.

ஒவ்வொரு நாட்டிலும் பிளாகர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க கமிட்டியால் இயலாது, ஆயினும் பிளாகர்களின் பாதுகாப்புக்காக அமைப்பும் சர்வதேச பிளாகர்களும் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்றும் கூறுகிறார்.

அதே சமயம் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சிக்கலான, மக்களுக்கு விழிப்புணவூட்டும்  விசயங்களை எழுதும் பிளாகர்கள் அவர்களின் முகவரியைக் கண்டுபிடிக்காமல் இருக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்த அமைப்பு வலியுறுத்துகிறது.

உண்மையைத் தைரியத்துடன் வெளியிடும் துணிவு பாராட்டப்பட வேண்டியதுதான், அதே நேரம் அவதூறாக,பொய்யாக எழுதுவதையும் தவிர்க்க வேண்டும்!

பிளாக் என்பது போன்ற சமூக தொடர்பு சாதனங்கள் செய்தி, மக்கள் தொடர்பில் ஒரு புரச்சியை ஏற்படுத்திவருவது மறுக்க முடியாத உண்மை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிளாகுகள் மக்களின் கவனத்தைக் கவர்ந்து வருகின்றன.

2004 அமெரிக்க தேர்தலிலேயே பிளாகுகள் முக்கியமான கொள்கை விளம்பர சாதனமாகப் பயன்படுத்தப்பட்டன. அரசியல்வாதிகள் இதனை மக்களுடன் தொடர்புகொள்ளும் மிகச் சிறந்த சாதனமாக உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

2005ல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தின் இரகசியமான வியாபாரத் தந்திரங்களை சில கலிபோர்னிய பிளாகர்கள் வெளியிட்டனர். இந்த பிளாக் பற்றிய செய்திகளை செய்தித்தாள்கள் வெளியிட்டன. ஆப்பிள் நிறுவனம் அந்த பிளாகர்கள் மேல் வழக்குத்தொடுத்தது!! ஆயினும் பிளாகர்கள் ரிப்போர்ட்டர்களாக தங்களைக் கருதி ரிப்போர்ட்டர்களுக்கு வழங்கப்படும் எழுத்து சுதந்திரம் பிளாகர்களுக்கும் வேண்டும் என்று போராடினார்கள்.

பிளாக் என்பது ஒரு பொறுப்பு மிக்க பொதுத் தொடர்பு சாதனமாக மாறிவிட்டது. பிளாகில் இவ்வளவு நடப்பது பிளாகர்களாகிய நமக்குப் பெருமையே!!

டிஸ்கி: இந்த இடுகையைப் படித்து விட்டு உள்ளூர் அரசியல் ஆசாமியிடம் போய் அவருடைய பிளாக் முகவரியைக் கேட்டுவிடாதீர்க்கள்!!இஃகி! இஃகி!!

43 comments:

நட்புடன் ஜமால் said...

பிளாக் என்பது ஒரு பொறுப்பு மிக்க பொதுத் தொடர்பு சாதனமாக மாறிவிட்டது. பிளாகில் இவ்வளவு நடப்பது பிளாகர்களாகிய நமக்குப் பெருமையே!!]]

சந்தோஷமே!

சிங்கக்குட்டி said...

இன்று பதிவர்களுக்கு தேவையான நல்ல தகவல்கள்.

லவ்டேல் மேடி said...

நெம்ப தேங்க்ஸ்ங்க டாக்டர்....!! நல்ல ... நல்ல சேதியா சொல்லுறீங்களே... நீங்க நெம்போ நல்லவிங்கோ...!!

வால்பையன் said...

என்ன கொடும சார் இது!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இயற்றமிழ், இசைத்தமிழ்,நாடகத்தமிழ், ஈ தமிழ்

Vidhoosh/விதூஷ் said...

நல்ல article. பகிர்ந்தமைக்கும் நன்றி.

////உண்மையைத் தைரியத்துடன் வெளியிடும் துணிவு பாராட்டப்பட வேண்டியதுதான், அதே நேரம் அவதூறாக,பொய்யாக எழுதுவதையும் தவிர்க்க வேண்டும்! பிளாக் என்பது போன்ற சமூக தொடர்பு சாதனங்கள் செய்தி, மக்கள் தொடர்பில் ஒரு புரச்சியை ஏற்படுத்திவருவது மறுக்க முடியாத உண்மை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிளாகுகள் மக்களின் கவனத்தைக் கவர்ந்து வருகின்றன.///
நல்ல வார்த்தைகள்... அப்படியே வழிமொழிகிறேன்.

--வித்யா

சுசி said...

நல்ல பதிவு டாக்டர்.
//பிளாக் என்பது ஒரு பொறுப்பு மிக்க பொதுத் தொடர்பு சாதனமாக மாறிவிட்டது. பிளாகில் இவ்வளவு நடப்பது பிளாகர்களாகிய நமக்குப் பெருமையே!! //
வழி மொழிகிறேன்...
என் பதிவில் உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கின்றது.
http://yaavatumnalam.blogspot.com/2009/09/blog-post.html

S.A. நவாஸுதீன் said...

புதிய தகவல். நன்றி தேவா சார்

T.V.Radhakrishnan said...

நல்ல தகவல்கள்

வழிப்போக்கன் said...

எப்பிடித்தான் தேடிப்பிடிக்கிறீங்களோ???
நல்ல பகிர்வு...
:)))

அகல் விளக்கு said...

//இயற்றமிழ், இசைத்தமிழ்,நாடகத்தமிழ், ஈ தமிழ்//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்........


பிளாக்ஸ் ராக்ஸ்......

அன்புடன் அருணா said...

புதுத் தகவல்....பூங்கொத்து!

இய‌ற்கை said...

நல்ல தகவல்கள்

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
பிளாக் என்பது ஒரு பொறுப்பு மிக்க பொதுத் தொடர்பு சாதனமாக மாறிவிட்டது. பிளாகில் இவ்வளவு நடப்பது பிளாகர்களாகிய நமக்குப் பெருமையே!!]]

சந்தோஷமே!
///
அதுல முக்கியமானவராச்சே நீங்க!
06 September 2009 01:35

தேவன் மாயம் said...

சிங்கக்குட்டி said...
இன்று பதிவர்களுக்கு தேவையான நல்ல தகவல்கள்.
///

யோசித்து எழுதவேண்டியுள்ளது!
06 September 2009 01:46

தேவன் மாயம் said...

லவ்டேல் மேடி said...
நெம்ப தேங்க்ஸ்ங்க டாக்டர்....!! நல்ல ... நல்ல சேதியா சொல்லுறீங்களே... நீங்க நெம்போ நல்லவிங்கோ...!!//

நெம்ப உபயோகமா இருக்கா!

06 September 2009 02:03

தேவன் மாயம் said...

வால்பையன் said...
என்ன கொடும சார் இது!
//

கொடுமைதான்.
-----------------------
06 September 2009 02:30


SUREஷ் (பழனியிலிருந்து) said...
இயற்றமிழ், இசைத்தமிழ்,நாடகத்தமிழ், ஈ தமிழ்///

அனைத்தும் நம் தமிழ்!

06 September 2009 02:39

தேவன் மாயம் said...

Vidhoosh/விதூஷ் said...
நல்ல article. பகிர்ந்தமைக்கும் நன்றி.

////உண்மையைத் தைரியத்துடன் வெளியிடும் துணிவு பாராட்டப்பட வேண்டியதுதான், அதே நேரம் அவதூறாக,பொய்யாக எழுதுவதையும் தவிர்க்க வேண்டும்! பிளாக் என்பது போன்ற சமூக தொடர்பு சாதனங்கள் செய்தி, மக்கள் தொடர்பில் ஒரு புரச்சியை ஏற்படுத்திவருவது மறுக்க முடியாத உண்மை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிளாகுகள் மக்களின் கவனத்தைக் கவர்ந்து வருகின்றன.///
நல்ல வார்த்தைகள்... அப்படியே வழிமொழிகிறேன்.

--வித்யா///

கருத்துக்கு நன்றிங்க@

06 September 2009 02:43

தேவன் மாயம் said...

சுசி said...
நல்ல பதிவு டாக்டர்.
//பிளாக் என்பது ஒரு பொறுப்பு மிக்க பொதுத் தொடர்பு சாதனமாக மாறிவிட்டது. பிளாகில் இவ்வளவு நடப்பது பிளாகர்களாகிய நமக்குப் பெருமையே!! //
வழி மொழிகிறேன்...
என் பதிவில் உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கின்றது.
http://yaavatumnalam.blogspot.com/2009/09/blog-post.html///

இதோ வருகிறேன்

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
புதிய தகவல். நன்றி தேவா சார்///

ஆமா நவாஸ்!
------------------------

06 September 2009 03:38


T.V.Radhakrishnan said...
நல்ல தகவல்கள்
//

நன்றி!

--------------------------
06 September 2009 03:42


வழிப்போக்கன் said...
எப்பிடித்தான் தேடிப்பிடிக்கிறீங்களோ???
நல்ல பகிர்வு...
:)))
///

வழிப்போக்கன் நலமா

--------------------------
06 September 2009 03:52


அகல் விளக்கு said...
//இயற்றமிழ், இசைத்தமிழ்,நாடகத்தமிழ், ஈ தமிழ்//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்........///

அனைத்தும் நம் தமிழ்!
----------------------------

தேவன் மாயம் said...

அன்புடன் அருணா said...
புதுத் தகவல்....பூங்கொத்து!
//

நன்றிங்க!
-------------------------------
06 September 2009 04:59


இய‌ற்கை said...
நல்ல தகவல்கள்
//

நன்றி இயற்கை!
-------------------------------
06 September 2009 05:13

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஓ அது சரி!

வியட்னாம் விவகாரம் நம்ம வியட்னாம் வீடு ஜோவுக்கு தெரியுமான்னு கேட்டுப் பாக்கிறேன்.

நாடோடி இலக்கியன் said...

நல்ல இடுகை.பகிர்வுக்கு நன்றி.

தேவன் மாயம் said...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ஓ அது சரி!

வியட்னாம் விவகாரம் நம்ம வியட்னாம் வீடு ஜோவுக்கு தெரியுமான்னு கேட்டுப் பாக்கிறேன்.
///

கேளுங்க! கேளுங்க!
06 September 2009 05:30

தேவன் மாயம் said...

நாடோடி இலக்கியன் said...
நல்ல இடுகை.பகிர்வுக்கு நன்றி///

நன்றி நண்பரே!

venkat said...

பிளாக்குல எழுதுரது குத்தமா?
சின்னபுள்ளத்தனமா இருக்கு.

தருமி said...

நாமும் வளர்கிறோமே, டாக் ..!

ஆ.ஞானசேகரன் said...

ப்ளாக்கர்களுக்கு தேவையான தகவல். ப்ளாக்கர்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்றாலும் அந்த நாட்டின் சட்டத்திட்டம்க்களை கவணத்தில் கொள்ளுதல் நல்லது.

SUMAZLA/சுமஜ்லா said...

தெரியாத அதே சமயம் சுவையான தகவல்!

தேவன் மாயம் said...

venkat said...
பிளாக்குல எழுதுரது குத்தமா?
சின்னபுள்ளத்தனமா இருக்கு.///

குத்தம்கிறான்களே!
------------------------------

06 September 2009 06:32


தருமி said...
நாமும் வளர்கிறோமே, டாக் ..!///

காலத்தின் கட்டாயம்தானே சார்!
----------------------------

06 September 2009 06:38


ஆ.ஞானசேகரன் said...
ப்ளாக்கர்களுக்கு தேவையான தகவல். ப்ளாக்கர்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்றாலும் அந்த நாட்டின் சட்டத்திட்டம்க்களை கவணத்தில் கொள்ளுதல் நல்லது.
///

உண்மைதான்!!

-----------------------------
06 September 2009 07:09


SUMAZLA/சுமஜ்லா said...
தெரியாத அதே சமயம் சுவையான தகவல்!
//

அவசியமான தகவல்!!
-------------------------
06 September 2009 07:50

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

Mãstän said...

திறமை எங்கே இருந்தாலும், கண்டிப்பா திறமையானவர் முன்னேற்றமடைவார்

ஆமா, இப்போ ஹியூ விடுதலை ஆயிட்டாரா?

பிரியமுடன்...வசந்த் said...

புதிய தகவல்களாக தரும் தாங்கள் ஒரு தகவல் பொக்கிஷம்

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

jeevaflora said...

வலிமையான பொறுப்பு மிக்க பிளாக் தரக் குரைவாக,சொந்த வீர தீர பிரதபங்களை(?)கண்ணியக் குறைவான விஷயங்களை,வக்கிர எண்ணங்களை வெளிப்படுத்தும் ஊடகமாக பயன் படுத்துவோருக்கு தங்களின் படைப்பு ஒரு நல்ல சிந்தனையைக் கொடுக்கும் என நினைக்கிறேன்.நல்ல பதிவு.

நாணல் said...

நல்ல பதிவு..நம் சுதந்திரத்தை நல்ல வகையில் பயன்படுத்துவோம்...

சுந்தர் said...

அருமையான தகவல்கள் , ஐயா !

Anonymous said...

நல்ல தகவலை சொல்லியிருக்கீங்க....இனிமேல் கருத்தை சொல்லாமா? இல்லை வெறும் கவிதையோட ஓடிப்போலமான்னு சொல்லிடுங்க சார்?

Ram said...

"யாழ்தேவி" இலங்கை பதிவர்களின் புதிய திரட்டி தற்போது Add- தமிழ் விட்ஜெட்டில் !

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

குடந்தை அன்புமணி said...

//பிளாக் என்பது ஒரு பொறுப்பு மிக்க பொதுத் தொடர்பு சாதனமாக மாறிவிட்டது. பிளாகில் இவ்வளவு நடப்பது பிளாகர்களாகிய நமக்குப் பெருமையே!//

நாமெல்லாம் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்னு சொல்லுங்க. அதுக்காக நம்ம காலரை பிடிச்சி தூக்கிட்டுப் போறமாதிரி எழுதிடாதீங்க அப்பு... பெருமையோடு கவனமாகவும் எழுதுங்க...

நல்ல தகவல் தேவா சார்.வாழ்த்துகள்.

" உழவன் " " Uzhavan " said...

பாராட்டப்பட வேண்டிய விசயம். ஏதோ ஏனோ தானோ என்று எழுதாமல், ஒரு சமுதாயப் பொறுப்புணர்வோடு செயல்படவேண்டும் என்பதும் நாம் அறியவேண்டிய ஒன்று.

அதிரை அபூபக்கர் said...

நல்ல தகவல்... சார்... அறியாத விசயம் அறிந்துகொண்டேன்..

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் - பிளாக் என்பது நமது சொந்த நாட்குறிப்பு போல இருந்தாலும் உலகம் முழுவதும் படிப்பதால் சில செய்திகள் கட்டூப்பாடுடன் தான் எழுத வேண்டும் - ஊடகங்கள் செய்தித்தாள்கள் - இவைகளுக்கு உள்ள விதி முறைகள் பதிவுகளுக்கும் பொருந்தும்

ஓஒட்டூப் போட்டாச்சு

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory