தெற்கத்திக்கார், வடக்கத்திக்கார் - தலைப்பைப் பார்த்தவுடன் சிலருக்குப் புரிந்திருக்கும்!!
பலருக்கு இது என்னவென்றே தெரியாது!! சமீபத்தில் ஒரு கட்டுரை படிக்கும்போது எதையும் இயற்கையோடு சாப்பிட்டால் உடல் நலத்துக்குக் கெடுதல் குறைவு என்று.
சப்பாத்தி சாப்பிட்டும் நிறையப்பேர் சக்கரை குறையவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். காரணம் என்ன? தற்போது கோதுமை மாவு யாரும் கோதுமை வாங்கி அரைத்து உண்பது இல்லை. கோதுமை மாவாகவே பாக்கெட்டுகளில் வருகிறது. அதனையே வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். பாக்கெட்டில் வரும் மாவில் கோதுமை உமியானது நீக்கப்படுகிறது. அதன் தோல்பகுதி நீக்கப்பட்டு வெறும் மாவுப்பகுதி சலிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வருகிறது. இது சலிக்கப்படாமல் வாங்கி அரைக்கும் கோதுமை மாவைவிட அதிகமாக சக்கரையை உயர்த்தும்!! ஆகையால் தோலுடன் அரைக்கப்பட்ட கோதுமை ரொட்டியே நல்லது.
அதேபோல் கோதுமை தோசை எடை அதிகம். அது சக்கரையைக்கூட்டும்.
கிராமங்களில் பாலிஷ் செய்யப்படாத நீளமான அரிசியில் சோறு வடிப்பார்கள். அதற்கு வெள்ளைக்கத்தரிக்காயில் குழம்பு வைத்து சாப்பிடும்போது மிகவும் சுவையாக இருக்கும். அந்த நீளமான அரிசி வகையில் பிரபலமானவையே கார் அரிசி வகைகள். தற்போது நாம் சிறு பொன்னி வகை அரிசி உண்பதால் இந்தக் தெற்கத்தி, வடக்கத்திக்கார் வகைகள் நிறைய பயிரிடப்படுவதில்லை. அப்படிப் பயிரிட்டாலும் அவை கேரளாவுக்கு நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. நாம் கர்நாடகா, ஆந்திரா பொன்னியை சாப்பிடுகிறோம்.
இந்த சின்ன தீட்டப்பட்ட அரிசியை சாப்பிட்டுப் பழகிய நாக்கு கார் அரிசியைச் சாப்பிடுமா? கேரளாக்காரர்களால் முடிகிறது, நம்மால் முடியவில்லை!!
21 comments:
நல்ல விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள் தேவா சார்.. பொதுவாக நமது உணவு வகைகளில் நார்ச்சத்து சுத்தமாக கிடையாது.. இதுவே நோய்களை எதிர்க்கும் சக்தியை உடம்புக்கு தராமல் போகிறது என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்..
கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள் தேவா சார்.. பொதுவாக நமது உணவு வகைகளில் நார்ச்சத்து சுத்தமாக கிடையாது.. இதுவே நோய்களை எதிர்க்கும் சக்தியை உடம்புக்கு தராமல் போகிறது என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்..
12 November 2009 07:21///
நார்ச்சத்து தீட்டும் போது நீக்கப்படுகிறது!!
எனக்கு இந்த கார் வகை அரிசி சோறு ரெம்ப பிடிக்கும் . என்ன கொஞ்சம் சாப்பிடலே வயிறு நிரஞ்சுரும் .
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
Meenthulliyaan said...
எனக்கு இந்த கார் வகை அரிசி சோறு ரெம்ப பிடிக்கும் . என்ன கொஞ்சம் சாப்பிடலே வயிறு நிரஞ்சுரும் .
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
12 November 2009 07:53//
ஆமாங்க! சாப்பிட நல்லாத்தான் இருக்கும்!
நல்ல தகவல்கள் - பயனுள்ள தகவல்கள் - அள்ளித்தரும் தேவா - நல்வாழ்த்துகள்
என்ன செய்வது - நாக்கு சுகம் கண்டு விட்டது - உடல் சோம்பேறித்தனத்தில் ஊறி விட்டது - ரெடி பாஃஸ்ட் புஃட்ஸ் வந்து விட்டது
ம்ம்ம்ம் - நடப்பது நடக்கட்டும்
அட உங்க ஆராய்ச்சி அரிசியையும் விட்டு வைக்கவில்லை...தகவல்கள் பயனுள்ளவையே எப்பவும் போல.. நன்றி சார்...
cheena (சீனா) said...

12 November 2009 13:50///
நல்லவையும் போட்டியில் ஜெயித்தால்தான் நிலைக்கும்!!
நல்ல பதிவு.யோசிக்க வைத்தது ரொம்பவே.
தமிழரசி said...
அட உங்க ஆராய்ச்சி அரிசியையும் விட்டு வைக்கவில்லை...தகவல்கள் பயனுள்ளவையே எப்பவும் போல.. நன்றி சார்...
12 November 2009 20:42///
சொல்ல நினைப்பதை எழுதுகிறேன்!!
பூங்குன்றன் வேதநாயகம் said...
நல்ல பதிவு.யோசிக்க வைத்தது ரொம்பவே.
12 November 2009 21:29//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!
சரியாச் சொன்னீங்க நண்பரே.....
வாழ்த்துக்கள்
நான் இதுவரை சாப்பிட்டதில்லை.
கோதுமை மாவு பற்றிய தகவல் நல்ல, பயனுள்ளதாக இருந்தது. நன்றி டாக்டர்.
கோதுமை மாவுல இவ்வளவு இருக்கு என்று இன்றுதான் தெரியும். நன்றி.
கார் அரிசி - சாப்பிட நன்றாக இருக்கும். கை குத்தல் அரிசி சாதம் சாப்பிட்டு இருக்கேங்க.
//ஆகையால் தோலுடன் அரைக்கப்பட்ட கோதுமை ரொட்டியே நல்லது.//
இதுவரை நான் அறியாத செய்தி....
நல்ல சிந்தனைப்பகிர்வு....
//பயிரிட்டாலும் அவை கேரளாவுக்கு நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன/
கேரளத்தவர் அதை மோட்டா அரிசி என்று விரும்பி உண்ணுகிறார்கள். அதை முழுங்குவதே கடினம், இவர்கள் எப்படி என்று நான் வியந்தது உண்டு
//பயிரிட்டாலும் அவை கேரளாவுக்கு நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன/
கேரளத்தவர் அதை மோட்டா அரிசி என்று விரும்பி உண்ணுகிறார்கள். அதை முழுங்குவதே கடினம், இவர்கள் எப்படி என்று நான் வியந்தது உண்டு
//தோலுடன் அரைக்கப்பட்ட கோதுமை ரொட்டியே நல்லது//
தோலுடன் அரைத்து விற்றால் ஏதாவது நஷ்டமா? இல்லையென்றால் அதே மாதிரி செய்யலாமே
நல்ல தகவல் தேவா சார்
ரொம்ப நல்ல தகவல்கள் நன்றி தேவா.
நல்ல பகிர்வு நன்றி டாக்டர்....
Post a Comment