ஏதுமற்ற சூன்யத்தில்
சஞ்சாரிக்கிறது மனது..
தேடலின் வழியில்,
பலரிடமும் புகுந்து
உருமாறி, உருக்குலைந்து,
அல்லது உருப்பெற்றுக்
கிடக்கும் பலவும்
நான் தேடிய
ஏதோவொன்றின் சாயலில்.
இடையிடையில் அறுந்து
நினைவுப் படுகைகளில்
ஒழுங்கற்றுக் கிடக்கும்
சிதிலங்கள் உருப்பெறாமல்,
மரணத்துக்கும் பிறப்புக்குமான
இடைவெளியில்
சுவாசிக்கத்
துடிக்கும் சிசுவின்
அவஸ்தையுடன்!
ஒன்றிணைந்தும்,
கூடியும் குறைந்தும்
ஏதோவொன்றாய் ஒவ்வொரு
நொடியும் உருக்கொள்ளும்
என்னிலிருந்தும்
உன்னிலிருந்தும்
அனைவரிடமிருந்தும்
பிறந்து கொண்டே இருக்கும்,
எல்லாவுமாகிய அது!
35 comments:
என்ன சார் பாட்டிலிருந்து கவிதைக்கு வந்துட்டீங்களா!! ஆல் ரவுண்டர் நீங்க...கலக்குங்க...
ஏதோவொன்றாய் ஒவ்வொரு நொடியும் உருக்கொள்ளும் என்னிலிருந்தும் உன்னிலிருந்தும் அனைவரிடமிருந்தும் பிறந்து கொண்டே இருக்கும், எல்லாவுமாகிய அது!//
வரிகள் நன்று
300-வது இடுகைக்கு வாழ்த்துக்கள் முதலில்
Excellent and congrats for 300
//இடையிடையில் அறுந்து நினைவுப் படுகைகளில் ஒழுங்கற்றுக் கிடக்கும் சிதிலங்கள் உருப்பெறாமல், மரணத்துக்கும் பிறப்புக்குமான இடைவெளியில் சுவாசிக்கத் துடிக்கும் சிசுவின் அவஸ்தையுடன்!//
கலக்குறீங்க தேவா சார் கலக்குறீங்க.
நண்பரே தங்களின் கவிதையில் ஏதோ பிரிவின் இழப்புக்களின் சோகம் தெரிகின்றது. சற்று மனதை நெருடும் படியாக உ்ள்ளது. நல்ல கவிதை
கவிதையை எல்லாவுமாகி ரசிக்கிறேன்.
தேவா,அதுக்கு என்ன பேர் வைக்கலாம்.நிறையவே வைக்கலாம்.காதல்.மனசு.நினைவு இப்பிடின்னு !
வாழ்த்துக்கள்.இன்னும் எழுதணும்.
கவிதையா?
நீங்களுமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நல்லா இருக்குங்க
Rajeswari said...
என்ன சார் பாட்டிலிருந்து கவிதைக்கு வந்துட்டீங்களா!! ஆல் ரவுண்டர் நீங்க...கலக்குங்க.///
எல்லாம் உங்கள் ஆதரவுதான்!!
S.A. நவாஸுதீன் said...
300-வது இடுகைக்கு வாழ்த்துக்கள் முதலில்
24 November 2009 0//
நீங்கள் சொல்லித்தான் தெரியுதுங்க!
நாகா said...
Excellent and congrats for 300
24 November 2009 05:55//
நாகா நன்றி
ச.இலங்கேஸ்வரன் said...
நண்பரே தங்களின் கவிதையில் ஏதோ பிரிவின் இழப்புக்களின் சோகம் தெரிகின்றது. சற்று மனதை நெருடும் படியாக உ்ள்ளது. நல்ல கவிதை
24 November 2009 05:5//
வருகைக்கும் நன்றிங்க!
க.பாலாசி said...
கவிதையை எல்லாவுமாகி ரசிக்கிறேன்.
24 November 20//
பாலாஜிக்கு நன்றி
ஹேமா said...
தேவா,அதுக்கு என்ன பேர் வைக்கலாம்.நிறையவே வைக்கலாம்.காதல்.மனசு.நினைவு இப்பிடின்னு !
வாழ்த்துக்கள்.இன்னும் எழுதணும்.
24 November 2009 06:05//
நீங்களே சொல்லீட்டிங்க !!1 எழுதுகிறேன்!
ஆஹா... தேநீர் அருமை...
அதுவும் நீண்ட நாட்களுக்குப்பிறகு..
:-)
ஷாகுல் said...
கவிதையா?
நீங்களுமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நல்லா இருக்குங்க
24 November 2009 06:10//
ஷாகுல் புடிச்சிருந்தா சரி
அகல்விளக்கு said...
ஆஹா... தேநீர் அருமை...
அதுவும் நீண்ட நாட்களுக்குப்பிறகு..
:-)///
ரசிப்புக்கு நன்றி
அன்பின் தேவா
முதலில் முன்னூறுக்கு நல்வாழ்த்துகள்
கவிதை நல்ல கவிதை - சிந்தனை அனைத்துமே அருமை - தேர்ந்த்தெடுக்கப்பட்ட சொற்கள்
நல்வாழ்த்துகள்
தேடலின் வழியில்,
பலரிடமும் புகுந்து
உருமாறி, உருக்குலைந்து,
அல்லது உருப்பெற்றுக்
கிடக்கும் பலவும்
நான் தேடிய
ஏதோவொன்றின் சாயலில்.//
கவிதை பருக இதமாக இருந்தது...வாழ்த்துக்கள்.
cheena (சீனா) said...
அன்பின் தேவா
முதலில் முன்னூறுக்கு நல்வாழ்த்துகள்
கவிதை நல்ல கவிதை - சிந்தனை அனைத்துமே அருமை - தேர்ந்த்தெடுக்கப்பட்ட சொற்கள்
நல்வாழ்த்துகள்
24 November 2009 06:43///
உங்கள் அன்புக்கு நன்றிங்க!
Sorry Congrats for 300 Followers !!!
Kavithai arumainga...Vote pottachi..!!!
சி. கருணாகரசு said...
தேடலின் வழியில்,
பலரிடமும் புகுந்து
உருமாறி, உருக்குலைந்து,
அல்லது உருப்பெற்றுக்
கிடக்கும் பலவும்
நான் தேடிய
ஏதோவொன்றின் சாயலில்.//
கவிதை பருக இதமாக இருந்தது...வாழ்த்துக்கள்.
24 November 2009 06:46//
கருத்துக்கு நன்றிங்க
அ.மு.செய்யது said...
Sorry Congrats for 300 Followers !!!
Kavithai arumainga...Vote pottachi..!!!
24 November 2009 07//
வாழ்த்துக்கு நன்றி செய்யது!!
wow... doctor sir kavithai super... wordings nalla irukku
am able to see your excellence in hadling words
டம்பி மேவீ said...
wow... doctor sir kavithai super... wordings nalla irukku//
Thanks Me Vi
மூன்று சதங்கள்!
கலக்குங்க டாக்டர்!
300-வது இடுகைக்கு வாழ்த்துக்கள் கலக்குங்கோ தேவன் சார்...
300-வது இடுகைக்கு
வாழ்த்துக்கள்............
அனைவரும் உணரும் ஆழ்மன வருடலை அற்புத படைப்பாக்கி படைத்திருக்கிறீர்கள் சார்..க்
அடடே....300வது பதிவு??? நல்லாருக்கு!வாழ்த்துக்கள்!
மிகவும் தரமான கவிதை ....அது
-- எதுவென்று சொல்லாமல் வாசகனையே யோசிக்க வைத்திருக்கும் யுக்தி மிகவும் அருமை..
வார்த்தைகள் உங்களிடம் செழிப்போடு உலா வருகிறது...
Post a Comment