Monday, 7 September 2009

காதலில் இருப்பதைக் கண்டு பிடிப்பது எப்படி!

நீங்கள் காதலில் இருப்பதைக் கண்டு கொள்வது எப்படி?  எல்லோரும் இந்த தலைப்பில் நிறைய எழுதி இருப்பாங்க!!! நானும் அந்த வரிசையில் சேர்ந்து கொள்கிறேன்! படித்துப்பாருங்கள்.

1.அந்த முக்கியமான நபருடன் இருக்கும்போது அவரைக்கண்டுகொள்ளாததுபோல் இருக்கிறீர்களா? அவர் இல்லாதபோது அவரை உங்கள் கண்கள் தேடுகிறதா? அப்படியாயின் காதல் ஆரம்பிக்கப்பார்க்குதுங்க!

2.உங்க கிட்டதான் இவ்வளவு பேசுகிறேன்! வேற யாருக்கிட்டயும் நான் பேசிப்பழக்கம் இல்லைன்னு சொல்கிறாரா?... ரூட் ஆரம்பமாகுதுங்கோ!!!

3.நண்பர்கள் கூட்டத்தில் உங்களை சிரிக்க வைக்க மாறிமாறி ஜோக்கா அடிப்பானுங்க. அதையெல்லாம் கண்டுக்காம ஒரு ஆசாமியையே நோட்டம் விடுகிறீர்களா? மேட்டர ஆரம்பிக்கவேண்டியதுதான்!!

4.வெளியூர் போனவன்/ள் வந்து சேர்ந்துவிட்டேன் என்று போன் பண்ணவில்லை, போன் மணியோ அடிக்கவே இல்லை. வேலைவெட்டிக்கு சாக்கு சொல்லிட்டு போன் பக்கத்திலேயே காத்துக்கிட்டு இருக்கீங்களா? போன் வருதோ இல்லையோ! காதல் வந்து விட்டதுங்கோ!!

5.பேசிக்கொண்டு இருக்கும்போது உங்கள் நண்பி/ நண்பருடன் உங்கள் நபர் அதிக கடலை வறுப்பதைக் கண்டு உங்கள் மனம் கொதிக்கிறதா?

6.அந்த நபருடன் பேசும் போது உங்கள் இருவர் கண்களும் சந்தித்தால் ஷாக் அடிப்பதுபோல் இருக்கா!! காதல் கரண்டுதான் அது!! 6.பேசிக்கொண்டிருக்கும் போதே உங்கள் கைக்கடிகாரம் மிக வேகமாக ஓடுவது போல் தெரியுதா!! (காதல் முனி ஓட்டாம்தான் அது!!)

7.பெரிய பெரிய ஈமெயிலெல்லாம் கண்டுக்காம அந்த நபர் அனுப்பிய சின்ன ஈமெயில் பார்க்கப் பார்க்க ஆனந்தமா இருக்கா!!!அப்புறம் என்ன! அதுதான்!

8.அந்த ஈமெயிலை அழிக்க விரும்பாத காரணத்தை மறைக்க எல்லா ஈமெயிகளையும் அழிக்காமல் வைத்திருக்கிறீர்களா?

9.ஏதாவது புதுப்படத்துக்கு டிக்கெட் இலவசமாகக் கிடைத்தால் அந்த நபரின் ஞாபகம் வருகிறதா... வந்தாலே அதுதாங்கோ!!

10.உங்கள் மனதுக்கே நீங்க அல்வா குடுக்கிற கணக்கா “ நாங்கள் ரெண்டுபேரும் சாதாரண நண்பர்கள்தான்”னு உங்க மனசுக்கு சமாதானம் சொல்லுவீங்க. ஆனாலும் உங்க ரெண்டுபேருக்கும் நடுவில் அதுக்கும் மேலே ஏதாவது ஒன்னு ஓடுதா?..... ஓகே! ஓகே!!

காதலைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். அதற்கு பிளாகரே பத்தாது. ஆகையினால் இத்துடன் நான் முடித்துக் கொள்கிறேன்!!

நீங்க ஆரம்பிங்க!!!

42 comments:

பாலா said...

ஹாஹாஹாஹா அப்போ இதுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்ல

பாலா said...

ஐ மீ தா பஸ்ட்டு

சென்ஷி said...

//.உங்க கிட்டதான் இவ்வளவு பேசுகிறேன்! வேற யாருக்கிட்டயும் நான் பேசிப்பழக்கம் இல்லைன்னு சொல்கிறாரா?... ரூட் ஆரம்பமாகுதுங்கோ!!!//


ஹா ஹா ஹா.... நல்ல காமெடிங்கோ!!! :-)))

சென்ஷி said...

//5.பேசிக்கொண்டு இருக்கும்போது உங்கள் நண்பி/ நண்பருடன் உங்கள் நபர் அதிக கடலை வறுப்பதைக் கண்டு உங்கள் மனம் கொதிக்கிறதா?//

மனம் மாத்திரம் கொதிக்காது. வயித்தெரிச்சல்ல கண்ணு சிவந்து ரத்தக்கண்ணீர் வந்துடும். சிம்பிளா ஜெலுசில் வாங்கி முழுங்கிட்டு போயிடலாம் :-)

சென்ஷி said...

//6.அந்த நபருடன் பேசும் போது உங்கள் இருவர் கண்களும் சந்தித்தால் ஷாக் அடிப்பதுபோல் இருக்கா!! காதல் கரண்டுதான் அது!! //

அதான் லவ் பண்றவஙக் தலைக்கு மேல பல்பு எரியுதா டாக்டர் :)

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆணியே புடுங்க வேண்டாம்..;-))))

சென்ஷி said...

//6.பேசிக்கொண்டிருக்கும் போதே உங்கள் கைக்கடிகாரம் மிக வேகமாக ஓடுவது போல் தெரியுதா!!//

நிறைய்ய பேர் பேசிக்கிட்டு இருக்கும்போதே பர்ஸ்ல பணம் அதை விட சீக்கிரம் தீருதுன்னு சொல்லியிருக்காங்க டாக்டர் :)

சென்ஷி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...

ஆணியே புடுங்க வேண்டாம்..;-))))//

அவ்ளோ ஈசியா விட்ருவோமா.. ஆணியை அடிக்க வைச்சு புடுங்க வைக்கறோம் பாருங்க :-)

சென்ஷி said...

//7.பெரிய பெரிய ஈமெயிலெல்லாம் கண்டுக்காம அந்த நபர் அனுப்பிய சின்ன ஈமெயில் பார்க்கப் பார்க்க ஆனந்தமா இருக்கா!!!அப்புறம் என்ன! அதுதான்!//

அதுதான்னா! சிஸ்டம்ல காதல் வைரஸ் வர்றது இப்படித்தானா!

க.பாலாஜி said...

//5.பேசிக்கொண்டு இருக்கும்போது உங்கள் நண்பி/ நண்பருடன் உங்கள் நபர் அதிக கடலை வறுப்பதைக் கண்டு உங்கள் மனம் கொதிக்கிறதா?//

ஆமா..ஆமா....எப்படி..இப்டில்லாம்...மனசுல உள்ளத இப்டி டக்குன்னு சொல்லிட்டீங்களே...அந்த நேரத்துல வர கோபம் இருக்கே எப்டி சொல்றது...படுபாவி...

எல்லாமே சூப்பர்...

சென்ஷி said...

//9.ஏதாவது புதுப்படத்துக்கு டிக்கெட் இலவசமாகக் கிடைத்தால் அந்த நபரின் ஞாபகம் வருகிறதா... வந்தாலே அதுதாங்கோ!! //

படம் மொக்கையா இருந்தா வர்ற கொலவெறியில கொலை கூட செய்யத் தோணுமா டாக்டர்!

சென்ஷி said...

//8.அந்த ஈமெயிலை அழிக்க விரும்பாத காரணத்தை மறைக்க எல்லா ஈமெயிகளையும் அழிக்காமல் வைத்திருக்கிறீர்களா?//

இன் பாக்ஸ் நொம்பி வழிஞ்சு தேம்பி அழுதுருக்கும் :)

சென்ஷி said...

//10.உங்கள் மனதுக்கே நீங்க அல்வா குடுக்கிற கணக்கா “ நாங்கள் ரெண்டுபேரும் சாதாரண நண்பர்கள்தான்”//

ஆமா.. கடைசியா அவ அல்வா கொடுத்ததுக்கப்புறம் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல அல்லன்னு தனியா பாடிட்டு இருப்பாங்க

சென்ஷி said...

//காதலைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். அதற்கு பிளாகரே பத்தாது.//

ஆஹா 100 கமெண்டு போடலாம்ன்னு நினைச்சேன். இப்படி சட்டுன்னு முடிச்சுட்டீங்களே டாக்டர் :-(

சென்ஷி said...

//உங்க ரெண்டுபேருக்கும் நடுவில் அதுக்கும் மேலே ஏதாவது ஒன்னு ஓடுதா?..... //

மேல ஓடலை டாக்டர்.. பறக்குது..


கொசு

சென்ஷி said...

//நீங்கள் காதலில் இருப்பதைக் கண்டு கொள்வது எப்படி?//

மத்தவங்களே இவனுங்க பண்ற சேஷ்டையை பார்த்து கரெக்டா வந்து சொல்லிட்டு போவாங்க.

திருந்துரா டேய்ன்னு :-)

சென்ஷி said...

ஓக்கே.. பை பை :-)

வால்பையன் said...

பத்து எச்சரிக்கை கொடுத்துருக்கார்!
பார்த்து ஜாக்கிரதையா இருங்க!

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

S.A. நவாஸுதீன் said...

இந்த Prescription ரொம்ப தெளிவா இருக்கு தேவா சார்.

ஜெரி ஈசானந்தா. said...

அட நெசந்தான், மேட்டேர ஸ்டார்ட் பண்ணலாம்னு பார்த்தா "என் பொண்டாட்டிக்கு பயமா இருக்கு டாக்டர்."

Abdul said...
This comment has been removed by the author.
Abdul said...
This comment has been removed by the author.
இராகவன் நைஜிரியா said...

// 6.அந்த நபருடன் பேசும் போது உங்கள் இருவர் கண்களும் சந்தித்தால் ஷாக் அடிப்பதுபோல் இருக்கா!! காதல் கரண்டுதான் அது!! 6.பேசிக்கொண்டிருக்கும் போதே உங்கள் கைக்கடிகாரம் மிக வேகமாக ஓடுவது போல் தெரியுதா!! (காதல் முனி ஓட்டாம்தான் அது!!) //

பாயிண்ட் நம்பர் அடிக்கும் போது, ஒரே நம்பரை இரண்டு தரம் அடிக்கிறீங்களா... அப்போ சந்தேகமில்லாம அதுதாங்க.

இராகவன் நைஜிரியா said...

// ஜெரி ஈசானந்தா. said...
அட நெசந்தான், மேட்டேர ஸ்டார்ட் பண்ணலாம்னு பார்த்தா "என் பொண்டாட்டிக்கு பயமா இருக்கு டாக்டர்." //

இதுக்கு என்ன சொல்றீங்க மருத்துவரே..

முனைவர்.இரா.குணசீலன் said...

சமூகத்தில் உள்ள உளவியல் கூறுகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

சுந்தர் said...

இராகவன் நைஜிரியா said...
// ஜெரி ஈசானந்தா. said...
அட நெசந்தான், மேட்டேர ஸ்டார்ட் பண்ணலாம்னு பார்த்தா "என் பொண்டாட்டிக்கு பயமா இருக்கு டாக்டர்." //

இதுக்கு என்ன சொல்றீங்க மருத்துவரே.//இதுவும் காதல் தான்னே , மனைவியின் மீது !.

அகல் விளக்கு said...

அய்யய்யோ........

இதுல நிறைய சிம்டம்ஸ் எனக்கு இருக்கிற மாதிரியே இருக்கே...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஓ நன்று!

நீங்க டாக்டரேட் இன் சைக்காலஜியா!

’டொன்’ லீ said...

:-))) நல்லா ஆராய்ச்சி பண்ணிறீங்க :-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

காதலித்துப் பார்க்கச் சொன்ன நம்ம
கருப்பட்டி,
இப்படி சொல்லுச்சு!

காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!

தேவன் மாயம் said...

பாலா said...
ஹாஹாஹாஹா அப்போ இதுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்ல

08 September 2009 00:10


பாலா said...
ஐ மீ தா பஸ்ட்டு

08 September 2009 00:///

முதல் பரிசு பாலாவுக்குத்தான்!

தேவன் மாயம் said...

சென்ஷி!!! கலக்கல் பின்னூட்டங்கள்!! கொன்னுட்டிங்க!!!

பிரியமுடன்...வசந்த் said...

//1.அந்த முக்கியமான நபருடன் இருக்கும்போது அவரைக்கண்டுகொள்ளாததுபோல் இருக்கிறீர்களா? அவர் இல்லாதபோது அவரை உங்கள் கண்கள் தேடுகிறதா? அப்படியாயின் காதல் ஆரம்பிக்கப்பார்க்குதுங்க!//

ரியல்

பிரியமுடன்...வசந்த் said...

//2.உங்க கிட்டதான் இவ்வளவு பேசுகிறேன்! வேற யாருக்கிட்டயும் நான் பேசிப்பழக்கம் இல்லைன்னு சொல்கிறாரா?... ரூட் ஆரம்பமாகுதுங்கோ!!!//

ஆமாம் செல் பில்லும் அதிகமாகும்...

பிரியமுடன்...வசந்த் said...

காதல் வந்தால்....கன நேரமும் யுகம்தான்

கலக்கல் போஸ்ட் சார்

கிறுக்கன் said...

சுப்பர் அப்பு

அபுஅஃப்ஸர் said...

அந்த இமெயில் மேட்டர் என்னவோ உண்மை

Anonymous said...

PAYANULLA PATHIVU..AIYOO MANNIKANUM PAZHAKKA THOZHAM..EPPADI SIR ANUPAVA PAADAMA? EPPADIYO KANDUKIDA VAZHI KATTITENGA..

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...

//.உங்க கிட்டதான் இவ்வளவு பேசுகிறேன்! வேற யாருக்கிட்டயும் நான் பேசிப்பழக்கம் இல்லைன்னு சொல்கிறாரா?... ரூட் ஆரம்பமாகுதுங்கோ!!!//

கண்டிப்பா !! கண்டிப்பா !! ரூட் இங்க தான் ஆரம்பமாகும்!!
All Guys & girls Becare here..

cheena (சீனா) said...

ஏம்ம்பா சிம்பிளா டாக்டர் கிட்டே ( இவர் கிட்டே தான்பா ) போயி கையக் காட்டினா கரெக்டா சொல்ல மாட்டாரா - ஓட்டுப் போட்டுட்டேன்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory