சமீபத்தில் விஜய் டி.வி. "நடந்தது என்ன?" நிகழ்ச்சியில் தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து போராடும் ஒரு தந்தையைப் பற்றி ஒரு நிகழ்ச்சி வந்தது.
கல்யாணாமாகி சென்ற மகள் ஏரியில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுவதை மறுத்தும் போஸ்ட்மார்ட்டம் பற்றி சந்தேகப்பட்டும் பல கேள்விகள், சந்தேகங்கள் அதில் சொல்லப்பட்டன.
தண்ணீரில் மூழ்கி இறந்தால் எப்படி இறப்பு ஏற்படும் என்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. ஆனால் அவசியம் நாம் இதைப்பற்றித் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அறிவியல் விளக்கங்களெல்லாம் தெரியாவிட்டாலும் சில அடிப்படை விசயங்கள் நமக்குத் தெரிய வேண்டும்.
நாம் அதுபற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 150000 பேர் நீரில் மூழ்கி இறக்கின்றனர்.
பொதுவாக தண்ணீரில் மூழ்கிய 4-8 நிமிடத்தில் இறப்பு ஏற்படுகிறது.
பிரேதப்பரிசோதனையில் தண்ணீரில் மூழ்கி இறந்ததைக் கண்டுபிடிக்கமுடியுமா?
நீரில் மூழ்கி இறந்த உடலில் பல வெளிப்புற உடல் மாற்றங்கள் இருக்கும். உதாரணமாக நீண்ட நேரம் தண்ணீரில் மூழ்கி இருந்தால் கையில் தோலெல்லம் சுருங்கிக் காணப்படும். இதுபோன்று நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் விடுத்து முக்கியமானவைகளை மட்டும் பார்ப்போம்.
தண்ணீரில் மூழ்கிய உடலில்
1.மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளியிருக்கும்.
2.கைகளில் செடி,கல் போன்றவை கெட்டியாகப் பிடித்து கை இறுக்கமாக மூடியிருக்கும்.
3.மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் நுரை காணப்படும்.
4.நுரையீரல் வீங்கி தண்ணீருடன் காணப்படும்.
5.தண்ணீர் இரைப்பை, குடலில் இருக்கும்.
6.ஏரி,குளத்தில் காணப்படும் டையடோம்ஸ் எனப்படும் நுண் தாவரங்கள் நுரையீரல் மற்றும் உடல் திசுக்களில் காணப்படும்.
இவற்றை வைத்துத்தான் பிரேதப் பா¢சோதனையில் நீரில் மூழ்கி இறந்ததைக் கண்டுபிடிக்கிறோம். சரி! அதுதான் இதை வைத்துக் கண்டுபிடிக்கலாம் என்கிறீர்களே!! அப்புறம் என்ன பிரச்சினை என்கிறீர்களா? பிரச்சினை உள்ளது.
தண்ணீரில் மூழ்குபவர் வாய்வழியாகத் தண்ணீர், தொண்டை, மூச்சுக்குழாய், நுரையீரல் ஆகியவற்றில் உறிஞ்சப்பட்டு நுரையீரல் வீங்கிக்காணப்படும். நுரையீரலில் நுரை,இரத்தத்துடன் அதிக அளவு நீர் இருக்கும். தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களிடம் 80%மேல் சொன்னது போல் நுரையீரல் வீக்கம் காணப்படும்.
தண்ணீரில் மூழ்குபவர் தண்ணீருக்குள் மூழ்கி மூச்சுக்காகப் போராடி இறக்கும்போது மேல்சொன்ன நுரையீரல் மாற்றங்கள் இருக்கும்.
ஆனால் தண்ணீரில் மூழ்குபவர் வேறுவிதங்களிலும் இறக்க வாய்ப்பு உள்ளது
கீழ்க்கண்டவாறு இறப்பவர்களில் மேலே சொன்னதுபோல் நுரையீரல் மாற்றங்கள் இருக்காது.
1.குளிர்ந்த நீர் உடலில் பட்டவுடன் நரம்புகள் தூண்டப்பட்டு ஏற்படும் உடனடி மரணம்.
2.தண்ணீரில் விழுந்தவுடன் மயங்கி இறத்தல்.
3.தண்ணீரில் விழுந்தவுடன் கல், பாறை போன்ற பொருள்மீது தலைமோதி உடன் மரணம்.
ஆகிய மேலே சொல்லப்பட்டவிதத்தில் இருந்தால் பிரேதப் பரிசோதனையில் மாற்றங்களிருக்காது. ஆகையால் ஒருவர் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா இல்லை தண்ணீரில் விழுவதற்கு முன்பே இறந்தாரா என்று கண்டு பிடிப்பது பிரேதப் பரிசோதனையில் சிரமமாகிறது.
பிரேதப் பரிசோதனை முடிவுகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தீவிர விசாரணை மூலமே இத்தகைய இறப்புக்களைக் கண்டுபிடிக்க முடியும்.
தண்ணீரில் மூழ்கி இறப்பதில் நிறைய விசயங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் சாரத்தை சுருக்கமாக நான் இங்கு கொடுத்துள்ளேன்.
உங்கள் கேள்விகளைப் பொறுத்து விளக்கங்களைத் தருகிறேன்.
23 comments:
சுருக்கமா சொன்னாலும் நிரைய விஷயங்கள் தெளிவுபடுத்தியிருக்கீங்க தேவா சார்
//1.குளிர்ந்த நீர் உடலில் பட்டவுடன் நரம்புகள் தூண்டப்பட்டு ஏற்படும் உடனடி மரணம். 2.தண்ணீரில் விழுந்தவுடன் மயங்கி இறத்தல். 3.தண்ணீரில் விழுந்தவுடன் கல், பாறை போன்ற பொருள்மீது தலைமோதி உடன் மரணம்.//
இந்த மாதிரி உடனடி மரணம் ஏற்படும் கேசில் கூட மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் நுரை காணப்படுமா?
நிறைய விஷயங்கள் - துறை சார்ந்த இடுகைகளில் தருகின்றீர்கள் மருத்துவரே... மிக்க நன்றி.
மருத்துவம் சம்பந்தப்பட்ட பல அரிய தகவல்கள் பகிர்வதற்கு நன்றி நண்பரே
நல்வாழ்த்துகள்
நிறைய தெரிந்துக்கொண்டேன், படிக்கும்போது உடம்பு கூசியது
மிருதுவான, அமைதியான இறப்பைதான் அனைவரும் எதிர்ப்பார்கிறார்கள்
நல்ல தகவல் பகிர்வு தேவா சார்
நிறைய தெரிந்துக்கொண்டேன்!!நல்லதொரு பதிவுக்கு நன்றி மருத்துவரே..
S.A. நவாஸுதீன் said...
சுருக்கமா சொன்னாலும் நிரைய விஷயங்கள் தெளிவுபடுத்தியிருக்கீங்க தேவா சார்
15 November 2009 01:55
S.A. நவாஸுதீன் said...
//1.குளிர்ந்த நீர் உடலில் பட்டவுடன் நரம்புகள் தூண்டப்பட்டு ஏற்படும் உடனடி மரணம். 2.தண்ணீரில் விழுந்தவுடன் மயங்கி இறத்தல். 3.தண்ணீரில் விழுந்தவுடன் கல், பாறை போன்ற பொருள்மீது தலைமோதி உடன் மரணம்.//
இந்த மாதிரி உடனடி மரணம் ஏற்படும் கேசில் கூட மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் நுரை காணப்படுமா
//
உடனடி மரணத்தில் இருக்காது!!
இராகவன் நைஜிரியா said...
நிறைய விஷயங்கள் - துறை சார்ந்த இடுகைகளில் தருகின்றீர்கள் மருத்துவரே... மிக்க நன்றி.
//
பின்னூட்டம் என் பெயரில் இடமுடியவில்லை!!!
நன்றி!நண்பரே!!
தேவன்மாயம்!
cheena (சீனா) said...
மருத்துவம் சம்பந்தப்பட்ட பல அரிய தகவல்கள் பகிர்வதற்கு நன்றி நண்பரே
நல்வாழ்த்துகள்
//
வருகைக்கு நன்றி!!
தேவன்மாயம்
அபுஅஃப்ஸர் said...
நிறைய தெரிந்துக்கொண்டேன், படிக்கும்போது உடம்பு கூசியது
மிருதுவான, அமைதியான இறப்பைதான் அனைவரும் எதிர்ப்பார்கிறார்கள்
நல்ல தகவல் பகிர்வு தேவா சார்
///
நன்றி அபு!!!
Mrs.Menagasathia said...
நிறைய தெரிந்துக்கொண்டேன்!!நல்லதொரு பதிவுக்கு நன்றி மருத்துவரே..
///
நான்தான் நன்றி சொல்லனும்!!
தேவன்மாயம்
நல்ல தகவல்கள் சார்... மிக்க நன்றி
என்னால் என் பிளாகர் அக்கௌண்டில் பின்னூட்டமிடமுடியவில்லை!!
பின்னூட்டமிட்டால் கீழ்க்கண்டவாறு வருகிறது!! எப்படி சரிசெய்வது?
Google Account
Your request could not be processed. Please try again.
USERNAME
PASSWORD
No Google Account? Sign up here.
You can also use your Blogger account.
OpenID
Name/URL
Anonymous
நல்ல பதிவு டாக்டர்.
"தேவன் மாயம்! said...
என்னால் என் பிளாகர் அக்கௌண்டில் பின்னூட்டமிடமுடியவில்லை!!"
இதுபோல் சில நேரங்களில் நம் பிளாக் கணக்கே கண்ணா பூச்சி காட்டும்.
இதற்கு காரணம் நமது கணணியின் உள்ள குக்கீஸ் வேலையாகும்.
இதை சரி செய்ய
open new window and give the following comment Alt+clt+ delete
இப்போது உங்கள் பிளாக் கணக்கை மறுபடியும் முயற்சி செய்யவும்.
very usefull post.
thank you.sir.
ஸ்ரீ said...
நல்ல பதிவு டாக்டர்.
15 November 2009 08:52 ///
நன்றி ஸ்ரீ!!
♠புதுவை சிவா♠ said...
"தேவன் மாயம்! said...
என்னால் என் பிளாகர் அக்கௌண்டில் பின்னூட்டமிடமுடியவில்லை!!"
இதுபோல் சில நேரங்களில் நம் பிளாக் கணக்கே கண்ணா பூச்சி காட்டும்.
இதற்கு காரணம் நமது கணணியின் உள்ள குக்கீஸ் வேலையாகும்.
இதை சரி செய்ய
open new window and give the following comment Alt+clt+ delete
இப்போது உங்கள் பிளாக் கணக்கை மறுபடியும் முயற்சி செய்யவும்.
15 November 2009 09:22///
வேறு கம்பியூட்டரில் பின்னூட்டமிடமுடிகிறது!!!நீங்கள் சொன்னதை முயற்சி செய்கிறேன்.
ஆ.ஞானசேகரன் said...
நல்ல தகவல்கள் சார்... மிக்க நன்றி
நன்றிங்க!!!
--------------------------
15 November 2009 05:32
velji said...
very usefull post.//
வேல்ஜி வருகைக்கு நன்றி!!
நிறைய புது தகவல்கள் .. நன்றி தேவன் சார்!!
நீரில் மூழ்கி இறப்பதை நினைத்தாலே பயமாகத்தான் இருக்கிறது. தங்களின் இடுகையில் புதிய தகவல்கள்....
நல்ல இடுகை....
சிறப்பான பதிவு தேவா சார்! என்ன பிரேதம்+பரிசோதனை போன்றவை நமக்கு கொஞ்சம் அலர்ஜி.
நன்பர் தேவன் அவர்களே நல்ல பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்..
சோ.ஞானசேகர்..
Post a Comment