Thursday 3 September 2009

மரணத்துக்கு டிக்கெட்?

 

NHS எனப்படும் இங்கிலாந்து நாட்டின் பொது சுகாதார அமைப்பின் மீது புதிய புகார் ஒன்று வந்துள்ளது. அதாவது கொடிய நோய் தாக்கியோருக்கு விரையில் மரணச் சீட்டு  வழங்கப்படுவதுதான்!!

இந்த அமைப்பின் வழிமுறைகளின்படி இறக்கும் தறுவாயில் உள்ளோர் என்று கருதப்படும் நோயாளிகளுக்கு இறப்பைத் துரிதப் படுத்துவதற்காக அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் நிறுத்தி விட்டு வெறும் மயக்க மருந்து மட்டும் அவர்கள் மூச்சு நிற்கும்வரை கொடுக்கப்படுகிறது.

இது மரணத்தின் தறுவாயில் உள்ளவர்களுக்கு அவர்களின் வேதனைகளிலிருந்து விரையில் விடுதலை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இது உண்மையில் மரணத்தின் தறுவாயில் இருப்போருக்குப் பொருந்தும். ஆனால் மருந்துகள் செலுத்தினால் சில நோயாளிகள் பிழைப்பதற்கு வாய்ப்புக்கிடைக்கும்.

அந்த வாய்ப்பு தற்போது அவர்களுக்குக் கிடைக்காது. எவ்வளவுதான் மருத்துவர்கள் கணித்தாலும் இறப்பைத் துல்லியமாக  கணிப்பது மிகவும் கடினம்! 

இப்படி  நோயாளிகளை எந்த விதமான உணவு, குளுக்கோஸ், மருந்துகள் இல்லாமல் இறக்க விடுவது நோயாளிகளின் உறவினர்களிடையே மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2004 ஆம் ஆண்டு மாதிரித்திட்டமாக இங்கிலாந்து அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சிகிச்சைமுறைக்கு ”லிவர்பூல் கேர் பாத் வே!” Liverpool Care Pathway (LCP), என்று பெயரிட்டுள்ளனர்.இது 300 மருத்துவமனைகள், 560 பராமரிப்பு மையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு இந்த முறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் தற்போது எல்லா நோய்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சுய நினைவு இழந்த நோயாளிகளுக்கும், எதையும் உட்கொள்ள முடியாதோரும் இதில் அடக்கம். சுய நினைவு இழத்தல் அல்லது கோமா என்ப்படுவதைக் கண்டுபிடிப்பதே கடினம்.

சில மருந்துகளே சுய நினவு இல்லாத நிலையை ஏற்படுத்துவதால் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவ நிபுணர் குழு எச்சரித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

எந்த இரத்தக்குழாய் வழியே செலுத்தப்படும் திரவ உணவுகள் நிறுத்தப்படுவதால் நோயாளி மேலும் பலகீனமாகிவிடுகிறார். அதனுடன் தொடர்ந்து மயக்க மருந்தும் கொடுக்கப்படுவதால் நோயாளியின் உடல் நிலையில் ஏற்படும் எந்த மாறுதலையும் கணிக்க முடிவதில்லை.

2007-2008 ல் இங்கிலாந்தில் 16.5% இறப்புகள் இந்த முறையில் நடந்திருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. 286 மில்லியன் பவுண்டுகளை நோயாளிகளின் இறுதிக்கட்டப் பராமரிப்புக்காக இங்கிலாந்து அரசு செயல்படுகிறதாம்.

31 comments:

S.A. நவாஸுதீன் said...

இறக்கும் தறுவாயில் உள்ளோர் என்று கருதப்படும் நோயாளிகளுக்கு இறப்பைத் துரிதப் படுத்துவதற்காக அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் நிறுத்தி விட்டு வெறும் மயக்க மருந்து மட்டும் அவர்கள் மூச்சு நிற்கும்வரை கொடுக்கப்படுகிறது.

*******************

அதிர்ச்சியா இருக்கு தேவா சார்

S.A. நவாஸுதீன் said...

ஆனால் மருந்துகள் செலுத்தினால் சில நோயாளிகள் பிழைப்பதற்கு வாய்ப்புக்கிடைக்கும்.

இதுதான் சரியான முறை

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

இராகவன் நைஜிரியா said...

// எவ்வளவுதான் மருத்துவர்கள் கணித்தாலும் இறப்பைத் துல்லியமாக கணிப்பது மிகவும் கடினம்! //

சரியாகச் சொன்னீர்கள் மருத்துவரே.

உங்க இடுகையைப் படிக்க ரொம்ப அதிர்ச்சியாக இருக்குங்க..

தினேஷ் said...

அதிர்ச்சியா இருக்கு சார்

நாணல் said...

அதிர்ச்சியா இருக்குங்க.. :(

வால்பையன் said...

பிறப்பும், இறப்பும் இனி அரசின் கையில் தான் போல!

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
இறக்கும் தறுவாயில் உள்ளோர் என்று கருதப்படும் நோயாளிகளுக்கு இறப்பைத் துரிதப் படுத்துவதற்காக அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் நிறுத்தி விட்டு வெறும் மயக்க மருந்து மட்டும் அவர்கள் மூச்சு நிற்கும்வரை கொடுக்கப்படுகிறது.

*******************

அதிர்ச்சியா இருக்கு தேவா சார்///

உண்மைங்க ! எனக்கும் ரொம்ப அதிர்ச்சியாகிவிட்டது!!

03 September 2009 01:30

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
ஆனால் மருந்துகள் செலுத்தினால் சில நோயாளிகள் பிழைப்பதற்கு வாய்ப்புக்கிடைக்கும்.

இதுதான் சரியான முறை

03 September 2009 01:31//

அதுதான் இங்கு மறுக்கப்படுகிறது!!

தேவன் மாயம் said...

உலவு.காம் (ulavu.com) said...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

03 September 2009 ///

தகவலுக்கு நன்றி!!

தேவன் மாயம் said...

இராகவன் நைஜிரியா said...
// எவ்வளவுதான் மருத்துவர்கள் கணித்தாலும் இறப்பைத் துல்லியமாக கணிப்பது மிகவும் கடினம்! //

சரியாகச் சொன்னீர்கள் மருத்துவரே.

உங்க இடுகையைப் படிக்க ரொம்ப அதிர்ச்சியாக இருக்குங்க//

இது அனுபவத்தில் நாம் பார்க்கிறோம்!

தேவன் மாயம் said...

சூரியன் said...
அதிர்ச்சியா இருக்கு சார்

03 September 2009 01:54///

அந்த மக்கள் எப்படித்தாங்குகிறார்கள் தெரியவில்லை!!

தேவன் மாயம் said...

நாணல் said...
அதிர்ச்சியா இருக்குங்க.. :(

03 September 2009 02:00//

எனக்கும்!!

தேவன் மாயம் said...

வால்பையன் said...
பிறப்பும், இறப்பும் இனி அரசின் கையில் தான் போல!

03 September 2009 02:17///

இதுவும் சர்வாதிகாரம்தானோ?

குடந்தை அன்புமணி said...

//ஆனால் மருந்துகள் செலுத்தினால் சில நோயாளிகள் பிழைப்பதற்கு வாய்ப்புக்கிடைக்கும். //

மருந்துகள் செலுத்தினால் பிழைக்கக்கூடியவர்களுக்கு சிகிச்சையை கட்டாயம் செய்யலாம். இறப்பு நிச்சயம், சிகிச்சை முடியாது என்பவர்களுக்கு வேண்டுமானால் அவஸ்தைப்பட வேண்டாம் என்பதற்காக கருணை கொலை என்று இதை எடுத்துக் கொள்ளலாமா?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

என்ன கொடுமை.

Several tips said...

அப்படியா

Ashok D said...

எவ்வளவுதான் மருத்துவர்கள் கணித்தாலும் இறப்பைத் துல்லியமாக கணிப்பது மிகவும் கடினம்//

சரிதான்

முடியாமல் போவோர்க்கு
மரணம் சாஸ்வதம்தான்.
என் கருத்து.

விக்னேஷ்வரி said...

இது பற்றின செய்தியை நானும் படித்தேன். கொடுமையானது.

நட்புடன் ஜமால் said...

அடப்பாவிகளா ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அதிர்ச்சியா இருக்கு

அப்துல்மாலிக் said...

இப்படியும் நடக்குமா?

அதிர்ச்சி தரும் விசயம்

ஹேமா said...

மனசுக்குக் கஸடமாக இருந்தாலும் அவஸ்தைகளில் இருந்து பாதிக்கப்பட்டவரும் பார்ப்பவர்களும் ஓரளவு தப்பிக்கொள்ள நல்ல வழி முறையோ !

தேவன் மாயம் said...

குடந்தை அன்புமணி said...
//ஆனால் மருந்துகள் செலுத்தினால் சில நோயாளிகள் பிழைப்பதற்கு வாய்ப்புக்கிடைக்கும். //

மருந்துகள் செலுத்தினால் பிழைக்கக்கூடியவர்களுக்கு சிகிச்சையை கட்டாயம் செய்யலாம். இறப்பு நிச்சயம், சிகிச்சை முடியாது என்பவர்களுக்கு வேண்டுமானால் அவஸ்தைப்பட வேண்டாம் என்பதற்காக கருணை கொலை என்று இதை எடுத்துக் கொள்ளலாமா?

03 September 2009 02:42///

அதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த முறை!

தேவன் மாயம் said...

ஸ்ரீ said...
என்ன கொடுமை.//



03 September 2009 02:51


Several tips said...
அப்படியா

மிகுந்த துன்பத்திலிருந்து விடுதலை பெற ஒரு வழியாக இதை அறிமுகப்படுத்தியுள்ளனர்!

தேவன் மாயம் said...

D.R.Ashok said...
எவ்வளவுதான் மருத்துவர்கள் கணித்தாலும் இறப்பைத் துல்லியமாக கணிப்பது மிகவும் கடினம்//

சரிதான்

முடியாமல் போவோர்க்கு
மரணம் சாஸ்வதம்தான்.
என் கருத்து.
///

மரணம் எப்போது என்பதில்தான் பிரச்சினையே!

தேவன் மாயம் said...

விக்னேஷ்வரி said...
இது பற்றின செய்தியை நானும் படித்தேன். கொடுமையானது.///

படித்தீர்களா!!

03 September 2009 05:30
__________________________________

நட்புடன் ஜமால் said...
அடப்பாவிகளா ...
//

ஜமாலுக்கு உடன்பாடில்லை என்று தெரியுது!!
----------------------------
03 September 2009 05:30


T.V.Radhakrishnan said...
அதிர்ச்சியா இருக்கு
///
ஆம் நண்பரே!!
--------------------------------
03 September 2009 06:04


அபுஅஃப்ஸர் said...
இப்படியும் நடக்குமா?

அதிர்ச்சி தரும் விசயம்//

ஆம் நடக்குது!!

_________________________________

03 September 2009 13:56


ஹேமா said...
மனசுக்குக் கஸடமாக இருந்தாலும் அவஸ்தைகளில் இருந்து பாதிக்கப்பட்டவரும் பார்ப்பவர்களும் ஓரளவு தப்பிக்கொள்ள நல்ல வழி முறையோ !//

எதுக்கு அவதி? கதை முடிந்தால் சரிதானே!!

__________________________________

அன்புடன் அருணா said...

மனம் நம்ப மறுக்கிறது...

மாதவராஜ் said...

கஷ்டப்படுத்துகிறது.....

மங்களூர் சிவா said...

:(((((

cheena (சீனா) said...

சில சமயம் நினைத்தால் கருணைக் கொலை தேவை தான் எனத் தோன்றுகிறது - பல சமயங்களில் நமது கலாச்சாரம் - நமது மனது ஏற்க உறுதியாக மறுக்கிறது. என்ன செய்வது.

ம்ம்ம்ம் - காலம் பதில் சொல்லும் - சரியா தவறா என்று

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory