ஒரு சிறு அமைதி,
ஒரு சமாதானம் போதும்
நான் இன்று உறங்க!
ஒவ்வொரு நாளும்
போதுமான வார்த்தைகள்
வேண்டியிருக்கிறது,
நம் மனங்கள்
காதலில் முயங்க!!
கனம் தாளாமல்
இதயத்தில் சுவர்களில்
கசிந்துகொண்டிருந்தன,
உன்னுடன்
பேசாமல் மீதமிருந்த
சொற்கள்!
கேள்விகளால்
நிரப்பப்பட்ட
உன் கண்களின் தீவிரம்
தாளாமல்
குனிந்து பருகினேன்
உன் மவுனத்தை!
நெஞ்சின் ஓரங்களில்
மீதமிருந்த
பனித்துளிகளைத் திரட்டி
கடந்து போன நாளின்
வெம்மையைச் சொன்னேன்.
சாகசமும் சாதுர்யமுமாய்த்
தொடுக்கப்பட்ட வரிகளை
புனிதமான தேவதையின்
சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாய்!!
தட்டிலிருந்த பருக்கைகளுடன்
மெதுவாக, மீதமிருந்த
சொற்களும்
கரைந்து போயிருந்தன!!
உன் மூச்சுக் காற்றின்
கதகதப்பில்
மெதுவாய் உறங்கிப்போனேன்!!
35 comments:
கவிதை வரிகளின் கோர்ப்பு மிக அருமை..
உன் மூச்சுக் காற்றின்
கதகதப்பில்
மெதுவாய் உறங்கிப்போனேன்!!//
மிக மிக அழகான உயிருள்ள கவிதை. வாழ்த்துக்கள் தேவா
அன்பின் தேவா
அருமை அருமை கவிதை அருமை
மூச்சுக்கற்றின் கதகதப்பில் மென்மையாய் உறங்குவது சுகம் தான்
நல்வாழ்த்துகள்
உங்கள் கவி வரிகள் கூட கதகதப்பாக தான் இருக்கிறது...........
மிக அழகான கவிதை.............
//உன் மூச்சுக் காற்றின்
கதகதப்பில்
மெதுவாய் உறங்கிப்போனேன்!!//
ரொம்ப ரசிச்சேன் தேவா சார் இந்தவரிகள் மிகவும் பிடித்துப்போனது...
புலவன் புலிகேசி said...
கவிதை வரிகளின் கோர்ப்பு மிக அருமை..
27 November 2009 //
நன்றி நண்பரே!!
புதுகைத் தென்றல் said...
உன் மூச்சுக் காற்றின்
கதகதப்பில்
மெதுவாய் உறங்கிப்போனேன்!!//
மிக மிக அழகான உயிருள்ள கவிதை. வாழ்த்துக்கள் தேவா
27 November 2009 01:48///
புதுகை மிக்க நன்றி!!
///ஒரு சிறு அமைதி,
ஒரு சமாதானம் போதும்
நான் இன்று உறங்க!/////
///கனம் தாளாமல்
இதயத்தில் சுவர்களில்
கசிந்துகொண்டிருந்தன,
உன்னுடன்
பேசாமல் மீதமிருந்த
சொற்கள்!////
ஆஹா எங்கோ போயிட்டீங்க கனம் (கணம்) தாங்காமல் இதயம் வாழ்த்துக்கள் சொல்லுது
cheena (சீனா) said...
அன்பின் தேவா
அருமை அருமை கவிதை அருமை
மூச்சுக்கற்றின் கதகதப்பில் மென்மையாய் உறங்குவது சுகம் தான்
நல்வாழ்த்துகள்
27 November 2009 01:57
//
வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி
காற்றில் எந்தன் கீதம் said...
உங்கள் கவி வரிகள் கூட கதகதப்பாக தான் இருக்கிறது...........
மிக அழகான கவிதை......//
பதில் என்ன எழுதுவதென்று தெரியவில்லை!!
பிரியமுடன்...வசந்த் said...
//உன் மூச்சுக் காற்றின்
கதகதப்பில்
மெதுவாய் உறங்கிப்போனேன்!!//
ரொம்ப ரசிச்சேன் தேவா சார் இந்தவரிகள் மிகவும் பிடித்துப்போனது.//
ரசிப்புக்கு....நன்றி வசந்த்!!
ramesh-றமேஸ் said...
///ஒரு சிறு அமைதி,
ஒரு சமாதானம் போதும்
நான் இன்று உறங்க!/////
///கனம் தாளாமல்
இதயத்தில் சுவர்களில்
கசிந்துகொண்டிருந்தன,
உன்னுடன்
பேசாமல் மீதமிருந்த
சொற்கள்!////
ஆஹா எங்கோ போயிட்டீங்க கனம் (கணம்) தாங்காமல் இதயம் வாழ்த்துக்கள் சொல்லுது
27 November 20///
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ரமேஷ்!!
இது போல உயிரோட்டமுள்ள கவிதைகளை காண்பது அரிது.
அற்புதாமான சொல்லாடலும் கூட..!!
நல்லது..மேலும் தொடருங்கள்!!
//கனம் தாளாமல்
இதயத்தில் சுவர்களில்
கசிந்துகொண்டிருந்தன,
உன்னுடன்
பேசாமல் மீதமிருந்த
சொற்கள்!
கேள்விகளால்
நிரப்பப்பட்ட
உன் கண்களின் தீவிரம்
தாளாமல்
குனிந்து பருகினேன்
உன் மவுனத்தை!//
அற்புதமான வரிகள்....காதல்...காதல்...
படமும் அருமை....
மனசுக்குள் சாரல்
நல்லாருக்கு!
ரங்கன் said...
இது போல உயிரோட்டமுள்ள கவிதைகளை காண்பது அரிது.
அற்புதாமான சொல்லாடலும் கூட..!!
நல்லது..மேலும் தொடருங்கள்!!
27 November 2009 05:31///
நன்றி நண்பா!
க.பாலாசி said...
//கனம் தாளாமல்
இதயத்தில் சுவர்களில்
கசிந்துகொண்டிருந்தன,
உன்னுடன்
பேசாமல் மீதமிருந்த
சொற்கள்!
கேள்விகளால்
நிரப்பப்பட்ட
உன் கண்களின் தீவிரம்
தாளாமல்
குனிந்து பருகினேன்
உன் மவுனத்தை!//
அற்புதமான வரிகள்....காதல்...காதல்...
படமும் அருமை....
27 November 2009 05:34//
நன்றி பாலாஜி!
தண்டோரா ...... said...
மனசுக்குள் சாரல்///
நனையுங்கள்!!
--------------------------
27 November 2009 05:40
அன்புடன் அருணா said...
நல்லாருக்கு!
//
ஓகே!!
--------------------------
27 November 2009 05:55
delphine said...
Fallen in love?
//
No no no!!
27 November 200
கனம் தாளாமல்
இதயத்தில் சுவர்களில்
கசிந்துகொண்டிருந்தன,
உன்னுடன்
பேசாமல் மீதமிருந்த
சொற்கள்!
//
தமிழ்த்துளி நன்று!
அருமை தேவா சார்!
Blogger அத்திவெட்டி ஜோதிபாரதி said...
கனம் தாளாமல்
இதயத்தில் சுவர்களில்
கசிந்துகொண்டிருந்தன,
உன்னுடன்
பேசாமல் மீதமிருந்த
சொற்கள்!
//
தமிழ்த்துளி நன்று!
அருமை தேவா சார்!///
கருத்துக்கு நன்றீ
கேள்விகளால்
நிரப்பப்பட்ட
உன் கண்களின் தீவிரம்
தாளாமல்
குனிந்து பருகினேன்
உன் மவுனத்தை!
அருமையான வெளிப்பாடு.....
கவிதையும் அதில் பொதிந்த கருத்தும் அருமை. கனமான ஒரு விடயத்தை அழகாக வார்த்தைகளால் கோர்த்து எடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தேவா.
கடைசி வரிகள் மிக மிக
மிக மிக.................................. அருமை
கமலேஷ் said...
கேள்விகளால்
நிரப்பப்பட்ட
உன் கண்களின் தீவிரம்
தாளாமல்
குனிந்து பருகினேன்
உன் மவுனத்தை!
அருமையான வெளிப்பாடு...//
நன்றிங்க!!
ஜெஸ்வந்தி said...
கவிதையும் அதில் பொதிந்த கருத்தும் அருமை. கனமான ஒரு விடயத்தை அழகாக வார்த்தைகளால் கோர்த்து எடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தேவா.///
27 November 2009 11:48
அத்திரி said...
கடைசி வரிகள் மிக மிக
மிக மிக.................................. அருமை
மிக்க நன்றி நண்பர்களே!!
கேள்விகள் நிரம்பிய கோப்பைபோல் ஈர்ப்பு நிரம்பிய இக்கவிதையை மெளனமாக, மகிழ்ச்சியாக பருகினேன்! அற்புதம் தேவா!
ஒரு சிறு அமைதி, ஒரு சமாதானம் போதும்- நீங்கள் உறங்க... ஆனால் நான் உறங்க இவை போதாதே. பின்னூட்டம் போட வந்து நானொரு கவலை சொல்ல விரும்பவில்லை.
ஜெகநாதன் said...
கேள்விகள் நிரம்பிய கோப்பைபோல் ஈர்ப்பு நிரம்பிய இக்கவிதையை மெளனமாக, மகிழ்ச்சியாக பருகினேன்! அற்புதம் தேவா!
///
உங்கள் மகிழ்ச்சி எனக்குத் திருப்தி!!
tamiluthayam said...
ஒரு சிறு அமைதி, ஒரு சமாதானம் போதும்- நீங்கள் உறங்க... ஆனால் நான் உறங்க இவை போதாதே. பின்னூட்டம் போட வந்து நானொரு கவலை சொல்ல விரும்பவில்லை.
//
வருத்தம் வேண்டாம் நண்பரே!!
நல்ல கவிதை .:-))))))))))
அழகு...
Excellent one
desired it
கவிதை மிக நேர்த்தியாக இருக்கிறது... மருத்துவரே.
//ஒரு சிறு அமைதி,
ஒரு சமாதானம் போதும்
நான் இன்று உறங்க!//
எனக்கு மட்டும் ஏன் ஒரு குவாட்டர் கேட்குது!?
Post a Comment