100% சக்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
பொதுவாகவே மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் ஒரு இடைவெளி உண்டு. அதாவது, மருத்துவர் உணவு இப்படியெல்லாம் சாப்பிடவேண்டும் என்று ஒரு கதைபோல் சொல்லுவார். நோயாளியும் வெகு சிரத்தையுடன் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வருவார். அவர் சொன்னதில் பாதிதான் நோயாளிக்குப் புரிந்திருக்கும்.
மருத்துவரைச் சந்தித்து நான்கு நாட்கள் கழித்து யோசித்தால் அதிலும் பாதி மறந்து போய் இருக்கும். இந்த இடைவெளியை நிரப்புவதில்தான் சக்கரையைக் குறைப்பதற்கான சூட்சுமம் இருக்கிறது.
இந்த சூட்சுமத்தைப் புரிந்துகொள்வதற்கு முன் நாம் உணவின் சத்துக் குறிப்பீடு பற்றி அறியவேண்டும். நாம் உண்ணும் உணவுகளில் இத்தனை கிராமுக்கு இவ்வளவு சத்துக்கள் உள்ளன என்ற அளவுதான் அது.
ஏன் இது முக்கியம் என்று கேட்கிறீர்களா? மருத்துவர் மதியம் ஒரு கப் சாதம் அல்லது ஒரு பிளேட் சாதம் சாப்பிடுங்கள் என்று கூறுவார். ஆனால் எவ்வளவு பெரிய கப், எவ்வளவு பெரிய தட்டு என்று அளவு தெரியாது.
உதாரணத்துக்கு கார்த்தி, ஸ்ரீதர்,அன்பு என்று மூன்று பேர் வீட்டிலிருந்து அவர்கள் சாப்பிடும் தட்டைபோய்ப் பார்த்தால் கார்த்தியின் தட்டு பெரிதாகவும் ஸ்ரீதரின் தட்டு நடுத்தரமாகவும் அன்புவின் தட்டு சிறியதாகவும் இருக்கும்.(ஒரு குத்து மதிப்பாகக் சொல்கிறேன்!!)
அதே போல் கப்பின் அளவும் வீட்டுக்கு வீடு மாறுபடும். இது போல் இட்லி.தோசை சப்பாத்தி ஆகியவற்றின் எடை, அளவுபற்றி நாம் சொல்லவேண்டியதில்லை. இதற்கு என்ன செய்யவேண்டும்?
உண்வை எடைபோட்டுச் சாப்பிடவேண்டும்! சக்கரை நோயாளிகள் அனைவரும் இப்படித்தான் செய்ய வேண்டுமா? என்றால் எல்லோரும் செய்தால் நல்லதுதான்.
ஆனால் யாருக்கு இத்தகைய கட்டுப்பாடு மிகவும் அவசியம்?
1.உடல் எடை குறையாமல் இருப்போர் 2.இன்சுலினைக் குறைக்க விரும்புவோர் 3.இன்சுலினிலிருந்து மாத்திரைக்கு மாற விரும்புவோர் 4.சக்கரை கட்டுப்பாட்டில் இல்லாதோர் 5.சக்கரை நோயின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோர் 6.எச்.பி.ஏ.1.சி-இரத்தப் பா¢சோதனை-7%க்கு மேல் உள்ளோர்.
எப்படி, எவ்வளவு எடைபோட்டு சாப்பிடவேண்டும் என்று பார்ப்போம்.
காலை டிபன்-150 கிராம்
மதியம்-250 கிராம் சாதம்,
இரவு-150 கிராம் டிபனுடன் 100 கிராம் பழங்கள்,100கிராம் சுண்டல்
மூன்று வேளையும் 200கிராம் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
இதற்கு அவசியம் ஒரு நிறுக்கும் தராசு வேண்டும். அதே போல் தினமும் எடை போடவேண்டும். இப்படி எடை போட்டு சாப்பிட்டு வீட்டிலேயே சுய பரிசோதனைக்கருவி மூலம் இரத்த சக்கரை அளவைக் கணித்து அதன் படி உணவின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.
நினைவில் கொள்ளவும்- சக்கரை 24 மணி நேரமும் சரியான அளவு இருந்தால்தான் சக்கரை வியாதியின் பின் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியும்.
19 comments:
நன்றி மருத்துவரே...
ஃபாஸ்டிங் சுகர் 75 என்பது நல்லதா/ கெட்டதா?
சுகர் ரொம்ப கம்மியா இருப்பதும் கெடுதலா?
//உதாரணத்துக்கு கார்த்தி, ஸ்ரீதர்,அன்பு என்று மூன்று பேர் வீட்டிலிருந்து அவர்கள் சாப்பிடும் தட்டைபோய்ப் பார்த்தால் கார்த்தியின் தட்டு பெரிதாகவும் ஸ்ரீதரின் தட்டு நடுத்தரமாகவும் அன்புவின் தட்டு சிறியதாகவும் இருக்கும்.(ஒரு குத்து மதிப்பாகக் சொல்கிறேன்!!)//
அது எப்படிப்பட்ட குத்துன்னு சொல்லவேயில்லையே
//நினைவில் கொள்ளவும்- சக்கரை 24 மணி நேரமும் சரியான அளவு இருந்தால்தான் சக்கரை வியாதியின் பின் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியும். //
பகிர்வுக்கு மிக்க நன்றி சார்...
இந்த டென்சன்லயே சுகர் கூடும்போல. என்ன கொடுமை சார் இது.
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி தேவா சார்.
இராகவன் நைஜிரியா said...
நன்றி மருத்துவரே...
ஃபாஸ்டிங் சுகர் 75 என்பது நல்லதா/ கெட்டதா?
சுகர் ரொம்ப கம்மியா இருப்பதும் கெடுதலா?
21 November 2009 08:55//
சுகர் கம்மியா இருந்தால் மயக்கம் வரும். மூளைக்கு சக்கரை குறைவாகக் கிடைப்பதால்!!
ஆ.ஞானசேகரன் said...
//உதாரணத்துக்கு கார்த்தி, ஸ்ரீதர்,அன்பு என்று மூன்று பேர் வீட்டிலிருந்து அவர்கள் சாப்பிடும் தட்டைபோய்ப் பார்த்தால் கார்த்தியின் தட்டு பெரிதாகவும் ஸ்ரீதரின் தட்டு நடுத்தரமாகவும் அன்புவின் தட்டு சிறியதாகவும் இருக்கும்.(ஒரு குத்து மதிப்பாகக் சொல்கிறேன்!!)//
அது எப்படிப்பட்ட குத்துன்னு சொல்லவேயில்லையே
21 November 2009 12:03//
ஆஹா! ஒரு முடிவோடத்தான் வந்துருக்கீக போல!
S.A. நவாஸுதீன் said...
இந்த டென்சன்லயே சுகர் கூடும்போல. என்ன கொடுமை சார் இது.
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி தேவா சார்.
21 November 2009 21:32//
கூல் நவாஸ்!!1
நல்ல தகவல்கள். நன்றி டாக்டர்.
மங்களூர் சிவா said...
நல்ல தகவல்கள். நன்றி டாக்டர்.
21 November 2009 22:46//
நன்றி சிவா!!
தேவையான தகவல்கள் டாக்டர்...
நன்றி...
நன்றி டாக்டர்.என் அம்மாவும் சர்க்கரை நோயாளிதான் .உபயோகமான தகவல்கள்.
மருத்துவரே இங்கே சாப்பாடு கிடைப்பதே கஷ்டம் (காசு கொடுத்தாலும் நல்லதா ரெஸ்டாரண்ட் கிடைக்கனும்) இதுலே அளவு பார்த்துவேறா??? ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தகவல் பகிர்வுக்கு நன்றி
நல்ல தகவல்a
நன்றி டாக்டர். இந்த அளவுகள் எனக்கு உபயொகப்படும்.
வாழைப்பழமொ,ஆப்பிளோ ஒன்று சாப்பிட்டால் கூட சர்க்கரை ஏறுகிறது எனக்கு.
கொய்யாவோடு நிறுத்திக்கொள்ளவேண்டும் எப்ன்றே நினைக்கிறேன்.
மிக மிக நன்றி.
நல்ல தகவல்
உபயோகமான தகவல்
நன்றி டாக்டர்
நம்ம பக்கம் வரதே இல்லை
விஜய்
நல்ல தகவல் மருத்துவ நண்பரே!
//உதாரணத்துக்கு கார்த்தி, ஸ்ரீதர்,அன்பு என்று மூன்று பேர் வீட்டிலிருந்து அவர்கள் சாப்பிடும் தட்டைபோய்ப் பார்த்தால் கார்த்தியின் தட்டு பெரிதாகவும் ஸ்ரீதரின் தட்டு நடுத்தரமாகவும் அன்புவின் தட்டு சிறியதாகவும் இருக்கும்.//
அன்பு தட்டெல்லாம் உபயோகிப்பதொல்லையாம்
அப்படியே குண்டானோடு சாப்பிடும் பழக்கம் உள்ளவராம்!
சக்கரை சக்கரைன்னு எல்லோரும் பயமுறுத்தறாங்க - நானும் அப்பப்ப டெஸ்ட் பண்ணிக்கிறேன் - ம்ம்ம்ம் -
கார்த்தி ஸ்ரீ அன்பு - ஆளைப்பாத்துட்டு தட்டு வாங்குனீங்களா - சரி சரி
நல்லதொரு இடுகை - தராசு டெஸ்ட் பண்ற கருவி இதெல்லாம் வாங்கணுமா இப்ப
எங்க டாக்டர் சொன்னாரு - ஒரே ஒரு இட்லி வச்சிக்கங்க - சாப்பிடாதீங்க - பாத்துக் கிட்டே இருங்க - அவ்ளோ தான் சுகரே வராதுன்னாரு
நல்வாழ்த்துகள்
Post a Comment