Tuesday 3 November 2009

சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!

 

 

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.

சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

1.கால்கள்:சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

2.சிறுநீரகம்: சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

3.வயிறு, குடல்:அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.

4.மூக்கு: சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.

5.பல்,ஈறுகள்: பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.

6.கண்கள்: கண்களில் கட்ட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.

7.காது: காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.

இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான். சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.

தொற்றுக்களை தடுக்க:

1.சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

2.ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள்  நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.

3.ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.

4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி

5.தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.

6.தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.

7.வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.

8.சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.

9.சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

10.வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

11.சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.

12.பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.

13.கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

14.மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.

16 comments:

கோமதி அரசு said...

”சர்க்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள் !-தடுக்க 14 குறிப்புகள்!!”

அவசியமான் பதிவு.

பாராட்டுக்கள்.

venkat said...

ஆரோகியமான பதிவு.

அன்புடன் நான் said...

நல்லது மருத்துவரே.... பயனுள்ள பதிவு.
மிக்க நன்றி.

S.A. நவாஸுதீன் said...

அவசியமான தகவல்கள் தேவா சார். ரொம்ப நன்றி

அப்துல்மாலிக் said...

தெரியாததை நிறைய தெரியவைத்தமைக்கு நன்றி

Menaga Sathia said...

அவசியமான் பதிவு.பாராட்டுக்கள்!!

Ashok D said...

thanks நன்றி

SASee said...

நன்றி தேவா சார்
நல்ல பயனுள்ள தகவல்கள்
நன்றி நன்றி..!

வால்பையன் said...

மிக்க நன்றி டாக்டர்!

தேவன் மாயம் said...

கோமதி அரசு said...
”சர்க்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள் !-தடுக்க 14 குறிப்புகள்!!”

அவசியமான் பதிவு.

பாராட்டுக்கள்.

---------------------------

venkat said...

ஆரோகியமான பதிவு
-----------------------------
சி. கருணாகரசு said...
நல்லது மருத்துவரே.... பயனுள்ள பதிவு.
மிக்க நன்றி.

03 November 2009 0

-------------------------
S.A. நவாஸுதீன் said...
அவசியமான தகவல்கள் தேவா சார். ரொம்ப நன்றி

03 November 2009 02:42
---------------------

அபுஅஃப்ஸர் said...
தெரியாததை நிறைய தெரியவைத்தமைக்கு நன்றி

03 November 2009 03:02

-----------------------
Mrs.Menagasathia said...
அவசியமான் பதிவு.பாராட்டுக்கள்!!

03 November 2009 04:24

------------------------- D.R.Ashok said...
thanks நன்றி

03 November 2009 04:56


SASee said...
நன்றி தேவா சார்
நல்ல பயனுள்ள தகவல்கள்
நன்றி நன்றி..!

03 November 2009 04:56


வால்பையன் said...
மிக்க நன்றி டாக்டர்!

03 November 2009 06:59

--------------------------

அனைத்து மக்களுக்கும் என் நன்றி!!!

தேவா!!

-------------------------

பழமைபேசி said...

நல்ல குறிப்புகள் ஐயா, நன்றி!

Anonymous said...

கையை 5 நிமிடம் கழுவனுமா?????

குடிஷ்வரன் said...

வணக்கம்
சர்க்கரை நோய் குறைபாடு உடையவர்கள் மதுபானங்களைத் தொடவேக் கூடாது என்கிறார்கள். தவிர்க்க முடியாத நேரத்தில் என்ன மாதிரியான சரக்கு சாப்பிடலாம்? கொஞ்சம் சொல்லுங்களேன்..

SUFFIX said...

உபயோகமான தகவல்கள் டாக்டர்.

பீர் | Peer said...

டாக்டர், பதிவுகள் ரொம்ப சீரியஸா போய்கிட்டிருக்கு...

வாங்க, ஷார்ட் கமர்ஸியல் ப்ரேக் எடுத்துக்கலாம். உங்களை ஒரு தொடர் பதவி விளையாட்டிற்கு அழைத்துள்ளேன்.

பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

வல்லிசிம்ஹன் said...

நிறைய நல்ல குறிப்புகள். என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் அவசியமான

கருத்துகள். கட்டாயம் பின்பற்றுகிறேன். மிக மிக நன்றி.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory