Tuesday 22 September 2009

கொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது!!

 

முன்னும் பின்னும்
ஒழுங்கு இல்லாமல்
கலைந்து கிடக்கும்
எழுத்துக்கள் போல்,

கோப்பைக்கும்
உதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல்,

தூரிகைக்கும்
துணிக்கும்
இடையில்
சிந்திக்கிடக்கும்
வண்ண மை போல்,

புரிந்தும்
புரியாமலும்
இருக்கும்
ஒரு கவிதைபோல்,

உறக்கமா
விழிப்பா
என்றறியா
ஒரு மயக்கம்போல்,

நுகராமலும்
சூடாமலும்
இருக்கும்
ஒரு மலர் போல்,

உனக்கும்
எனக்கும்
இடையில் இருக்கும்
மௌனத்தை!!

எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!

29 comments:

velji said...

அருகில் அமிர்தம் இருந்தும் பட்டினி கிடந்து பழக்கம் உண்டா..என்று வைரமுத்து சொன்ன அவஸ்தையும் இதுதானோ?
நல்ல கவிதை!

ஈரோடு கதிர் said...

அனுபவிச்சு எழுதியிருக்கீங்க

க.பாலாசி said...

//உனக்கும்
எனக்கும்
இடையில் இருக்கும்
மௌனத்தை!!

எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!//

ஆகா....அழகு அன்பரே....நல்ல கவிதை...

அப்துல்மாலிக் said...

நல்ல வார்த்தைப்பிரகடனம்...

படிக்க படிக்க காதல் ரசம் சொட்டுது

தேனீரில் சுவை அதிகம்

இராகவன் நைஜிரியா said...

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை.. பாட்டு ஞாபகத்துக்கு வந்துச்சுங்க...

காதல் ரசம் சொட்டும் அழகான கவிதை..

Jerry Eshananda said...

டாக்டரய்யா .. போற போக்க பார்த்தா,,கூடிய சீக்கிரம்,"கொஞ்சம் தேநீர்"-கவிதை புத்தகம் வெளிவந்துர்ம்போலையே ? பிரமாதம்.

தேவன் மாயம் said...

velji said...
அருகில் அமிர்தம் இருந்தும் பட்டினி கிடந்து பழக்கம் உண்டா..என்று வைரமுத்து சொன்ன அவஸ்தையும் இதுதானோ?
நல்ல கவிதை!

22 September 2009 03:02///

உண்மைதான்!! சொல்லமுடியாத ஒரு மயக்க நிலை!!

தேவன் மாயம் said...

கதிர் - ஈரோடு said...
அனுபவிச்சு எழுதியிருக்கீங்க

22 September 2009 03:23///

நன்றி கதிர்!!

தேவன் மாயம் said...

க.பாலாஜி said...
//உனக்கும்
எனக்கும்
இடையில் இருக்கும்
மௌனத்தை!!

எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!//

ஆகா....அழகு அன்பரே!!

நன்றி பாலாஜி!!!

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...
நல்ல வார்த்தைப்பிரகடனம்...

படிக்க படிக்க காதல் ரசம் சொட்டுது

தேனீரில் சுவை அதிகம்

22 September 2009 04:32///

தேநீர் அன்றைக்கு மனநிலை போல் சுவையும்!!

தேவன் மாயம் said...

இராகவன் நைஜிரியா said...
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை.. பாட்டு ஞாபகத்துக்கு வந்துச்சுங்க...

காதல் ரசம் சொட்டும் அழகான கவிதை..

22 September 2009 04:50
ஏறக்குறைய சரிதான்!! நான் இதை யோசிக்கலை!!

ப்ரியமுடன் வசந்த் said...

கோவுச்சுகிடாதீங்க சார் காதல்னாலே,,,கோவம்தான் வருது....கமெண்டா மட்டும் பாருங்க

//முன்னும் பின்னும்
ஒழுங்கு இல்லாமல்
கலைந்து கிடக்கும்
எழுத்துக்கள் போல், //

கிறுக்கல்-கிறுக்கன்னு சொல்லுங்க..

ப்ரியமுடன் வசந்த் said...

//கோப்பைக்கும்
உதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல், //

ஜொள்ளு-ஜொள்ளன்னு சொல்றாளுகளே...

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தா. said...
டாக்டரய்யா .. போற போக்க பார்த்தா,,கூடிய சீக்கிரம்,"கொஞ்சம் தேநீர்"-கவிதை புத்தகம் வெளிவந்துர்ம்போலையே ? பிரமாதம்.

22 September 2009 05:19///

வாத்தியாரையாவுக்கு புத்தகத்து மேல் கண்ணு!! சரியாத்தான் இருக்கு!!!

ப்ரியமுடன் வசந்த் said...

//புரிந்தும்
புரியாமலும்
இருக்கும்
ஒரு கவிதைபோல், //

அரை லூசுன்னு சொல்றாளுவ...

ப்ரியமுடன் வசந்த் said...

//உறக்கமா
விழிப்பா
என்றறியா
ஒரு மயக்கம்போல்,//

போதை-குடிகாரன்னு சொல்றாய்ங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

//நுகராமலும்
சூடாமலும்
இருக்கும்
ஒரு மலர் போல், //

வேஸ்ட்டுன்னு சொல்றீங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

//உனக்கும்
எனக்கும்
இடையில் இருக்கும்
மௌனத்தை!!

எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!//

சொல்லவே வேணாம்
வேணவே வேணாம்...
வேண்டாம்பா சாமீய்ய்ய்ய்ய்ய்ய்...

தேவன் மாயம் said...

பிரியமுடன்...வசந்த் said...
கோவுச்சுகிடாதீங்க சார் காதல்னாலே,,,கோவம்தான் வருது....கமெண்டா மட்டும் பாருங்க

//முன்னும் பின்னும்
ஒழுங்கு இல்லாமல்
கலைந்து கிடக்கும்
எழுத்துக்கள் போல், //

கிறுக்கல்-கிறுக்கன்னு சொல்லுங்க.///


What happened Vasanth!!

கிருஷ்ண மூர்த்தி S said...

கொஞ்சம் தேநீர்
கொஞ்சும் தேனாய்
மாறினதால் இது
மறு பதிவோ?

காதல் மயக்கம்
கலையவிடாமல்
வலைக்குள் பிடிக்கும்
வலைச்சரமோ?

காதலென்பதும்
மீள் பதிவோ?

பாலா said...

இதே நிலமைலதேன் நானும்
"ஆமா எப்படி சார் சொல்றது இத????/????/
ப்ளீஸ் எக்ஸ்ப்ளைன்

ஹேமா said...

அருமை அருமை டாக்டர்.தேநீர் காதல் தித்திப்போடு.சக்கரை கூடினா வைத்தியமும் நீங்கதான் பண்ணனும்.

அ.மு.செய்யது said...

மீள் ப‌திவா ??

இந்த கவிதையை ஏற்கெனவே உங்கள் வலையில் பார்த்த ஞாபகம் !!! அற்புதமான கவிதை.

மேலும் அந்த பதிவில்,

"முன்னும் பின்னும்
ஒழுங்கு இல்லாமல்
கலைந்து கிடக்கும்
எழுத்துக்கள் போல்" என்ற‌ பொருளை குறிக்க‌, அலைன்மெட்டை க‌லைத்து போட்டிருந்தீர்க‌ள்.

நான் கூட இந்த‌ க‌விதையை என் ப‌திவொன்றில்,க‌ண்காட்சி க‌விதைக்கு சிற‌ந்த‌ எ.கா என்று குறிப்பிட்டிருந்தேன்.

ரைட்டா ??? ( ஓட்டு போட்டாச்சி சார் !! )

வால்பையன் said...

வீடியோ எப்பத்தல அப்லோடு!?

Menaga Sathia said...

தேநீர் அருமை மருத்துவரே!!

thiyaa said...

//
தூரிகைக்கும்
துணிக்கும்
இடையில்
சிந்திக்கிடக்கும்
வண்ண மை போல்,


புரிந்தும்
புரியாமலும்
இருக்கும்
ஒரு கவிதைபோல்,

//

அருமை
நல்ல ரசனையான கவிதை
அருமையான உவமைகள்

Kavinaya said...

எழிலான கவிதை!

மாதவராஜ் said...

ரசித்தேன் நண்பரே,,,

cheena (சீனா) said...

அன்பின் தேவா

படித்த நினைவு - எங்கே நினைவில்லை

காதலை இப்படியும் கூற முடியுமா - அற்புதம்

நல்வாழ்த்துகள்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory