Saturday, 26 September 2009

இவரைப் போல் பலரும்!

”என்னைப் போல் ஒருவன் “ வந்தாலும் வந்தது, ஆளாளுக்கு பதிவு போட்டு கலக்கிவிட்டீர்கள்!! நாமும் இதுபோல் போட வேண்டும் என்று ஒரு ஆசை விடாமல் துரத்தியது.

என்னடா செய்யலாம் என்று பார்த்தால் மாட்டினார் உண்மைத்தமிழன்!!

விரயச் சனியின் முடிவும், ஏழரைச் சனியின் துவக்கமும்..! 

என்ற அவரின் பதிவில் என் இடுகையைச் சொல்லியிருந்தார்.

எல்லாம் முடிந்து வீடு வந்து சேர்ந்து கை அரித்ததினால் கம்ப்யூட்டர் முன்பாக உட்கார்ந்து தமிழ்மணத்தை நோண்ட.. மிகச் சரியாகப் பாருங்கள்.. நமது சக பதிவர் தேவன்மாயம், சர்க்கரைக் குறைவு - என்ன செய்ய வேண்டும்? என்கிற தலைப்பில் பதிவு போட்டிருக்கிறார். இது எப்படி இருக்கு..? படித்துப் பாருங்கள் பதிவர்களே.. இந்தக் குறை உள்ளவர்கள் இனிமேலாச்சும் தேவன்மாயம் அண்ணன் சொல்ற மாதிரி சூதானமா நடந்துக்குங்க..
இதைத்தான் தெய்வச் செயல் என்பதா..?
நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இன்னொன்று..
கடந்த இரண்டரை வருடங்களாக
என்னை ஆட்டி வைத்தது 'விரயச் சனி'யாம்.. நமக்குத்தான் செலவே இல்லையே என்று தெம்பாக இருந்தவனுக்கு 'விரயச் சனி' முடிய இருந்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் வேலையைக் காட்டிவிட்டான் சனி பகவான்..

---------------------------------------------

இதைச் சொல்லும்போது கட்டாயம் சிலருடைய கேள்விக்கும் பதில் சொல்லணுமே!

” கேள்வி பதிலா? யோவ் ஆளை விடுய்யா ”- என்று பலர் அலறி ஓடுவது தெரியுது! இஃகி! இஃகி!!

எங்கே போகப்போறீங்க! என் நண்பர்கள் (நிறைய நேரம் நானும் எழுதும்!!!) மொக்கைகளைப் படிக்கப்போவீங்க.

சரி!! ஓகே!! சாவகாசமா வந்து தொடர்ந்து படிங்க!

Blogger1.யோகன் பாரிஸ்(Johan-Paris) said..clip_image002.

பயனுள்ள விடயம்.
எனக்கு சர்க்கரை வியாதி இல்லை. இது வரை செய்த சோதனை முடிவு.
ஆனால் நீங்கள் குறிப்பிட்ட பல அறிகுறிகள் எனக்குப் பல சமயம் இருந்ததுண்டு.
பரிசோதனை வீட்டில் செய்வேன். அளவாகத் தான் உள்ளது.
உணவுக் கட்டுப்பாட்டுடனே வாழ்கிறேன்.ஏன்? இந்த அறிகுறிகள் .
என் வைத்தியருடனும் ஆலோசித்தேன். பரிசோதனைகளின் பின் ஏதும் இல்லை என்றார்.
மகிழ்வே..எனினும் அறிகுறிகள் யோசிக்க வைக்கின்றன.
நன்றி!

25 September 2009 02:05//

இப்படி இருப்பது நார்மல்தான்!! உங்களுக்கு சக்கரை வியாதி இல்லை. பயம் வேண்டாம். சரியான நேரத்தில் சாப்பிடவும். சக்கரை அதிகமாக இரத்தத்தில் சிறிநீரில் இருப்பதையே சக்கரை வியாதி என்கிறோம்.

Blogger 2.வால்பையன் said...

சர்க்கரை அதிகம் உள்ளவர்களுக்கு குறைந்தாலும் இதே போல் ஆகுமா?

25 September 2009 02:57///

ஆமாம்!! சக்கரை அதிகம் உள்ளவர்களுக்குத்தான் அடிக்கடி இப்படிக் குறையும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் மிகக் குறைவாகச் சாப்பிட்டும்போது சக்கரை அளவு 140 இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் மாத்திரை போட்டவுடன் 60 இரத்த சக்கரை வந்துவிட்டால் உங்களுக்கு மயக்கம் வந்து விடும். உண்மைத் தமிழன் போல் காலையில் சாப்பிடாமல் போனாலும் இரத்தத்தில் சக்கரை குறையலாம். இதுபோல் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை.

3.அபுஅஃப்ஸர் said...

தகவல் அருமை
தாழ்நிலை சர்க்கரைக்குறைவு அந்தளவிற்கு பாதிப்பு குறைவுதான் சரியா

25 September 2009 03:50///

உண்மைதான்! மிகவும் சக்கரை குறைந்து தூங்குகிறார்கள் என்று கவனிக்காமல் விட்டுவிட்டால் சிரமம்!

 

Blogger4.அமர பாரதி said...

தேவா,
நல்ல கட்டுரை. //உடனே சாக்லேட், சீனி போன்றவற்றைப் போட்டுக்கொண்டோ அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை செய்தோ உடலை சரிசெய்து கொள்ளலாம்//. அதிக சர்க்கரை உடனடியாக பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால் சர்க்கரைக் குறைவு ஏற்பட்டு உடனடியாக சரி செய்யப்படாவிட்டால் (சர்க்கரை எடுக்கப்படாவிட்டால்) மூளை பாதிப்பு, கோமா மற்றும் மரணம் கூட ஏற்படும்.
//குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்// நீங்கள் சொல்ல வந்தது, நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யாமல் ஒரு ஒழுங்குடன் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் என்பது. சரியா டாக்டர்? ஏனென்றால் உடற்பயிற்சி சர்க்கரை அளவைக் குறைக்கும்.//

உண்மைதான்!! மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!!

 

Blogger5.புதுகைத் தென்றல் said...

ஆஹா எனக்கான பதிவு. நன்றி தேவா.
ஒரு சந்தேகம் தாழ்நிலைச் சக்கரை பரம்பரையாக வர வாய்ப்பிருக்கிறதா?
அம்மா, அப்பா, நான், தம்பி என நாங்கள் இதனால் அவதி படுவதால் கேட்கிறேன்.

25 September 2009 23:19///

தாழ்நிலைச் சக்கரை அப்படி வரலாம். ஆனால் இது ஒரு வியாதி அல்ல! பயம் வேண்டாம்.

 

Blogger6.உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நல்லதொரு விளக்கம் நண்பரே..!
முருகன் புண்ணியத்தில் என் நேரத்திற்குத் தகுந்தாற்போல் பதிவு போட்டிருக்கிறீர்கள்..!
பார்க்க எனது பதிவு.. http://truetamilans.blogspot.com/2009/09/blog-post_26.html
நன்றி.. நன்றி.. நன்றி..!

26 September 2009 00:19//

என் பதிவு உங்களுக்கு உபயோகமாக இருப்பதில் மிகவும் மகிழ்கிறேன். நான் இதை எழுதியதற்குப் பயன் கிடைத்த சந்தோசம். காலையில் சாப்பிட்டு விடுங்கள்!

Blogger

7.லவ்டேல் மேடி said...

// சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! //
உடனே மளிகை கடைக்கோ... ரேஷன் கடைக்கோ...... போய் ஒரு கிலோவோ... ரெண்டு கிலோவோ.... வாங்கிட்டு வர வேண்டியதுதானுங்க தலைவரே.....

26 September 2009 15:27///

மேடி! ஜாலியான ஆளுய்யா நீ!!  சமையல் புலி மேடி சொல்வதை அடுப்படியில் பின்பற்றுங்க!!

”இவரைப் போல் பலரும்” கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியாச்சு!

----------------------------------------

26 comments:

பிரியமுடன்...வசந்த் said...

எல்லாமே அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்...நன்றி தேவா சார்...

சார் காதல் கேள்வி பதில்கள் ஆரம்பிங்களேன் நான் கேள்வி கேக்குறேன்

நான் மட்டுமில்ல பதில் சொல்லவே முடியாத அளவுக்கு கேள்விகள் உங்களை வந்து சேரும்....

சென்ஷி said...

:-))


கேள்விகளும் பதில்களும் மிக அருமை.. அதிலும் லவ்டேல்மேடியின் சர்க்கரைக் குறைவை நிவர்த்தி செய்யும் வழிமுறை ஓஹோ.....!

தேவன் மாயம் said...

பிரியமுடன்...வசந்த் said...
எல்லாமே அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்...நன்றி தேவா சார்...

சார் காதல் கேள்வி பதில்கள் ஆரம்பிங்களேன் நான் கேள்வி கேக்குறேன்

நான் மட்டுமில்ல பதில் சொல்லவே முடியாத அளவுக்கு கேள்விகள் உங்களை வந்து சேரும்....

26 September 2009 20://

காதல் என்றால் இனிக்குதா/ கசக்குதா வசந்த்! யோசிக்கிறேன்!

தேவன் மாயம் said...

சென்ஷி said...
:-))


கேள்விகளும் பதில்களும் மிக அருமை.. அதிலும் லவ்டேல்மேடியின் சர்க்கரைக் குறைவை நிவர்த்தி செய்யும் வழிமுறை ஓஹோ.....!

26 September 2009 20:29//

ஆகா! மேடியின் பதில்தான் பிடித்ததா? சரிதான்/

Nundhaa said...

நீங்க diabeticianஆ ... இப்படி பிரித்து மேய்கிறீர்களே ... :)

S.A. நவாஸுதீன் said...

நண்பர்களின் ஐயங்களுக்கு நல்ல விளக்கம் கொடுத்திருக்கின்றீர்கள் தேவா சார். அதை இடுகையாக இட்டது மற்றொரு சிறப்பு

தண்டோரா ...... said...

சர்க்கரை விலை அநியாயத்திற்கு ஏறிப்போச்சே.அதுக்கு எதாவது?

பிரபா said...

அன்பான உள்ளம் கொண்ட உங்களை தொடர் பதிவொன்றுக்கு அழைத்திருக்கிறேன் ,
வந்து கலக்குங்க.......

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

கேள்வி பதிலுக்கும், அறிவுரைக்கும் மிக்க நன்றிகள் ஸார்..!

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

-:)

தேவன் மாயம் said...

Nundhaa said...
நீங்க diabeticianஆ ... இப்படி பிரித்து மேய்கிறீர்களே ... :)

26 September 2009 22:09///

எல்லாம் சும்மா எழுதுவதுதான்!

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
நண்பர்களின் ஐயங்களுக்கு நல்ல விளக்கம் கொடுத்திருக்கின்றீர்கள் தேவா சார். அதை இடுகையாக இட்டது மற்றொரு சிறப்பு

26 September 2009 22:27///

நன்றி நவாஸ்!!

தேவன் மாயம் said...

தண்டோரா ...... said...
சர்க்கரை விலை அநியாயத்திற்கு ஏறிப்போச்சே.அதுக்கு எதாவது?

26 September 2009 23:06//

உங்களை முதல்வராக்கவேண்டியதுதான்!!

தேவன் மாயம் said...

பிரபா said...
அன்பான உள்ளம் கொண்ட உங்களை தொடர் பதிவொன்றுக்கு அழைத்திருக்கிறேன் ,
வந்து கலக்குங்க.......

26 September 2009 23:15//

என் உள்ளம் சக்கரையா!! இதோ வருகிறேன்!!

தேவன் மாயம் said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
கேள்வி பதிலுக்கும், அறிவுரைக்கும் மிக்க நன்றிகள் ஸார்..!

27 September 2009 00:05///

மிக்க நன்றி!!! உடம்பைக் கவனிக்கவும் உண்மைத்தமிழன்!!உங்கள் இடுகையின் பின்னூட்டங்களில் எவ்வளவு பேர் அன்புடன் எழுதியுள்ளார்கள் பார்த்தீர்களா?

ஹேமா said...

தேவா,உங்கள் சில பதிவுகளை நான் பிரதி பண்ணி வைத்திருக்கிறேன்.
தேவைப்படுமே பிற்காலத்தில்.

தேவன் மாயம் said...

ஹேமா said...
தேவா,உங்கள் சில பதிவுகளை நான் பிரதி பண்ணி வைத்திருக்கிறேன்.
தேவைப்படுமே பிற்காலத்தில்.

27 September 2009 00:30//

வச்சுக்கங்க! என்னை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்!

அன்புடன் அருணா said...

எல்லாமே அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்........நன்றி!

அபுஅஃப்ஸர் said...

ARUMAI DR.

KEEP ON POST

புதுகைத் தென்றல் said...

பதில்கள் இன்னும் தெளிவா புரிய வெச்சிருச்சு. லோ பீபி பத்தியும் எழுதுங்க தேவா.

Anonymous said...

பலருக்கான பதிலில் பொதுவாக எல்லாருக்கும் விடை கிடைத்து விட்டது....

Anonymous said...

இலவச மருத்துவ மையம் உங்கள் ப்லாக்

இய‌ற்கை said...

தெரிஞ்சிக்க வேண்டிய உபயோகமான கேள்விகளும் பதில்களும்... நன்றி.. கேட்டவர்களுக்கும்.. சொன்னவருக்கும்

Gobenath said...

Nice post.

Pavi said...

நல்ல கருத்துக்கள். எல்லோரும் தெரிந்திருக்க வேண்டியவை
உங்களிடம் இருந்து இன்னும் பல நல்ல விடயங்களை எதிர்பார்க்கிறேன்.

வால்பையன் said...

தகவலுக்கு மிக்க நன்றி டாக்டர்!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory