சக்கரை நோயாளிகளுக்கு சக்கரையின் அளவைச் சரியாகப் பராமரிப்பது மிகக் கடினமாக இருக்கும். தொடர்ந்து மாத்திரை ஊசிகளைப் போடுவது கொஞ்சம் நாளாக ஆக அலுப்பூட்டும். இதனால் அவர்கள் தங்களின் சக்கரை அளவுகளை சரியாகக் கவனிக்காமல் இருந்து விடுவார்கள். இதனால் தாழ்நிலை சக்கரை, உயர்நிலைச் சக்கரை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப் படுகின்றனர்.
இவற்றில் எது ஆபத்தானது? தாழ்நிலைச் சக்கரையினால் என்ன அறிகுறிகள் தோன்றும்? இவற்றை அறிந்து கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தாழ்நிலைச்சக்கரை அறிகுறிகள்:
1.உடல் நடுக்கம்
2.படபடப்பு
3.வியர்வைப் பெருக்கு
4.பசி எடுத்தல்
5.உடல் சோர்வு
6.உடல் அசதி
7.தலைவலி
8.குழப்பமான மனநிலை
9.குழறிய பேச்சு
10.இரட்டைப் பார்வை
11.உடல் ஜில்லிட்டுப்போதல்
12.முகம் வெளுத்துப் போவது
13.மயக்கம், கோமா- சுய நினைவிழத்தல்
நாம் நமது சக்கரை அளவு கூடிவிடாமலும், குறைந்து விடாமலும் கவனித்துக்கொள்வது அவசியம். நல்ல சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு தாழ்நிலை சக்கரை சில நேரங்களில் ஏற்படத்தான் செய்யும்.
ஆனால் உடல் இதற்கு ஏற்ப உடலில் சக்கரையை அதிகப்படுத்த முயற்சிக்கும். அப்படி முடியாத போது மேல் சொன்ன அறிகுறிகள் தோன்றும்.
சக்கரைக்குறைவினால் உடனடியாக பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உடனே சாக்லேட், சீனி போன்றவற்றைப் போட்டுக்கொண்டோ அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை செய்தோ உடலை சரிசெய்து கொள்ளலாம்.
அதே நேரம் சக்கரை அதிகமிருந்தால் மெதுவாக உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி உடலிலுள்ள உறுப்புக்களை எல்லாம் செயலிழக்க வைக்கும்.
தாழ்நிலை சக்கரையைத் தடுக்க சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
சுய ரத்தப் பரிசோதனை கருவிகளின் மூலம் வீட்டிலேயே சக்கரை அளவை சோதித்துக்கொள்ள வேண்டும்!!
20 comments:
நல்ல இடுகை
நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்
கதிர் - ஈரோடு said...
நல்ல இடுகை
நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறே///
நன்றி கதிர்!!
பயனுள்ள விடயம்.
எனக்கு சர்க்கரை வியாதி இல்லை. இது வரை செய்த சோதனை முடிவு.
ஆனால் நீங்கள் குறிப்பிட்ட பல அறிகுறிகள் எனக்குப் பல சமயம் இருந்ததுண்டு.
பரிசோதனை வீட்டில் செய்வேன். அளவாகத் தான் உள்ளது.
உணவுக் கட்டுப்பாட்டுடனே வாழ்கிறேன்.ஏன்? இந்த அறிகுறிகள் .
என் வைத்தியருடனும் ஆலோசித்தேன். பரிசோதனைகளின் பின் ஏதும் இல்லை என்றார்.
மகிழ்வே..எனினும் அறிகுறிகள் யோசிக்க வைக்கின்றன.
நன்றி!
//நல்ல சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு தாழ்நிலை சக்கரை சில நேரங்களில் ஏற்படத்தான் செய்யும்.//
புதிய தகவல்...அதை சரிசெய்யும் வழிமுறைகளுடன் விளக்கியது பயனுள்ள ஒன்று...
அவசியமான பதிவை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...
voted 3/3
சர்க்கரை அதிகம் உள்ளவர்களுக்கு குறைந்தாலும் இதே போல் ஆகுமா?
தகவல்களுக்கு நன்றி மருத்துவரே.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..:-))
தகவல் அருமை
தாழ்நிலை சர்க்கரைக்குறைவு அந்தளவிற்கு பாதிப்பு குறைவுதான் சரியா
நல்லதொரு பதிவுக்கு நன்றி மருத்துவரே!!
பயனுள்ள இடுகை
ஜி, அவசியமான இடுகை.
வழக்கம்போல் டாக்டரோட ஸ்பெசல் ஃபெர்ஃபார்மன்ஸ்,,,
தேவா,
நல்ல கட்டுரை. //உடனே சாக்லேட், சீனி போன்றவற்றைப் போட்டுக்கொண்டோ அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை செய்தோ உடலை சரிசெய்து கொள்ளலாம்//. அதிக சர்க்கரை உடனடியாக பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால் சர்க்கரைக் குறைவு ஏற்பட்டு உடனடியாக சரி செய்யப்படாவிட்டால் (சர்க்கரை எடுக்கப்படாவிட்டால்) மூளை பாதிப்பு, கோமா மற்றும் மரணம் கூட ஏற்படும்.
//குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்// நீங்கள் சொல்ல வந்தது, நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யாமல் ஒரு ஒழுங்குடன் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் என்பது. சரியா டாக்டர்? ஏனென்றால் உடற்பயிற்சி சர்க்கரை அளவைக் குறைக்கும்.
அபுஅஃப்ஸர்,
//தாழ்நிலை சர்க்கரைக்குறைவு அந்தளவிற்கு பாதிப்பு குறைவுதான் சரியா// அல்ல, உடனடி சிகிச்சை மேகொள்ளப்படாவிட்டால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தேவா,
நீரிழிவைப் பற்றிய பதிவுகள் அருமையாக இருக்கின்றன. மேலும் நம் மக்கள் பொதுவாக சோதனை செய்யாத Amylase and Lipase பற்றியும் எழுதுங்களேன்.
பயனுள்ள பதிவு டாக்டர்.
நன்றி.
ஆஹா எனக்கான பதிவு. நன்றி தேவா.
ஒரு சந்தேகம் தாழ்நிலைச் சக்கரை பரம்பரையாக வர வாய்ப்பிருக்கிறதா?
அம்மா, அப்பா, நான், தம்பி என நாங்கள் இதனால் அவதி படுவதால் கேட்கிறேன்.
நல்லதொரு விளக்கம் நண்பரே..!
முருகன் புண்ணியத்தில் என் நேரத்திற்குத் தகுந்தாற்போல் பதிவு போட்டிருக்கிறீர்கள்..!
பார்க்க எனது பதிவு.. http://truetamilans.blogspot.com/2009/09/blog-post_26.html
நன்றி.. நன்றி.. நன்றி..!
நல்ல பதிவு
// சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! //
உடனே மளிகை கடைக்கோ... ரேஷன் கடைக்கோ...... போய் ஒரு கிலோவோ... ரெண்டு கிலோவோ.... வாங்கிட்டு வர வேண்டியதுதானுங்க தலைவரே.....
நல்ல .. நல்ல... ஹெல்த் இன்பர்மேஷன் குடுக்குரிங்க....!! தகவல்களுக்கு மிக்க நன்றி...!!
Post a Comment