Thursday, 17 September 2009

பிரிட்னி, ஏஞ்ஜலினா ஜோலி, ஜெனிஃபர் லோபஸ் உடல் எடை குறைக்க உதவிய மருந்து!

 

 

பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆங்கிலப் பாடல் உலகின் முக்கிய நட்சத்திரம்!! அவர் தனது இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் 20 பவுண்டுகள் எடை அதிகமாக ஆகிவிட்டார்.

உடல் எடை குறைப்பதற்காக நிறைய வழிகளைக் கையாண்ட அவர் எல்லாவற்றிலும் எந்த முன்னேற்றமும் காணவில்லை!

நிகழ்ச்சிகளின்போது பலரும் அவருடைய எடை கூடிவிட்டதாக்த் தெரிவித்தது அவருக்கு மிகுந்த மன வருத்தம் அளித்தது!!

பல நேரங்களில் தன் கலையுலக வாழ்க்கை அவ்வளவுதான் என்றுகூட எண்ணிக்கலங்கினார். ஏற்கெனவே பல பிரச்சினைகளில் சிக்கி ஒருவழியாக வெளிவந்த அவருக்கு எப்படியாவது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது.

Acai Berry அகாய் பெர்ரி என்ற எடை குறைக்கும் மாத்திரைகள் கடைசியில் அவருக்கு உடல் எடை குறைக்க உதவியதாகக் கூறுகிறார் இந்த சூப்பர் ஸ்டார்.

இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டு அவருக்கு 26 பவுண்ட் எடை குறைந்ததாகக் கூறியுள்ளார்

 

.File:Acapalms.jpg

 

 

அகாய் பெர்ரி என்றால் என்ன? அகாய் பெர்ரி ஒரு பனைமர வகையைச்சேர்ந்த மரம். இது தென் அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் தண்டின் உள் பாகம் வாழைத்தண்டுபோல் உண்ணப் பயன்படுகிறது.

ஒரு இன்ச் நீளமுள்ள பழங்கள் இதில் விளைகின்றன. இது பிரேசில் ,பெரு நாட்டு மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்று.

 

File:Acai-berry.jpg

 

தற்போது உடல் எடை குறைக்க மருந்தாக இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

பிரிட்னியும் சொல்லிவிட்டார் இதுதான் அவருடைய உடல் எடை குறையக் காரணம் என்று. இதை அப்படியே நாம் நம்பிவிடலாமா? எப்படி ஆராயாமல் நம்புவது?

அகாய் பெர்ரி மாத்திரைகள் உட்கொள்ளும் முறைப்படி எடுத்துக்கொண்டு 8 தம்ளர் தண்ணீர் தினமும் அருந்தினால் எடை குறைந்துவிட்டதாக பிரிட்னி சொல்லுகிறார்.

இது அகாய் பெர்ரி விற்கும் பெரிய பிராண்ட் முதலைகளுக்கு அதிர்ச்சியளிக்கிறதாம். பிரிட்னி திடீரென்று இன்ப அதிர்ச்சியளித்துள்ளார் என்று கூறுகின்றனர் இந்த வியாபாரிகள். இந்த விளம்பரத்தால் அகாய் பெர்ரியின் விற்பனை பதினைந்து மட்ங்கு அதிகரித்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன!

பிரிட்னி சொன்னவுடன் ஜெனிபர் லோபஸ்.ஏஞ்ஜெலினா ஜோலி, முதலிய ஹாலிவுட் அழகிகள் எல்லோரும் இந்த முறையைக் கடைப் பிடித்ததாகக் கூறுகிறார்கள்.

சரி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்? அகாய் பெர்ரியில் சத்துப் பொருட்கள் உள்ளது உண்மை.  இவர்கள் கூறுவது போல் உடல் எடை குறைக்கிறது என்று கூறுவதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று.Center for Science in the Public Interest (CPSI) கூறுகிறது. ஆயிரக் கணக்கானோர் இதை பரிச்சாத்த முறையில் உபயோகித்துப் பார்த்து எந்தப் பலனுமில்லாமல் புகார் அளித்துள்ளனராம்.

உடல் எடை குறைக்கிறது, சக்கரையை குணப்படுத்துகிறது, உடல் இன்பத்தை நீட்டிக்கிறது, நாடிநரம்புகளை முறுக்கேற்றுகிறது என்றெல்லாம் நம்ம ஊர் லேலிய வியாபாரிகள் போல் ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டனர் இந்த வியாபாரிகள் என்று கூறப்படுகிறது.

இதுவரை எந்த அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லாத பொருள் பிரிட்னியால் சக்கைப்போடு போடுகிறது.

பிரிட்னியையும் பிற ஹாலிவுட் நடிகைகளையும் வைத்து செய்யும் விளம்பர வியாபாரத்தந்திரமா? இல்லை உண்மையில் அகாய்பெர்ரி எடையைக் குறைக்கிறதா? யார் பதில் சொல்வது?

34 comments:

சென்ஷி said...

:-)

இதுக்கு வோட்டு போட்டது நமீதாவுக்கு தெரிஞ்சா என்னைய கோச்சுப்பாங்க!

தேவன் மாயம் said...

சென்ஷி said...
:-)

இதுக்கு வோட்டு போட்டது நமீதாவுக்கு தெரிஞ்சா என்னைய கோச்சுப்பாங்க!

17 September 2009 02:38//

செல்லமாத்தானே! சென்ஷியைக் கோபிக்கமுடியுமா!

சூரியன் said...

டாக்டருக்கே தெரியலையா?

அப்ப யாருக்குத்தான் தெரியும்..

தேவன் மாயம் said...

சூரியன் said...
டாக்டருக்கே தெரியலையா?

அப்ப யாருக்குத்தான் தெரியும்.//

அமெரிக்காவிலேயே குழப்பம்ங்க!

க.பாலாஜி said...

என்ன தலைவரே...அகாய் பெரியை பத்தி இவ்வளவு சொல்லிட்டு கடைசியில ’யார் பதில் சொல்றதுன்னு’ முடிச்சிட்டீங்க...

இதுல கொஞ்சமாவது உண்மையிருக்கான்னு சொல்லலாம்ல...

நல்ல தகவல் பகிர்வுதான், ஆனாலும் முடிவில்லாமல் இருக்கிறதே...

voted 4/4

தருமி said...

//இது பிரேசில் ,பெரு நாட்டு மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்று.//

அப்ப ப்ரேசில் நாட்டு மக்கள் எல்லோரும் ஒல்லிப் பிச்சியா என்ன?

தேவன் மாயம் said...

க.பாலாஜி said...
என்ன தலைவரே...அகாய் பெரியை பத்தி இவ்வளவு சொல்லிட்டு கடைசியில ’யார் பதில் சொல்றதுன்னு’ முடிச்சிட்டீங்க...

இதுல கொஞ்சமாவது உண்மையிருக்கான்னு சொல்லலாம்ல...

நல்ல தகவல் பகிர்வுதான், ஆனாலும் முடிவில்லாமல் இருக்கிறதே...
///

புது செய்திங்க!! இனிமேல்தான் முடிவு!

தேவன் மாயம் said...

தருமி said...
//இது பிரேசில் ,பெரு நாட்டு மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்று.//

அப்ப ப்ரேசில் நாட்டு மக்கள் எல்லோரும் ஒல்லிப் பிச்சியா என்ன?

17 September 2009 02:49//

உண்மையை யார் சார் பார்க்கிறார்கள்!

butterfly Surya said...

டாக்டர். அப்ப எடைய குறைக்க என்ன பண்றது..?? ஏதாவது வழி சொல்லுங்க...

அபுஅஃப்ஸர் said...

நடிக/நடிகைகளின் விளம்பர பேச்சை நம்பி ஏமாறுவது அவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

நிறைய நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேளிவி இது

உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைப்பது எப்படி தேவா சார்.. ஒரு பதிவு போடுங்களேன்

தேவன் மாயம் said...

butterfly Surya said...
டாக்டர். அப்ப எடைய குறைக்க என்ன பண்றது..?? ஏதாவது வழி சொல்லுங்க...

17 September 2009///

பதிவால் இப்படி ஒரு பிரச்சினையா

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...
நடிக/நடிகைகளின் விளம்பர பேச்சை நம்பி ஏமாறுவது அவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

நிறைய நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேளிவி இது

உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைப்பது எப்படி தேவா சார்.. ஒரு பதிவு போடுங்களேன்

17 September 2009 03:06//

நிச்சயம் போடுகிறேன்!

Anonymous said...

என்ன சார் ஏதோ வழி சொல்றீங்கன்னு வந்தால் கைக்கு எட்டாததை சொல்றீங்க...எங்கே எங்களுக்கு கிடைக்கும் முடியும் என்பது போல வழிகள் இருந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்...

S.A. நவாஸுதீன் said...

நீங்கதான் டாக்டர் விசாரிச்சு சொல்லனும். ஆர்டர் கொடுக்கலாமா வேணாமான்னு?

ஜெரி ஈசானந்தா. said...

அகாய் பெர்ரி டாக்டருக்கு "அவுல் பொரி."

தேவன் மாயம் said...

தமிழரசி said...
என்ன சார் ஏதோ வழி சொல்றீங்கன்னு வந்தால் கைக்கு எட்டாததை சொல்றீங்க...எங்கே எங்களுக்கு கிடைக்கும் முடியும் என்பது போல வழிகள் இருந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்...

17 September 2009 04:07///

கட்டாயம் சொல்லுகிறேன்!!

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
நீங்கதான் டாக்டர் விசாரிச்சு சொல்லனும். ஆர்டர் கொடுக்கலாமா வேணாமான்னு?

17 September 2009 04:13///

தமிழரசிக்காகத் தேட ஆரம்பித்துவிட்டேன்!!

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தா. said...
அகாய் பெர்ரி டாக்டருக்கு "அவுல் பொரி."

17 September 2009///

போட்டு மென்னாச்சில்ல இன்னிக்கி!!

நட்புடன் ஜமால் said...

சுவாரஸ்யமா இருக்கே

-------------

இந்த பழ ஜூஸ் இங்கே கிடைக்குது

குடிப்பது உண்டு எப்பொழுதாவது.

வழிப்போக்கன் said...

ஊசிபோல உடம்பிருந்தா தேவையில்லை பாமசி....

:)))

சங்கா said...

ஹி ஹி! பெரியாவது பொரியாவது!!

Sinthu said...

விருது வழங்கியுள்ளேன், பெற்றுக் கொள்க...

Sinthu said...

உண்மையாவா?

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
சுவாரஸ்யமா இருக்கே

-------------

இந்த பழ ஜூஸ் இங்கே கிடைக்குது

குடிப்பது உண்டு எப்பொழுதாவது.

17 September 2009 06:36///

இது மாத்திரையாக் கிடைக்குது ஜமால்!!

தேவன் மாயம் said...

வழிப்போக்கன் said...
ஊசிபோல உடம்பிருந்தா தேவையில்லை பாமசி....

:)))

17 September 2009 08:03
//

ஊசி போட்டாத்தான் நீ சரியா வருவே!

தேவன் மாயம் said...

சங்கா said...
ஹி ஹி! பெரியாவது பொரியாவது!!

17 September 2009//
உடம்பு
பொரி சாப்பிட்டாலே குறையுமப்பா!

தேவன் மாயம் said...

Sinthu said...
விருது வழங்கியுள்ளேன், பெற்றுக் கொள்க...

17 September 2009 08:20


Sinthu said...
உண்மையாவா?

17 September 2009 0//

நன்றி சிந்து! நீ ஒல்லிதான் உனக்கெதுக்கு இது!

Subankan said...

//இதுவரை எந்த அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லாத பொருள் பிரிட்னியால் சக்கைப்போடு போடுகிறது//

மணிகட்டின மாடு சொன்னா எல்லாரும் தலய ஆட்டத்தானே செய்வாங்க.

டம்பி மேவீ said...

:)))

இராகவன் நைஜிரியா said...

:-)

இராகவன் நைஜிரியா said...

தாங்க முடியலடா சாமி...

மருத்துவரே எப்படிங்க இதெல்லாம்...

Anonymous said...

:)

" உழவன் " " Uzhavan " said...

வியாபார யுக்திதான் காரணம்.. ஊரை ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் உண்மை

பிரியமுடன்...வசந்த் said...

அடப்பாவி மக்கா......

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory